சனி, 26 செப்டம்பர், 2020

தேவர் மண்மீட்பு ஆதரவு

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 12 நவ., 2018, பிற்பகல் 2:41
பெறுநர்: எனக்கு
"எல்லைப் போராட்டமும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் "
தமிழ் நாட்டில் எல்லைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற போது பசும்பொன் தேவர் அவர்கள் அப்போராட்டத்தை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் ம. பொ. சி.அவர்களின் அழைப்பை ஏற்று மாநாட்டிலும் பங்கு கொண்டு உரையாற்றினார். (7-6-1956)
"தமிழ் நாடு - தமிழுக்கும் தமிழ் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்தே அலைகழிக்கப்பட்டு வருகிறது. அந்த அலைக்கழிவு, முடிவில் 'தமிழ் மாகாண'மென்று கூடச் சொல்ல இயலாது - 'எஞ்சிய சென்னை' என்பதன் பெயராலேயே இழிவான முறையில் தமிழ் மாகாணத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சரித்திரச் சான்றான திருப்பதியையும் இழந்து நிற்கிறது. இந்நிலையில், சென்னையையொட்டி, ஜனத் தொகையிலும் சர்வ முறையிலும் தமிழ்நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து நிற்கிறது. இதற்கென ஒரு போராட்டம் வர வேண்டிய அளவுக்கு காங்கிரசின் மந்தப் புத்தி,காலத்தை வீணாக்கிப் போராட்டம் வந்த பிறகும், ஆங்கிலேயன் முறையைப் பின்பற்றி அடக்கு முறையைக் கையாள நினக்கிறதே தவிர அறிவு வந்ததாக இல்லை – மந்திரி சபைக்கு! அறிவு வராது. ஏனென்றால்,காங்கிரசில் கை தூக்கிகள் மலிந்து விட்டதாலும், மானத்தை விட பதவியும் பணமும் பெரியதெனக் கருதுகிற நபர்கள் அதை ஒட்டிக் கொண்டிருப்பதாலுமே!
எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரி சபை வழக்கம் போல் அசட்டுத் தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிபார்க்க நேரும். அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ் நாட்டில் தயாரிக்கும். அப்பொழுது, மந்திரி சபை மிகப் பெரிய – வேண்டாத பொறுப்புகளுக்கு இலக்காகி மரியாதையையும் பதவியையும் ஒருங்கே கைவிட வேண்டி வரும். எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால் நல்லது என்று மீண்டும் கேட்டுக் கொண்டு, தமிழ் எல்லைப் போராடத்திற்கு ஆசி கூறுகிறேன். சிறை செல்லும் தியாகிகளுக்கு என் வணக்கம் உரித்தாகுக! போராட்டம் நீடித்தால் உங்களோடு பங்கு கொள்ளும் காலமும் சமீபிக்கும்.”
ம.பொ.சி. அழைப்பை ஏற்று, பசும்பொன் தேவர் அவர்கள் குமரி முனையில் நடைபெற்ற தமிழரசுக் கழக மாநாட்டில் கலந்து கொண்டு சிம்ம கர்ஜனை செய்தார். “ தமிழரசு காணவும்,தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும், தமிழை அரசு மொழியாக்கவும் பாடுபடுவதற்காக சரியான நேரத்தில் தமிழரசு கழகம் முன் வந்திருக்கிறது. அதனாற்றான் என் மதிப்பிற்குரிய ம.பொ.சி. அவர்களின் அழைப்பை ஏற்று இந்த மேடையில் நான் பேச முடிகிறது” என்ற முன்னுரையுடன் தமது சொற்பொழிவைத் தொடங்கினார். “ உண்மையில் எவருக்கும் தலைவணங்காத மாவீரரான பசும்பொன் தேவர் அவர்கள் எனது அழைப்பை ஏற்று தமிழரசு கழக மேடையில் நின்று சொற்பொழிவாற்றியது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது” என ம.பொ.சி.குறிப்பிட்டார்.
தெற்கெல்லை மீட்பு பற்றி பசும்பொன் தேவரின் நிலைப்பாடு :
"தமிழ்ப் பகுதிகளை அபகரிக்க நினைக்கும் கேரள அமைச்சருக்கு எச்சரிக்கை!
தமிழர்களை உரண்டை இழுக்க வேண்டாம்; உள்ள பயனும் தேய்ந்து விடும்."தமிழ் நாட்டின் ஒட்டுக்கட்டில் மஞ்சள் குளிக்கும் தமிழ்ப் பிரதேசத்தின் அண்டை பிராந்தியத்தார், தமிழர்களின் விட்டுக் கொடுக்கும் சுபாவத்தை, பலவீனமென்று கருதி, அவர்களின் பிராந்தியங்களைப் பங்கிட்டுக் கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்த ஆசை நிறைவேற, தமிழர்கள் என்ன எழ முடியாத பெரு நோயாளிகளா? என்பதைப் பற்றி ஆசை வெறியேறிய அண்டைப் பகுதியார் ஆலோசிக்கவே இல்லை. உள்ளது போதாதென்று ஊதாரித்தனமாக, பிறர் உரிமைக்கு தூண்டில் போடும் குணம் தமிழர் சமுதாயத்திற்கு பழக்கமல்லாத ஒன்று. இதே மாதிரி, தமது உரிமை பலாத்கரிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நொண்டிக் குணமும் தமிழர்களுக்கு இல்லை. பலாத்கரிப்பு முற்றி, நிலைமையில் கலசல் நேருமானால், அப்புறம் எதிர்ப்பு அரோகராவாகிவிடும். இதை அண்டைப் பிராந்தியத்தார் உணந்ததாகத் தெரியவில்லை. உணர வேண்டும். அப்பொழுதுதான் உள்ள உடைமையாவது தங்கும் என்பதே எம் எச்சரிக்கை .
சமீபத்தில் ஆல்வாய் என்ற ஊரில் நடந்த ஐக்ய கேரள மகாநாட்டில் தலைமை வகித்த திரு. கேளப்பன், தமது ஐக்ய கேரள கோரிக்கையை வற்புறுத்தியதோடு நில்லாமல், நீலகிரியையும், தென்திருவிதாங்க
ூர் தமிழர் தாலுகாக்களையும் ஐக்ய கேரளத்திற்குள் அடக்க வேண்டுமென்ற ஆசையையும் சேர்த்து வற்புறுத்தியிருக்கிறார்.
....... ........................................... ........
ஐக்ய கேரள அமைப்புக்கு அமைப்புக்கு ஆசைப்பட ஸ்ரீகேளப்பனுக்கு உள்ள உரிமையை விட, தமிழ்ப் பிராந்தியங்கள் தமிழ் நாடோடு சேர வேண்டுமென்ற கோரிக்கை கீழ்ப்பட்டதல்ல. ஐக்ய கேரளம் அமைந்தாலும் அமையாவிட்டாலும், தமிழர் பிராந்தியங்கள் தமிழ் நாட்டோடு சேர்க்கப்படுவது நிச்சயம். வீணில் தமிழர்களை உரண்டை இழுத்து, கெளரவத்தையும், பரஸ்பர உதவிகளையும் பறிகொடுத்து விட்டு பரிதவிக்க வேண்டாம்.
அன்றல்ல - இன்றல்ல - என்றுமே, கேரள வாசிகள், தமிழகத்தின் ஆதரவில்லாமல் வாழ்ந்ததில்லை - வாழவில்லை - வாழப்போவது மில்லை.
13 - 2 - 49 , நேதாஜி வார ஏடு
தோழமையுடன்
இரா. மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060
10 நவம்பர், PM 6:49 · Facebook

முத்துராமலிங்கனார் முத்துராமலிங்கத் தேவர் எல்லை 1956 இனப்பற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக