சனி, 26 செப்டம்பர், 2020

பாரதியார் புராணம் வேதம் கற்பனை என பகுத்தறிவு

 

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 23 அக்., 2018, பிற்பகல் 2:20
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
#சமஸ்கிருத வேதங்களை பொய் என்று தனது இறுதிக் காலத்தில் பாடிய பாரதியார்
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றி
ல்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக