Thiruchchelvam Kathiravelippillai, Nalliah Vasanthan மற்றும் 87 பேருடன் இருக்கிறார்.
தொடர் _ 1
எண்பதுகளின் முன்னர் தமிழ் பேசும் மக்களிடையே நெருங்கிய உறவு இருந்தது. தமிழர்கள் தமிழ் பேசுகின்ற மக்களாவர். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மெதுவாக கூர்மையடையத் தொடங்கிய வேளையிலும் தமிழ் பேசும் மக்களிடையே நெருங்கிய உறவு நிலவியது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட பல நூறு முஸ்லிம் இளைஞர்களும் உறுப்பினர்களாகவும் இருந்தனர். பெரும்பான்மையினத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட ஆட்சி அதிகாரத்திலிருந்தவர்கள் போராட்ட முன்னகர்வை அல்லது வேகத்தை குறைப்பதற்கு அல்லது வேறு திசை நகர்த்துவதற்கு கையிலெடுத்த ஆயுதம் எண்ணிக்கையில் குறைவாக இருந்த தமிழ்பேசும் மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்தி சிறுசிறு பொருள்நியாயம் கொண்டோர்களாக சிதைவுறச்செய்வது. இஸ்ரவேல் மொசாட்டின் துணையுடன் மிகவும் நிதானமான திட்டமிடலுடன் பிரித்தாளும் தந்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்விடயத்தை அப்போது உணர்ந்திருந்த ஈரோஸ் அமைப்பு கொழும்பில் உல்லாசவிடுதியில் தங்கியிருந்த இஸ்ரவேலின் மொசாட் உறுப்பினர்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டது. அத்தாக்குதலில் இரண்டு மொசாட் உறுப்பினர்கள் சாவடைந்தனர். ஒரு சில ஆண்டுகள் மொசாட்டின் செயற்பாடுகள் இல்லாதிருந்தாலும் பின்னர் ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கையினால் மொசாட்டின் வழிகாட்டல் அரசுக்கு கிடைத்தது. சிறப்பு அதிரடிப்படை (STF) உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்ற தமிழ்பேசும் மககளிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கச்சிதமாக மேற்கொண்டார்கள். சிறப்பு அதிரடிப்படை பல வடிவங்களிலே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அவர்களது திட்டமிட்ட செயற்பாடுகளின் உள்நோக்கினை புரிந்து கொள்ளாது தமிழ்த் தேசிய விடுதலை போராட்ட அமைப்புகள் தமக்கிடையே கருத்துப் பரிமாற்றல் பொறிமுறையும் தொடர்புகளுமின்மையினால் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளுக்க ு அறியாமலே துணை போயினர். அது தமிழ்பேசும் மக்களிடையே நிரந்தரமான கருத்தொருமைப்பா ட்டை, ஒற்றுமையை சிதைப்பதற்கு அடிகோலின.
--------------------------------
தொடர் – 02
சிறப்பு அதிரடிப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. காவல்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை உள்ளீர்த்து இராணுவத்தின் கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு இஸ்ரவேல் பாதுகாப்பு முகவரகம் ( Israel security Agency ) இன் சின் பெத் (Shin Beth) பயிற்றுவிப்பாளராக சிறப்பு அதிரடிப்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஆயதப் பயிற்சிகளுடன் சிறிலங்காவிலுள்ள தமிழ்பேசும் மக்களிடையே எவ்வாறு பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாக விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்தலாம் என்ற ஆலோசனை மற்றும் திட்டமிடல்களையும் முன்வைத்தார். அவ்வாலோசனைகள் சிறிலங்கா அரசிற்கு தேவையானதாகவும் அவசியமானதாகவும் இருந்தது. 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் டொலர்பாம், கென்ற்பாம், கொக்கிளாய் போன்ற இடங்களில் குடடியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் ஊர்காவல்படையினரையும் வெளியேற்ற வேண்டிய தேவை விடுதலை இயக்கங்களுக்கு இருந்தது. இவ்விடங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலநூறு சிங்கள மக்கள் தமது உயிர்களைத் துறந்தனர். 1985 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் தெஹிவத்தை, மஹிந்தபுர, ஆண்டாங்குளம், கந்தளாய் அம்பாறை மாவட்டத்தில் அரந்தலாவ பொலனறுவை மாவட்டத்தில் திருக்கோணமடு ஆகிய இடங்களில் சிங்கள ஊர்காவல்படைகள் மீதும் சிங்கள பொது மக்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்தன. அநுராதபுரத்தில் 146 சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்கள் சிங்கள மக்களிடையே அச்சத்தையும் அரசிற்கு சிக்கல்களையும் தோற்றுவித்தது. சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் பல தமிழ் ஊர்கள் மீது படையினர் தாக்குதல்கள் மேற்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களது உயிர்களை பறித்ததுடன் சொத்துக்களை முற்றாக நாசம் செய்தார்கள். அப்போது பாதுகாப்பு பந்தோபஸ்து அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி அவர்கள் நேரடியாக வருகைதந்து கட்டைப்பறிச்சான், சேனையுர், சம்புர், கடற்கரைச்சேனை ஆகிய ஊர்களில் 900 மேற்பட்ட வீடுகளை எரித்தமை சிறந்த எடுத்தக்காட்டாகும். இஸ்ரவேல் பயிற்றுவிப்பாளரது திட்டங்கள் கிழக்கு மாகாணத்திலே நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கு வசதியாக பல கள நிலைகள் கிழக்கில் காணப்பட்டன. 1. அக்காலத்தில் முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்களில் தமிழ் விடுதலை அமைப்புகள் பலவந்தமான நிதி திரட்டலில் ஈடுபட்டமையினால் முஸ்லிம் வர்த்தகர்கள் விடுதலை இயக்கங்கள் மீது அதிருப்தியைக் கொண்டிருந்தனர். 2. முஸ்லிம் மக்களது உந்துருளிகளையும் வாகனங்களையும் தமது தேவைக்காகப் பலவந்தமாக பறித்தனர். இந்நடவடிக்கைகளும் முஸ்லிம் மக்கள் மீது விடுதலை அமைப்புகள் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கியது. இந்நடவடிக்கைகளில் அதிகளவில் ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டிருந்தனர். இது கிழக்கு மாகாணம் முழுவதும் நடைபெற்றது. (அப்போதைய காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களிடையே அதாவது 1984 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறந்த புரிந்துணர்வும் உறவும் இருந்ததனை யாராலும் மறுக்க முடியாது.) 3. 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் இளைஞர்களும் சிறிது சிறிதாக விடுதலை இயக்கங்களில் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருந் இம் மூன்று நடவடிக்கைகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது அரசு. ஈரோஸ், இ.பீ.ஆர்.எல்.எப் ஆகிய இயக்கங்களிலேயே முஸ்லிம் இளைஞர்கள் ஆரம்பத்தில் இணைந்தனர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலும் இணைந்தனர். அரசு தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட சிலரை விடுதலை இயக்கங்களில் உள்நுழைத்தனர். இதன் மூலமாக விடுதலை இயக்கங்களின் நகர்வுகளை அரசிற்கு எளிதாக அறியக்கூடியதாக இருந்தது. 1985 இல் கிண்ணியா, அக்கரைப்பற்று சம்பவங்கள் அரசுக்கு சாதகமாக அமைந்தன. ஒன்று அரசினால் திட்டமிடப்பட்டது. மற்றயது விடுதலை அமைப்புகளினால் தோற்றுவிக்கப்பட ்டது. அக்கரைப்பற்றில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகள் பணம் கோரி விடுதலை அமைப்பொன்றினால் கடத்தப்பட்டார். பெருந்தொகைப் பணம் கோரியமையினால் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. ஆனால் சிறிலங்கா அரசு சிறப்பு அதிரடிப்படையின் உயர் அதிகாரிகளைப் பயன்படுத்தி முஸ்லிம் மக்களை விடுதலை இயக்கங்களுக்கு எதிராக தூண்டியது. 1985 ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் தொடங்கி 12 ஆம் நாள் வரை தொடர்ச்சியான கடையடைப்பு மற்றும் நிருவாக முடக்கத்தினை முஸ்லிம் மக்கள் நடத்தினர். முஸ்லிம் மக்கள் ஒருபடி மேல் சென்று முஸ்லிம்கள் நாடு பிரிதலுக்கு எதிரானவர்கள் என்ற கோசத்தை முன்வைத்ததுடன் தேசியக் கொடியையும் நகரில் பல இடங்களில் ஏற்றினர். இந்நடவடிக்கை விடுதலை இயக்கங்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் தமிழ்பேசும் மக்களிடையே பிரிவினையை தூண்டிய சம்பவமாக மாறியது. சில நாட்களின் பின்னர் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பல நகர்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. கல்முனை, காத்தான்குடி, ஏறாவுர், ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற இடங்கள் இதற்கு இரையாகின. இஸ்ரவேலின் முதலாவது திட்டமிடல் எதிர்பார்த்ததைவிடஅதிகளவான வெற்றியைக் கொடுத்தது. கிண்ணியாவில் விறகு ஏற்றச் சென்ற ஐந்து பேர் காணாமல் போயினர். அவர்களை விடுதலை இயக்கங்கள் கடத்தின என முஸ்லிம்களால் நம்பப்பட்டது. கடத்தப்பட்டு சில நாட்களில் விடுதலைப்புலிகளின் தம்பலகமம் பொறுப்பாளர் குரு மற்றும் உதயன் ஆகிய உறுப்பினர்கள் கிண்ணியா குட்டிக்கரைச்சி என்ற இடத்திற்கு அண்மையில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போது நான்கு முஸ்லிம் இளைஞர்களால் வலையினால் வீசிப் பிடிக்கப்பட்டார ்கள். அவர்கள் தாம் விடுதலைப் புலிகள் எனக்கூறியும் பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் ஊர்த்தலைவர்கள் கூறியும் இருவரும் விடுவிக்கப்படவில்லை. அரை மணிநேரத்தின் பின்னர் இராணுவத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். விறகு வெட்டச் சென்றவர்களில் ஒருவர் சில வாரத்தில் வீடு திரும்பிய பின்னர் தான் தெரிந்தது அவர்களை கடத்திக் கொன்றது சிங்களப் படைகளே என்று. மொசாட்டின் இரண்டாவது திட்டமிட்ட செயற்பாடும் வெற்றிவாகை சுடியது. தொடர்ந்து தமிழ்பேசும் மக்கள் தமக்கிடையேயான பிரிவிற்கு விடுதலைப் போராட்ட அமைப்புகளும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்த தீவிரவாத அடிப்படைவதிகளும் துணை போனமை கவலையான விடயங்களே. (அடுத்த தொடரில் கிண்ணியா, மூதூர் நகர் எரிப்பு விரிவாக) 5 ஆகஸ்ட், PM 4:01 · பொது
-----------------------------------
தொடர் – 03
தமிழீழ விடுதலைப்புலிகளின் தம்பலகமம் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த குரு மற்றும் அவருடன் உடன் களப்பணியாற்றிக் கொண்டிருந்த உதயன் ஆகியோர் கிண்ணியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அப்துள் மஜீத் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட புகாரியில் கலந்துகொள்வதற்காக தம்பலகமத்திலிருந்து புறப்பட்டார்கள். தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த அரச புலனாய்வாளர்களுக்கு குறிப்பாக மொசாட் வழிகாட்டலில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சந்தர்ப்த்தை தவறாது பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அதற்கான காய்நகர்த்தல்களை எதுவித பிசிகுமின்றி செய்வதற்கு தம்மால் பயிற்றப்பட்டவர்களை ஏற்கனவே பொதுமக்களுடன் வாழ்வதற்கு அனுப்பியிருந்தது அரச இயந்திர புலனாய்வு. குட்டிக்கரைச்சை சந்தியைக் கடந்து சிறுதூரத்தில் வலையினால் வீசிப் பிடிக்கப்பட்டார ்கள். பலர் அவர்களை விடுவிப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். போராளிகளும் தம்மை விடுவிக்குமாறு கோரினார்கள். ஏற்படப்போகும் விளைவினை எச்சரித்தார்கள். எதற்கும் செவிசாய்க்ப்படவில்லை. இருவரும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். செய்தி தமிழ் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. குரு தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மரியாதைக்குரியவராக இருந்தார். அவரது பண்பினை அனைவரும் மதித்தனர். குரு தம்பலகமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஏற்பட்ட நிலையினை மன்னிப்பதற்கு விடுதலைப்புலிகள் தயாராக இருக்கவில்லை. கட்டைப்பறிச்சான், சேனையுர், கடற்கரைச்சேனை, சம்புர், கூனித்தீவு போன்ற இடங்களில் தமது பிரதான முகாம்கள் விடுதலைப் போராட்ட அமைப்புகள் அக்காலத்தில் வைத்திருந்தார்கள். விடுதலைப்புலிகளின் மூதூர்ப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த கணேஸ் மற்றும் அவரது நெருங்கிய சகா நந்தன் ஆகியோரால் கிண்ணியா தாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை அறிந்த ஈரோஸ் போராளிகள் விடுதலைப் புலிகளுடன் பேசினார்கள். அரசின் திட்டமிட்ட செயல் என்பதனை எடுத்துக் கூறினார்கள். இதன் மூலம் தமிழ் பேசும் மக்களிடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்பதனையும் எடுத்துக் kகூறினார்கள். எனினும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.விடுதலைப் புலிப் போராளிகளின் அணிகள் மூன்று பிரிவாக தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. சின்னக் கிண்ணியா பக்கமாக கடலினால் தரையிறக்கப்பட்ட போராளிகள் தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கினார்கள். ஆலங்கேணியுடாக வந்த போராளிகள் குட்டிக்கரைச்சை ஊடகவும் தம்பலகமத்திலிருந்து வந்த போராளிகள் குறிஞ்சாக்கேணிய ுடாக புகாரியடிச் சந்தியை நோக்கியும் தாக்குதல்கள் நடத்தினார்கள். மூன்று அணிகளும் புகாரியடிச்சந்த ியில் ஒன்றிணைந்து தாக்குதலை நிறைவு செய்து தமது தளங்களுக்குத் திரும்பினார்கள். பலநூறு வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆனால் விடுதலைப் புலிகள் எந்தவொரு பொருட்களை எடுத்துச்செல்லவில்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் ஊர்காவல் படையினர் எரிந்த வர்த்தக நிலையங்களிலிருந்த பொருட்களை எடுத்துச்சென்றனர். அது விடுதலைப் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டதாகவே முஸ்லிம் மக்களால் பேசப்பட்டது. புகாரிடியச்சந்தியில் அச்சத்தின் காரணமாக ஒரு வர்த்தக நிலையத்தின் உள்ளே இருந்த இருவர் நெருப்பில் எரியுண்டு சாவடைந்தார்கள். குறிஞ்சாக்கேணி சந்தியுடாக வருகை தந்த விடுதலைப்புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததின் நடுவே சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தார். குட்டிக்கரைச்சைசந்தியில் ஒருவர் துப்பாக்கி சுட்டின் இடைநடுவே சிக்கி சாவடைந்தார். மொத்தமாக நான்கு பொது மக்கள் உயிரிழந்தனர். எரித்துவிட்டு திரும்பிய விடுதலைப்புலிகள் கட்டைப்பறிச்சானில் வெற்றி மகழ்ச்சியில் இருந்தனர். இத்தாக்குதலின் முக்கிய நோக்காக இருந்தது முஸ்லிம் மக்களை அச்சமூட்டுவதாகும். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறான விளைவுகளே மெதுமெதுவாக ஏற்படத் தொடங்கியது. தமிழ் மக்கள் மீது முஸ்லிம் மக்களுக்கு வெறுப்பு ஏற்படத்தொடங்கியது. தம்பலகமத்தில் உள்ள சிலரின் பொருட்கள் பாதுகாப்பிற்காக தமது கிண்ணியா முஸ்லிம் நண்பர்களின் கடைகளில் வைத்திருந்தார்கள். அவையும் எரிந்து நாசமாகின. ஆலங்கேணி, ஈச்சந்தீவு தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களால் தாக்குதல்கள் தொடர்ந்தன. நெருக்கமான உறவுகள் விரிசலடையத் தொடங்கியது. அடிக்கடி சுற்றி வளைப்புகளும் காட்டிக்கொடுப்புகளும் நடைபெறத் தொடங்கின. கிண்ணியாவிற்கு தமிழ் மக்கள் செல்வது வெகுவாகக் குறைந்தது. ஆலங்கேணி, தம்பலகமம் பகுதிகளுக்கு முஸ்லிம் மக்களின் வருகையும் குறைவடைந்தது. முஸ்லிம் மக்கள் தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரசுடன் உறவாக இருந்த அரசியல் தலைவர்கள் உதவியுடனும் அராபிய நாடுகளின் உதவிகள் மூலமாகவும் ஜிகாத் அமைப்பினை உருவாக்கினார்கள். மொசாட்டும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை ஜிகாத் அமைப்பிற்க வழங்கத் தொடங்கியது. எதனை எதிர்பார்த்து திட்டமிட்டு நகர்வுகளை றே்கொண்டார்களோ அவை எளிதாக நிறைவேறிக்கொண்ட ேயிருந்தன. பலமிக்க கரங்கள் சிதைவடையத் தொடங்கின. தமிழ் – முஸ்லிம் மக்களிடையே மனதளவிலான உறவுகள் சிதைவடையத் தொடங்கிக் கொண்டிருந்தன. 6 ஆகஸ்ட், AM 10:26 · பொது
-------------
தொடர் – 04
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் எண்பதுகளின் முன்னர் குறிப்பாக 1984 ஆம் ஆண்டின் முன்னர் மிகவும் அன்னியோன்னிய உறவுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ் மக்களின் திருமண வீடுகளில் முஸ்லிம் மக்கள் கலந்துகொள்வதும் முஸ்லிம் மக்களின் திருமண வீடுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்வதும சாதாரண விடயங்கள். அனேகமான நல்லது கெட்டதான நிகழ்வுகள் இரு சமூக மக்களும் கலந்தே நடத்தினர். பிட்டும் தேங்காய்ப் பூவும் போல என எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டன. கிழக்கு மாகாணத்தின் பிரதான பொருண்மியம் நெற்செய்கையுடனா ன விவசாயமாகவும் மீன்பிடி அடுத்ததாகவும் காணப்பட்டது காணப்படுகின்றது. திருக்கோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் பெரும்பான்மையான தமிழர்கள் நெற்செய்கையிலும் அம்பாறை மாவட்டத்தில் பெரம்பான்மையான முஸ்லிம் மக்கள் நெற்செய்கையிலும் ஈடுபடுகின்றார்கள். அக்காலத்தில் நெற்செய்கைக்குத் தேவையான பிரதான உபகரணமாக மண்வெட்டிகள் “கம்மாலைகளில்“ நெற்செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயாரிப்பார்கள். (மண்வெட்டியை தோய்ந்து சேற்று மண்வெட்டியாக மாற்றுதல்) கம்மாலைகள் அனேகமாக முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டன. இச்சிறிய செயற்பாடானது தமிழ்பேசும் மக்களின் உறவிற்கு பலமான காரணியாக திகழ்ந்தது. அனைத்து மக்களும் கம்மாலைக்குச் சென்றார்கள். அந்த இடங்கள் அந்நாளில் தமிழ்பேசும் மக்கள் அதிகளவில் கூடுகின்ற இடமாகவும் ஐக்கியத்திற்கும் உறவு மேம்படலுக்குமான இடங்களாகத் திகழ்ந்தன. ஒரு தமிழ் ஊருக்குப் பக்கத்தில் ஒரு முஸ்லிம் ஊர் கிழக்கு மாகாணத்தில் அனைத்து இடங்களிலும் உள்ளன. ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களது வீடுகளுக்கு முஸ்லிம் மக்கள் செல்வது வழமையானது. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களது வீடுகளுக்குச் சென்றாலும் முஸ்லிம் மக்களிடம் ஒன்றுகூடுகின்ற தன்மையும் ஒவ்வொருநாளும் மாலை நேரங்களை வீடு தவிர்ந்த இடங்களில் மகிழ்ச்சியாக செலவிடும் உயர்ந்த பண்புகள் இருப்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. இன்றும் முஸ்லிம் பிரதேசங்களில் மாலை நேரங்களில் ஒன்றாகக் கூடி பேசுவதும் இளைஞர்கள் விளையாடுவதும் சாதாரண நிகழ்வுகள். தமிழ் மக்களிடையே ஒன்றுகூடல் தன்மை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது. தமிழர்களின் வயல்நிலங்களில் தொழிலாளர்களாக அநேகமாக முஸ்லிம் மக்கள் தொழிலாற்றினர். முஸ்லிம் பிரதேசங்களின் கல்வி வளர்ச்சியில் தமிழ் மக்கள் அளவிட முடியா பணியாற்றினர். எவ்வித வேறுபாடுகளுமின்றி தமது தொழிலை ஆற்றினர். இன்றும் அவ்வாறு பணியாற்றியவர்கள ை முஸ்லிம் மக்கள் நினைவுகூருவது அவதானிக்க முடிகிறது. கிண்ணியா பிரதேசம் இது சிறந்த எடுத்துக்காட்டாகும். கிண்ணியா துறையடியில் இருக்கும் ஊற்றடிப் பிள்ளையார் கோவிலை அண்டிய பகுதியில் தமிழ் மக்களே செறிந்து வாழ்ந்தார்கள். அங்கு வாழ்ந்த முருகுப்பிள்ளை வாத்தியார் என்றழைக்கப்பட்ட அமரர் தம்பர் காசிநாதர் அவர்களே கிண்ணியாவின் முதலாவது ஆசிரியர் ஆவார். 1930 ஆண்டில் ஆசிரிய நியமனம் பெற்ற அவர் பயிற்றப்பட்ட ஆசிரியராகி 1945 இல் பதவி உயர்வுபெற்று கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி தற்போது உள்ள இடத்தில் இயங்கிய பெரிய கிண்ணியா ஆண்கள் கலவன் வித்தியாலயத்தில் பத்து ஆண்டுகள் அதிபராக பணியாற்றினார். இப்பாடசாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆண்கள் பாடசாலையாகவும் பெண்கள் பாடசாலையாகவும் இயங்கின. பெண்கள் பாடசாலைக்கு அவரது துணைவியார் அமரர் இரட்ணபூபதி செல்லம்மா அவர்கள் அதிபராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் கிண்ணியாவில் கல்வி மட்டம் குறைந்திருந்தது. இவர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இங்குள்ள மாணவர்களுக்கு எப்படியாவது கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டி கற்க வைக்க வேண்டும் என்பதில் மிகவும் தியாகத்தோடு பணியாற்றினர். கல்வி கற்க கூடிய வயதுள்ள மாணவர்களது வீடுகளுக்கு தேடிச் சென்று அவர்களை அழைத்து வந்து கற்பித்தனர். வறுமை காரணமாக பலர் அக்காலத்தில் கல்வியை தொடரமுடியாது இடையில் கைவிட்டனர். எப்படியாவது அவர்களும் கல்வியினைப் பெற்றுவிட வேண்டும் எனும் நோக்கில் முருகுப்பிள்ளை வாத்தியார் தனது சொந்தப் பணத்தில் உணவு வழங்கி மாணவர்ளைக் கற்க வைத்தார். இவரது தோளில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதனுள் "வாட்டு ரொட்டி, ரஸ்க், பல்லி மிட்டாய்" போன்ற உணவுப் பொருட்கள் இருக்கும். மாணவர் நிலையறிந்து அவற்றை அவர்களுக்கு அவர் கொடுத்து மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துவந்தார். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் மக்களால் நிகழ்த்தப்பட்டன. ஐக்கியமான உறவுகள் பலமாக இருந்தமையினால் யாருமே மதமாற்றத்திலும் ஈடுபடவில்லை. அதற்கான தேவையுமிருக்கவில்லை. திருக்கோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை தோப்பூர் பிரதேசங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்திலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு யார் தமிழர் யார் முஸ்லிம் என பிரித்தறியா முடியா நிலையில் இருந்தன. இப்பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்களது பேச்சு மொழிநடை தமிழ் மக்கள் போன்றே இருந்தன. தற்போதும் புல்மோட்டை முஸ்லிம் மக்களில் அதனைக் காணலாம். இவ்வாறு பலமான உறவுகளால் கட்டிக்காக்கப்பட்டு பேணப்பட்டு வந்த உறவுகளே தற்காலத்தில் இரு சமூகத்திலுமுள்ள குறிப்பாக இளைஞர்களால் விரோதிகளாகப் பார்க்கப்படுகின்ற நிலையிலும் இரு சமூகங்களில் செயற்பாடுகளில் ஒருவரையொருவர் ஐயத்துடன் நோக்குகின்ற நிலையும் காணப்படுகின்றது. (அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு அதிரடிப்படையின் திட்டமிட்ட செயல்கள் எவ்வாறு இரு சமூகங்களையும் துண்டாடின எனப் பார்க்கலாம்)
----------------------------
தொடர் – 05
கிண்ணியா நகர் மீதான தாக்குதலை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அந்தப்பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1985 மே 17 ஆம் நாள் ஊர்காவல்படைக்கென சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் முன்செல்ல அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு சிறுவர்கள் பெண்கள் உட்பட 40 அப்பாவித்தமிழர்கள் கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். தமிழ் பேசும் மக்களிடையே விரிசல்களை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டன. அப்போது சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக இருந்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திரு சேர்ணி விஜேசுரியவின்( Zerney Wijesuriya) திட்டமிட்ட செயற்பாடுகள் அவர்களின் வெற்றிக்கு துணையாக இருந்தன. அத்துடன் மொசாட் சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிக்கொண்டிருந்தது. 1983 ஆம் ஆண்டில் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டாலும் 1987 ஆம் ஆண்டிலிருந்தே உள்நாட்டுப் போரில் அவர்களது செயற்பாடுகள் அதிகளவில் இருந்தன. ஆனால் 1985 ஆம் ஆண்டிலிருந்து சிறு தாக்குதல்கள் குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பணியில் அவ்வப்போது ஈடுபட்டார்கள். கிரானிலிருந்து பொத்துவில் வரை 15 முகாம்களிலிருந்து செயற்பட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான அவர்களின் பொறுப்பிலேயே இருந்தது.
அம்பாறையில் தமிழ் பேசும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த அவசரமான காரணங்கள் இருந்தன. அவற்றைத் தெரிந்துகொள்ள கல்லோயா திட்டத்தினை அறிய வேண்டியது முக்கியமாகும். கல்லோயா திட்டம் திரு .டீ.எஸ். சேனனாயக்கா விவசாய அமைச்சராக இருந்தபோது திட்டமிடப்பட்டது. கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். அல்லை, கந்தளாய், கல்லோயா என்பன கிழக்கு மாகாணத்திலே பெரும்பான்மையாக இருந்த தமிழ்பேசும் மக்களை சிறுபான்மையாக மாற்றுகின்ற திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களாகும். கல்லோ திட்டத்திற்கான அபிவிருத்திச்சபையின் முதலாவது தலைவர் ஒரு தமிழர் ஆகும். காணி ஆணையாளராக பணியாற்றிய திரு.க.கனகசுந்தரம் என்பவரே தலைவராக திரு.டீ.எஸ். சேனனாயக்காவினால் நியமிக்கப்படடார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி சட்டத்தரணி திரு.என்.ஈ.வீரசுரியா( N E Weerasooria) ,ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர் திரு ஆதர் அமரதுங்க(Arthur Amaratunga), அப்போதைய நிலஅளவையாளர் நாயகம் திரு. ஆர்.எல். புரோகியர் (R L Brohier) ஆகியோர் கல்லோயா அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அம்பாறை மாவட்ட வதிவிடப்பிரதிநி தியாக திரு சேர்ளி அமரசிங்க (Shirley Amerasinghe) நியமிக்கப்படடார். ஏறத்தாள 150000 ஏக்கரில் திட்டம் நடைமுறைப் படுத்துவதென திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தினை வடிவமைப்பதற்காக பொறியியலாளர் அணியொன்று திரு ஆர.எல்.ஹகவிற்ற ( R L Kahawita) திரு.கென்னடி(Kennedy) ஆகியோரின் கூட்டுத் தலைமையில் திரு.ஆறுமுகம் (Arumugam) பேராசிரியர் றெனி ஹகவிற்ற (Professor Renee Kahawita) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மூன்று முன்மொழிவுகளை பொறியியலாளர் அணி பரிந்துரைத்தது. 1. அணை மற்றும் நீர்பாசன வலையமைப்பு வடிவமைக்க முடியும். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த இலங்கையில் பொறியியல் வலு இல்லை. ஆகையினால் சர்வதேச அளவில் விலைமனுக் கோரலினடிப்படையில் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும். 2. நவீன பாரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கட்டடம் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு உள்ளூர் மனிதவலுக்கள் பயன்படுத்தப்படலாம். 3. துப்பரவாக்கப்படும் காணிகளில் வீடுகள் கட்டப்பட்டு 50000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டு நீர்பாசனத்திட்டத்தில் இணைக்க வேண்டும். சர்வதேசமட்டத்தில் விலைமனுக்கோரப்பட்டு வேலைகள் அமெரிக்க நிறுவனமான மொரிசன் நட்சன்( Morrison Knudsen) இடம் கையளிக்கப்ட்டது. 1953 ஆம் ஆண்டு இங்கினியாக்கல அணைக்கட்டு பூர்த்தியாக்கப்பட்டு குடியேற்றவாசிகளுக்காக வீடுகளும் அமைக்கப்பட்டன. கண்டி, கேகாலை மாவட்டங்களிலிருந்து மக்கள் மட்டக்களப்பிற்கு தொடர்வண்டி மூலமாக அழைத்துவரப்பட்ட ு அங்கிருந்து கனரக (ரக்) வாகனங்களில் உரிய இடங்களிற்கு கொண்டுசேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சமையல் பாத்திரங்களும் தொழில் புரிவதற்கான உபகரணங்களும் வசிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. 1957 ஆம் ஆண்டளவில் 30000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். திட்டத்தில் 70 வீதம் பூர்த்தியாக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக சிங்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட்ட ுக் கொணடிருந்தன. 1985 ஆம் ஆண்டுவரை குடியேற்றம் சிறிது சிறிதாக நடைபெற்றுக்கொண்டே இருந்தது. இச்செயற்பாட்டினை தமிழ் பேசும் மக்கள் விசனத்துடன் நோக்கிக்கொண்டிருந்தனர். எதிர்ப்புகளையும் வெளியிடத் தொடங்கியிருந்தனர். நாட்டில் ஆட்சிமாற்றங்கள் எற்பட்டாலும் பொதுநோக்கில் அவர்களிடையே கருத்து முரண் இருந்ததில்லை. நேற்று, AM 6:03 · பொது
-------------------------
தொடர் – 06
சிறிலங்கா 1955 ஆம் ஆண்டுவரை மாகாணங்களையே நிருவாக அலகாகக் கொண்டிருந்தது. 1955 இல் ஒன்பது மாகாணங்கள் 21 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 1961 இல் அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1978 இல் கம்பஹா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இறுதியாக 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி 25 ஆவது நிருவாக மாவட்டமாக உருவானது. 1961 ஆம் ஆண்டு அம்பாறை உருவாக்கப்பட்ட போது பொலன்னறுவையிலிருந்து 57கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறையிலிருந்து 135கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு சனத்தொகையைக் (முழுமையாக சிங்களவர்கள்) கொண்டிருப்பதுமான தெஹியத்தைக்கண்டிய பிரதேச செயலக பிரிவு கிழக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்டத ு தமிழ்பேசும் மக்களது பெரும்பான்மையை கிழக்கு மாகாணத்தில் குறைப்பதற்காகும். அத்தோடு பதுளை மாவட்டத்திற்கு மிக அண்மையிலுள்ள பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவும் மொனராகலை மாவட்டத்திற்கு அண்மையிலிருக்கும் லகுகலை பிரதேச செயலாளர் பிரிவும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் சிங்களவர்களை முழுமையாகக் கொண்ட பிரிவுகளாகும். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டது. மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் திருக்கோணமலை 11 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டது. நிலப்பரப்பில் அம்பாறை மாவட்டம் 4415 ச.கி.மீ உம், மட்டக்களப்பு மாவட்டம் 2854ச.கி.மீ.உம் திருக்கோணமலை மாவட்டம் 2727 ச.கி.மீ.உம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக 2012 ஆம் ஆண்டு சனத்தொகையினை நோக்கும் போது அம்பாறையில் சிங்களவர் -251018 , தமிழர்-112750 , முஸ்லிம்-282484 மட்டக்களப்பில் சிங்களவர் -6127 , தமிழர்-382300 , முஸ்லிம்-133844 திருக்கோணமலையில் சிங்களவர் -101991 , தமிழர்-122080 , முஸ்லிம்-152854 கிழக்கு மாகாணத்தில் மொத்த சனத்தொகையில் சிங்களவர் 359136 ஆகவும் தமிழர் 623063 அகவும் முஸ்லிம்கள் 569182 ஆகவும் வாழ்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களே வாழ்கின்றனர். அவர்களது பெரும்பான்மையினை குறைக்கும் நோக்குடனேயே குறிப்பாக தெஹியத்தைக்கண்டி. பதியத்தலாவ, லகுகலை ஆகிய தனிச் சிங்களவர்கள் வாழ்கின்ற பிரதேச செயலக பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. துரதிஸ்டவசமாக அப்போதிருந்த தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகள் யாருமே இவ்விடயத்திற்கு எதிராக போராடவுமில்லை கருத்துகளைத் தெரிவிக்கவுமில்லை. மாவட்ட நிருவாக அலகுகள் உருவாக்கப்பட்ட அடுத்த ஆண்டான 1956 இல் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் நாடு முழுவதும் நடைபெற்றமையினாலும் 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது வடக்கு கிழக்குப் பகுதிகளிலே இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அரச நிருவாக முடக்கத்திற்காக தொடர்ச்சியான ஆறுமாத கால அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றமையாலும் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளும் இணைக்கப்பட்ட விடயம் தமிழ்பேசும் மக்களால் அதிக அக்கறை செலுத்தி பார்க்க முடியாமல் போயிருந்தது. ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பியது போல் நிருவாக அலகினைத் தீர்மானித்துக்கொண்டார்கள். கிழக்கு மாகாணத்தின் நிரப்பரப்பினை உற்று நோக்கும் போது திருக்கோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் நிலப்பரப்பை விட அண்ணளவாக இரண்டு மடங்கு நிலப்பரப்பு அம்பாறை மாவட்டத்திற்கு காணப்படுகிறது. அம்பாறையிலும் தெஹியத்தைக்கண்ட ிய, பதியதலாவ, லகுகலை பிரிவுகளே அதிக நிலப்பரப்புகளைக் கொண்ட பிரதேசசெயலாளர் பிரிவுகளாகும். கல்லோயாத் திட்டத்தின் மூலமாக குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் இல்லாவிட்டால் அத்துடன் மூன்று பிரிவுகளும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டாது விட்டிருந்தால் அம்பாறையில் தமிழ்பேசும் மக்கள் மாத்திரமே இருந்திருப்பார்கள். கல்லோயாத் திட்டத்தின் மூலமாக 50000 இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். கிழக்கு மாகாணத்திலே 1881 ஆம் ஆண்டு குடிசனக் கணக்கெடுப்பின்ப டி சிங்களவர்கள் 4.66வீதமும் தமிழர்கள் 58.66வீதமும் 33.66முஸ்லிம்கள் வீதமும் வாழ்ந்தனர். ஆனால் 2012 ஆம் ஆண்டு குடிசனக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சிங்களவர் 23.15வீதமும் தமிழர் 40.13வீதமும் 36.72முஸ்லிம்கள் வீதமும் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் எண்ணிக்கையில் தமிழ்பேசும் மக்கள் அதிகளவில் இருந்தமையினாலும் அவர்கள் ஒற்றுமையாக இருந்தமையாலும் தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட ுகின்ற போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கினால் நாடு பிரிவுபடுவதை தடுப்பதற்கான வழி எதுவுமில்லை என்பதனை உணர்ந்த ஆட்சியாளர்கள் அக்கரைப்பற்று, கிண்ணியா சம்பவங்களைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களிடையே திட்டமிட்ட வகையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக 1985 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதன் முதலாவது வடிவத்தையே அம்பாறை தம்பிலுவில் எனும் தமிழ் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர்களை முன்னிறுத்தி சிறப்பு அதிரடிப்படையினர் அரங்கேற்றினார்க ள்.
-----------------------------
தொடர் – 07
அம்பாறை மாவட்டத்தில் தமது நிலையான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்தது. 1985 இலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்கள் வாழ்கின்ற ஊர்களில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டவண்ணமிருந்தன. தமிழ் மக்கள் கொல்லப்படுகின்ற போது தமிழ் மக்கள் அச்சமடைவதுடன் முஸ்லிம் மக்களுடன் பகையுணர்வினையும் வளர்க்க வேண்டும் எனபது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. 1986 பெப்ரவரி 19 ஆம் நாள் உடும்பன்குளம் என்ற ஊரில் நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பெரும் பங்காற்றியிருந்தனர். இந்நடவடிக்கைக்கு முக்கிய பொறுப்பேற்றிருந்தவர் 1983 இன் முற்பகுதியில் இராணுவத்தில் நியமனம் பெற்ற “சுரேஸ் காசிம்“ என்பராகும். சுரேஸ் காசிம் பற்றி சற்று விரிவாகப் பார்க்க வேண்டியது தேவையானதாகும். மலையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜாவா இனத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமாவார் சுரேஸ் காசிம். 1983 இல் இராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மொசாட்டின் நடவடிக்கைகளுடன் நேரடித் தொடர்பாளராக இருந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் மொசாட்டின் செயற்பாட்டில் இணைந்து செயற்பட்ட முக்கிய நபர் சுரேஸ் காசிம். விடுதலை இயக்கங்கள் அஞ்சிய ஒரு இராணுவ வீரர் என்றால் அது சுரேஸ் காசிம் தான். தேவைக்கேற்றாற் போல் உருமாற்றம் செய்து களப்பணிகளில் ஈடுபடக்கூடிய திறன் உள்ளவர். கிழக்கு மகாணத்திலே திருக்கோணமலை மாவட்டத்தில் தான் அதிக காலம் பணியாற்றினார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் இளைஞர்களை பயிற்றுவிப்தற்க ாகவும் படுகொலைகள் திட்டமிட்டு நடத்துவதற்காகவும் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வந்தார். திருக்கோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில் இருந்து ஆரம்பத்தில் (1983 ஆரம்பப் பகுதி) மூன்று பேர் மொசாட் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிண்ணியாவிலிருந்து பசீர், மூதூரிலிருந்து மனாஃப் மற்றும் இன்னொருவர்(உயிருடன் அவர் இருப்பதால் பெயர் தவிர்த்திருக்கி றேன்) மொசாட்டின் பயிற்சி வழங்கப்பட்டது. மனாஃப் அவர்கள் மூதூரில் பெரும் செல்வந்தர். அத்தோடு ஈரோஸ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர். கைத்துப்பாக்கியினை முதன்முதலாக ஈரோஸ் இயக்கத்திற்கு மூதூரில் காண்பித்தவர் என்றால் அது மனாஃப் தான். மொசாட் ஆயுதப் பயிற்சியும் எவ்வாறு செயற்படுவது என்ற பயிற்சிகளுமே கொடுத்தார்கள். அரச அநுமதிப்பத்திரத்துடன் உத்தியோகபூர்வமாக கைத்துப்பாக்கியினை மனாஃப் வைத்திருந்தார். யாருக்குமே தெரியாது அவர் ஒரு உளவாளி என்று. அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்பதே மூதூரில் அவருக்கு இன்றுவரை இருக்கும் பெயர். ஈரோசின் செயற்பாட்டாளராக அப்போது இருந்த தவராசா எனும் தோடம்பழத்துடன் மனாஃப் நெருங்கிய தொடர்பைப் பேணியிருந்தார். ”அரசிடமிருந்து கைத்துப்பாக்கி அநுமதிப் பத்திரம் பெற்று வாங்கியிருக்கிறேன்” என தோடம்பழத்திடம் கைத்துப்பாக்கியைக் காண்பித்ததே அவர் செய்த மாபெரும் தவறாகும். இவ்விடயம் தலைமைக்கு அறிவிக்கப்பட அவர் மொசாட்டினால் பயிற்றுவிக்கப்ட்டவர் என்ற தகவல் பழத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. யாரையும் எழுந்தமானமாக சுட முடியாது என்பதால் அவரது செயற்பாடுகளை விளக்கி பள்ளித் தலைவர்களுக்கு பழத்தினால் உத்தியோகபூர்வமாக கடிதம் வழங்கப்பட்டு 14 நாட்களுக்குள் அவர் மூதூரை விட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதனை சுரேஸ் காசிமிடம் மனாஃப் கூறிய போது எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறி ஒருவாரகாலம் அவரது வீட்டிற்கு நிழல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அரச புலனாய்வாளர்கள் இதனை வாய்ப்பாக பயன்படுத்த எண்ணி பாதுகாப்பினை மீளப்பெற்றுக்கொ ண்டார்கள். சில நாட்களில் தோடம்பழத்தினால் மனாஃப் சுட்டுக்கொல்லப்படடார். இக்கொலையானது மூதூரில் முஸ்லிம் மக்களிடையே பலத்த எதிர்வலைகளை எழுப்பி யிருந்தது. எனினும் சிலநாட்களில் சம்பூரைச் சேர்ந்த தோடம்பழம் என்றழைக்கப்படும் தவராசாவும் கட்டைப்பறிச்சானைச் சேர்ந்த சோ என்றழைக்கப்பட்ட பாலச்சந்திரனும் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதனால் முஸ்லிம் மக்கள் ஆறுதலைடைந்தார்க ள். கிண்ணியாவில் பசிர் என்பவர் தலைமையில் ஊர்காவல்படை அமைக்கப்பட்டது. புலிகளின் தளபதி குரு மற்றும் உதயன் கொல்லப்பட்ட பின் கிண்ணியா எரியூட்டப்பட்ட பின் பசீரின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக வேகமாக்கப்பட்டது.கிண்ணியா மருத்துவமனைக்கு பின் பகத்தில் குடியிருந்த தமிழ் மக்கள் மீது பல படுகொலைகள் பசீரினால் நடத்தப்பட்டன. அம்மக்கள் இடம்பெயர்ந்து பைசல்நகரில் குடியேறும் வரை படுகொலைக் தொடர்ந்தன. கிண்ணியாவின் துறையடியைச் சுற்றி மூன்று சைவக் கோயில்கள் இருந்தன. அம்மன் கோயில், ஊற்றடிப்பிள்ளையார் கோயில், அம்மன் கோயிலுக்கருகில் ஏ.எஸ்.எம் (ASM) என்ற அரசசார்பற்ற நிறுவனம் தற்போது இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த காணியில் இருந்த பிள்ளையார் கோயில். ASM அருகில் இருந்த பிள்ளையார் கோயில் தனியார் காணியில் இருந்தது. முஸ்லிம் ஒருவரால் ஒரு கோயில் எரிக்கப்பட்டதென்றால் அது கிண்ணியா பிள்ளையார் கோயில் மட்டும் தான். அது மொசாட்டினால் பயிற்சியளிக்கப்பட்ட பசீரால் ஆகும். கோயில்காணி பின்னர் உரிமையாளரால் முஸ்லிம் ஒருவருக்கு விற்கப்பட்டது. தற்போது கிண்ணியா மருத்துவமனை இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காணியில் அப்போது இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போ இருந்தது. இந்த இடத்தில் தான் பலநூறு தமிழ் மக்களை பசீர் குழுவினர் கொன்றனர். அதனால் அங்கிருந்த 400 இற்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் கிண்ணியாவிலிருந்து இடம்பெயர்ந்தனர். தமக்கு உரித்தான காணிகளை விற்றுவிட்டு நிரந்தரமாக வெளியேறினர். தமிழ்மக்கள் வாழ்ந்த இடத்தில் தான் கிண்ணியாவிற்கே ஆரம்பத்தில் கல்வி அறிவை வழங்கிய அமரர் காசிநாதரும் வாழ்ந்திருந்தார். இவ்வாறு தமிழ்பேசும் மக்கள் துண்டாடப்பட்டுக் கொண்டிருந்தனர். பசீர் பின்னர் தமது தேவைகள் முடிவடைந்தபின் மூதூரில் வைத்து சுரேஸ் காசிமினால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூதூரின் மூன்றாவது நபர் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம். சுரேஸ் காசிம் தமிழ் விடுதலை இயங்கங்களுக்கு பெரும் தலையிடியை திருக்கோணமலையில் கொடுத்துக் கொண்டிருந்த இராணுவவீரர். கிண்ணியா மணலாற்றில் விடுதலைப் புலிகளதும் ஈரோஸினதும் முகாம்களை முற்றுகையிட தரையிறக்கப்பட்ட இராணுவ அணியை வழநடத்தியவர் சுரேஸ்காசிம் தான். தரையிறக்கத்தினை அறிந்த போராளிகள் இராணுவம் தாக்குவதற்கு முன்பாகவே இராணுவதினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த இராணுவம் சிதறி ஓடியே தப்பினர். சுரேஸ் காசிம் வந்திருந்தது பின்னரே தெரிய வந்தது. விடுதலைப் புலிகளும் ஈரோஸ் அமைப்பும் இணைந்து நடத்திய ஒரேயொரு தாக்குதல் அதுவாகும் இத்தாக்குதல் “சாவாறுத் தாக்குதல்“ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் தான் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக ஈரோசினால் எறிகணைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. பெரும் எண்ணிக்கையில் இராணுவம் சாவடைந்ததுடன். பெரும்தொகை இராணுவ சுடுகலன்கள் மற்றும் தளபாடங்கள் போராளிகளால் கைப்பற்றப்பட்டன. எவ்வளவோ முயற்சியெடுத்தும் சுரேஸ் காசிமை எதுவும் போராளிகளால் செய்ய முடியவில்லை. 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் கொழும்பு தெஹிவளையில் மெல்பூட் வீதியில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்ப்பட்டார். அவ்வேளையில் அவர் இராணுவத்தில் இருக்கவில்லை. பொதுமக்களிடம் கப்பம் பெற்றமை நிருபிக்கப்பட்ட மையினால் சுரேஸ்காசிம் பணிநீக்கம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியிருந்தது. கப்டன் மொஹமட் சுரேஸ் காசிம் தனது 41 வயதில் புலிகளால் உயிர் நீத்தார். சாகும் போது புறக்கோட்டை, வெள்ளவத்தை ஆகிய இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு தேடப்பட்டவராகவும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புள்ளவராகவும் பேசப்பட்டார்.
----------------------------
தொடர் -08
கந்தளாயைச் சேர்ந்த சிற்றம்பலம் விடுதலைப் புலிகளில் தன்னைக் இணைத்துக்கொண்டதன் பின்னர் சந்தோசம் மாஸ்ரரின் வழிநடத்தலில் நெறிப்படுத்தப்பட்டவர்.சிற்றம்ப லத்திற்கு கணேஸ் என விடுதலைப் புலிகள் பெயரை மாற்றி வைத்திருந்தார்கள். மூதூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செல்வாக்கினை மேலோங்கச் செய்தவர். அவர் கட்டைப்பறிச்சான், சேனையூர், சம்பூர் பகுதிகளில் அதிகளவில் தனது இருப்பிடத்தை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டார். அவர் சாவடைந்ததன் பின்னர் மேஜர் தர அடிப்படையிலாக பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவரது நினைவாக சேனையூர் வர்ணகுல விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் ஒரு சிலையினையும் அமைத்திருந்தார்கள். மூதூர் பிரதேசத்தில் விடுதலைப்புலி போராளிக்கு சிலை அமைத்ததென்றால் அது மேஜர் கணேசுக்கு மாத்திரமே. அவரது வருகைக் காலத்தில் மூதூர் பிரதேசத்தில் ஈரோஸ் அமைப்பே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் செல்வாக்கு செலுத்தியிருந்தது. பருத்த தோற்றமும் வெள்ளை நிறமும் இடுப்பில் எந்நேரமும் கைத்துப்பாக்கியுடன் காணப்படுவார். அவரது பேச்சில் கண்டிப்பு எப்போதும் இருக்கும். அன்பான மனிதன் என பழகுபவர்களால் போற்றப்பட்டவர். அவரின் நடவடிக்கையின் பால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் விடுதலைப்புலிகளில் சேர்ந்தார்கள். முஸ்லிம் மக்களிடமும் நெருங்கிய தொடர்பை பேணியிருந்தார். விடுதலைப் புலிகளில் இவரது காலத்தில் தான் பல முஸ்லிம் இளைஞர்களும் விடுதலைப் புலிகளில் சேர்ந்தார்கள். அக்காலத்தில் விடுதலை அமைப்புகளில் சேர்பவர்களில் ஆயுத மோகத்தில் இணைந்தவர்களும் உண்டு. அவ்வாறான கவர்ச்சி மேஜர் கணேசிடம் காணப்பட்டது. 200 சீசீ ஹொண்டா உந்துருளியில் செல்லுகின்ற போது அவரது தோற்றம் பலருக்கு ஒருவித ஈர்க்கையை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மையே. முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் அமைப்பில் சேர்வதனை புடையினர் பல இடங்களில் பயன்படுத்தி தம்மால் பயிற்றப்பட்டவர்களையும் உட்புகுத்தி அவர்களது வீடுகளுக்கு மாதாந்த சம்பளத்தையும் வழங்கினர். அவ்வாறு 1983 இல் படையினரால் பயிற்றப்பட்ட ஒருவர் உறுப்பினராக இல்லாது மிகவும் நெருங்கிய விசுவாசியாக மூதூரைச் சேர்ந்த ஒரு நபர் உட்புகுத்தப்பட்டார். அவருக்கும் மேஜர் கணேசுக்குமான உறுவுகள் மிகவும் பலமாக இருந்தது. இருவரும் ஒன்றாக உந்துருளியில் பயணம் செய்யுமளவிற்கு இருவருக்குமிடையேயான உறவுகள் இருந்தது. ஒன்றாக உணவு உண்பது, ஒன்றாக உறங்குவது ஒனறாக அறுபத்திநான்கு துறையடி என்ற இடத்தில் குளிப்பது என இருவரது உறவுகள் நெருக்கமாக இருந்தது. தனது நண்பர் மூலமாக யாராலும் முடியாத வேலையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது கணேசிற்கு. அவ்வாறாது தான் நண்பரும் செயற்பட்டார். மூதூரின் எல்லைக் கிராமங்களில் முஸ்லிம் மக்கள் சிலர் கொல்லப்பட்டனர். அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என முஸ்லிம் மக்கள் விடுதலைப் அமைப்புகள் மீதான எதிர்ப்புணர்வுகள் மெதுமெதுவாக அதிகரித்த வண்ணமிருந்தன. அதற்கான பிரதான காரணமாக இருந்தது முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் இக்கொலைகள் விடுதலை அமைப்புகளால் நிகழ்த்தப்படுகின்றன என்ற பொய்யான படையினரின் இரகசிய பரப்புரைகளாகும். அத்துடன் 85 இன் பின்னரான வெறுப்புக்குக் காரணமாக கிண்ணியா, மூதூர் நகர் எரிப்புச் சம்பவங்கள் திகழ்ந்தன. அக்கிராமங்களில் நடைபெற்ற கொலைகளுக்கு காரணமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மீது (புளொட் PLOTE ) மீது விடுதலைப் புலிகளுக்கு ஐயமிருந்தது. அதனை அப்போது புளொட் அமைப்பிற்கு அரசியல் பொறுப்பாக இருந்த வல்லிபுரத்துடன் சந்திப்பினை ஏற்படுத்தி மேஜர் கணேஸ் பேசினார். அவர்களுக்கு தொடர்புகள் இல்லை என மறுக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) செய்திருக்க மாட்டார்கள் என்பது விடுதலைப் புலிகள் அறிந்திருந்தார்கள். ரெலோ சிங்களவர்களுக்கு எதிராக மாத்திரமே செயற்பட்டார்கள் என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு. விடுதலைப் புலிகள் நடுத்தீவிற்கு சென்று வந்தால் நடுத்தீவில் அன்றைய இரவில் எதுவித காரணமும் இன்றி ஒருவர் கொல்லப் பட்டிருப்பார். இவ்வாறே ஆலிம்சேனை, பெரியபாலம், பாலநகர் போன்ற ஊர்களில் எதுவும் அறியா அப்பாவி முஸ்லிம் மக்கள் தமது உயிரை இழந்தார்கள். மேஜர் கணேஸ் தம்பலகமம் செல்வதற்கு தயாரானபோது தனது நண்பர் நாளை என்றால் தானும் வரமுடியும் எனக் கூற அதற்கு உடன்பட்டு காலயில அன்சார்வீட்ட சாப்பிட்டுற்று போகலாம் என்று நண்பர் கூற அதுவே முடியவாகியது. 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் நாள் மேஜர் கணேஸ் அவரது முஸ்லிம் நண்பர் சொன்னவாறே சென்று அறுப்பதிநாலில் (ஓர் ஊரின் பெயர் அவ்வாறே அழைக்கப்படுகிறது. செபல்நகர் என்பது ஊர்ப் பெயர்.) காலையில் நீல லுமாலா துவிச்சக்கர வண்டியில் மேஜர் கணேஸ் ஆற்றுத் துறையினைக் கடந்து சென்று கறுத்தாங்காக்கா என்பவரின் வளவு மூலையில் கூட்டிச்செல்வதற்காக அன்சார் நின்றார். புன்னகையுடன் சென்று அன்சாசாருக்கு பக்கத்தில் சென்ற போது பற்றைக்குள்ளிருந்து துப்பாக்கிகள் சடசடத்தன. ஏற்கனவே போடப்பட்டிருந்த திட்டத்திற்கமைய சுரேஸ் காசிமின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பற்றைக்குள் மேஜர் கணேசின் வருகைக்காக காந்திருந்து ஒளித்திருந்து இருவர் மீதும் சுட்டுக்கொன்றனர். படையினருடன் நண்பரும் நின்றிருந்தார். அன்சார் வரவழைத்து காட்டிக்கொடுத்து மேஜர் கணேசை கொன்றதாகவே தற்போதும் தமிழ் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நடடிவக்கை விடுதலைப்புலிகள ை மிகுந்த கோபத்திற்குள்ளா க்கியது. நண்பன் மூலமாகவே கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் அறிந்திருந்தனர். நண்பர் பின்னர் மூதூரில் இருந்த ஊர்காவல் படைக்கு தலைவனாகி தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேஜர் கணேசின் நண்பரை கொல்வதற்கு பல முயற்சிகள் எடுத்தும் முடியாமல் போய்விட்டது. புளொட் அமைப்பும் விடுதலைப் புலிகளும் நண்பரை கொல்வதற்கு பல முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட முறையில் தனது சகோதர்களை மூதூரின் எல்லைக் கிராமங்களில் ஒருவர் இருவராக சுட்டுக்கொன்றது மேஜர் கணேசின் நண்பரே என்பது பின்னர் தெரியவந்ததனாலேய ே புளொட் அமைப்பினர் அவரைச் சுடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஓர் ஊர்காவல்படை வீரன் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்த போது தமிழ் மக்கள் அவனை “ஒரு படை வீரனாக நோக்காது முஸ்லிம் மகனாக நோக்கி முஸ்லிம்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள்“ என நோக்கியதும் ஒரு படை வீரர் சாகும்போது அவனை “முஸ்லிம் ஒருவனைக் கொன்றுவிட்டார்கள்“ என முஸ்லிம் மக்கள் தவறான புரிதல்களை தங்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டதுமே இரு சமூகங்களுக்குமான இடைவெளிகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக தொடர்ச்சியாக தொடர்ந்தது.
--------------------------------
தொடர் – 09
எண்பதுகளின் இறுதிப்பகுதிகளில் தமிழ்பேசும் மக்களிடையே பிரிவினையை நோக்காகக் கொண்டு மொசாட் வழி நடத்தலில் பல திட்டங்கள் நடைபெற்றன. அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் தலைமையிலும் திருக்கோணமலையில் இராணுவ புலானாய்வாளர்கள் தலைமையிலும் பணிகள் நடைபெற்றன. அப்போது சிறப்பு அதிரடிப்படைக்குப் பொறுப்பாக இருந்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திரு போதி லியனகே (Bodhi Liyanage) அவர்களது வழிகாட்டலில் ஊர்காவல்படையினரை முஸ்லிம் இளைஞர்களை உள்வாங்கி அமைத்துக் கொண்டிருந்தார்கள். முதலில் திருக்கோணமலை மாவட்டத்தில் நடந்தவற்றைப் பார்ப்போம். தம்பலகமம் 98 ஆம் கொலனியில் 83 அக்டோபரில் ஒரு முஸ்லிம் இளைஞர் வாய்க்கால் அருகில் வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டிருந ்தார். அவரைக் கொன்றது ஈரோஸ் அமைப்பு என்ற பொய்யான கதையினை படையினர் இரகசியமாகப் பரப்பினர். அக்காலத்தில் ஈரோஸ் அமைப்பே தம்பலகமத்தில் அதிகளவான செயற்பாட்டைக் கொண்டிருந்தது. படையினரின் கருத்துக்கள் மெது மெதுவாகப் பரப்பப்பட்டுக்க ொண்டிருந்தன. கொலை நடைபெற்று ஐந்தாம் நாளில் 98 ஆம் கொலனிக்கு அயல் கிராமமான சிவசக்திபுரத்தில் ஒரு தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார். முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டதாக கதைகள் பரவின. எனினும் அப்போது ஈரோசின் பிராந்தியக்குழு உறுப்பினரான பாஸ்கரன் அவர்கள் நேரடியாக இரு ஊர்களுக்கும் சென்று “தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் படையினரின் திட்டமிட்ட சதி வேலை“ என்ற உண்மையினை எடுத்துச் சொன்னமையினால் இரு சமூகங்களிடையேயும் முறுகல் தோன்றாமல் தடுக்கப்பட்டது. எனினும் ஊர்காவல் படையினை தடுக்க முடியாமல் போனது. சில முஸ்லிம்இளைஞர்கள் படையினரின் பரப்புரையை நம்பினார்கள். சில இளைஞர்கள் தமது வாழ்வாதரத்திற்க ாக ஊர்காவல்படையில் இணைந்தார்கள். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஈரோசில் பயிற்சி பெற்று மறைவாக ஊர்களிலே இயங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை ஊர்காவல்படைக்கு ஈரோஸ் அனுப்பி வைத்தது. பயிற்சி முடிந்து ஊர்காவல்படை பணியாற்றினாலும் அவர்கள் விடுதலை அமைப்புகள் எதனுடனும் பகையான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர் ஏனைய ஊர்காவல்படை வீரர்களுக்கு ஈரோசின் கருத்தக்களையும் கொள்கைளையும் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார். தமிழ் விடுதலை அமைப்புகளிடம் ஆயுதங்கள் பெரியளவில் இருக்கவில்லை. பாரியளவிலான முகாம்களும் இருக்கவில்லை. பகலில் மக்களது வீடுகளுக்குச் சென்று கருத்துக்களைச் சொல்லி செயலாற்றுவதும் இரவு வேளைகளில் வயல்வெளிகளில் சென்று படுத்து வருவதுமே செயற்பாடாக இருந்தது. தம்மை தற்காத்துக்கொள்ள பேதியளவு ஆயுதங்கள் இல்லாமை குறையாக இருந்தது. ஊர்காவல்படையினரின் ஆயுதங்களை (Shot gun ) பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட ்டது. எதுவித மோதல்களும் இன்றி 17 பேர் தமது ஆயுதங்களை ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் தமது வேலைகளை இழந்தனர். சிலர் தற்போது மக்களால் மதிக்கப்படுகின்ற அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். சிலர் விடுதலை அமைப்புகளுடன் இணைந்தனர். கிண்ணியா , மூதூர் நிலைமைகள் வேறு விதமாக இருந்தது. அங்கே ஏற்கனவே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் துணையுடன் திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன. அவை ஆரம்பத்தில் சாதாரண பகையினால் ஏற்பட்ட கொலைகள் என்றே எண்ணினர். ஆனால் பிற்காலத்தில் விடுதலை அமைப்புகளால் நடத்தப்படுவதாக இரகசிய பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மூதூரில் ஈரோசின் மாவட்ட இராணுவ பொறுப்பாக இருந்த ஜெகன் என்பவரால் பெரியபாலத்தில் ஊர்காவல்படையினர் சுற்றிவளைக்கப்பட்டு அவர்கள் அனைவரினதும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. ஆனால் சில நாட்களிலேயே அது புனரமைக்கப்பட்ட ு ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. கிண்ணியாவில் ஊர்காவல்படை ஆலங்கேணி, ஈச்சந்தீவு, சுங்கான்குழி போன்ற ஊர்களில் வசித்த தமிழ் மக்களுக்கு தொந்தரவுகளைக்கொ டுத்த வண்ணமிருந்தனர்.
----------------------------
தொடர் – 10
தமிழ்பேசும் மக்களது உறவுகள் திட்டமிட்டவகையில் பிரிக்கப்படுவதற ்கு வேறான ஒரு நடைமுறையும் கையாளப்பட்டது. ஜிகாத் இஸ்லாமியர்களின் மத ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகும். ஜிகாத் என்பது இஸ்லாமியர்களின் தனித்துவத்தினைப் பேணுவதாக இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்களால் நோக்கப்படுகின்ற து. ஆனால் ஜிகாத் என்ற பெயரில் ஓர் அமைப்பினை உருவாக்கி அவ்வமைப்பினைப் பயன்படுத்தி தமிழ்பேசும் மக்களது உறவினை பிரிப்பதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டன. விடுதலை இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இணைந்து கொண்டிருந்தனர். அதனைப் பயன்படுத்தி தம்மால் பயிற்றப்பட்டவர் களை தமிழ் விடுதலை இயக்கங்களுக்குள் ஆட்சியாளர்கள் உட்புகுத்தினர். தாமாக இணைந்த முஸ்லிம் இளைஞர்களை மீண்டும் வீடுகளுக்கு அழைப்பதற்கு பலவழிகளையும் கையாண்டனர். மூதூர், கிண்ணியா போன்ற பகுதிகளில் இருந்து பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திரு்தனர். அவ்வாறு தாமாக இணைந்த இளைஞர்கள் பலரது வீடுகளுக்கு சுரேஸ்காசிம் சென்று வீட்டிலுள்ளவர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்தார். இயக்கத்திலிருந்து அவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்புபவர்களின் பாதுகாப்பிற்கு தன்னால் உத்தரவாதம் வழங்கப்படும் அல்லது அவர்களை அரச செலவிலேயே வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு தன்னால் ஏற்பாடுகள் செய்யப்படும். அவ்வாறு அவர்கள் இயக்கங்களிலிருந்து வராவிட்டால் குடும்ப உறவுகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் வைக்கப்படுவார்கள் அல்லது காணாமல் போவீர்கள் என்ற கண்டிப்பான அச்சுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலமாக தமிழ் விடுதலை இயக்கங்களில் இணைந்த முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் மூலமாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதனால் இணைந்த இளைஞர்கள் சிலர் தமது பொறுப்பாளர்களுக்குத் தெரிவிக்காமலே தமது வீடுகளுக்கு திரும்பினர். இந்நடவடிக்கை இரண்டுவிதமான நன்மைகளை சுரேஸ்காசிமிற்க ு கொடுத்தது. ஒன்று முஸ்லிம் இளைஞர்களை அகற்றுதல் இன்னொன்று திரும்பும் இளைஞர்கள் மீது விடுதலை இயக்கங்களுக்கு கோபம் ஏற்படுதல். அத்துடன் முஸ்லிம் மக்கள் மீதும் வெறுப்பு ஏற்படுதல். அவரது எதிர்பார்ப்பு சரியாகவே இருந்தது. வீடுகளுக்கு திரும்பிய இளைஞர்களைத் தேடி விடுதலை இயக்கங்கள் சென்று உறவினர்களை துன்புறுத்திய சம்பவங்கள் பல நடந்தன. இந்நடவடிக்கைகளினால் முஸ்லிம் இளைஞர்க்ள விடுதலை இயக்கங்களில் இணைவது பின்னாட்களில் முற்றாகவே நின்று போனது. கிண்ணியாவில் பிரிந்து வந்தவர்கள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். ஆனால் மூதூரிலிருந்து யாரும் வெளிநாட்டுக்ச் செல்லவில்லை, ஊரிலேயே இருந்தனர். தமது வீடுகள் தவிர்த்து வேறிடங்களில் தமது இரவு நேரத்தை கழித்தனர். மூதூரில் ஜிகாத் ஓர் அமைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் விடுதலைப் அமைப்பிலிருந்து ஓடி வந்தவர்கள் இணைக்கப்பட்டார்கள். ஜிகாத் அமைப்பிற்கு சுரேஸ்காசிம் இனால் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. ஆயுதப்பயிற்சிகளும் வழங்கப்பட்டன. நடுத்தீவு, அக்கரைச்சேனை, ஆகிய இடங்களில் தனியார் காணிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஜிகாத் என்ற புனித பெயரில் அமைப்பு இருந்ததனால் பல இளைஞர்கள், சிறுவர்கள் அமைப்பில் இணைந்தனர். நடுத்தீவுக்கு “ஜிகாத்நகர்“ என பெயர் மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துவிட்டது. ஆனால் வேறு சில ஊர்களின் பெயர்கள் அவர்களால் மாற்றியமைக்கப்பட்டன. ஜிகாத் தமது நலனில் அக்கறையுடன் இயங்கும் என மூதூர் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடைமுறை முற்று முழுதாக மாறியேயிருந்தது. ஆயதங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என கப்பம் கோருதல் தர மறுப்பவர்களுக்கு அச்சுறுத்தல் செய்தல், சிலர் துன்புறுத்தப்பட்டும் இருக்கின்றனர். அக்காலத்தில் திரைப்படங்கள் டெக் இல் பார்ப்பார்கள். அவ்வாறு திரைப்படங்கள் பார்ப்பவர்களை துன்புறுத்துவது மொட்டையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். யாராவது காதலில் ஈடுபட்டால் உச்சபட்ச தண்டனைகள் வழங்குவது , மொட்டையடிப்பது என அட்டகாசங்களில் ஈடுபட்டார்கள். யாரிடம் ஆயுதம் இருக்கின்றதோ அவர்கள் தனியாவோ கூட்டாகவோ களவு, கொள்ளைகளில் ஈடுபட்டார்கள். இந்நடவடிக்கைகளுக்கெல்லாம் பொறுப்பாக இருந்து செயற்பட்டவர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஓடிவந்த “மாக்கட்டி“ என்பவராகும். அவருக்கு “காட்டுசாரா“ என்பவரும் உறுதுணையாக இருந்தார். ஜிகாத் மீது மூதூரில் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு அற்றநிலை மெது மெதுவாக உருவாகி 1989 இல் “மாக்கட்டி“ கொழும்பில் வைத்து சுரேஸ் காசி்ம் இனால் கொல்லப்பட்டதுடன் முற்றாக இல்லாது போனது. (1987 ஆம் ஆண்டில் மாக்கட்டியின் முக்கியமானதொரு செயற்பாடு பின்னால் வருகின்ற ஒரு தொடரில் பேசப்படும்) முஸ்லிம் சமூகத்தின் உயிர்த்துடிப்பு ள்ள இளைஞர்களை தவறான கருத்துாட்டல்களினால் தமிழ் விடுதலை இயக்கங்களிற்கு எதிராக திசைதிருப்பி மாபெரும் வெற்றியை மொசாட் பெற்றுக்கொண்டது. சுரேஸ்காசிம் இன் அர்பணிப்புள்ள ஈடுபாடான செயற்பாடுகளே அதற்கான முழுக்காரணமாக இருந்தது. ஒற்றுமையாக இருந்த தமிழ்பேசும் மக்கள் எண்பதுகளின் பின்னர் உறவு முறிந்தமைக்கான காரணம் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இருந்த தலைமைகள் உறவுகளை சரிவரப் பேணாமையே. இரு சமூகங்களினாலும் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை இல்லாமையே. இனியொரு உறவுநிலை உருவாக வேண்டுமெனில் இருசமூகங்களையு முடையோர் இணைந்த கருத்தொருமைப்பா ட்டினடிப்படையில் ஐயம் கடந்து உருவாக்கப்படுகின்ற அமைப்பினால் மாத்திரமே சாத்தியமாகலாம். 15 ஆகஸ்ட், AM 12:44
---------------------------------
தொடர் – 11
கிண்ணியாவில் தற்போது பிரதேச செயலகம் அமைந்திருக்கும் இடத்தில் 1973 ஆம் ஆண்டிற்கு முன்னர் 45 தமிழ்க் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். 1973 ஆம் ஆண்டு DRO (Divisional Revenue Office) அலுவலகம் அமைப்பதற்கான இடம் கிண்ணியாவில் தேவையான போது கிண்ணியாவின் ஒரு மையப்பகுதியில் அலுவலகம் அமைக்கப்படுதலே சிறந்தது என்ற நோக்கில் 45 தமிழ்க்குடும்பங்கள் வசித்த பகுதி தெரிவுசெய்யப்பட்டது. அவ்வூரின் தலைவராக இருந்த அருள்ராஜா என்பவருடன் அப்போது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அப்துள் நஜீப் அவர்களின் தந்தை மர்ஹும் அப்துள் மஜீத் அவர்கள் இடம் தேவையின் அவசியம் பற்றி கலந்துரையாடினார். அத்துடன் மூதூர் தொகுதியின் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் தங்கத்துரை அவர்களிடமும் உரையாடியதன் விளைவாக 45 தமிழ்க்குடும்பங்களில் 13 குடும்பங்கள் அவ்விடத்திலிருந்து இடிமண் என்ற இடத்தில் எகுதார் ஹாஜியாருக்கு சொந்தமான காணியில் குடியமர்த்தப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் தலா அரை ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. 13 தமிழ்க் குடும்பங்களுடன் இரண்டு முஸ்லிம் குடும்பங்களும் குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு குடியமர்த்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தில் ஒரு குடும்பம் தற்போது மருத்துவராக இருக்கும் ஜிப்ரி அவர்களது குடும்பமும் ஒன்றாகும். எனினும் 1991 இல் நடைபெற்ற சனாதிபதி நடமாடும் சேவையில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து எகுதார் ஹாஜியாரின் காணியில் குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் வெியேற்றப்பட்டு அவரது மகனான வன்னியன் என்பவருக்கு காணி சொந்தமானது. உரிய முறைப்படி எகுதார் ஹாஜியாரிடமிருந்து காணி சுவீகரிக்கப்படாது ஆவணம் வழங்கப்படாமையினால் அம் மக்களுக்கு காணியற்ற நிலை உருவாக்கப்பட்டது. மக்கள் வெளியேற்றப்பட்ட இடத்தில் டீ.ஆர்.ஓ அலுவலகம், கமநல கேந்திர நிலையம், பள்ளிவாசல் என்பன நிர்மாணிக்கப்பட்டன. கிண்ணியா நகர் விடுதலைப்புலிகள ினால் எரிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த “சிங்க ரெஜிமென்ட்“ படைப்பிரிவினர் தாம் முகாம் அமைக்கவுள்ளதாகவும் அவ்விடத்திலிருந்து 24 மணிநேரத்தினுள் அவ்விடத்தை விட்டு அங்கு வசிக்கும் 32 தமிழ்க்குடும்பங்களும் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மொசாட் பயிற்சி பெற்ற வசீரின் ஆலோசனையினடிப்படையில் சுரோஸ் காசிமினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஊர்த்தலைவரான அருள்ராஜா அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இம்ரான் மஹமறூஃப் அவர்களின் தந்தை மர்ஹும் எம்.ஈ.எச். மஹ்றூப் அவர்களிடம் சென்று முறையிட்டார். “படையினர் கோரினால் எனது இடமென்றாலும் வழங்கத் தான் வேண்டும்“ என்பது பதிலாக கிடைத்தது. மக்கள் அனைவரும் தமது இருப்பிடங்களை விட்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு தங்களது உறவினர்கள் வசித்த இடிமண், ஆலங்கேணி ஆகிய ஊர்களில் தஞ்சமடைந்தனர். மக்கள் வசித்த 9 ஏக்கர் காணியிலும் படையினர் முகாம் அமைக்கவில்லை. காவல்துறையினரே தமது நிலையத்தினை அமைத்தனர். அமைக்கப்பட்ட காவல்துறை நிலையத்திற்கு காதர் எனபவர் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார். மக்கள் பின்னர் ஆலங்கேணி, ஈச்சந்தீவு பள்ளிகளில் ஈரண்டரை ஆண்டுகள் அகதிகளாக முகாம் வாழ்க்கை வாழ்ந்தனர். பின்னர் சரணவணமுத்து தோட்டத்தில் அகதி முகாம் அமைக்கப்பட அவ்விடத்தில் வசித்தனர். பின்னர் கிளப்பன்பேக் முகாமில் வசித்தனர். இக்காலங்களில் ஊர்காவல் படையினரின் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகினர். இராணுவத்தினால் சிலர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். சொல்லொணா துன்பங்களை இம் மக்கள் அநுபவித்தனர். தற்போது கடலூர் என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். கிண்ணியா நகர் எரிப்பின் பின்னர் வசீர் தலைமையில் அமைக்கப்ட்ட ஊர்காவல்படையினர் கிண்ணியாவில் வசித்த தமிழ் மக்களை கிண்ணியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனபதில் குறியாக இருந்து செயற்பட்டு வெற்றியும் கண்டார்கள். கிண்ணியாநகர் எரிக்கப்ட்டு ஐந்தாவது நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூதூர் பிரதேசத்தில் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன் என்பவரின் மாமாவான பஞ்சலிங்கம் உட்பட நான்கு பேரை அப்போது கிண்ணியா போக்குவரத்து சபை டிப்போ இருந்த இடத்தில் வைத்து வசீர் குழுவினர் கொலை செய்து ஆலங்கேணியிலுள்ள பனங்காட்டில் புதைத்தனர். கொல்லப்பட்ட நால்வரும் தற்போது கிண்ணியா மருத்துவ மனை இருக்குமிடத்திற்கு முன் பகுதியில் வசித்தவர்கள். கொல்லப்பட்டவர்களில் சத்தியா எனும் தாதியின் துணைவரும் ஒருவர். சத்தியா என்ற தாதியினை இன்றும் கிண்ணியாவில் உள்ள பலர் சிறந்த சேவையாளர் என்று நினைவுகூருகின்றனர். அவரது மகள் இஸ்லாம் மதத்தினைத் தழுவி தற்போது அவரும் ஒரு தாதியாக கிண்ணியாவில் வசிக்கின்றார். இவ்வாறான கொலைகள் அப்பகுதியில் இடைக்கிடை நடைபெற்றதனால் கிண்ணியாவிலிருந்து தமிழ் மக்கள் அச்சத்தினால் தமது காணிகளை விற்றுவிட்டு வெளியேறி வேறிடங்களில் தமது இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர். 16 ஆகஸ்ட், AM 1:05
----------------------------
|
தொடர் – 12
கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்கள் உறவு விரிசலடைவதற்கான நடவடிக்கைகள் ஆட்சியாளர்களினா ல் மேற்கொள்ளப்பட்ட ுக்கொண்டிருக்கு ம் போது தமிழ் விடுதலை இயக்கங்களின் சில நடவடிக்கைகளும் அதற்குத் துணை செய்தன.
விடுதலை இயக்கங்கள் தமது நாளாந்த செலவுகளிற்கான நிதியினை மக்களிடமிருந்தே பெற்றனர். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்ற பேதமின்றி ஆரம்பத்தில் செல்வந்தர்களை அழைத்து அவர்களிடம் பண்பாகப் பேசி நிதியினைப் பெற்றனர். தொடர்ச்சியாக கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது அச்சுறுத்தல் விடுத்தல், குடும்ப உறுப்பினர்களைக் கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிதியினைப் பெற்றனர். தமிழ் மக்களிடத்தில் இந்நடவடிக்கை விசனத்தை ஏற்படுத்தினாலும ் நமது பிள்ளைகள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த தனால் அது பெரிதான விடயமாகப் பேசப்படவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களிடம் இந்நடவடிக்கை தமிழ் மக்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக மாறியது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வரும் வரையில் தமிழ் இயக்கங்களின் நிதியீட்ட நடவடிக்கை கப்பம் வாங்குகின்ற செயற்பாடாக முஸ்லிம் மக்களால் பார்க்கப்பட்டது . அச்சத்தின் காரணமாக கோரப்படும் நிதியினை வழங்காவிட்டாலும ் தம்மால் இயன்ற நிதியினை வழங்கினார்கள். இச்செயற்பாடுகள் முஸ்லிம்கள் மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களை தூர விலக்குவதற்கு துணை செய்தன. ஆட்சியாளர்களும் அதனைப் பயன்படுத்தி தமது செயற்பாடுகளை எளிதாக்கினார்கள ்.
அதேவேளை 1982 ஆம் ஆண்டு கிண்ணியா மக்கள் வங்கி ஈ.பீ.ஆர்.எல்.எஃ ப் இயக்கத்தினால் பெரும்தொகைப் பணம், நகை என்பன கொள்ளையிடப்பட்ட ன. இந்நடவடிக்கைக்க ு ஈரோசிலிருந்து பிரிந்துசென்று ஈ.பீ.ஆர.எல்.எஃப ் உடன் இணைந்து கொண்ட கந்தளாயைச் சேர்ந்த சின்னவன் தலைமை தாங்கினார். இந்நடவடிக்கைகக் கு ஈ.பீ.ஆர்.எல்.எப ். இன் பின்னர் முக்கிய நபராக விளங்கிய சுபத்திரனும் பங்கேற்றார். சின்னவன் காரைநகர் கடற்படைத்தளத் தாக்குதலில் இன்னுயிரை ஈர்ந்தவர்.
1983 இல் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மதுபோதையில் காவல்துறை கைது செய்தது. கைதுசெய்யப்பட்ட காரணம் அறியாது தானாகவே கிண்ணியா வங்கிக்கொள்ளைச் சம்பவம் பற்றி மதுபோதையில் உளறியதனால் வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய, ஒத்துழைப்பினை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கிய பலர் காவல்துறையினரால ் 1983 இல் கைது செய்யப்பட்டு தண்ணடனை அநுபவித்து 1988 காலப்பகுதியில் விடுவிக்கப்பட்ட னர். இக்கொள்ளையில் முஸ்லிம் மக்கள் எவரும் தொடர்புபட்டிருக ்கவில்லை.
ஆனாலும் முஸ்லிம் மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு உதவிகள் செய்த வண்ணமும் இருந்தனர். காடுகளில் முகாமிட்டிருக்க ும் போராளிகளுக்கு உணவு, உடை என்பற்றைக் கொண்டு கொடுக்கும் பெரும்பணியினை முஸ்லிம்கள் செய்தனர். தமிழர்கள் கொண்டு செல்லும் போது ஐயம் காரணமாக படையினரால் கைதுசெய்யப்பட வாய்ப்புகளிருந் ததனால் முஸ்லிம் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் அதிகளிவில் உதவினார்கள். விறகு வெட்டச்செல்லுதல ், வயல்களுக்குச் செல்லுதல், மீன், நண்டு பிடிக்கச் செல்லுதல் என்ற போர்வையில் பொருட்கள் கைமாறப்பட்டன.
கிண்ணியா கண்டலடியூற்றிலி ருந்து உப்பாற்றில் முகாமிட்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். மீன் , நண்டு பிடிப்பதற்காக செல்வது என்ற போர்வையில் சென்று பொருட்களை ஒப்படைத்து வருவார்கள்.இதனை அறிந்த படையினர் உப்பாறு துறையடியில் அதிகாலையிலேயே சென்று நிலையெடுத்துக் காத்திருந்தனர். இதனை அறியாது கண்டலடியூற்றைச் சேர்ந்த ஆறு பேர் பொருட்களுடன் வள்ளத்துக்கு அருகில் சென்றவுடன் இராணுவத்தினரை கண்டதும் பிடிபட்டால் கையும் மெய்யுமாக பிடிபடுவோம் என்பதை உணர்ந்து ஓடத்தொடங்கினர். நிற்குமாறு படையினர் விடுத்த கட்டளையை அவர்கள் செவிசாய்க்கவில் லை. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட து. ஆறு பேரில் “அப்துள் லத்தீப் கலீம்“ என்பவர் குண்டு பட்டு சாவடைந்தார். ஏனைய ஐவரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்ட ு பின்னர் கைதுசெய்யப்பட்ட ு தண்டனையின் பின்னர் விடுவிக்கப்பட்ட னர். இவ்வாறு பல சம்பவங்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் நடைபெற்றன.
கண்டலடியூற்றைச் சேர்ந்த ராப்டீன், முஸ்தபா ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை இரகசியமாகக் கொண்டு சேர்ப்பவர்கள். அவர்கள் இராணுவ கெடுபிடி காரணமாக சில நாட்கள் செல்லவில்லை. அதனையறியாத விடுதலைப் புலிகள் அவர்கள் இருவரையும் தேடி வந்து சுட்டக்கொன்றனர் . இந்நடவடிக்கை கண்டலடியூற்று மக்களை விடுதலைப் புலிகள் மீது வெறுப்பினை ஏற்படுத்திய சம்பவமாக பதிவானதுடன் விடுதலைப்புலிகள ுக்கு பொருட்களை கொண்டு சென்று கொடுப்பதற்கும் தயங்கியதுடன் யாரும் அவ்வாறு செயற்பட முன்வரவில்லை.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்கள் உறவு விரிசலடைவதற்கான
விடுதலை இயக்கங்கள் தமது நாளாந்த செலவுகளிற்கான நிதியினை மக்களிடமிருந்தே
அதேவேளை 1982 ஆம் ஆண்டு கிண்ணியா மக்கள் வங்கி ஈ.பீ.ஆர்.எல்.எஃ
1983 இல் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மதுபோதையில் காவல்துறை கைது செய்தது. கைதுசெய்யப்பட்ட
ஆனாலும் முஸ்லிம் மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு உதவிகள் செய்த வண்ணமும் இருந்தனர். காடுகளில் முகாமிட்டிருக்க
கிண்ணியா கண்டலடியூற்றிலி
கண்டலடியூற்றைச்
-------------------------------------------------------
தொடர் – 13
திருக்கோணமலை மாவட்டத்தில் 1985 காலப்பகுதியில் தமிழ் விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமிருந்தன. அதனைக்கட்டுப்பட ுத்த வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டது.
1985.11.17ஆம் நாள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஊர்களை இலக்கு வைத்து 1000இற்கு மேற்பட்ட படையினர் சுரோஸ் காசிம் தலைமையில் சுற்றிவளைத்தனர் . இதுவே படையினரின் முதலாவது பாரிய சுற்றிவளைப்பாகு ம். காடுகள், கடற்கரை, ஆற்றங்கரை, துறையடி என அனைத்து இடங்களிலும் படையினர் செறிவாகக் குவிக்கப்பட்டனர ்.
ஆலங்கேணி, ஈச்சந்தீவு ஆகிய ஊர்களில் வசித்த மக்கள் வாழ்வாதாரத்திற் காக ஆலங்கேணியிலிருந ்து 12 கி.மீ.தூரத்திலு ள்ள கண்டக்காடு, இறவடிச்சேனை, தளவாய், ஜபார்திடல் ஆகிய இடங்களில் கால்நடை வளர்ப்பிலும் நெற்செய்கையிலும ் ஈடுபட்டனர். இவ்விடங்களுக்கு ச் செல்வதற்கு மூன்று வழிகளை மக்கள் பயன்படுத்தினர். மாவுசாப்பா துறை வழி, கண்டக்காட்டு துறை வழி, உப்பாற்றுத்துறை வழி. உப்பாற்றுத்துறை வழியினை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தவில்ல ை.
1985.11.17 ஆம் நாள் அதிகாலை 5.00 மணியளவில் தனது மாட்டு வண்டியில் தனது இளைய மகன் மற்றும் எருமை மாடுகளை மேய்ப்பதற்காக தன்னுடனிருக்கும ் பெடியன் ஆகியோருடன் இராசையா கணேசபிள்ளை புறப்பட்டு செல்லுகின்ற போது காலை 5.10 மணியளவில் ஆலங்கேணியிலிருந ்து மாவுசாப்பா துறைவழியால் செல்வதற்காக 2 கி.மீ.தூரத்திலு ள்ள பூவரசந்தீவில் அப்போது இஸ்மெயில் என்பவரது தேநீர்க்கடை இருந்த இடத்திற்கு முன்னால் படையினர் மாட்டுவண்டிலை நிறுத்தினர். பெயரைக் கேட்டவுடன் வண்டிலில் இருந்து இறக்கி ஓர் இடத்தில் அமரச் செய்தனர். மகனும் மாடு மேய்கும் பெடியனும் சிறுவர்களாக இருந்தமையினால் அவர்களை படையினர் கண்டுகொள்வில்லை அவர்களைத் துரத்தி விட்டனர். இருவரும் மாட்டுப்பட்டி இருக்குமிடத்தை நோக்கி சென்றனர். கணேஸ் என்றழைக்கப்படும ் கணேசபிள்ளை விடுதலைப் புலிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்பவர். சரியான ஆதாரங்களுடனேயே படையினருடன் கூடவே வந்த பசீரினால் தகவல் வழங்கப்பட்டதுடன ் பசீரும் கூடவே வந்திருந்தார். பசீர் முன்னிலையில் கணேஸ் கைதுசெய்யப்பட்ட ு காலையில் ஆலங்கேணிக்கு கொண்டுவரப்பட்டா ர். சுற்றிவளைப்பு பி.ப.3.00 மணி வரை நடைபெற்றது. சுற்றிவளைப்பு நிறைவில் 28 பேர் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய ஊர்களில் இருந்து கைது செய்யப்பட்டிருந ்தனர். ஒருவர் மாத்திரம் ஈரோஸ் போராளி. 21 பேர் பூசா முகாமிற்கு அனுப்பப்பட்டனர் . கணேசபிள்ளை, சீனிக்குச்சியர் என்றழைக்கப் பட்ட தங்கராசா சீந்தாத்துரைமகன ் உட்பட ஏழுபேர் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டனர். உண்மையில் அவர்கள் சுரேஸ் காசிமினால் சுட்டுக்கொல்லப் பட்டதாக பின்னர் தெரியவந்தது.
இந்தச் சுற்றிவளைப்பு தமிழ் மக்களிடையே உண்மையில் அக்காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன ் உளவியல் ரீதியான பாதிப்பினையும் ஏற்படுத்தியது. விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர்கள் தண்டிக்கப்படுவா ர்கள் என்ற செய்தி கைது மூலம் இவ்வூர் மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட து.
இச்சுற்றிவளைப்ப ில் முஸ்லிம் ஊர்காவல்படையினர ் ஈடுபட்டதனால் முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களுக்கு கோபம் ஏற்பட்டது. முஸ்லிம் மக்களை விரோதிகளாகப் பார்க்கும் நிலை தோன்றியது.
விடுதலைப்புலிகள ுக்கு ஆதரவான குடும்பமாக ஈச்சந்தீவிலிருந ்த காளியப்பர் குடும்பம் விளங்கியது. விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் தங்கி உணவு உண்ணும் இடமாக அக்காலத்தில் அவரது வீடு விளங்கியது. 1986 இன் முற்பகுதியில் அதிகாலை வேளையில் சுரேஸ் காசிம் தனது சகாக்களுடன் காளியப்பர் வீட்டுக்குச் சென்று அவரது “கன்னி“ என்ற பெயரையுடைய மகளை அவர்களது வீட்டுச் சுவரோடு சேர்த்து அவரது மார்பகங்களை இலக்கு வைத்து சுட்டுக்கொன்றார ்.
அன்றைய நாள் தருமலிங்கம் மற்றும் கறுத்த ஐயா என்றழைக்கப்பட்ட மயில்வாகனம் ஐயா ஆகியோரும் அப்பம்தின்னி அப்பா என்றழைக்கப்பட்ட இராசேந்திரம் அவர்களது தேநீர்க்கடைக்கு முன்னால் (தற்போது ஆலங்கேணி நூலகம் இருக்குமிடத்தில ்) சித்திரவதைகளின் பின்னர் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
இறவடிச்சேனை என்ற இடத்தில் 1986 இல் விடுதலைப்புலிகள ின் பொறுப்பாளராக இருந்த புலேந்திஅம்மான் என்பவரால் முன்பள்ளி அமைக்கப்பட்டது. அப்பள்ளியினை அமைப்பதற்குத் தேவையான நிதியுதவியினை கந்தையப்பாவின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர ். மாலை வேளையில் எதிர்பாராத விதமாக இறவடிச்சேனைக்கு சுரேஸ்காசிம் அணியினர் வந்து கந்தையப்பாவின் மூத்த மகளான கௌரி என்பவரை வன்புணர்வுக்குட ்படுத்தியதோடு அவரைச்சுட்டும் கொன்றனர்.
இந்நடவடிக்கைகளி ல் முஸ்லிம் ஊர்காவல்படையினர ும் இணைந்திருந்தனர் . பசீருடன் வேறு சிலரும் பங்கேற்றிருந்தத னை தமிழ் மக்கள் தம் கண்களினால் கண்டனர். இதனால் இப்பகுதியில் வசித்த தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. முஸ்லிம்கள் தம்மைக் காட்டிக் கொடுக்கின்றார்க ள் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் அரசினால் ஊதியம் பெறுகின்றார்கள் என்ற எண்ணம் மறைக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது எதிர்ப்பு ஏற்பட்டமை அரசிற்கு கிடைத்த வெற்றியாகும்.
திருக்கோணமலை மாவட்டத்தில் 1985 காலப்பகுதியில் தமிழ் விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமிருந்தன. அதனைக்கட்டுப்பட
1985.11.17ஆம் நாள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஊர்களை இலக்கு வைத்து 1000இற்கு மேற்பட்ட படையினர் சுரோஸ் காசிம் தலைமையில் சுற்றிவளைத்தனர்
ஆலங்கேணி, ஈச்சந்தீவு ஆகிய ஊர்களில் வசித்த மக்கள் வாழ்வாதாரத்திற்
1985.11.17 ஆம் நாள் அதிகாலை 5.00 மணியளவில் தனது மாட்டு வண்டியில் தனது இளைய மகன் மற்றும் எருமை மாடுகளை மேய்ப்பதற்காக தன்னுடனிருக்கும
இந்தச் சுற்றிவளைப்பு தமிழ் மக்களிடையே உண்மையில் அக்காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன
இச்சுற்றிவளைப்ப
விடுதலைப்புலிகள
அன்றைய நாள் தருமலிங்கம் மற்றும் கறுத்த ஐயா என்றழைக்கப்பட்ட
இறவடிச்சேனை என்ற இடத்தில் 1986 இல் விடுதலைப்புலிகள
இந்நடவடிக்கைகளி
----------------------------------------
தொடர் – 14
திருக்கோணமலை மாவட்டத்தின் வடபுறத்தே தென்னவன்மரபுஅடி ஊர் உள்ளது. திருக்கோணமலை மாவட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்து வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்கின்ற ஊர் தென்னவன்மரபுஅடி ஆகும். 1824 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் கணக்கெடுப்பில் தமிழ் ஊர் எனப் பதியப்பட்ட ஊராகும்.முழுமைய ாக தமிழ் மக்கள் வசித்த ஊர்.
1984 ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் அதிகாலை வேளையில் நாய்கள் குரைக்கும் சத்தம் ஊரைச்சுற்றிவரக் கேட்டுக்கொண்டிர ுந்தது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் இரவு புல்மோட்டை நகரத்தில் இருக்கின்ற கடைகள் சிலவற்றில் நுகர்ச்சிப்பொரு ட்களை விடுதலைப்புலிகள ் கொள்வனவு செய்து சென்றிருந்தார்க ள். இக்கொள்வனவிற்கு தென்னவன் மரபுஅடியில் வசித்த சில தமிழ் இளைஞர்களும் புல்மோட்டையில் வசித்த சில முஸ்லிம் இளைஞர்களும் உதவினார்கள். பலத்த அச்சம் நிலவிய நாள் அது.
1984 டிசம்பர் ஓராம் நாள் கொக்கிளாய் ஊர் விடுதலைப்புலிகள ால் தாக்கப்பட்டு 11 சிங்கள ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர். (அதில் சில பொது மக்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுக ிறது)
1984 நம்பர் 11 ஆம் நாள் டொலர்பாம் என்ற சிங்களக் குடியேற்ற ஊரிலிருந்து 33 சிங்களப் பொதுமக்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
1984 டிசம்பர் 30 ஆம் நாள் கென்ற்பாம் என்ற சிங்கள குடியேற்ற ஊரில்29 பேரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருந ்தார்கள்.
இம் மூன்று தாக்குதல்களினால ் புல்மோட்டை, தென்னவன்மரபுஅடி ஆகிய ஊர்கள் அச்சத்தில் இருந்தன. அவ்வாறான நிலையில் புல்மோட்டைக்கு துணிகரமாக வந்த விடுதலைப் புலிகள் அங்குள்ள முஸ்லிம் மக்களின் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றார்கள்.
புல்மோட்டை முஸ்லிம் மக்கள் அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களுடனும் நல்லுறவை தொடர்ந்து பேணிவந்திருந்தன ர். அங்கு ஆட்சியாளர்களினா ல் தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது என்பதனை மறுக்கமுடியாது. புல்மோட்டையிலுள ்ள முஸ்லிம் மக்கள் பேசுகின்ற மொழியினை வைத்து அவர்கள் தமிழ் மக்களா அல்லது முஸ்லிம் மக்களா என இன்றும் பிரித்தறியா முடியாத நிலை உள்ளமையானது அங்கு தமிழ்பேசும் மக்களின் உறவின் ஆழத்தினைப் புரிந்து கொள்வதற்கான சான்றாகும்.
நாய்களின் குரைத்தல் ஒலி தென்னவன்மரபுஅடி ஊரின் நடுவிலும் உரத்து ஒலித்தது. ஊர்மக்களின் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டு பதவிசிறிபுர பகுதியில் இருந்து வந்த ஆயுததாரிகளால் எழுப்பப்பட்டனர் . அனேகமாக வயது வேறுபாடின்றி, ஆண்பெண் என்ற பால் வேறுபாடின்றி சிறுவர் முதியோர் என்ற பேதம்இன்றி அனைவரும் துன்புறுத்தப்பட ்டனர். கையிலிருந்த துப்பாக்கிகளால் தாக்கப்பட்டனர். சிலர் உயிரச்சம் காரணமாக தப்பிப்பதற்காக அருகிலிருந்த காடுகளை நோக்கி ஓடியபோது துப்பாக்கியால் சுடப்பட்டனர். அன்று முழுவதும் அவ்வூர் அல்லோலகல்லோப்பட ்டது. தென்வன்மரபுஅடி ஊரில் அன்றைய நாள் 15 பேரை காடையர்கள் சுட்டுக்கொன்றனர ். 12 பேர் காயமடைந்தனர். தென்னவன்மரபுஅடி என்ற ஊருக்கு அருகாமையில் இருந்த ஊரான “அமரவயல்“ (இவ்வூரின் பெயர் தற்போது திருக்கோணமலை மாவட்டத்தில் வசிக்கின்ற பலருக்கு அப்படியொரு தமிழ் ஊர் இருந்ததா? என்பதே தெரியாமல் உள்ளது என்பதே உண்மை) என்ற ஊர் வரை இத்தாக்குதல் நீண்டிருந்தது. இவ்விரு ஊர்களில் வசித்த மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என காடையர்கள் அச்சமூட்டினர். அப்போது இவ்வூர்களின் விதானையாராக பணியாற்றிய சி.வைரமுத்து என்பவரின் ஆலோசனையினடிப்பட ையில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் நாலாம் நாள் ஆண்டாண்டு காலமாக தாம் வாழ்ந்த மண்ண விட்டு வடக்கு நோக்கி இரவிரவாக காட்டுவழியால் தமது கைகளால் கொண்டு செல்லக் கூடிய பொருட்களை எடுத்தக்கொண்டு சென்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள “பொன்னகர்“ என்ற ஊரில் வசிக்கத் தொடங்கினார்கள். இன்றுவரை பொன்னகரில் தான் அநேகமான தென்னவன் மரபுஅடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அன்றைய நாள் தாக்குதலின் நிறைவில் புல்மோட்டைக்கு வந்த காடையர்கள் பொருட்கள் விற்பனை செய்த முஸ்லிம் மக்களை அச்சுறுத்திச் சென்றனர். ஆனால் அவர்களை தாக்குவதற்கு தலைமையேற்று வந்தவர் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுக ிறது.
வடக்கினையும் கிழக்கினையும் பிரிப்பதற்கான நிகழ்ச்சிநிரலின ் முதலாவது அடி வெற்றிகரமாக ஆட்சியாளர்களால் காடையர்கள் மூலமாக நிவர்த்திக் கப்பட்டது.
அச்சமூட்டுதல், பிரித்தாளுதல் , ஒருசாராரை தமது கைக்குள் வைத்திருத்தல் போன்ற பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டனர் ஆண்ட ஆட்சியாளர்கள். வடக்கு கிழக்கு மக்களது பலத்தினை குறைப்பதற்காக தென்னவன்மரபுஅடி ஊரிலிருந்து மக்களை வெளியேற்றியதுடன ் மணலாறு என்ற பாரிய குடிறயேற்றத்தின ை நடைமுறைப்படுத்த ுவதற்கான திட்டத்தினை செயற்படுத்தத் தொடங்கினர்.
விவசாய அபிவிருத்தி என்ற போர்வையே மணலாறு (வெலிஓயா) குடியேற்றத்திற் கும் பயன்படுத்தப்பட் டது.
திருக்கோணமலை மாவட்டத்தின் வடபுறத்தே தென்னவன்மரபுஅடி
1984 ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் அதிகாலை வேளையில் நாய்கள் குரைக்கும் சத்தம் ஊரைச்சுற்றிவரக்
1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் இரவு புல்மோட்டை நகரத்தில் இருக்கின்ற கடைகள் சிலவற்றில் நுகர்ச்சிப்பொரு
1984 டிசம்பர் ஓராம் நாள் கொக்கிளாய் ஊர் விடுதலைப்புலிகள
1984 நம்பர் 11 ஆம் நாள் டொலர்பாம் என்ற சிங்களக் குடியேற்ற ஊரிலிருந்து 33 சிங்களப் பொதுமக்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
1984 டிசம்பர் 30 ஆம் நாள் கென்ற்பாம் என்ற சிங்கள குடியேற்ற ஊரில்29 பேரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருந
இம் மூன்று தாக்குதல்களினால
புல்மோட்டை முஸ்லிம் மக்கள் அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களுடனும்
நாய்களின் குரைத்தல் ஒலி தென்னவன்மரபுஅடி
அன்றைய நாள் தாக்குதலின் நிறைவில் புல்மோட்டைக்கு வந்த காடையர்கள் பொருட்கள் விற்பனை செய்த முஸ்லிம் மக்களை அச்சுறுத்திச் சென்றனர். ஆனால் அவர்களை தாக்குவதற்கு தலைமையேற்று வந்தவர் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுக
வடக்கினையும் கிழக்கினையும் பிரிப்பதற்கான நிகழ்ச்சிநிரலின
அச்சமூட்டுதல், பிரித்தாளுதல் , ஒருசாராரை தமது கைக்குள் வைத்திருத்தல் போன்ற பல்வேறு தந்திரோபாயங்களை
விவசாய அபிவிருத்தி என்ற போர்வையே மணலாறு (வெலிஓயா) குடியேற்றத்திற்
---------------------------------------------
தொடர் – 15
தமிழ் பேசும் மக்களிடையேயான விரிசல் ஏற்பட்டுக்கொண்ட ிருந்த எண்பதுகளில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் அவர்களிடையேயான உறவுகள் கட்டியெழுப்பப்ப டுவதன் அவசியத்தினை வலியுறுத்தி தீவிரமான பரப்புரைகளில் ஈழப் புரட்சி அமைப்பு(ஈரோஸ்) ஈடுபட்டது.
தமிழ் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமிய மக்களுடன் அதிகளவான நெருங்கிய தொடர்பினைப் பேணியதும் அதிகளவான இஸ்லாமிய உறுப்பினர்களைக் கொண்டதுமான அமைப்பு ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகும்.
“மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச்சைவன் என்றாலும் ஈழத்தமிழர் ஈழவரே அவர் எங்கிருந்தாலும் நம்மவரே ” என்ற ஈரோசின் கருத்துக்கள் தமிழ் பேசும் புரட்சிகர சிந்தனையுள்ளவர் களால் ஈர்க்கப்பட்டது. இக்கருத்துகளின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் ஈரோஸ் அமைப்புடன் அதிகளவில் இணைந்தார்கள்.
“ஈழவர் எனப்படுவோர் இலங்கையிலே வசிக்கின்ற தமிழ் பேசும் மக்களாவர்.ஈழவர் எனக் குறிப்பிடப்படுவ ோர் ஈழ நாட்டைத் தாயகமாகக் கொண்டவரையேயாகும ். மொழிவாரி அடிப்படையில் ஓர் இனம் அதுவும் தமிழினம் முக்கியமாக ஈழந்தன்னை தம் தாயகமாகக் கொண்ட மக்கள் தம்மை ஈழவர் என அழைப்பதில் தவறெதுவுமில்லை. இவர்கள் பேசும் மொழி தமிழ் மொழி, தமிழைப் பேசுவோரெல்லாம் தமிழர்கள். தமிழ் பேசும் மக்கள் உலகில் பல நாடுகளில் வாழ்கின்றனர். முக்கியமாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி, மொரீசியஸ் ஏன் ஆபிரிக்காவில் கூட வாழுகிறார்கள் , இவர்கள் எல்லோரும் தமிழைத் தம் தாய் மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருந்தாலும ் இவர்கள் எல்லோரும் ஈழவர் அல்ல. ஈழத்தை மட்டும் பிறப்பாலும். சுவீகாரத்தாலும் தாயகமாகக் கொண்டவர்களே ஈழவர்கள்“என ஈரோசின் தாபகரான அமரர் இ.இரத்தினசபாபதி அவர்களினால் எழுதப்பட்டு ஈழ ஆய்வு நிறுவனத்தினால் 1984 செப்ரம்பரில் பதிப்புச் செய்யப்பட்ட நூலில் தெரிவிக்கப்பட்ட ுள்ளது.
“பாலஸ்தீன மக்களின் மொழி அரபு. அவர்கள் “அரபு பாலஸ்தீனம்“கோரவ ில்லை. சவுதி அரேபிய மக்களின் மொழி அரபு. அங்கு “அரபு சவூதி அரேபியா“ இல்லை. சிரியா மக்கள் அராபியர். அவர்கள் பேசும் மொழி அரபு. அங்கு “அரபு சிரியா்“ இல்லை. ஈராக் மக்களின் மொழி அரபு. அங்கு “அரபு ஈராக் இல்லை“
தேசிய அந்தஸ்து கோரும் போது –மக்கள்- மொழி அடிப்படையில் இணைந்து நாடு கோருகிறார்கள். இதனாலேயே நாமும்
”நாம் ஈழவர்
நமது மொழி தமிழ்
நமது நாடு ஈழம் ” எனப் பகருகிறோம் என்ற ஈரோசின் கருத்துக்கள் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றிணைக்க வழிகோலியதோடு மட்டுமல்லாது இரு சமூகங்களையும் ஒன்றாக ஈழக் கோரிக்கையை முன்னிறுத்திய முற்போக்கான புரட்சிகரமான போராட்டத்தினை நோக்கிச் செல்வதற்கு வழிகோலியது.
ஈரோஸ் அமைப்பில் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் அமைப்பு கலைக்கப்படும் வரை அமைப்புடன் சேர்ந்து இயங்கினார்கள்.
ஒரு சில இஸ்லாமிய இளைஞர்கள் படையினரின் திட்டமிட்ட செயற்பாடகளினால் உட்புகுத்தப்பட் டாலும் அவர்கள் இனங்காணப்பட்டு மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்க ள். ஆனால் அவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்க ள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்னாட்களில் ஈடுபட்டார்கள். அவ்வாறு செயற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப் பட்டார்கள் அல்லது பிற இடங்களிற்குச் சென்று வாழ்ந்து பின்னர் மீண்டும் வந்து தங்களது குடும்பங்களுடன் வாழ்கின்றார்கள் .
ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் தமிழ் பேசும் அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது . எதுவித துன்புறுத்தல்கள ிலும் ஈடுபடாது பொதுமக்களின் மீது அக்கறையுடன் அவர்களது நலனிற்காக செயற்படுகின்ற அமைப்பு என்ற நற்பெயரை தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களும் வழங்கியிருந்தார ்கள். அதன் பிரதிபலிப்பாகவே 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈரோஸ் அமைப்பு சுயேட்சையாகப் போட்டியிட்டு பெற்றுக்கொண்டது . தேர்தலில் விருப்பு வாக்கு நடைமுறை இருந்தாலும் வெளிச்சவீட்டுச் சின்னத்திற்கு மாத்திரமே புள்ளடியிடுமாறு ஈரோஸ் மக்களைக் கோரியிருந்தது.
அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களும் இணைந்து (விடுதலைப் புலிகள் தவிர்ந்த) போட்டியிட்டார்க ள். TULFஇலிருந்து ஒரு உறுப்பினரைக்கூட நேரடியாக வடக்குக் கிழக்கில் பெற முடியாமல் போனது. தேசியப் பட்டியல் மூலமாக ஒரு உறுப்பினராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் அமரர் அ. அமிர்தலிங்கம் நாடாளுமன்றம் சென்றார்.
ஈரோசில் இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஜனாஃப் பசீர் சேகுதாவூத் ஒருவர். திருக்கோணமலை மாவட்டத்ததைச் சேரந்த திருக்கோணமலை இந்தக் கல்லூரி ஆசிரியர் ஜனாஃப் பசீர் மற்றையவர்.
ஈரோசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மலையகத்தைச் சேர்ந்த திரு.மலையப்பன் இராமலிங்கம் நாடாளுமன்றம் சென்றார்.
இத்தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தின ் எதிர்க்கட்சித் தலைவரான திரு. இரா சம்பந்தனும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் .
திருக்கோணமலை மாவட்ட தமிழ்பேசும் மக்கள் ஈரோஸ் சுயேட்சைக்குழு மூலமாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை திருக்கோணமலை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைத்தார்கள். கிண்ணியா, மூதூர், தோப்பூர், தம்பலகமம் குறிப்பாக புல்மோட்டை ஆகிய இடங்களில் முஸ்லிம் மக்கள் கணிசமான வாக்குகளை ஈரோஸ் அமைப்பிற்கு வழங்கியிருந்தார ்கள் என்பது குறிப்பிடத்தக்க து.
திருக்கோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கட்சி முதன்முறையாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது இத்தேர்தலிலேயாக ும்.
தமிழ் பேசும் மக்களிடையேயான விரிசல் ஏற்பட்டுக்கொண்ட
தமிழ் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமிய மக்களுடன் அதிகளவான நெருங்கிய தொடர்பினைப் பேணியதும் அதிகளவான இஸ்லாமிய உறுப்பினர்களைக்
“மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச்சைவன் என்றாலும் ஈழத்தமிழர் ஈழவரே அவர் எங்கிருந்தாலும்
“ஈழவர் எனப்படுவோர் இலங்கையிலே வசிக்கின்ற தமிழ் பேசும் மக்களாவர்.ஈழவர்
“பாலஸ்தீன மக்களின் மொழி அரபு. அவர்கள் “அரபு பாலஸ்தீனம்“கோரவ
தேசிய அந்தஸ்து கோரும் போது –மக்கள்- மொழி அடிப்படையில் இணைந்து நாடு கோருகிறார்கள். இதனாலேயே நாமும்
”நாம் ஈழவர்
நமது மொழி தமிழ்
நமது நாடு ஈழம் ” எனப் பகருகிறோம் என்ற ஈரோசின் கருத்துக்கள் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றிணைக்க வழிகோலியதோடு மட்டுமல்லாது இரு சமூகங்களையும் ஒன்றாக ஈழக் கோரிக்கையை முன்னிறுத்திய முற்போக்கான புரட்சிகரமான போராட்டத்தினை நோக்கிச் செல்வதற்கு வழிகோலியது.
ஈரோஸ் அமைப்பில் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் அமைப்பு கலைக்கப்படும் வரை அமைப்புடன் சேர்ந்து இயங்கினார்கள்.
ஒரு சில இஸ்லாமிய இளைஞர்கள் படையினரின் திட்டமிட்ட செயற்பாடகளினால்
ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் தமிழ் பேசும் அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது
அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களும் இணைந்து (விடுதலைப் புலிகள் தவிர்ந்த) போட்டியிட்டார்க
ஈரோசில் இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஜனாஃப் பசீர் சேகுதாவூத் ஒருவர். திருக்கோணமலை மாவட்டத்ததைச் சேரந்த திருக்கோணமலை இந்தக் கல்லூரி ஆசிரியர் ஜனாஃப் பசீர் மற்றையவர்.
ஈரோசின் தேசியப்பட்டியல்
இத்தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தின
திருக்கோணமலை மாவட்ட தமிழ்பேசும் மக்கள் ஈரோஸ் சுயேட்சைக்குழு மூலமாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை திருக்கோணமலை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைத்தார்கள். கிண்ணியா, மூதூர், தோப்பூர், தம்பலகமம் குறிப்பாக புல்மோட்டை ஆகிய இடங்களில் முஸ்லிம் மக்கள் கணிசமான வாக்குகளை ஈரோஸ் அமைப்பிற்கு வழங்கியிருந்தார
திருக்கோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கட்சி முதன்முறையாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது
------------------
தொடர் – 16
திருக்கோணமலை மாவட்டத்தில் கண்டி-திருக்கோணமலை வீதியில் தம்பலகமம்
உள்ளது. கந்தளாயக்குளம், வெண்டரசன்குளம், கல்மெட்டியாவகுளம்,
புலியூற்றுக்குளம், கடவாணக்குளம், சேனைவெளிக்குளம், போன்ற
குளங்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீர் மூலமாக நெற்செய்கை
மேற்கொள்ளப்படுகின்றது.
தம்பலகமம் வெளி என்பது ஏறத்தாள 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில்
நெற்செய்கை செய்யப்படும் வயல்வெளியாகும்.
தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் அந்நாட்களில் அரசபணி
நிமிர்த்தமாக வாழ்ந்துள்ளனர். யாழ் வடமராட்சியிலிருக்கும் மக்களுக்கும்
தம்பலகமம் மக்களுக்கும் நெல் வியாபாரம் மற்றும் நெற்செய்கை காரணமாக
தொடர்புகள் அதிகமாக இருந்தன. ஆரம்பத்தில் தம்பலகமத்திலிருந்து நெல்
கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றவர்கள் பின்னர்
தம்பலகமத்தில் வயல் நிலங்களை 10, 15, 20 ஏக்கர்கள் என்ற வகையில்
தமதுடமையாக்கியுள்ளனர். இன்றும் தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத்தவர்களுக்கு
வயல்நிலங்கள் உரித்துடையவையாக உள்ளன.
தம்பலகமத்திலுள்ள வயல்நிலங்கள் எருமை மாடுகளின் உதவியினால்
பண்படுத்தப்பட்டன. அவ்வேலைகளில் தம்பலகமத்திலுள்ள மேற்குக்கொலனி,
சிறாஜ்நகர் மற்றும் கிண்ணியா போன்ற இடங்களில் வசித்த முஸ்லிம் மக்கள்
தொழிலாளர்களாக பணியாற்றியுள்ளனர். தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தே
வயல்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வயல் விதைப்பு தொடங்கி அறுவடை
முடிந்து சுடடித்து நெல் உரியவர்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று
சேர்க்கும் வரையான நடவடிக்கைகளில் தொழிலாளர்களாக முஸ்லிம்களே
ஈடுபட்டுள்ளனர்.
1950 – 1970 களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுடன் இந்திய வம்சாவழி
வந்த தனவந்தர்களும் இணைந்து நெல் வணிகத்தில் ஈடுபட்டதுடன் நெற்செய்கை
யிலும் ஈடுபட்டு பின்னர் அரிசி ஆலைகளையும் தம்பலகமத்தில் நிறுவினார்கள்.
பொற்கேணியில் இலங்கைநேசன் அரிசி ஆலை, லோகராஜா அரிசி ஆலை (எல். ஆர்.எஸ்.
அரிசி ஆலை), கோவிலடியில் இராசலெட்சுமி அரிசி ஆலை என்பன இவ்வாறு உருவாகிய
அரிசி ஆலைகளாகும்.
இராசலெட்சுமி அரிசி ஆலை சின்னராசா என்பவரால் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு
உரித்தான காணியில் அமைக்கப்பட்டிருந்தது. மில்லுச் சின்ராசர் என மக்கள்
அவரை அழைத்தனர். பின்னர் அவ்வரிசி ஆலை மூடப்பட்டு தம்பலகமத்தில் இருந்த
ஒரேயொரு திரைப்பட மாளிகை அவ்விடத்தில் இயங்கியது. வன்செயல் காலங்களில்
அநாதரவாக இருந்த அவ்விடத்தில் தற்போது சுகாதார மருத்துவ அதிகாரி
தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
தம்பலகமத்தில் உள்ளவர்களாலும் அரிசி ஆலைகள் தொடங்கப்பட்டன. முள்ளியடியில்
சமேஸ்வரி அரிசி ஆலை, நடுப்பிரப்பன்திடலில் தங்கராசாப்போடியார் அரிசி ஆலை,
நாயன்மார்திடலில் நாகேஸ்வரி அரிசி ஆலை என்பன தொடங்கப்பட்டன.
அக்குறணையைச் சேர்ந்தவர்களால் புதுக்குடியிருப்பில் “லக்கி அரிசிஆலை“
தொடங்கப்பட்டது. இது முஸ்லிம் மக்களால் தொடங்கப்பட்ட அரிசி ஆலையென்பதுடன்
இதுவே இறுதியாக உருவாக்கப்பட்ட அரிசி ஆலையுமாகும்.
1985 மே மாதம் கடவாணையில் விடுதலைப்புலிகளால் நிலக்கண்ணிவெடித் தாக்குதல்
நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடவாணையில் முகாமிட்டிருந்த கடற்படையினர்
எட்டுப் பேர் மடிந்தனர். அந்தச் சத்தம் தம்பலகமத்தில் கேட்ட முதலாவது
பாரிய வெடிப்புச் சத்தம் என்பதுடன் இவ்வாறுதான் கண்ணிவெடிச்சத்தம்
இருக்கும் என்பதை தம்பலகமம் மக்கள் தெரிந்து கொண்ட முதலாவது
சந்தர்ப்பமுமாகும்.
பொற்கேணி, பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, சிப்பித்திடல்,
கரைச்சைத்திடல், வர்ணமேடு, முள்ளியடி, நடுப்பிரப்பன்திடல்,
நாயன்மார்திடல், ஐயனார்திடல், மாக்கைத்திடல், குஞ்சடப்பன்திடல், கோவிலடி
ஆகிய ஊர்களில் இருந்த மக்கள் கிண்ணியா நோக்கி இடம்பெயர்ந்தனர்.
பத்தினிபுரம், பாரதிபுரம், முள்ளியடி, பொற்கேணி ஆகிய ஊர்களில் வசித்த
மக்கள் தம்பலகமத்திலுள்ள கோவிலடி , பட்டிமேடு, கள்ளிமேடு ஆகிய ஊர்களில்
தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.
1985 ஜுன் 10 ஆம் நாள் “எல்.ஆர்,எஸ். அரிசிஆலை“ படையினரால்
சுற்றிவளைக்கப்பட்டது. படையினருடன் பெருமளவிலான சிங்கள-முஸ்லிம்
இளைஞர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஊர்காவல்படை வீரர்கள்
இணைந்திருந்தனர். அரிசி ஆலையில் இருந்த நான்கு 12 வயதுக்குக் குறைந்த
குழந்தைகள் மற்றும் 06 பெண்கள் உட்பட 33 பேர் கைகள் பிணைக்கப்பட்டு
பொற்கேணி பக்கமாக அழைத்துச் செல்லப்படுகின்றபோது பொற்கேணியில் உள்ள
“வளர்மதி கூப்பன்கடை“ என அனைவராலும் அழைக்கப்பட்ட நாவலர் வீதிச்
சந்திக்கருகில் குடியிருந்த மணியம் அவர்களின் துணைவி மற்றும் இரு
பெண்பிள்ளைகள் வீதியில் நின்றமையால் அவர்களின் கைகளும் பிணைக்கப்பட்டு
கல்மெட்டியாவிலுள்ள பாடசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார்கள். அழைத்துச்
செல்லப்பட்டவர்களில் அரிசி ஆலை உரிமையாளர் திரு.லோகராஜா அவர்களின் 68
வயது தாயாரும் ஒருவர். நடக்கமுடியாத நிலையிலும் அவரையும் அழைத்துச்
சென்றார்கள். அழுதழுது வீதி வழியால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
பாடசாலையில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் வைத்திருந்த போது பல முஸ்லிம்
தலைவர்கள் பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
பாடசாலையில் அதிபர் மற்றும் சிங்கள பொது மக்களும் விடுதலை செய்யுமாறும்
கோரினர். அனைவரையும் விடுதலை செய்கிறோம் என உறுதியளிக்கப்பட்டு கைகள்
அவிழ்த்து விடப்பட்டனர். காலை 06.00 மணிக்கு கைது செய்யப்ட்டவர்களுக்கு
மாலையில் உணவு வழங்கப்பட்டது.
அன்றிரவு அனைவரும் அடித்தே கொல்லப்பட்டனர். 36 உயிர்கள் கண்ணிவெடியில்
உயரிழந்த கடற்படையினருக்கு ஆறுதலளிப்பதற்காக காணிக்கையாக்கப்பட்டனர்.

-------------------------------
தொடர் – 17
தம்பலகமத்திலிருந்து மக்கள் அச்சம் காரணமாக கிண்ணியாவிற்கு இடம்பெயர்ந்த
போது அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று தமது ஆதரவை முஸ்லிம் மக்கள்
வழங்கினர்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிண்ணியாவில் சுரங்கல், கச்சக்கொடித்தீவு,
அரைஏக்கர், காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை ஆகிய ஊர்களில்
அதிகளவிலும் மஹாமம்மாதிரிக்கிராமம், சின்னக்கிண்ணியா, பெரிய கிண்ணியா
போன்ற ஊர்களிலும் அடைக்கலம் புகுந்தார்கள். இதற்கான காரணம் தமிழ் –
முஸ்லிம் மக்களிடையே அக்காலத்தில் மிக நெருங்கிய தொடர்புகள் , உறவுகள்
இருந்தமையாகும்.
முஸ்லிம் மக்கள் தங்கள் வீடுகளின் ஒரு பகுதியினை தமிழ் மக்கள்
வசிப்பதற்கு வழங்கினார்கள் அல்லது அவர்களது காணிகளில் தற்காலிக குடிசைகள்
அமைத்து வசிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்து கொடுத்தார்கள்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் வீடுகளில் குடியிருந்த
இச்சந்தர்ப்பத்தினை ஈரோஸ் அமைப்பு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி
முஸ்லிம் இளைஞர்களை தமது அமைப்பில் அதிகளவில் சேர்த்துக்கொண்டார்கள்.
ஈரோஸ், புளொட், அமைப்பின் உறுப்பினர்கள் ஆயுதமின்றியே பொதுவாக
நடமாடுவார்கள். ஏனைய அமைப்புகள் ஆயுதங்களின்றி நடமாடுவது மிகக்குறைவு.
அந்நாட்களில் ஆயுதம் தமது அமைப்புகளிற்கான ஆட்களை கசர்ச்சிகாட்டி
சேர்க்கின்ற மிகப்பெரிய ஆயுதமாக பாவிக்கப்பட்டது. அமைப்புகளுக்கு
செல்லுகின்ற இளைஞர்கள் பலர் கொள்கை அடிப்படையில் இணையவில்லை. அவர்களது
சுழ்நிலைக்கேற்ப எவரது அமைப்பு முந்துகின்றதோ அல்லது யாருடைய கவர்ச்சியான
போக்கு அவர்களுக்கு பிடிக்கின்றதோ அவ்வமைப்புகளில் சேர்ந்தார்கள்.
அவ்வாறு சேர்வதற்கு முக்கிய காரணங்களாக இருந்தது அரச படையினரே. அரச
படையினரின் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளும் தமிழ்
இளைஞர்களை தமிழ் விடுதலை அமைப்புகளில் சேர்வதற்கு நிர்ப்பந்தித்தன.
ஆனால் முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பீ.ஆர்.எல்.எஃப், புளொட் அமைப்புகளின் கொள்கை
ஈர்ப்பாலும் நடைமுறை ரீதியாகவும் இணைந்தார்கள்.
ஈரோஸ் அமைப்பின் பரப்புரைகள் இஸ்லாமிய புரட்சிகர சிந்தனையுள்ளவர்களால்
பெரிதும் கவரப்பட்டமையினால் தான் ஈரோஸ் அமைப்பில் அதிகளவான இஸ்லாமிய
இளைஞர்கள் இணைந்தார்கள்.
பல இளைஞர்கள் ஈரோஸ் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டமை ஆட்சியாளர்களுக்கு
உவப்பான செயற்பாடுகளாக இருக்கவில்லை. கிண்ணியாவில் பசீரின் தலைமையில்
இயங்கிய மறைமுகப்படையும் ஊர்காவல்படையும் சுரேஸ்காசிமின் வழிகாட்டலில்
முஸ்லிம் இளைஞர்கள் தமிழ்விடுதலை அமைப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள்
சேர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைகளில் இறங்கினர்.
தமிழ் விடுதலை அமைப்புகளில் இணைந்த இஸ்லாமிய இளைஞர்களின் விபரங்கள்
திரட்டப்பட்டன. அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களது உறவினர்களுக்கு
அச்சுறுத்தல் விடுத்தனர். விடுதலை அமைப்புகளிற்குச் சென்றவர்களை
“மீண்டும் தம் வீடுகளுக்கு அழைத்துவருமாறும் இல்லாவிட்டால் குடும்ப
உறுப்பினர்களுக்கு பாதிப்புகள் வரும்“ என அச்சமூட்டினர். சிலரை
துன்புறுத்தியும் உள்ளனர்.
ஆனால் கிண்ணியாவிலிருந்து விடுதலை அமைப்புகளிற்குச் சென்ற இஸ்லாமிய
இளைஞர்கள் எவரும் அமைப்புகளிலிருந்து தம்வீட்டிற்குத் திரும்பவில்லை
என்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகிறது. கிண்ணியாவிலிருந்து
ஈரோஸ் அமைப்பிலேயே அதிகளவான இளைஞர்கள் இணைந்திருந்தனர்.
தம்பலகமத்திலிருந்து இடம்பெயர்ந்து கிண்ணியாவில் வாழ்ந்துகொண்டிருந்த
தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் அடிக்கடி சுற்றிவளைப்புகளுக்கு
உள்ளாகின. சில இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறான சுற்றிவளைப்புகள் முஸ்லிம் மக்களுக்கு தொல்லையாக இருப்பதாக
படைத்தரப்பு மூலமாக பரப்பப்பட்ட பரப்புரைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில்
பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..
தம்பலகமம் மக்கள் தாமாக தம்பலகமத்திற்கு வீடு திரும்பும்வரை கிண்ணியா
மக்கள் யாரையும் தமது வீடுகளுக்குச் செல்லுமாறு கோரவில்லை.
கிண்ணியாவிலிருந்து தான் தமிழ்பேசும் மக்களது பிரிவினையும் ஆரம்பித்தது
என்பதனை முன்னர் பார்த்தோம். அதற்கான காரணம் இருதரப்பும் ஆட்சியாளர்களின்
திட்டமிட்ட செயற்பாடுகளை அறியாது பலியாகியமையேயாகும். மீண்டும்
கிண்ணியாவிலிருந்தே ஒற்றுமைக்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படுவதே சிறப்பாகும்.

தொடர் – 18
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை விகிதத்தினை
குறைப்பதற்காக திட்டமிட்டவகையில் தென்பகுதியில் வசித்த சிங்கள் மக்கள்
அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
திருக்கோணமலை மாவட்டத்தில் அல்லை, கந்தளாய், முதலிக்குளம் (மொரவெவ),
குமரேசன்கடவை(கோமரங்கடவெல) பெரியவிளாங்குளம் (மஹாதிவுல்வெவ), சாலியபுர,
கல்மெட்டியாவ, ஜெயந்திபுர, மஹாவலிகம….. போன்ற இடங்களில்
விவசாயக்குடியேற்றங்கள் என்ற போர்வையில் சிங்கள மக்கள்
குடியேற்றப்பட்டனர்.
இந்நடவடிக்கை மூலமாக சிங்கள மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்தமையினால்
அரசியல் ரீதியாகவும் திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம்
பின்நாட்களில் அதிகரித்தது.
கந்தளாய், மொரவெவ, கோமரங்கடவெல, சேருநுவர ஆகிய பிரதேசசபைகள் ஏறத்தாள
தனியான சிங்கள மக்களின் பிரதேசசபைகளாகின.
திருக்கோணமலை மாவட்டத்தில் எண்ணிக்கையில் 90 வீதமாக இருந்த தமிழ் பேசும்
மக்கள் 70 வீதமாக்கப்பட்டதுடன் 30வீதமான உள்ளுராட்சிமன்றங்கள் தனியான
சிங்கள மக்களின் கைகளுக்குச் சென்றது.
இவ்வாறான குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்களவு எதிர்ப்புகள் இன்றியே
நடைபெற்றன. இக்குடியேற்றங்களால் “நமக்கென்ன பாதிப்பு வரப்போகின்றது “ என
தமிழ்பேசும் மக்கள் வாளாதிருந்தனர்.
80 களில் தமிழ் பேசும் மக்களிடையேயான பிளவினைப் பயன்படுத்தி
ஆட்சியாளர்கள் மிகவும் இரகசியமான முறையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப்
பிரிப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டார்கள். வடக்கையும் கிழக்கையும்
தொடுக்கின்ற ஊராக தென்னவன்மரபுஅடி ஊர் விளங்கியது. அவ்வூரிலிருந்து
மக்களை 03.12.1984 இல் வெளியேற்றியதனை முன்னர் பார்த்தோம்.
அதற்கு முன்னர் 1984 நடுப்பகுதியில் மணலாறுப்பகுதியிலிருந்த 42 ஊர்கள்
படையினரால் 48 மணிநேரத்தினுள் தமது வீடுகளிலிருந்து துரத்தப்பட்டனர்.
ஆரியகுண்டம்,கும்பகர்ணன்மலை,கொ க்குச்சான்குளம்,கொக்குத்தொடுவா ய்,வெடுக்கன்மலை
போன்ற ஊர்களிலிருந்த மக்களே படையினர் ஆமட்கார்களில் ஒலிபெருக்கிகள்
மூலமாக வெளியேற்றப்பட்ட மக்களாவர். அவர்கள் இன்றுவரை அவர்களது
ஊர்களுக்குத் திரும்பமுடியாத வகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு
அவ்வூர்களில் அநேகமான ஊர்களின் பெயர்கள் சிங்களப்பெயர்களாக உள்ளன.
அத்தோடு திருக்கோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட காட்டுப்
பிரதேசம் துப்பரவாக்கப்பட்டு மணலாறு என்ற இடத்தினை மையமாக வைத்து
இரகசியக்குடியேற்றமொன்றினை 1984 இல் தொடங்கினார்கள்.
இக்குடியேற்றத்திற்கு தொடக்கத்தில் அநுராதபுர சிறையிலிருந்து 150
சிறைக்கைதிகளையும் அவர்களது குடும்பங்களையும் குடியேற்றினார்கள். பின்னர்
மேலும் 150 குடும்பங்களையும் குடியேற்றினார்கள்.
இத்திட்டத்தினை உண்மையில் அவ்வேளை யாரும் அறிந்திருக்கவில்லை என்பதே
உண்மையாகும். 1986 இன் இறுதிப்பகுதியில் ஈரோஸ் அமைப்பிற்கு இத்தகவல்
கிடைக்கப்பெற்றது. ”மணலாறு வெலிஓயாவாக மாறப்பேகிறது” ,”வடக்கு கிழக்கு
மாகாணங்கள் துண்டாடப்படுகின்றன” என்ற வாசகங்களுடன் திருக்கோணமலை
மாவட்டமும் முல்லைதீவு மாவட்டமும் பிரிக்கப்படுவது போன்ற படத்துடன் கூடிய
சுவரொட்டிகளை வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஈரோஸ் அமைப்பு ஒட்டியது.
1988 ஏப்ரல் 04 ஆம் நாள் மணலாறு என்ற இடம் “வெலிஓயாவாக“ மாற்றப்படுவதாக
சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. சிங்கள் மக்கள் அதிகளவில்
குடியேற்றப்பட்டார்கள். சிறப்புப் படையினர் (Special Forces)
அப்பிரதேசத்தில் ஜெனரல் ஜனகபெரேரா தலைமையில் நிலை நிறுத்தப்பட்டனர்.
“படையினர் பாதுகாப்பிற்கு மக்கள் , மக்கள் பாதுக்காப்பிற்கு படையினர்“
என்ற கோட்பாட்டினை உருவாக்கி ஜனகபுர,சிங்ஹபுர, வெலிஓயா, சம்பத்நுவர போன்ற
ஒவ்வொரு ஊரின் இடையிலும் சிறப்புப் படையின் முகாம் அமைக்கப்பட்டது.
குடியேற்றப்பட்ட மக்களுக்கு விவசாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும்
அரசினால் வழங்கப்பட்டன. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது படையினர்
நீர்த் தாங்கிகள் மூலமாக இலவசமாக நீர்விநியோகத்தினை மக்களுக்கச்
செய்தனர்.
திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமாக தற்போது தமிழ்பேசும் மக்களது உறவு
விரிசல் அதிஉச்சநிலைக்குச் செல்வதற்கு முன்னர் ஆட்சியாளர்களின் கபட
நோக்கினை உணர்ந்து தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக இருசமூகங்களின்
இளைஞர்கள் தம்மிடையேயான உறவினை வளர்த்தெடுப்பதற்கு உளப்பூர்வமான
நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும் மொழி அடிப்படையிலேனும்
இணங்காவிடில் இரு சமூகங்களின் இருப்பும் எதிர்வரும் ஆண்டுகளில்
கேள்விக்குறியாக்கப்படலாம்.

ஆரியகுண்டம்,கும்பகர்ணன்மலை,கொ

--------------------------
தொடர் – 19
கிண்ணியாவில் ஆலங்கேணி இடிமண் என்பன தமிழ்பேசும் மக்களின் அயல் அயல்
ஊர்கள். 1984 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறந்த உறவுநிலை இருந்தது. 1984 இன்
முற்பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை உருவாக்குவதற்கான
முயற்சி மொசாட்டின் வழிகாட்டலில் முதன்முதலாக நடைபெற்றது. அது
வெற்றியளிக்காவிட்டாலும் விரிசலுக்கான அத்திவாரம் இடப்பட்டதில்
வெற்றிகொண்டது.
கண்டல்காடு என்ற இடத்தில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் இடையே
காணி தொடர்பான சிக்கல் எழுந்தது. அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி புதிதாக
பஸீர் தலைமையிலான மறைமுக இயங்குநிலையிலிருந்த ஊர்காவல்படையினர் 1984 இன்
நடுப்பகுதியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது இடிமண், குட்டிக்கரைச்சை போன்ற
இடங்களில் வைத்து தாக்குதல்களை மேற்கொண்டார்கள். பதிலுக்கு அப்பாவி
முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களும் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
தாக்குதல் சிலநாட்கள் தொடர்ந்தன. சில தமிழ் மக்கள் ஊர்காவல் படையினரால்
பிடித்து வைக்கப்பட்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக முஸ்லிம் மதத்
தலைவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டார்கள். முடியாது போக அப்போது கிண்ணியா
காவல்துறை நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்த தென்னக்கோன் அவர்களிடம்
முறையிட்டு அவரது முயற்சியினால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்
மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
எனினும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக
கண்டல்காட்டில் மரக்கறித் தோட்டச்செய்கையில் ஈடுபடுகின்ற தமிழர்கள்
எவரையாவது கொல்வது என திட்டமிடப்பட்டு கண்டல்காட்டு துறையடையில்
சுடுகலன்களுடன் (Shot Guns ) காத்திருந்தனர் பஸீர் மற்றும் கூவல் ஆகிய
ஊர்காவல் படையினர் தலைமையில் குழுவினர்.ஆலங்கேணியைச் சேர்ந்த லிங்கராசா
மற்றும் ஒப்பிலார் மகன் சின்னராசா ஆகியோர் தோட்டத்திலிருந்து வீடு நோக்கி
வருகின்ற போது இருவரும் சுடப்பட்டும் தலையில் வெட்டியும் கொல்லப்பட்டனர்.
ஆற்றினுள் உடல்களை வீசி விட்டுச்சென்றனர். (ஒப்பிலார் அப்போது விடுதலைப்
புலிகள் அமைப்பிற்கு வழிகாட்டியாக செயற்பட்டவர். பின்னர்
இந்தியப்படைகளுடன் விடுதலைப் புலிகளை காட்டிக்கொடுத்தவர். 1988 இல்
ஆலங்கேணி அம்மன்கோவிலுக்கு முன்னால் வைத்து நான்கு விடுதலைப்புலிகள்
கொண்ட அணியினால் நண்பகல் 01.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்.
கொல்லப்பட்ட இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் இந்தியப்படையின்
முகாம் கிராமசபை கட்டடத்தில் இருந்தது. அந்நேரத்தில் துணிகரத் தாக்குதலாக
இத்தாக்குதல் மக்களால் பேசப்பட்டது. )
முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களை வெறுப்பூட்டும் நடவடிக்கைகள்
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. இரு சமூகங்களும் திட்டமிட்ட
சதிச்செயற்பாடுகளுக்கு இரையாகிக் கொள்ளத்தொடங்கின.
ஆலங்கேணியைச் சேர்ந்த அமரர் முருகுப்பிள்ளை துரைநாயகம் தயிர் வியாபாரம்
செய்யும் ஒருவர். தனது ஆறு பெண்பிள்ளைகளை வயளர்ப்பதற்காக தனது ஈருளியில்
தயிரினை திருக்கோணமலை நகரத்திற்கு எடுத்துச்சென்று அதில் வரும்
வருமானத்தில் வாழ்பவர். 1986.09.26 ஆம் நாள் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்
போது காலை 07.00 மணிக்கு தயிர் விற்பனைக்கு செல்வதற்கு புறப்படுகையில்
கைதுசெய்யப்பட்டார். இடிமண்ணைச் சேர்ந்த கூவல் எனும் ஊர்காவல்படை வீரரால்
அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆலங்கேணி சித்திவிநாயகர் ஆலயத்தின்
மடப்பள்ளிக்குள் கைகள் கால்கள் கட்டப்பட்டு கழுத்து அறுத்து
கொல்லப்பட்டார்.
துரைநாயகம் அவர்களின் கொலை நடைபெற்று ஐந்தாவது நாள் விடுதலைப் புலிகளின்
ஆலங்கேணிப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த சுனில் என்பரால் இடிமண்
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வருகின்ற போது பள்ளிவாசலிலிருந்து 50
மீற்றர் தூரத்தில் வைத்து கூவல் சுட்டுக்கொல்லப்பட்டார். கூவல்
சுட்டுக்கொல்லப்படுவதற்கு முஸ்லிம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு
உதவியிருந்தனர்.
சாவாறு எனுமிடத்தில் எருமைப்பட்டி வைத்திருந்த வீரசிங்கம் மற்றும்
பொன்னம்பலம் ஆகியோர் மாவுசாப்பா துறையடியால் 1987.03.19 ஆம் நாள்
வீடுநோக்கி வந்துகொண்டிருந்த போது புகாரியடியில் வசித்த லாசினார் மகள்
வெள்ளையன் தலைமையிலான ஊர்காவல்படை வீரர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை
செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். (வெள்ளையன் 1990 இல் பொன்னாங்காணி
என்ற இடத்தில் இராணுவத்துடன் சென்று முற்றுகை நடவடிக்கையை முடித்து
வருகின்ற போது நிலக்கணியில் அகப்பட்டு ஒற்றைக்காலை இழந்து பின்னர் காலில்
இருந்த காயம் காரணமாகவே சாவடைந்தார்.) கொல்லப்பட்டவர்களின் உடலங்களை
சோமசுந்தரம் என்பவர் கண்டு எடுத்துவந்து உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
சோமசுந்தரம் அச்சம் காரணமாக கண்ணடல்காட்டுக்கு தனது பட்டியை இரண்டு
நாட்களின் பின்னர் மாற்றியிருந்தார். 1987.03.23 ஆம் நாள் அவரது
பட்டிக்குச்சென்ற ஊர்காவல்படை வீரர்களான வெள்ளையன், சின்னக் கிண்ணியாவைச்
சேர்ந்த துவான் அணியினர் சோமசுந்தரம் என்பவரை கொன்றனர்.
இந்நாட்களில் இரவு வேளைகளில் படையினர் மீதான அச்சம் காரணமாக தமிழ்
இளைஞர்கள் கண்டல்காடு , இறவடிச்சேனை , தளவாய் போன்ற இடங்களுக்கு மாலை
வேளைகளில் சென்று இரவை அங்கு கழித்துவிட்டு காலையில் ஊருக்குத்
திரும்புவது வழக்கம். 1987 மே மாதத்தில் ஈச்சந்தீவைச் சேர்ந்த
சித்திரவேல் மகன் மற்றும் அவரது நண்பர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது
ஈச்சந்தீவிற்கு பின்னாலிருக்கும் வண்ணான்வயல் என்ற இடத்தில்
ஊர்காவல்படையினரால் மறிக்கப்பட்ட போது தன்னிடமிருந்து கைக்குண்டை அவர்களை
நோக்கி சித்திரவேல் மகன் வீச இரு ஊர்காவல்படையினர் சாவடைந்து இருவர்
காயமடைந்தனர்.(அப்போது விடுதலைப் புலிகளால் தமது ஆதரவாளர்களாக இருக்கும்
சில இளைஞர்களின் பாதுகாப்பு கருதி கைக்குண்டுகள் வழங்கப்பட்டிருந்தன)
சித்திரவேல் மகன் கைக்குண்டு வீசியது ஊர்காவல்படையினர் காதுகளுக்கு
எட்டியது. பஸீர் தலைமையிலான அணி ஆலங்கேணியில் விசித்த சித்திரன் அவர்களது
வீட்டிற்கு நள்ளிரவு 01.00 மணிக்கு சென்று சித்திரனை பிடித்து
சுட்டுக்கொன்றனர். சித்திரவேல் என்பவருக்குப் பதிலாக சித்திரன் என்பவர்
கொல்லப்பட்டார். சித்திரன் அவர்களின் பெயர் அப்போது பிரபலமானது. அவரது
மகன் புளொட் அமைப்பில் இருந்தார். அதனால் தவறான புரிதலுடன் சித்திரன்
கொல்லப்பட்டார்.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ்பேசும் மக்களிடையேயான உறவில் புலப்படா
விரிசல்களுக்கு வழிகோலின.
31 ஆகஸ்ட், 2018, பிற்பகல் 7:27 · பொது