ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் இருவேறு தீர்ப்பு நீதிமன்றம் நகைச்சுவை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 14 ஜூன், 2018, பிற்பகல் 7:03
பெறுநர்: நான்

18 எம் எல் ஏ களை சபாநாயகர் ரத்து செய்தது செல்லும்: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

18 எம் எல் ஏ களை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர்


 18 MLAs Disqualification Case
Madras High Court
இந்திரா பானர்ஜி எம்.சுந்தர்
Indira Bannerjee M Sundar
 Facebook  Twitter 

18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் வழக்கின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்...

வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி, ஜக்கையன், ஜெயந்தி பத்மநாபன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் மனு அளித்தனர். 
இதையடுத்து அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், 19 எம்எல்ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் தனபாலுக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி கோரிக்கை விடுத்தார்.

இதில், ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து, தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாலேயே ஆளுநரை சந்தித்ததாக விளக்கம் அளித்தார். 

எனவே அவரைத் தவிர்த்து 18 எம்எல்ஏ.க்களையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி உத்தரவிட்டார். 
இதை எதிர்த்து 18 எம்எல்ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, மறுஉத்தரவு வரும் வரை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கும், 18 தொகுதிகளை காலியாக அறிவித்து தேர்தல் நடத்துவதற்கும் தடை விதித்தார்.

பின்னர் இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு அமர்வுக்கும், அதன் பிறகு அரசமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகள் இருப்பதால், தலைமை நீதிபதி அமர்வுக்கும் மாற்றப்பட்டது. 

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார்.
தமிழக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்ஹி ஆஜராகி வாதிட்டார். 
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

இதையடுத்து, 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பதிலளித்து வாதிடும்போது, எடியூரப்பா வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தை போலதான் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டதாகவும், அது கட்சி தாவல் இல்லை என்றும் வாதிட்டார். எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இதுவரை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இரு நீதிபதிகளும் இன்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
---------
செல்லாது ..செல்லாது...! நீதிபதி சுந்தர் தீர்ப்பின் முழு விபரம்!
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.
இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் , வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும், அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தகுதி நீக்க வழக்கில் 135 பக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி சுந்தர் தீர்ப்பின் நகலில் கூறப்பட்டுள்ளதாவது:
’’சபாநாயகரின் உத்தரவில் உள்நோக்கம் உள்ளது. அதனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தில் நீதிமன்றம் தலையிடலாம். ஆளுநரிடம் மனு கொடுப்பது கட்சி தாவல் என்று அர்த்தம் ஆகாது. எடியூரப்பா வழக்கை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆளுநரிடம் மனு அளித்ததால் தகுதி நீக்கம் செய்ய முடியாது. ஜக்கையன் என்ற எம்.எல்.ஏவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. ஜக்கையன் தகுதி நீக்கம் செய்யப்படாததில் இருந்து சபாநாயகர் உள்நோக்கத்துடன் செயல்பட்டது தெரிகிறது.
சபாநாயகரின் அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக மட்டும் தான். மக்களின் நம்பிக்கையை குலைப்பதற்காக அல்ல. சபாநாயகரின் முடிவு பாரபட்சமாகவும் , சட்ட விதிகளுக்கு எதிராகவும் உள்ளது"

ஜனநாயகம் சட்டம் பதவி தினகரன் தீர்ப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக