ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பெருந்தச்சு நாட்காட்டி 57 புத்தாண்டு வானியல் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

புத., 6 ஜூன், 2018, பிற்பகல் 12:56
பெறுநர்: நான்
தாவீது லிவிங்சுடன்
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்
6-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் – 57
நாள்: 31.05.2018
தொடர் நாள்: 161
---------------------------------------------------------------------------
------------------------------------------------
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் ஆறாவது முழுநிலவு தோல்வியுற்றது. 30.05.2018-ல் அமைவுற்றிருக்க வேண்டிய முழுநிலவு 29.05.2018-ல் நள்ளிரவு 12.30-க்கு தலை உச்சியில் நின்றது.
மால்பு இடர்:-
சீராக வளர வேண்டிய நிலவின் பிறை முறையானது குறிவைத்த முழுமையை நோக்கி இடர் இன்றிச் செல்ல வேண்டும். மால் அல்லது மால்பு அல்லது மார்பு என்பது இங்கே முழுநிலவின் பிறை விளிம்பின் முழுமை.
வில் ஓதம் அல்லது உதைவு. விநோதம், நித்த விநோதம், விரதம், திண்காழ் ஏற்றவியல் இரு விலோதம் என அனைத்தும் மால்பு
பளிங்கு செறிந்தன்ன பல்கதிர் இடை இடை
பால் முகந்தன்ன பசுவெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின் (நற்றிணை – 196)
முறையாக வளரும் ஒரு முழுநிலவை வெள்ளைக்குடி நாகனார் இவ்வாறாக வியந்திருக்கிறார் என்பது போற்றத்தக்கது.
இழப்பு:-
22.12.2017-ல் தொடங்கிய இவ்வாண்டின் வடசெலவு இதுவரை மூன்று முழுநிலவுகளின் தடுமாற்றத்தால் மூன்று நாட்களை இழந்து, ஆறாவது முழுநிலவு ஆகிய ஆனி முழுநிலவைக் கடந்து நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
29.05.2018 முழுநிலவு நாளைத் தவிர்த்து 18 நாட்களைக் கூட்டி 16.06.2018 அன்று மூன்றாம் பிறையுடன் வடசெலவு முடிய வேண்டும். பிழையான மூன்று நாட்களையும் சேர்த்து 177+3=180 நாள் வரை நிழல் நீடிக்கலாம். காத்திருந்து பார்க்க வேண்டும்.
நிழல்:-
கதிரவன் வட எல்லையை நெருங்குவதால் முளைக்குச்சியின் நிழல் தெற்கில் நீண்டு தெரியும். நண்பகல் வேளையில் தோன்றும் குறைந்த நிழல் இன்று 3 அங்குல அளவில் நிற்கிறது. மேலும் அது 4 அங்குலம் ஆகலாம். அல்லது 4-ஐத் தொடாமல் திரும்பலாம்.
எட்டும் நான்கும்:-
தைமாத முதலில் எட்டிலும் ஆனிமாதக் கடைசியில் நான்கிலும் இருவேறு திசைகளில் எல்லை மிதிக்கும் நண்பகல் நிழலானது, எட்டில் மிகுவதும் நான்கில் குறைவதும் ‘மால்பு இடர்’ என்று புரிந்து கொள்ளலாம்.
அடுத்த முழுநிலவு ஆடிமாத முழுநிலவு:-
இந்தத் தேய்பிறையின் இறுதியாகிய மறைநிலவு 13.06.2018-ல் அமையும் என்று உறுதி செய்யலாம். அடுத்த மூன்று நாளில் மூன்றாம் பிறை தோன்றும் நாள். நிழல் அளவீடு செய்தற்கு உரிய நாள். அன்றே வடசெலவின் கடைநாளும் ஆகும். அன்று 16.06.2018.
ஆடிப்பட்டம்:-
ஆடிப்பட்டம் அல்லது ஆடிப்பாட்டம் 17.06.2018-ல் இனிதே தொடங்கவிருக்கிறது. அன்று வளர்பிறை நாலாம் நாள். அன்றிலிருந்து 12-வது நாளில் ஆடிமாத முழுநிலவு. வரவேற்போம்.
ஆடிப்பட்டம் தேடிவிதை:-
இந்த வழக்குச் சொல் உழவு சார்ந்ததாக மட்டும் தெரியவில்லை. கோத்தொழில் சார்ந்ததாகவும் தெரிகிறது. அது ‘உதை’ என்று கூட வழங்கி இருக்கலாம்.
‘செயிர் இகல்’ மிகுதியின் ‘சினப்பொதுவர்’ தூர்பு பொங்க (முல்லைக்கலி) என்ற செய்தியை ஒப்பிட்டுப் பார்த்தால் மால்பு இடர் செய்வோரை ஆடிப் பாட்டத்தில் தேடித் தேடி உதைத்தனர் போலும்.
சாதுர் மாஸ்ய விரதம்:-
சமண, வைணவ, சுமார்த்த மதத் துறவிகளில் பலர் ஆடிமாத முழுநிலவு நாளில் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குவராம். கடந்த 09.07.2017-ல் அவ்வாறு தொடங்கியதாகச் செய்தி.
அவர்கள் இந்த ஆண்டு ஆடிமாத முழுநிலவாகிய ஆஷாட பவுர்ணமி என்ற குரு பூர்ணிமாவை என்று கொண்டாடுகிறார்கள் என்று தேடிப் பார்த்துப் பதிவு செய்து கொள்வது மீண்டெழும் தமிழ் நாட்காட்டிக்குப் பாதுகாப்பானது.
மீண்டெழும் தமிழ் நாட்காட்டி:-
‘ஆடு கோட்பாடு’ எனும் கோட்பாட்டு அடிப்படையிலும், பெருந்தச்சு மரபின் முளைக்குச்சி நிழலின் ஆடியல் பண்புகளின் அடிப்படையிலும், ஆறிரு மதியிலும் காருகவடிப் பயின்ற கணியத்தின் அடிப்படையிலும், தமிழர் மரபின் பெருங்கலைகளின் அடிப்படைக் கோட்பாடுகளின் ஓப்பீட்டாய்விலும் ஊற்றமாய் மீண்டெழும் தமிழ் நாட்காட்டி பாட்டை நாட்களை 12 ஆகவும் கோட்ட நாட்களை 18 ஆகவும் புரிந்து கொள்ளத் தலைப்பட்டு விட்டால் எதிர்ப்பவர் இம் முதுநீர் உலகில் எவரும் இல்லை.
ஒருநீ ஆகிய செரு வெங்கோலம்
கண்விழித்து கண்டது கடுங்கண் கூற்றம்
இமிழ்கடல் வேலியை தமிழ் நாடாக்கிட
இதுநீ கருதினை ஆயின்
எதிர்ப்பவர் முதுநீர் உலகில் முழுவதுமில்லை
(சிலம்பு காட்சிக்காதை 163-167, செம்மொழி, பக். 1338)
சான்றுகளின் உண்மைத்தன்மை:-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம், தமிழ்ப் புத்தாண்டு சார்ந்த சான்றுகளின் அச்சுப் பதிப்பு, பாடவேறுபாடு, ஓலைச் சுவடிகள், அவற்றில் பாட வேறுபாடு ஆகியவற்றை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துச் செப்பனிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அறிஞர்கள் உதவிட வேண்டும்.
சாத்துவரி:-
சிலம்பின் சாத்துவரிப் பாடல்களால் நாலு சாத்து சாத்தி வடசெலவு தென்செலவின் விலக்கு மாற்றெடுத்து இயக்கினால் ‘மால்பு இடர்’ முறியும் என்றால் நமது பட்டத்து ராசாக்களுக்கு அந்தில் கச்சை கட்டி ஆட அறிவுறுத்த வேண்டிய கடமை அறிஞர்களுக்கு இருக்கிறது.
இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் வெ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக