ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

செப்டிக் கழிவுநீர் மறுசுழற்சி ஜோக்காஸ் ஜப்பான் தொழில்நுட்பம்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 22 ஜூன், 2018, பிற்பகல் 2:41
பெறுநர்: நான்
முத்து குமார்
ஜொக்காசு என்ற ஜப்பானிய தொழில் நுட்பம் நாம் வீட்டின் கழிவறையில் வீணடிக்கும் தண்ணீரை நுண்ணுயிர் பெருக்கமுள்ள உயிரூட்டமுள்ள நீராக மாற்றித் தரக் கூடியது மாற்றமென்பது தனி மனிதனிடமிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். அது எவ்வாறு
1.வீடுகளில் பாரம்பரிய கழிவு நீர் தொட்டிகளுக்குப் பதிலாக ஜொக்காசு கழிவு நீர் தொட்டிகள் நிறுவப்பட வேண்டும்.
2.100 வீடுகளுக்கு ஒரு சுத்திகரிப்பான் நிறுவி அதன் மூலம் சுத்திகரித்து வரும் நீரினை நேரடியாகவோ அல்லது விவசாயப் பயன்பாட்டுக்கு மட்டுமென குளம் கட்டி சேகரிக்கலாம்.
3.அத் தொட்டியில் தேங்கியிருக்கும் கழிவுகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை சூடேற்றம் செய்து உயிரூட்டமுள்ள உரமாக மண்ணுக்கிடலாம் .
உதாரணம் சென்னையின் மக்கள் தொகை 70 இலட்சம். ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீரை கழிவரையில் உபயோ
கிக்கிறாரென கணக்கில் கொண்டாலும் ஒரு நாளைக்கு 70 இலட்சம் லிட்டர் வாரத்திற்கு 4கோடியே90 இலட்சம் லிட்டர் ஒரு வருடத்திற்கு 25 கோடியே 55 இலட்சம் லிட்டர் அதாவது 25 இலட்சத்தி 55 ஆயிரம் கன மீட்டர் நீர். அதாவது 9 கோடி கன அடி நீர் .நாம் கர்நாடகாவிடம் வினாடிக்கு 1500 கன அடிக்கு மல்லுக்கு நின்ற நேரத்தில் கொஞ்சம் அறிவுப் பூர்வமாக யோசித்திருந்தால் அதே அளவிலான 60000 வினாடிக்கான நீரினை சேமித்திருக்கலாம். உத்தேசமாக 16 மணி நேரத்துக்கான நீரை சேமித்திருக்கலாம்.

நீர்மேலாண்மை கழிவுகள் உரம் புதுமுயற்சி யோசனை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக