திங்கள், 16 மார்ச், 2020

புலிகள் யாழ் கைப்பற்றல் தடுத்த இந்தியா செக் நாட்டு உதவி பெற்றுத் தந்தது

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 3:05
பெறுநர்: எனக்கு
ஆயுதங்கள் கொடுத்து முதுகில் குத்திய இந்திய அரசும்
*********************************************
******************************
கைவிட்டு போன தமிழீழமும்.!!
*******************************************
ஈழத்து துரோணர்...........!!!
************************************
1995 யாழ்பாணத்தில் இருந்து புலிகள் பின் வாங்கிய போது சிங்களம் அதை பெரும் வெற்றியாக கொண்டாடி இருந்தன. சர்வதேச ஊடகங்களும் புலிகளால் மீண்டும் எழவே முடியாத இராணுவ தோல்வியாக இதை வர்ணித்தன. ஆனால் புலிகள் முல்லைத்தீவு படை தளம் மீது பெரும் தாக்குதல் மூலம், ஒரே நாளில் 1800க்கு மேட்பட்ட இராணுவத்தினரை கொன்று, ஆட்லறி உட்பட பல பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, பெரும் பாச்சல் ஒன்றை செய்து, சர்வதேசத்திற்கு தங்கள் இராணுவ வலிமையை மீண்டும் நிருபித்தனர் புலிகள்.
அதனை தொடர்ந்து ஜெயசிக்குறு முறியடிப்பு, சத்ஜெய முறியடிப்பு, கிளிநொச்சி படைத்தள அழிப்பு, ஆனையிறவு மீட்பு என புலிகளின் இராணுவ தாக்குதல்கள் உச்சம் பெற்றிருந்த நேரம் அது. 2001ம் ஆண்டு புலிகளின் பார்வை யாழின் மேல் பதிந்திருந்தது. யாழ் குடாவை கைப்பற்றும் திட்டம் தலைவரால் போடப்பட்டு புலிகள் சேனை தயாரானது.
புலிகளின் அதி சிறப்பு அணியொன்று தனம்கிளப்பு, கோயிலா கண்டி கடற்கரைப் பிரதேசங்களில் தரையிறங்கி, அதிரடி தாக்குதல் மூலம் அந்த பிரதேசங்களை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி, புலிகளின் தாக்குதல் படையணிகள் யாழ் நகரை கைப்பற்றுவதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். புலிகளின் படையணிகள் யாழ்பாணத்தினுள் நுழைந்து முன்னேறியது.
அந்த நேரத்தில் புலிகளால் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப் பட்டிருந்த 120MM, 152MM ஆட்லறிகள், அத்தோடு புலிகளாலும் கொண்டு வந்து குவிக்கப் பட்டிருந்த ஆட்லறி மற்றும் அதன் "செல்களால்" யாழ்பாணத்தில் இருந்த இராணுவத்தின் தலைகளில் துல்லியமாக விழுந்தன. யாழின் எந்த மூலைக்கும் புலிகளின் ஷெல் வீச்சு துல்லியமாக இருந்தது. இராணுவம் எங்கும் ஒழிக்க முடியாத நிலையை புலிகள் ஏற்படுத்தினர். இராணுவம் பலாலிக்கு பின்வாங்க தொடங்கியது.
அந்த நேரத்தில் புலிகளின் தாக்குதல் அணிகளும் அதிவேக தாக்குதல் மூலம் சாவகச்சேரி உட்பட அரியாலை வரை முன்னேறிக் கொண்டிருந்தனர். இராணுவத்தினர் பல நூறு பேர் கொல்லப்பட ஏனையோர் ஓட்டம் எடுத்தனர். புலிகளின் விசேட பயிற்சி பெற்ற போராளிகள் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களில் சிறு சிறு அணியாக, ஊடுருவி தாக்குதலையும் மேற்கொண்டு, இராணுவத்தினரின் உளவுரனை சிதைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் 38000இராணுவத்தி
னரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. சிங்கள இராணுவத்தின் போரிடும் மனவுறுதி முற்றாக புலிகளால் சிதைக்கப்பட்டு, கிட்டதட்ட இராணுவத்தினர் சரணடையும் நிலைக்கு தள்ளப் பட்டனர். அந்த நேரத்தில் சிங்கள அரசு இந்திய அரசின் உதவியை நாடியது என்பதை விட, காலில் விழுந்து என்பதே சரியாகும்.
சிங்கள அரசால் இராணுவத்தினரை யாழில் இருந்து கடல் மூலமாக மீட்க உதவும் படி இந்திய அரசிடம் உதவி கோரப்பட்டது. உடனே இந்திய அரசும் புலிகளின் கைகளில் யாழ்பாணம் விழுந்தால் தமிழீழம் இலகுவில் தமிழர் கைகளில் வந்து விடும் என்பதை உணர்ந்து, அதை தடுக்க இந்திய அரசால் நயவஞ்சகமாக ஒரு கோரிக்கை புலிகளிடம் விடப் பட்டது. சிங்கள இராணுவத்தை இந்திய அரசு யாழை விட்டு வெளியேற்ற உதவ போவதாகவும், ஒரு மாதகால அவகாசமும் கோரப்பட்டது.
இந்திய இராணுவத்தினருடனான போர் மற்றும் வேறு சில காரணங்களாலும், இந்திய அரசுடன் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இந்திய அரசுடன் நல்ல உறவை ஏற்படுத்தும் நோக்கில் புலிகளின் தலைமை, இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டத்து. ஆனால் மறுவளத்தால் இந்திய உளவுத் துறையான "ரோ" களத்தில் இறங்கியது.
இது நடந்த காலத்தில் இந்திய அரசு, செக் குடியரசுடன் மிக நெருங்கிய, ராணுவ தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு காரணம் இரசியாவின் ஆயுதங்களையே இந்திய அரசு பாவனையில் வைத்திருக்கின்றது. அதற்கு தேவையான உதிரிப்பாகங்கள், மற்றும் கடற்படை கப்பல்களின் உதிரிப் பாகங்கள் என்பன, ரஷ்யாவால் உரிய நேரத்தில் இந்திய அரசுக்கு கொடுக்க முடியவில்லை.
ஆனால், அதே பாகங்கள் செக் குடியரசிடம் எதுவித பயன்பாடும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்த ரஷ்யா, அவற்றை அங்கிருந்து பெற்றுக் கொள்ளும்படி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவித்திருந்தது. அப்படித்தான், இந்த இரு நாட்டுக்குமான இராணுவத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு காரணம் 2000 ம் ஆண்டில் செக்குடியரசு நேட்டோவில் இணைந்ததே ஆகும்.
2000த்தின் ஆரம்பத்தில் செக். குடியரசு நேட்டோவில் இணைந்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று செக் குடியரசு ராணுவத்திடம் இருந்த MBRLகளை (MBRL - Multi Barrel Rocket Launcher) அகற்றி விட வேண்டும் என்பது.
அதற்காக அவர்கள் அவற்றை அழித்து விடலாம் அல்லது நட்பு, நாடு ஒன்றுக்கு கொடுத்து விடலாம். இது தான் அந்த ஒப்பந்தம். இந்த விவகாரத்தை செக் குடியரசு இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. காரணம், ஆயுதங்களை அழிக்க அவர்கள் விரும்பவில்லை.
உடனே இந்திய அரசு தமது உளவுத்துறை "ரா" மூலமாக அதை சிங்கள அரசுக்கு யாருக்கும் தெரியாமல் பெற்று கொடுக்க காய்களை நகர்த்தியது. அதன் ஒரு கட்டமாக அவசர அவசரமாக செக்குடியரசு RM-70 ரக MBRLகளையும், அவற்றில் உபயோகிக்க 50000 ராக்கெட்டுகளையும் இரண்டு மிகப் பெரிய இராணுவ கார்க்கோ விமாங்களில் காதும், காதும் வைத்தால் போல இந்திய அரசின் செலவில் கொழும்பில் கொண்டு வந்து இறக்கியது.
இந்திய அரசு இலவசமாக அனுப்பி வைத்த ஒரு தொகுதி ஆயுதங்கள் கொண்டு இராணுவஇயந்திரத்தை மீள் ஒழுங்கு செய்த பின் அந்த ஆயுதம் கொண்டு எதிரி தாக்க தொடங்கினான். சிங்கள இராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறையாமல் இந்திய காங்கிரஸ் அரசு தங்கள் பணத்தில் கொண்டு வந்து கொட்டியது.
சிங்களனும் எந்த தடையும் இன்றி தண்ணி போல ஷெல்களை ஏவினான். மீண்டும் உத்வேகம் பெற்றது சிங்கள அரசு இயந்திரம்.
MBRL ஒரு நிமிடத்தில் "40 ரொக்கெற்றுகளை" ஏவும் வல்லமை கொண்ட ஆயுதம். இது ஒரு நாட்டுக்கு எதிரான யுத்தங்களிலேயே பாவிக்க படுபவை. இதை தெரிந்தும் இந்திய அரசு,தானே முன் நின்று சிங்களனுக்கு பெற்று கொடுத்தது. இந்த ஆயுதம் குறிப்பிட்ட பிரதேசத்தை நொடிப் பொழுதில் அழிக்கவல்ல மிகப் பெரும் அழிவு ஆயுதம்.
இதை பெற்றுக் கொடுத்து மீண்டும் தமிழர் முதுகில் குத்தி தனது கோர முகத்தை மீண்டும் காட்டியது இந்திய காங்கிரஸ் அரசு. அதற்கு தமிழ்நாட்டு திராவிட கட்சிகளும் துணை போய் தங்கள் பங்கையும் கற்சிதமாக நிறைவு செய்தனர்.
இந்திய அரசின் துரோகம் கையை சுட்ட பின் தான், புலிகள் போராளிகளின் இழப்பை குறைப்பதற்காக யாழில் இருந்து பின் வாங்க முடிவெடுக்கப் பட்டது. உண்மையில் அன்று யாழ் புலிகளிடம் வீழ்ந்திருந்தால் இன்று தமிழீழ தனியரசு உருவாகி இருக்கும். எம் மக்களின் கனவை இந்திய நடுவண், மாநில அரசுகள் இல்லாமல் செய்து விட்டிருந்தன.
இறுதி யுத்தத்தில் கதுவி(ராடர்) மட்டும் கொடுத்ததாக கூறும் இந்திய அரசு தங்கு தடையில்லாமல் சிங்கள அரசு வாங்கும், ஆயுதங்களுக்கும் பணத்தை தானே செலுத்தி, அவர்கள் கைகளில் கிடைக்க செய்தது. ஆயுதங்கள் கொடுத்தால் வெளித்தெரியும் காசு கொடுத்தால்? தமிழக தமிழனை ஏமாளியாக்கியது ஆளும் வர்க்கம்.
20நாடுகளில் கூட்டு முயற்சியால் அழிக்கப் பட்ட தமிழர் போராட்டத்தில், இந்தியாவின் பங்கு 2000 மாம் ஆண்டே தொடங்கி கச்சிதமாக முள்ளிவாய்க்காளில் நிறைவு செய்யப் பட்டது. யாழ் நகர் அன்று கைப்பற்ற பட்டிருந்தால், குறைந்தது எங்கள் போராட்டமாவது காக்கப் பட்டிருக்கும்..!!
வலிகளுடன் துரோணர்..!!!
4 மணி நேரம் · Facebook for Android ·

போர் ஆயுதம் சர்வதேசம் ஹிந்தியா பாஜக ஈழம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக