திங்கள், 11 மார்ச், 2019

வேதாந்தா ஒரிசா மலை காடு அழித்து பாக்சைட் தோண்டுதல் போராட்டம்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 1 ஜூன், 2018, முற்பகல் 9:41
பெறுநர்: நான்
சீனி. மாணிக்கவாசகம்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உருக்கும் வளாகத்தின் விரிவாக்கத்திற்கு எதிராக விரிவாக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 2018 ஆம் ஆண்டு மே 22 –லிருந்து குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. வேதாந்தாவின் துணை நிறுவனமான செம்பு உருக்கு யூனிட் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியுள்ளதாகவும், வாயு கசிவு காரணமாக பல சுகாதார பிரச்சினைகள் ஏற்படுத்தியுள்ள
தாகவும் குற்றஞ்சாட்டி எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா மற்றும் அதன் குழும நிறுவனங்களுக்கு இது புதுசு அல்ல. ஆனால் சுற்றுச்சூழல் மீறல்களுக்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர்களுக்கெதிரா
ன வழக்குகளில் சமீபத்தியதுதான். இதனால், அது சட்டரீதியான தணிக்கையை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் பங்குதாரர்களால் முதலீடுகளை திரும்பப்பெறுதல் மற்றும் நல்லெண்ண இழப்பு ஆகியவற்றையும் சந்தித்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ( காங்கிரஸ் மற்றும் பாஜக) அரசியல் நன்கொடைகள் வழங்கியது குறித்த சர்ச்சையின் மையமாக உள்ளது.
ஒரிஸாவிலிருந்து ஜாம்பியா வரை மற்றும் சத்தீஸ்கரிலிருந்து கோவா வரை வேதாந்தாவும் அதன் துணை நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளன.
# நியாம்கிரி - # ஒதிஷா
ஒடிஷாவில் உள்ள நியாமகிரி மலையிலிருந்து பாக்சைட் வெட்டியெடுக்க ஒடிசா மைனிங் கார்ப்பொரேஷன் லிமிடெட் (OMCL) உடன் 2004 ஆம் ஆண்டில் வேதாந்தா நிறுவனம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இது அருகிலுள்ள லஞ்ச்காரில் அமைந்துள்ள அவர்களுடைய அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு பாக்சைட்டை வழங்கும். இப்பகுதியில் உள்ள கோந்த் பழங்குடி மக்கள் தொடக்கத்திலிருந்தே இத் திட்டத்தை எதிர்த்தனர், ஆனால், சுரங்கத்தை நடத்துவதற்கு இப்பகுதியில் உள்ள காடுகளை அழிக்க உச்ச நீதிமன்றம் 2008ல் அனுமதி வழங்கியது.
எனினும், இது சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் (MoEF) ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. இந்த அமைச்சகம் தனது முதல் கட்ட அனுமதியை அளித்தது. ஆனால் வனவியல் அனுமதி பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அந்த அனுமதி வழங்கப்பட்டது.
# பிரச்சினைகள்
இதன் விளைவாக, நிபுணர் சாக்சேனா குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் (MoEF) இவ்வாறு கண்டறிந்தது:
வேதாந்தா மற்றும் ஓஎம்.சி.எல் ஆகியவற்றின் மூலம் வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுளள்ன, மற்றும் அந்த சட்டத்தின் கீழ் தலித்துகளின் உரிமைகள்கூட பாதுகாக்கப்படவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி வேதாந்தா நிறுவனம் குறிப்பிடத்தக்க மீறல்களை செய்துள்ளது. சுத்திகரிப்பு ஆலையைப் பொறுத்தவரை, அது சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கப்பட்டுள்ளது.
வேதாந்தா வேண்டுமென்றே இத்திட்டம் குறித்த தகவலை மறைத்து, 1980ம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து மீறியிருக்கிறது.
இதன் விளைவாக, திட்டத்திற்காக தேவையான இரண்டாம் நிலை வனவியல் அனுமதிக்கு MoEF மறுத்துவிட்டது இதை எதிர்த்து அந்த நிறுவனங்களும், ஒடிஷா அரசாங்கமும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. 2006ம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின் கீழ் தோங்கிரியா கோந்த் பழங்குடியினரின் சமூக மற்றும் மத உரிமைகள் முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. இதை உள்ளூர் மக்களின் கிராம சபாக்கள் செய்ய வேண்டும். ஆனால் இங்கே நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு கூறியது.
இந்த விஷயத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட கிராம சபை குழுக்கள், கோந்த் பழங்குடியினரின் சமுதாய உரிமைகள் மற்றும் நியாமகிரி மலைகள் பற்றி அவர்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டும், இத்திட்டத்தை 2013லேயே ஒருமனதாக நிராகரி்த்தது. இந்த முடிவுகளை ரத்து செய்ய OMCL முயன்றது, ஆனால் அவர்களின் மனு மே 2016 ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
Source: @Savukku Shankar A

கார்ப்பரேட் மண்ணழிப்பு ஒரிஸா நக்சலைட் மாவோயிஸ்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக