|
வெள்., 8 ஜூன், 2018, பிற்பகல் 10:13
| |||
அழகன் தமிழன்
சமக்கிருதத்தில் மாந்தரைக் குறிக்கும் "நர" மற்றும் "மனு" ஆகிய சொற்கள் தமிழிலிருந்து கடன் கொள்ளப்பட்டயே:
------------------------------ ------------------------------ -------
அஃறிணையினின்று மக்களைப்பிரித்துக் காட்டுவதும், ஒரு நாட்டு மக்களின்நாகரிகப் பண்பாட்டு அளவுகோலும் மொழியே.மொழியினாலேயே மாந்தன் நரன் என்று பெயர்பெற்றிருத்
தல் வேண்டும்.
நரலுதல் = 1. ஒலித்தல். "ஆடுகழை நரலும் சேட்சிமை" (புறம். 120). 2. கத்துதல்."வெண்குருகு நரல வீசும் நுண்ப ஃ றுவலைய" (அகம். 14). 3. பேசுதல்.
நரல் - நரன் = மாந்தன். "வறிதே நிலையாத விம்மண் ணுலகின் நரனாக வகுத்தனை" (தேவா.934:2). நரன் - நரம் = மாந்தப்பிறவி. "நரத்திலும் பிறத்திநாத" (திவ். திருச்சந்.29).
வானரம் (வால்நரம்)=வாலையுடைய மாந்தன் போன்ற விலங்கு. "வானர முகள" (சீவக. 1168).
நரன் - வ. நர. வானரம் - வ. வாநர.
நர என்னுஞ் சொல்லிற்கு வடமொழியில்வேரில்லை. வானர என்னுஞ் சொல்லை 'நர ஏவ' என்றுபிரித்து, நரனைப் போன்றது என்று பொருள் கூறுவர்வடமொழியா
ளர்.
மொழிக்கு அடுத்தபடியாக, மாந்தனின்சிறப்பாற்றல் முன்னுதல். முன்னுதல்=கருதுதல்.முன்னுவான் (வானீற்று நி.கா.வி.எ.) - முன்னான் (ம.) AS.munan (to think).
முன்-முன்னம்=1. கருத்து."முன்ன முகத்தி னுணர்ந்து" (புறம். 3). 2. மனம்.(திவா.). முன்னம் - முனம் - மனம் = உள்ளம்.
மனம்- வ. மனஸ். L. mens, ME, mynd, E, mind.
முன் - மன் = கருதும் ஆற்றலுள்ள மாந்தன்.
மன்பது - மக்கட் கூட்டம், "மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்" (பரிபா. 15:52).
மன்பது - மன்பதை = மக்கட்கூட்டம்.
"மன்பதை காக்குநின் புரைமை" (புறம். 210).
மன்- வ.மநு. OS., OHG, man, E man.
மொழியிலுங் கருத்திலும் அன்றும்இன்றும் என்றும் சிறந்தவன் தமிழனே.
ஒவ்வொரு நாட்டிலும், மொழியைவளர்ப்பவர் பொதுமக்கள்; இலக்கியத்தைவளர்ப்பவர் புலமக்கள். மொழிகள் இயன்மொழியும்திர
ிமொழியும் என இருவகைப்படும். தானேதோன்றியது இயன்மொழி; ஒன்றினின்று திரிந்ததுதிரிமொழி. ஆகுபெயர்கள் இருமடியும் மும்மடியும்ஆகுவது போன்று, திரிமொழிகளும் இருமடியும்மும்ம
டியுந் திரியும். திரவிடம் தமிழினின்றுதிரிந்த திரிமொழி; ஆரியம் திரவிடத்தினின்றுதிரிந்த இருமடித் திரிமொழி.
குமரிநாடு தமிழன் பிறந்தகம்மட்டும
ன்றி மாந்தன் பிறந்தகமு மாதலால், தமிழேஇம்மியும் ஏனைமொழி கலவாத முழுத் தூயஇயன்மொழியாகும்.
இருதிணை ஐம்பால் ஈரெண்மூவிடங்களாகிய கிளவியிலக் கணமும்,நுண்பிரிவுகளையுடைய எண் வேற்றுமைப் பெயரிலக்கணமும், நந்நான்கு வகைப்பட்ட முக்காலவினையிலக்கணமும், வளமை, செம்மை, மரபு, தகுதி,தூய்மை முதலிய சொற்றிறங்களும்; சுருக்கம், தெளிவு,மதிப்புறவு, இடக்கரடக்கல், மங்கலம் முதலியசொற்றொடரம
ைதிகளும் கொண்டு; பதினெண் திரவிடமொழிகட்குத் தாயும் பதினாறாரியப் பிரிவுகட்குமூலம
ுமா யமைந்தது தமிழ்.
(பாவாணர்,தமிழர் வரலாறு)
------------------------------ ------------------------------ --------
9 மணி நேரம் · Facebook
சமக்கிருதத்தில் மாந்தரைக் குறிக்கும் "நர" மற்றும் "மனு" ஆகிய சொற்கள் தமிழிலிருந்து கடன் கொள்ளப்பட்டயே:
------------------------------

ஆரியர் மனுதர்மம் பாவாணர் மனுநீதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக