திங்கள், 30 ஜூலை, 2018

திருப்பதி லட்டு தொழில் தமிழர் கையில் தீவிபத்து சதி

aathi1956 aathi1956@gmail.com

மார். 29
பெறுநர்: எனக்கு
கார்த்திகேயன் இரத்தினவேலு
திருமலையில் தீவிபத்து ஏற்பட்ட பகுதி... இலட்டு தயாரிக்கும் பகுதி
இந்த இலட்டு தயாரிக்கும் உரிமையும் பகுதியும் தமிழர்கள்வசம் உள்ளது
மற்றபகுதிகள் தமிழர்கள் வசம் இல்லை..
இலட்டு தயாரிப்பு வழங்குதல் பணி தமிழர்களிடம் உள்ளது
அதனால் தான் இலட்டு வாங்கும் வரிசையில் என்றும் கூட்ட நெரிசல் இருக்காது....
இனி நிலைமை நிச்சயம் மாறும்

மண்மீட்பு கோவில் கோயில் நிறுவனம் 

டி.வி.எஸ் நிறுவனம் தோற்றம் வரலாறு சாதனைகள்

aathi1956 aathi1956@gmail.com

மார். 29
பெறுநர்: எனக்கு
Bala Murali
TVS இந்தப் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...
தி. வே. சுந்தரம் அய்யங்கார் T.V.S.
’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ சமுகரெங்கபுரம் கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு வண்டி ஓடும்?’’ என்று, செய்தி சொன்னவரை அனைவரும் கேலி செய்தார்கள்.
ஆனால், உண்மையிலேயே கண்ணெதிரே அந்த வாகனம் வந்தபோது ஆச்சர்யத்தில் திகைத்து நின்ற சமுகரெங்கபுரம் கிராம மக்கள், ‘இதென்ன ஸ்ரீ ராம பாணமோ? ஸ்ரீ கிருஷ்ண ரதமோ!’ என ஆச்சர்யத்தில் கண்கள் கலங்க, ஆனந்தக் கூத்தாடி அந்த வாகனத்தை விழுந்து வணங்கினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும்.
இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொண்ட மகா விருட்சமாய், ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யும் வர்த்தகக் குழுமமாய் பரந்து விரிந்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைல் வரலாற்றை எழுதமுடியாது.
1877 மார்ச் 22-ல் டி.வி. சுந்தரம் (சுருக்கமாக டிவிஎஸ்) திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஊரில் பிறந்தார் . திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் போதனா பயிற்சிக் கல்லூரியிலும் படித்தார். அவரின் மனம் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் மையம் கொண்டு இருந்ததே தவிர, பெற்றோர் விரும்பியபடி படித்து வக்கீலாக வேண்டும் என்று நினைக்கவில்லை.
கல்லூரியில் இருந்து வெளியேறி, பிரம்பு, சவுக்கு போன்றவற்றை வர்த்தகர்களுக்கு மொத்த விற்பனை செய்யத் தொடங்கினார். பிறகு திருச்சியிலும் தஞ்சையிலும் ரயில்வே குமாஸ்தாவாக சில காலம் வேலை பார்த்தார்.தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, தனது பங்காகக் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு, தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரம் செய்யலானார்.
25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நான்கு ஆண்டுகள் மர வியாபாரம் செய்ததில் 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அந்த 50 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, கான்பகதூர் காதர் நவாஸ்கான் என்ற பிரமுகருடன் கூட்டாக 1912-ம் ஆண்டு தஞ்சாவூர்- புதுக்கோட்டை வழித்தடங்களில் பேருந்து சேவையை நடத்தத் தொடங்கினார். அதுதான் ஆரம்பம்!
அந்தக்கால பேருந்துகளில் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் பேரம் பேசித்தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவந்தது. மேலும், ஆட்கள் நிறையும் வரை பேருந்தை நிறுத்திக் காத்திருப்பது, கால வரையறை இல்லாமல் நினைத்த நேரத்துக்கு பேருந்தை இயக்குவது என்று ஒரு ஒழுங்கில்லாமல் இருந்த முறையை மாற்றியமைத்து, இன்றைக்கு இருக்கும் ‘இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம்’ என்னும் நடைமுறையையும், பயணிகள் கொடுக்கும் காசுக்கு ‘ரசீது வழங்குவது’ என்னும் நடைமுறையையும் கொண்டுவந்தவர் டிவிஎஸ்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்து எப்போது புறப்பட்டு, எப்போது போய்ச் சேரும் என்பதே தெரியாமல் இருந்ததை மாற்றி, ‘குறிப்பிட்ட நேரத்துக்கு இந்தப் பேருந்து புறப்படும்’ என்ற நடைமுறையை நாட்டுக்கே டிவிஎஸ்தான் அறிமுகப்படுத்தினார்.
வாகனங்களின் டயர்களும், பாகங்களும் விரைவில் தேய்ந்து போவதற்கும், எரிபொருள் அதிகமாகச் செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கும் குண்டும் குழியுமான சாலைகளே காரணம் என்பதை மிக தாமதமாகக் கண்டறிந்த அரசாங்கம், பிற்காலத்தில்தான் தரமான தார்ச் சாலையை அமைத்தது. இதனை அப்போதே உணர்ந்திருந்த டிவிஎஸ், பேருந்து செல்லும் சாலைகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட்டையும் தானே எடுத்துக் கொண்டார். இதன்மூலம் சாலைகளில் காணப்பட்ட குண்டு, குழிகள் விரைவில் மறைந்ததோடு பேருந்து டயர்களின் ஆயுட்காலமும் நீடித்தது.
சாலைகளில் கழன்று விழுந்து கிடக்கும் மாடு, குதிரைகளின் லாடங்களால் டயர் பஞ்சராகி பேருந்துகள் அடிக்கடி நின்றுபோயின. இதனைத் தடுக்க ஒரு காந்த வண்டியை டிவிஎஸ் அறிமுகப்படுத்தினார். ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள பெரிய காந்தம் பொருத்தப்பட்ட வண்டியை சாலையில் ஓட விட்டார். சாலையில் கிடந்த அனைத்து இரும்புகளும் காந்தத்தில் ஒட்டிக்கொண்டுவிட, டிவிஎஸ் பேருந்துகள் பஞ்சர் ஆகாமல் ஓடலாயின.
புதுக்கோட்டையில் பஸ் சர்வீஸ் நடத்தி வந்தபோதே, மேலைநாடுகளில் இருந்து மோட்டார் வாக னங்களையும், இயந்திரங்களின் உதிரிப்பா கங்களையும் சிறியஅளவில் இறக்குமதி செய்து மற்ற பேருந்து நிறுவனங்களுக்கு டிவிஎஸ் விற்பனை செய்துவந்தார். புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் மதுரையில் சிறிய அளவில் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினார். சைக்கிள்களையும், மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் விற்றுவந்த அந்த நிறுவனமே பலவிழுதுகள் பரப்பி விரிந்து நிற்கும் இன்றைய டிவிஎஸ் ஆலமரத்தின் விதையாகும்.
1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிப்பாகங்களுக்கும் டிவிஎஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமானது.
முனிவருக்கே மணி சொன்ன டிவிஎஸ் பஸ்!
ஒருமுறை திருநெல்வேலி செல்லும் வழியில் தன் பரிவாரங்களுடன் புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மகா பெரியவர். உறங்கச் செல்லும் முன் அதிகாலை மூன்றரை மணிக்குத் தன்னை எழுப்பிவிடுமாறு, சீடர் நாகராஜனிடம் சொல்லிச் சென்றார். முதல் மூன்று நாட்கள் கடிகாரத்தைப் பார்த்து சரியான நேரத்துக்கு ‘‘ஹர ஹர சங்கர...’’ என்று கோஷமிட்டு எழுப்பிய சீடர், நான்காம் நாள் மெய்மறந்து உறங்கிவிட்டார். ‘
‘ஹர ஹர சங்கர...’’ என்ற குரல் கேட்டு சீடர் திடுக்கிட்டு விழித்தால், எதிரே மகா பெரியவர் நிற்கிறார். ‘‘கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடாப்பா...’’ என்று சொல்ல, சீடருக்கு மிகவும் வெட்கமாகப்போய்வ
ிட்டதாம். சோதனையாக மறுநாளும் சீடர் உறங்கிவிட, அன்றும் பெரியவாளே அவரை எழுப்பிவிட்டாராம். ‘அதெப்படி எந்தக் கடிகாரமும் இல்லாமல், சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்துவிடுகிறார்’ என்று சீடருக்கு எழுந்த சந்தேகத்தை பெரியவாளே தீர்த்து வைத்தாராம்.
‘‘முதல் நாள் நீ எழுப்பி விட்டபோது, மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்க
ு வர்ற டிவிஎஸ் பஸ் நம்ம சத்திரத்தைக் கடந்து போறதைப் பார்த்தேன். ‘டிவிஎஸ் பஸ் ஒரு இடத்துக்கு வர்ற குறிப்பிட்ட டயத்தை வெச்சுண்டே, நம்ம கடிகாரத்தை கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்’னு சொல்லுவா. அது வாஸ்தவம்தான். சத்திரவாசலுக்கு அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரை மணிக்கு வந்து தாண்டிப் போறது. இதை வெச்சு நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்டவுடனேயே தானா எந்திருச்சுட்டேன்...’’ என்று ரகசியத்தை உடைத்தாராம் பெரியவாள். டிவிஎஸ் பேருந்துகளின் நேரம் தவறாமைக்கு இந்த ஒரு உதாரணம் போதாதா..!
இப்போது போலவே அப்போதும் கார்கள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ்தான் முன்னணியில் இருந்தது. 1929-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கும், உதிரிப் பாகங்களுக்கும் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றதுதான் டிவிஎஸ் வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை!
முட்டைக்கோஸ் புதிதாக மார்க்கெட்டுக்கு வந்தபோது, அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதை யாருமே வாங்கவில்லையாம். காய்கறிக்கே இந்த நிலை என்றால், ஆயிரக்கணக்கான ரூபாய் விலைமதிப்புடைய காருக்கு..?
குதிரையிலும், மாட்டுவண்டியிலும் பவனி வந்து கொண்டு இருந்த ஜமீன்தார்களிடம் கார்களை விற்பனை செய்ய, டி.வி.சுந்தரம் ஐயங்காரின் குமாரர் துரைசாமி செய்த யோசனை ஆச்சர்யமானது.
புது காருடன் நேரடியாகச் செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்குப் போவாராம். டிரைவரையும் காரையும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு, அந்தச் செல்வந்தர் அதுவரை பயணித்து வந்த குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுவாராம். மறுபடியும் ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் செல்வாராம்.
இடைப்பட்ட நாட்களில் காரில் பயணித்து பயணித்து, அதன் சொகுசுக்கு அடிமையாகிவிட்டி
ருப்பார் அந்தச் செல்வந்தர். ஊராரையும் மற்ற ஜமீன்தார்களையும் வாய்பிளக்க வேடிக்கை பார்க்கவைக்கும் அந்த காரை, திருப்பித் தர மனம் இல்லாமல் தேவையான பணத்தைக் கொடுத்து, காரை வாங்கிவிடுவார் ஜமீன்தார். இப்படி மிக எளிதாக காரை விற்றுவிட்டு, வெற்றிகரமாக வீடு திரும்புவாராம் துரைசாமி.
குதிரை வண்டியை வாங்கிக்கொண்டு, காரை விற்ற அந்தத் திட்டமே, பழையதைக் கொடுத்து புதிய பொருட்களை வாங்கிச் செல்லும் ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி!
நானும் ஒரு தொழிலாளி!
ஆறேழு பேர் பணிபுரியும் மளிகைக் கடையிலேயே தொழிலாளர் பிரச்னை தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது. அப்படியானால் பல்லாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனத்தில்?தினம் தினம் பிரச்னையாகத்தானே விடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு ‘தொழிலாளர் போராட்டம் என்று எதுவும் நடந்ததே இல்லை’ என்கிறார்கள் டிவிஎஸ் நிர்வாகிகள்.
தொழிலாளர்கள்தான் நிறுவனத்தை இயக்குகிறார்கள் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் டிவிஎஸ் நிறுவனத்துக்குத்தான் உண்டு. காலையில் இலை போட்டுப் பரிமாறப்படும் இட்லி - சாம்பாரை சாப்பிட்டுவிட்டுத்தான் தொழிலாளர்கள் வேலைக்கே செல்வார்களாம்.
பணியாளர்களின் பசியைத் தீர்த்தது மட்டுமல்லாமல் வசிக்கக் குடியிருப்புகள், குழந்தைகளின் கல்விக்குப் பள்ளிக்கூடம், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை என்று தொழிலாளர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் டிவிஎஸ் நிறுவனத்தில் செய்து கொடுக்கப்பட்டதாலேயே, தாத்தா-அப்பா-பேரன்-கொள்ளுபேரன் என்று நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற பல குடும்பங்கள் உண்டு.
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு தொழிலாளர் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டிவிஎஸ், தம் வாரிசுகள் அனைவரையும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு செய்தார். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், காக்கி யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள்! அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டிவிஎஸ்-ஸில் ஐ.என்.டி.யு.சி எனும் ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருக்கிறது. தொழிற்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னரே அவர்களை அழைத்துப் பேசி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பார்களாம்!
ஒரு வேலையைச் செய்யும் தொழிலாளர்களால்தான் அந்த வேலையை எளிதாகச் செய்து முடிப்பதற்கான தீர்வையும் சொல்ல முடியும் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களை நிர்வாக யோசனைகளிலும் பங்கேற்க வைத்தார். கம்பெனியில் ஓர் ‘ஆலோசனைப் பெட்டி’யை வைத்து, அதில் ஆலோசனைகளை எழுதிப்போடுமாறு கேட்டுக் கொண்டார்கள். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை, தொழிலாளர்கள் எழுதிப் போட்டனர். சிறந்த யோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.
‘இது நம் நிறுவனம். இதை முன்னேற்ற வேண்டியது நம் கடமை’ என்னும் உணர்வு முதலாளிக்கு ஏற்படுவது வியப்பானதல்ல. ஆனால், அது கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கும் ஏற்பட வேண்டும். அதில்தான் அந்த நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த எண்ணத்தை தொழிலாளர்களுக்க
ு ஏற்படுத்தியதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளம்!
ஐடியாவுக்குப் பரிசு!
‘‘தொழிலாளர்கள் ஸ்க்ரு டிரைவர், ஸ்பேனர் போன்றவற்றை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கையில் ஒட்டியிருக்கும் கிரீஸும், ஆயிலும் துணியில் பட்டு நீக்க முடியாத கறையாக மாறிவிடுகிறது. அதனால் சீருடையில் பாக்கெட்டே தேவையில்லை’’ என்று ஒரு தொழிலாளர் ஆலோசனை சொன்னாராம். பல மீட்டர் துணியையும், சலவைச் செலவையும் மிச்சமாக்கி, உடைகளின் தூய்மையையும் பாதுகாத்த அந்தத் தொழிலாளரின் யோசனைதான் இன்றளவும் டிவிஎஸ்-ஸிலும் மற்ற பெரும்பாலான கம்பெனிகளிலும் நடைமுறையில் இருக்கிறது.
எதுவும் முடியும்!
‘இது என் வேலை இல்லையே..!’ என்று சொல்லாமல், எந்த வேலையைக் கொடுத்தாலும் டிவிஎஸ் தொழிலாளர்கள் செய்வார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 1960-களில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந
்தது. முதல் நாள் பெய்த மழையில், ஒருமாதம் செலவழித்துப் போடப்பட்டிருந்த, மிகப் பெரிய மாநாட்டுப் பந்தல் அப்படியே சரிந்து விழுந்துவிட்டது. மறுநாள் எப்படி மாநாட்டை நடத்துவது என்று தெரியாமல் ஏற்பாட்டாளர்கள் விழிக்க, டிவிஎஸ் குமாரர் கிருஷ்ணா உதவ முன்வந்தார். ஒரு மாதமாகப் போடப்பட்ட பந்தலை ஒரே இரவில் சரிசெய்து சாதனை படைத்தார்களாம்
டிவிஎஸ் தொழிலாளர்கள்.
மேலும் சம்பவம் ஒன்று... மதுரை ஏர்போர்ட்டில் இறங்கிய விமானத்தின் முன் சக்கரம் உள்பக்கமாக அழுந்திக் கொள்ள, விமான நிலையத்தின் இன்ஜினீயர்கள் காலை 8 மணிமுதல்மதியம் 2 மணி வரை போராடிப்பார்த்தும் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையாம். இந்தத் தகவல் டிவிஎஸ் நிறுவனத்துக்கு வர, ஊழியர்கள் புறப்பட்டுப் போனார்களாம். ‘நாள்தோறும் விமானத்தோடு புழங்கும் இன்ஜினீயர்களாலேயே முடியவில்லை. இவர்களால் என்ன செய்ய முடியும்’ என்று விமான நிலையத்தில் வேலை பார்க்கும் சிலர் இவர்கள் காதுபடவே கருத்துச் சொல்லிஇருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இவர்களை முதலில் விமான நிலையத்தின் உள்ளேயே விட மறுத்து விட்டார்களாம். ‘இது வரை விமானத்தை அருகில் சென்று பார்த்ததே இல்லை. ரிப்பேர் செய்யும் சாக்கிலாவது அருகில் சென்று பார்த்து விட்டு வருகிறோமே’ என்று டிவிஎஸ் ஊழியர்கள் சாதுர்யமாகப் பேசி விமானத்துக்கு அருகே சென்று, தங்களை அழைத்த அதிகாரிகளைப் பார்த்திருக்கிற
ார்கள். அந்த அதிகாரி விமானத்தைக் காட்டி பிரச்னையை இவர்களிடம் சொன்னார். பல மணி நேரம் முயன்றும் விமான நிலைய இன்ஜினீயர்களாலே
யே சரி செய்ய முடியாத வேலையை விமானிகளே வியக்கும் வண்ணம் பத்தே நிமிடத்தில் சரிசெய்து விட்டார்களாம் டிவிஎஸ் தொழிலாளர்கள். எப்படி?
டிவிஎஸ்-ஸின் தங்குதடையில்லாத சேவைக்கு உதாரணமாக விளங்கக்கூடிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. உலகப் போர் முடிந்த சமயத்தில் கடுமையான பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவியது. பொதுமக்களுக்கு ஒரு சொட்டு பெட்ரோல்கூட கிடைக்கவில்லை. இந்தச் சமயத்திலும் தனது பஸ் சர்வீஸை நிறுத்த விரும்பாத டிவிஎஸ், பேருந்துகளில் கரி இன்ஜினைப் பொருத்தி ஓட்டத் தொடங்கினார். இந்த இன்ஜினைத் தயார்படுத்தவே இரண்டு மணி நேரம் தேவையாம். கரியை எரிக்கும்போது வெளிப்படும் வெப்ப ஆவி சிலிண்டர்களில் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் பேருந்து ஓட்டப்பட்டது. இதற்காகப் பேருந்து செல்லும் வழியில் ஆங்காங்கே கரி நிரப்பும் இடங்களும் நிறுவப்பட்டன!
சுந்தரம் அய்யங்கார் முற்போக்குச் சிந்தனை
கொண்டவர். இளம்வயதில் கைம்பெண்ணான
தன் மகள் தி. சு. சௌந்தரத்துக்கு மகாத்மா
காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார்
. தி. சு. சௌந்தரம் இந்திய விடுதலைப் போரில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய அரசு தி.
சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டு
அவரை பெருமைப்படுத்தியது .
வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர்
கலைகளையும் ஆதரித்தார் . தான் ஓய்வு பெற்று
வணிகத்தை தன் மகன்களிடம் ஒப்படைத்ததைக்
கண்டு இராசகோபாலாச்சார
ி இவரைப் பாராட்டினார் .
ஏப்ரல் 28, 1955 இல் அதிகாலையில்
கொடைக்கானலில் உள்ள தன் வீட்டில் இறந்த
போது இவரது வயது 78. இவரைப்
பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும்
பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு
உருவச்சிலை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல்
அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து
வைக்கப்பட்டது....
26 மார்ச், 09:04 AM

டிவிஎஸ் ஐயங்கார் 
மறுமணம் தொழில்நுட்பம் தொழில் 

திருநெல்வேலி ரெட்டியார் பிரிவு கிளை பூர்வீகம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 29
பெறுநர்: எனக்கு
Reddiar ரெட்டியார் , 3 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ரெட்டியார் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன
வ.எண். பிரிவு வாழ்ந்த இடங்கள் கோத்திரம்
1 சரவல்லியார் (தெரியவில்லை) (மூலக்கரைப்பட்டி, பலசேரி, கோலியன்குளம், தனக்கர்குளம் )வீரசவல்லியார் கோத்திரம்)
2 நெல்லியார் (ஆந்திராவில் நெல்லூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) பலசேரி, பாணான்குளம், பருத்திப்பாடு, நன்னிகுளம், திருமலாபுரம், தாழகுளம், தனக்கர்குளம், கோலியன்குளம் வீரசவல்லியார் கோத்திரம்
3 கொண்டபெல்லம் (ஆந்திராவில் கொண்டபெல்லம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) தெரியவில்லை வீரசவல்லியார் கோத்திரம்
4 கந்தலார் (ஆந்திராவில் கந்தலார் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, தாழகுளம் மிதுனபாலக் கோத்திரம்
5 இருவார்த்தார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி மிதுனபாலக் கோத்திரம்
6 பூணுரர் மூலக்கரைப்பட்டி மிதுனபாலக் கோத்திரம்
7 மச்சார் (தெரியவில்லை) ரெங்கசமுத்திரம், மூலக்கரைப்பட்டி, பதைக்கம், காடங்குளம் விசுவநாத கோத்திரம்
8 வங்காளத்தார் (தெரியவில்லை) அருணாபுரம், சூரபுரம் விசுவநாத கோத்திரம்
9 ஆலிங்கார் (தெரியவில்லை) காரியாண்டி சிந்துபால கோத்திரம்
10 பிடித்தவல்லியார் (தெரியவில்லை) காரியாண்டி சிந்துபால கோத்திரம்
11 பொக்கா ரெட்டி (தெரியவில்லை) சிங்கநேரி, கோலியன்குளம், மூலக்கரைப்பட்டி சிந்துபால கோத்திரம்
12 மயிலூரார் (தெரியவில்லை) கழுவூர், திருமாலாபுரம் சிந்துபால கோத்திரம்
13 சுண்டியார் (தெரியவில்லை) காரியாண்டி, பலசேரி சிந்துபால கோத்திரம்
14 ஆரூரார் (தெரியவில்லை) பதைக்கம் சிந்துபால கோத்திரம்
15 கொக்கடியார் (தெரியவில்லை) தெரியவில்லை சிந்துபால கோத்திரம்
16 பாலட்டார் (தெரியவில்லை) திருமலாபுரம், முனைஞ்சிப்பட்டி சிந்துபால கோத்திரம்
17 ஈங்குலாரு (தெரியவில்லை) கூந்தன்குளம், வெங்கட்டாபுரம், அரவ்நேரி, ஜெகனாதபுரம்(செண
்பகராம நல்லூர் ) , கால்கரை, பெத்தரெங்கபுரம் பல்லமலா கோத்திரம்
18 தடையலார் (தெரியவில்லை) பதைக்கம், முனைஞ்சிப்பட்டி பல்லமலா கோத்திரம்
19 கொண்டபுரத்தார் ((ஆந்திராவில் கொண்டபுரம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி மதுராந்தக் கோத்திரம்
20 நிலவல்லியார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி, பதைக்கம் இரதணயல கோத்திரம்
21 ராஜமகேந்திரம் ((ஆந்திராவில் ராஜமுந்திரி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) வெங்கட்டாபுரம், திருமலாபுரம், ராமகிருஷ்ணபுரம், மூலக்கரைப்பட்டி, கோலியன்குளம் அனுபால கோத்திரம்
22 கொம்புரார் (தெரியவில்லை) வெங்கட்டாபுரம், மூலக்கரைப்பட்டி, சிதம்பராபுரம் பிரமல கோத்திரம்
23 கொலூரார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி கனகமள்ளா கோத்திரம்
24 கொண்டபல்லி ((ஆந்திராவில் கொண்டபல்லி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) தெரியவில்லை பிரமல கோத்திரம்
25 ஒழுத்துலார் ((ஆந்திராவில் ஒங்கலூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) தெரியவில்லை விஷ்ணுபால கோத்திரம்
26 பங்களூ(ர்)வார் சமூகரெங்கபுரம்,
சீலாத்திகுளம்.
27 திருமங்களவார் சமூகரெங்கபுரம்,
சீலாத்திகுளம்.
28 பொல்லாடிவார் சமூகரெங்கபுரம்,
சீலாத்திகுளம்.
29
போலாடிவார், பத்தட்டிவார், தூர்வார், பென்னூர்வார், குண்டாலுவார், பொல்லாடிவார் இவர்கள் நெல்லை மாவட்டம், சமூகரெங்கபுரம்,நக்கனேரி, பருத்திப்பாடு கிராமத்தில் வாழ்கின்றனர்
விடுபட்டதை தெரிவிக்கவும்..
22 ஜூன் 2017, 07:38 AM

நூல்: வரலாற்றில் ரெட்டியார்கள் 

பேரா. A.சண்முகம் M.A.,M.Phil.







சுடோகு விளையாட்டு தமிழர் கண்டுபிடிப்பு பழனி தூண் கல்வெட்டு 300 ஆண்டு பழமை பெருமை

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்மார். 28
பெறுநர்: எனக்கு
Archaeology
Did south Indians play Sudoku 300 years back? Archeologists find rare inscriptions in TN
A recently renovated pillar in the Palani temple bore inscriptions of a Sudoku-like game.
When you think of traditional south Indian games that have been played since ancient times, you might think of pallankuzhi, aadu puli aattam or maybe even paramapadham. But what about Sudoku?
Archaeologists have found inscriptions on a stone pillar in a mandapam located in the foothills of Palani, which possibly indicates that a Sudoku-like game used to be played when the pillar was built. The mandapam is generally used during the Panguni uthram festival that is celebrated in April.
Substantiating his claim, archaeologist Narayanamoorthy shares that the style in which the numbers are engraved suggests that the pillar belongs to the 17th century.
The inscriptions found on the pillar show a 3x3 square with markings of numbers written in Tamil. When added in any direction, the numbers total to 15, which Narayanamoorthy points out, is indicative of the temple deity’s (Murugan) number.
“According to Hindu beliefs, every god has a number and Lord Muruga’s number is 6 (1+5=6). Interestingly, during festivities, the deity is placed in front of this pillar. Inscriptions of these Sudoku squares here could indicate its importance. What we gather from this is that the game's logic was used here long before it was played elsewhere in the world,” he explains.
Narayanamoorthy adds that this particular mandapam in the temple has been renovated repeatedly since the 13th century. “Multiple coatings of limestone on these pillars had hidden the inscriptions thus far. Now, the mandapam is being renovated for the festival and that’s when we noticed the inscriptions on the pillar.”
History of Sudoku
Sudoku, a popular number puzzle now, began appearing in newspapers in its present form only in the late 20th century. Earlier, a similar version of it was published in newspapers in France.
The puzzle was introduced in Japan by Nikoli, a Japanese puzzle company, in the paper Monthly Nikolist in April 1984. While British newspapers are well-known for their crossword puzzles, the first Sudoku puzzle appeared on its pages only in November 2004.


கள் இறக்குதல் இலக்கியம் அரசியல்

aathi1956 aathi1956@gmail.com

மார். 28
பெறுநர்: எனக்கு
Selva Kumaran
"களிகள் களிகட்கு நீட்டத்தம் கையால்
களிகள் விதிர்த்திட்ட வெங்கள்-துளிகலந்து
ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே “
கள்ளு பருகும் போது சிந்தும் துளிகளாலும் நுரைகளாலும் வீதியே நனைந்து கிடக்க அதன் மேல் யானை நடந்ததால் சேறாகி வீதி முழுக்க மணக்கிறது கள்ளு மனம் என்று கள்ளின் பெருமையை உச்சி முகர்கிறது அந்த இலக்கிய பாடல்.
ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,சோலை வீழ் கனியின் தேனும்,
தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப-உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ.
கரும்பாலைகளிலிருந்தும் பெருகும் தேன் போன்ற கருப்பஞ்சாரும், தேனும் கள் இறக்குவோர் அரிந்த பாளையிலிருந்து வடியும் கள்ளும், சோலைகளில் பழுத்த பழங்களின் சாறும், தொடுக்கப்பட்ட இடத்தினின்று வழிகின்ற தேனடைத் தேனும் மலர் மாலைகளிலிருந்து வடியும் தேனும், எல்லை மீறிப் பெருகி ஓடிகப்பல்கள் இயங்கும் கடலிலே போய்ச் சேர கடலிலே வந்து கலக்கின்ற அவற்றை மீன்களெல்லாம் பருகிக் களிக்கும். என்று கோசல நாட்டின் வளம் மற்றும் சிறப்பினை கூறும் இந்த பாடலில் கள்ளின் சிறப்பும் மணக்கிறது.
கள்ளும் கறி சோறும் போட்ட மன்னன் இறந்து விட்டானே என்று இலக்கிய வீதிகளில் எத்தனையோ புலவர்கள் புலம்பி இருக்கிறார்கள் .
ஈழம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?
பனை மற்றும் தென்னை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான பானம் ஆகும். பனை அல்லது தென்னை மரங்களின் கிளைகளிலிருந்து கீரல் செய்து அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண் மண் குடுவைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு சுவையுடன் இருக்கும் . தமிழர்களின் வாழ்வோடு இணைந்த பிரிக்க முடியாத உணவு என்பதை பழந்தமிழர் இலக்கியங்களிலிருந்து அறியலாம். ஆமாம் கள்ளுக்கு மறு பெயர் ஈழம் !
வெறி
தேன்
மாலி
முருகு
காவி
சாலி
அரி
நாரி
மேதை
படு
இக்கு
அரிட்டம்
என இலக்கியங்களில் ஏனைய பெயர்களில் அழைப்படுகிறது கள்ளு.
உடல் வலியுடன் வேலை செய்யும் கிராம மக்கள், கள்ளை வலி நிவாரணியாக நினைக்கிறார்கள். பொருளாதார ரீதியாக மக்களுக்கு கள் ஏற்ற பானமும் ஆகும். கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி. கள் இறக்குவது மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 47 சொல்கிறது.
1927 இல் கள்ளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னை மரங்களை வெட்டிய பெரியார் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 1963 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற கள் வேண்டுவோர் மாநாட்டில் கலந்து கொண்டு, கள்ளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
கேரளாவில் மது கொள்கை மற்றும் மதுவிலக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட உதயபானு கமிஷன் தனது அறிக்கையில், “கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி’ என பரிந்துரை அளித்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ மது விலக்குச் சட்டத்தின் படி தமிழக அரசு கள்ளைத் தடை செய்துள்ளது. மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு தமிழகத்தில் கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உணவு தேடும் உரிமையைத் தமிழக அரசு பறிக்கிறது என அறிந்து கொள்ளலாம். ஆகையால் திட்டமிட்டே நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிஷனின், கள் குறித்த அறிக்கையை வெளியிடாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது.இது மிகவும் அநீதியான செயலாகும்.
பெரியாரின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்வோரும், கள் மது என்று கூறி மது ஒழிப்பு மாநாடு நடத்துவோரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கள்ளுக்கு தடை என்றால் அரசு விற்பனை செய்யும் பீர், பிராந்தி போன்றவை என்ன புனித நீரா? மக்கள் இறக்கும் கள்ளுக்கு தடை விதிக்கும் அரசாங்கம், தானே மதுவை தெருத் தெருவாக விற்பனை செய்கிறது. இதில் மேட்டு குடிகளுக்கு வேறு தனி ஒயின்ஷாப்.
அரசின் வருமானத்தைத் தாண்டி, பண முதலைகள் மற்றும் தங்கள் பினாமிகளின் வருமானம் பாதிக்கப் படக்கூடாது என்பது தானே முக்கிய நோக்கம். வருமானத்திற்காக உடலைக் கெடுக்கும் மது வகைகளுக்கு பருவந் தோறும் இலக்கு வைத்து வணிகம் நடத்தும் தமிழக அரசு, மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
ஆம் , மக்களே ஈழத்தை அங்கீகரிப்போம் வாருங்கள் !
குறிப்பு -
தம்பி ஒருவன் கொண்டுவந்து கொடுத்த கள்ளை குடிப்பதற்கு முன் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்
வாங்களேன் ஒரு மொந்தை கள் குடிப்போம்
Samaran Nagan
அண்ணன் Gowtham P
தம்பி கங்கை கொண்டான் மன்னர் மன்னன் வழியாக,
10 நிமிடங்கள் ·

மது பனங்கள் தென்னங்கள் சாராயம் 

நா.திருமலை தமிழ் வழக்காடு மொழி மதுரை போராட்டம் ஆதரவு

aathi1956 aathi1956@gmail.com

மார். 28
பெறுநர்: எனக்கு
விசுவநாதன் கரிகாலன்
பண்பாளா், தமிழ் அறிஞா் திரு.நா.திருமலை. அவா்களுக்கு வீரவணக்கம். உயா்நீதீமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்று திரு.பகத்சிங் தலைமையில் மதுரையில் நடந்த பட்டிணி போராட்டத்தில் ஒன்பது நாட்களும் கலந்து கொண்டு தனது ஆதரவை தொிவத்தாா். தமிழ்தேசிய அமைப்புகள் நடத்தும் பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டாா். தமிழ்த் தேச போியக்கம் சென்ற மாதம் நடத்திய வெளியாரை வெளியேற்றுவோம் என்ற மாநாட்டில் தன்னுடைய உடல்நிலை சாியில்லாத பொழதும் குடும்ப உறுப்பினரின் துனைக்கொண்டு கலந்து கொண்டு தோழா் பெ.மணியரசனை வாழ்த்திவிட்டுச் சென்றாா். ஐயா .ம.பொ.சி மீது தீராது பற்று கொண்டவா்.

பார்ப்பனத்தமிழர் பார்ப்பனர் தமிழ்ப்பற்று மொழிப்பற்று 

சென்னை to சேலம் 1000 கோடி செலவில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாலை நடுவணரசு மண்ணழிப்பு ஜிண்டால்

aathi1956 aathi1956@gmail.com

மார். 28
பெறுநர்: எனக்கு
சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள..
# இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,
# சென்னை - # சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார்,
இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,
தமிழ் நாட்டிற்கு # எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, # மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க
# பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?
அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம்
அமையவிருக்கும் சாலையானது
# கார்ப்பரேட் நிறுவனமான
# ஜிண்டாலுக்காக .
ஆம், # ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,
#ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.
அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள # கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது.
இரண்டாவது # திருவண்ணாமலை மாவட்டம் # கல்வராயன்மலையில் இருந்து # இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது,
இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் # இரும்புத்தாது வளங்களை வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் #சென்னை துறைமுகத்துக்குகொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.
அது தான் இந்த #சென்னை -சேலம் 8 வழி பசுமை சாலை.
இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும்.
நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது. இதற்கு # தமிழக அரசும் உடந்தை.
தயவு செய்து # தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்து
கூடுமானவரை # ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள்,
# எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்.

search சண்டாள ஜிண்டால்

நியூட்ரினோ க்கு முல்லைப்பெரியாறு தண்ணீர் செய்தி தந்திரம் வெளியீடு

aathi1956 aathi1956@gmail.com

மார். 28
பெறுநர்: எனக்கு
வள்ளுவத்தேவன் உதய்
எச்சப்பொறுக்கித்தனம்
நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்கு தேவையாக முல்லை பெரியாறு அணையில் இருந்து 340 கிலோ லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதிக்க படுகிறது என்று செய்திகள் வெளியாகிறது....
எவ்வளவு நுட்பாக ஊடகம் தனது பயங்கரவாதத்தை காட்டுகிறது என்றால் 3,40,000 லிட்டர் தண்ணீர் என்பதை சுருக்கி, அதன் மூலமாக வரும் எதிர்ப்பை மட்டுப்படுத்த 340 கிலோ லிட்டர் என்பதும்,
கூடங்குளம் அணுவுலை மின்சார உற்பத்தி யை மெகாவாட்டில் இருந்து பெறுக்கி 2,50,000 யூனிட்கள் என்று பூதாகரமாக எடுத்துக் காட்டுவதும் பச்சை பொறுக்கித்தனம்.....

நாசகார திட்டம் மண்ணழிப்பு ஊடகம்

கர்நாடகா தேர்தல் கமிசன் தேதி அறிவிக்குமுன் பாஜக அறிவிப்பு மால்வியா

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே கர்நாடக தேர்தல் தேதியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக பிரமுகர்
2018-03-27@ 15:29:46
டெல்லி: கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரி அறிவிப்பதற்கு முன்பாகவே பாஜக பிரமுகர் அறிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை இன்று காலை 11 மணிக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ஓம்பிரகாஷ் ராவத் அறிவிப்பார் என தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, காலை 11 மணி முதல் ஓம்பிரகாஷ் ராவத் தேர்தல் விவரங்கள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை அறிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே பா.ஜ.க. இணையதள பிரிவின் தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான தேதி மே 12-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 18ஆம் தேதியும் நடைபெறும் என பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அவர் இந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்றாலும், ஆளும் அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் அது இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக இந்த செயல்பாடு அரங்கேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது கருதப்படுகிறது. வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவால் தென் இந்தியாவில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதனால் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் சூழலில், இந்தத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: கர்நாடக தேர்தல்
பாஜக பிரமுகர் ஓம்பிரகாஷ் ராவத்
அமித் மால்வியா Amit Malviya

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இயந்திரம் மோசடி வாக்குச்சீட்டு தேர்தல்

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
-------

முன்கூட்டியே கசிந்ததா கர்நாடகா தேர்தல் தேதி?
கர்நாடகா சட்டபேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னரே தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா அறிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 12-ல் நடைபெறும் வாக்குகள் மே 15-ல் எண்ணப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாகவே, பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 12-ல் தேர்தல், மே 18-ல் வாக்கு எண்ணிக்கை எனப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து ட்விட்டராட்டிகள் பலரும் அமித் மால்வியாவிடம் தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்ப சில ஊடகங்கள் இத்தகவலை பிளாஷ் செய்ததாகவும் அதன்படியே தான் ட்வீட் செய்ததாகவும் பதிலளித்தார்.
சர்ச்சை பெரிதாகவே அவரது ட்வீட்டையும் டெலீட் செய்தார்.
இதற்கிடையே, செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒருசில செய்தியாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அமித் மால்வியா ட்வீட் குறித்தும் சில செய்தி சேனல்கள் ஒளிபரப்பிய பிளாஷ் குறித்தும் கேள்வி எழுப்பினர். நீங்கள் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாகவே எப்படி இத்தகவல் கசிந்தது எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், "என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். தேர்தல் தொடர்பான தகவல் கசிவு மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டபூர்வமாகவும் நிர்வாக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


தமிழகம் எண்ணெய்வளம் சுரண்டல் பெட்ரோல் எரிபொருள் நரிமணம் கார்ப்பரேட்

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
உயிரைக் கொடுத்தாவது எங்கள் நிலத்தைக் காப்போம்!" - ஓ.என்.ஜி.சிக்கு எதிராக #நரிமணம் மக்கள் # ONGC

#நாம்_ஏமாற்றப்பட்ட_கதை

காவிரி டெல்டா கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு "தகவல் அறியும் சட்டத்தின்" கீழ் சில கேள்விகளை முன்வைக்கிறார். அது நெடுவாசல், கதிராமங்கலம் என டெல்டா மாவட்டங்களில்  ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயம்.

'சட்டவிரோதமாக' போராடிய மக்கள்மீது காவல்துறை மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்த சமயம். அன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கடந்த வாரம் பதிலளித்திருந்தது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். முதலில், தமிழகத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எத்தனை எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன? அதில் எத்தனை செயல்பாட்டில் உள்ளன? என்ற கேள்வி. அதன் பதில், ஓ.என்.ஜி.சி சொன்ன கணக்கிலிருந்து பெரும் வித்தியாசப்பட்டிருந்தது.

#மொத்தக்_கிணறுகள் : 700 (ஓ.என்.ஜி.சி) - 219 (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்).

#செயல்பாட்டில்_இருப்பவை: 182 (ஓ.என்.ஜி.சி) - 71 (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்).

அடுத்ததாக இதில் எத்தனை கிணறுகளுக்கு #தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் #அனுமதி அளித்துள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு,"0'' என்பது பதில். அதாவது, இன்று தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்  ஓ. என்.ஜி.சியின் ஒரு எண்ணெய்க் கிணற்றுக்குக்கூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் #அனுமதி_கிடையாது. சட்டப்படி, ஓ.என்.ஜி.சி தமிழகத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இவர்களுக்கு எதிராகப் போராடியதற்காகத்தான் 'சட்ட விரோதமாக' செயல்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவியது காவல் துறை.

#நம்_விவசாயம்_அழிக்கப்பட்ட_அழிக்கப்படும்_கதை:

ஒருகாலத்தில் செழிப்பான விவசாய பூமியாகத் திகழ்ந்த நரிமணம் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ? வாழ வழி இல்லாத பொட்டல் காடாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு செயல்பட்டுவரும் கச்சா எண்ணெய்- இயற்கை எரிவாயு கிணறுகளாலும் சுத்திகரிப்பு நிலையத்தாலும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் இங்கிருந்து எண்ணெய்க் கிணறுகளையும் சுத்திகரிப்பு நிலையத்தையும் வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி கடந்த சில ஆண்டுகளாக அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில்தான் வெந்தபுண்ணில் நெருப்பு வைக்கும் விதமாக, நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்கம் செய்ய 600 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.

24 ஆயிரத்து 460 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரும் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக 600 ஏக்கர் பரப்பளவில் இந்த விரிவாக்கம் நடைபெறவுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தத் தகவல் நரிமணம் மற்றும் இதன் சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரதராஜன் - நரிமணம்‘இந்த விரிவாகத்திற்கு விவசாயிகள் தங்களது நிலங்களைத் தர மாட்டார்கள் என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். தண்ணீர் கிடைக்காமல்  விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதனால்தான் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரில் 14.75 டி.எம்.சி தண்ணீரை உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. நரிமணத்தில் இருப்பது இறுதிக்கட்ட  சுத்திகரிப்பு நிலையம். இது விரிவாக்கம் செய்யப்பட்டால், காவிரி டெல்டா மாவட்டங்களின் மற்ற பகுதிகளில் ஏராளமான எண்ணிக்கையில் ஆரம்பநிலை சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாவதற்கான ஆபத்துகளும் காத்திருக்கிறது. திருவாரூர் மாவட்டம் வெள்ளைக்குடி, கமலாபுரம் போன்ற பகுதிகளில் இதுபோல் ஏற்கெனவே உள்ளன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உயிரினங்கள் இங்கு வாழவே முடியாத நிலை உருவாகிவிடும். கடைசி உயிர் இருக்கும் வரை இதனை எதிர்த்து போராடிக்கொண்டே இருப்போம்” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த வரதராஜன்.

தங்களது விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் நரிமணப் பகுதி மக்கள். மேற்கு வங்கம் மாநிலம் சீங்கூர், நந்திகிராம் ஆகிய பகுதிகளில் நடந்ததுபோல், இங்கு அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்தாலும் உயிரைக் கொடுத்தாவது நிலங்களை காப்பாற்றிவிட வேண்டும். எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற மன உறுதியுடன் வீரியமிக்க போராட்டங்களை நடத்த இப்பகுதி மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். ஏன் இவர்கள் இந்தளவுக்குப் பதறுகிறார்கள் ?

இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய்-எரிவாயு கிணறுகளால் நிலத்தடிநீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. நிலத்தடி நீரில் ரசாயனத்தன்மை கலந்துவிட்டதாகவும் ஆதங்கப்படுகிறார்கள் இங்குள்ள மக்கள். விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏராளமான குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டன. தேவையற்ற வாயுக்கள் எரிக்கப்படுவதால் காற்றும் நஞ்சாகி, சுவாச நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதய நோய்கள், தோல் வியாதிகளும் ஏற்படுவதாகக் கவலை தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

மழைக்காலங்களில் ரசாயன கழிவுகள், நீர்நிலைகளிலும் விவசாய நிலங்களிலும் கலப்பதால், வெப்பம் அதிகமாகி அம்மை போன்ற உஷ்ணகால நோய்கள் உருவாகுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் கமலாபுரம், வெள்ளக்குடி போன்ற பகுதிகளில் இதுபோன்ற பாதிப்புகள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உடல்களில் ஆறாத புண்கள் உருவாகி உயிரைக் குடித்துள்ளது. அம்மை நோய்க்கு பல குழந்தைகளும் பலியாகியுள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு கசிவினால் விளைநிலங்கள் மலடாக மாறுவதோடு உயிரிழப்புகளும் நேர்கின்றன.   பாரதிச் செல்வன் - நரிமணம்

''நரிமணம் நிலையத்தில் தற்பொழுது 1 கோடி டன் அளவுக்கு எண்ணெய்ச் செயல்பாடு நடைபெறுகிறது. இதை 10 கோடி டன்னாக உயர்த்துவதற்காகத்தான் புதிய விரிவாக்கம் நடைபெற உள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில்  நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகள் புதிதாக உருவாக்கப்படும். புதிய விரிவாக்கத்தினால் காவிரி  டெல்டா மக்கள் கடுமையான பாதிப்புகளைகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன்  

புதிய விரிவாக்கத்தினால் 600 ஏக்கர் நிலத்தில் நடைபெற வேண்டிய உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இதன் பக்க விளைவாகப் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கட்டாந்தாரையாக மாறக்கூடிய அபாயமும் காத்திருக்கிறது. இந்த விரிவாக்கத்தினால் சுற்றுவட்டார விவசாய நிலங்களின் நீர்வழிப்பாதை தடைப்படும். விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் சொந்தமான விவசாயிகள் மட்டுமல்லாது, இவைகளின் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் எதிர்காலமும் இருண்டுபோகும்.

#நரிமணம் எண்ணெய்- சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று சொன்னால், கண்டிப்பாக பல நூறு எண்ணெய்க் கிணறுகள் புதிதாக உருவாக்கப்படும்.

ஒரு கிணறு அமைக்க குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இதன் சுற்றுவட்டார நிலத்தடி நீர் மற்றும் நீர்வழிப் பாதைகளும் பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், புதிய விரிவாக்க திட்டத்தினால் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது விரிவாக்கத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என உருக்கமாக சூளுரைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

இப்படிக்கு உங்கள் நண்பன்

HariBrothers'HARI

வாழ்க தமிழ் தமிழர்!!!