சனி, 26 செப்டம்பர், 2020

நாடார் சாணார் வேறுபாடு வரலாறு நாயக்கர் வீழ்த்தினர் கேரளா தஞ்சம் ஆனந்தபத்ம சதி பனை கருப்பட்டி வணிகம் சங்கம் கல்வி திராவிட ஆதரவு காமராசர்

 

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 23 அக்., 2018, முற்பகல் 9:26
பெறுநர்: எனக்கு
நாடார்களைப் பற்றிச் சில…..1
காமராசர் பற்றிய என் கருத்துகளுக்கு மறுப்பாக என்னென்னவோ கூறி சப்புக்கட்டுகிறார்கள் நண்பர்கள். அவர்களுக்கு நாடார்களின் வரலாறு பற்றிச் சுருக்கமாகக் கூறலாம் என்று நினைக்கிறேன். நாடார் என்று “ர்” விகுதியோடு முடியும் சாதிப்பட்டம் 20ஆம் நூற்றாண்டில்தான் உருவானது. அதுவரை நாடான் என்றுதான் அறியப்பட்டது. ஆனால் அப்பட்டமே உண்மையில் ஊர்த் தலைவர்களுக்கு உரியது. ஊர்த் தலைவர்களில் ஏழ்மை எய்தியவர்கள் சாணார்களில் பணக்காரர்களோடு மணவுறவுகளை மேற்கொள்ளும் நடைமுறை விரிவடைந்த பொது அவர்கள் அந்தப் பட்டத்தைக் கைக்கொண்டு தொடங்கி வைக்க பிறரும் அதைக் கையாண்டனர்.
உண்மையில் இந்த நாடான்கள் யார்? பாண்டிய நாடு இன்றைய மாவட்டங்களைப் போல் நாடுகளாக ஆட்சி வசதி கருதி பிரிக்கப்பட்டிர
ுந்தன. அதன் ஆட்சி அதிகாரிகள்தாம் நாடான்கள் ஆகும் (சோழ நாட்டில் நாட்டார் என்றனர்). பாண்டிய நாட்டை நாயக்கர்கள் கைப்பற்றும் முன்னர் பாண்டிய நாட்டு அரச குலத்தில் உடன்பிறந்தார்களுக்குள் அரசுரிமைப் போட்டிகளால் துருக்கர்களை அழைத்து அதன் மூலம் பெரும் சிரழிவுகள் நடந்த காலத்தில் இந்த நாடான்கள் பெரும் ஆட்டங்கள் போட்டார்கள். உழுதொழிலாளிகளாக இருந்த வெள்ளாளப் பெண்களிடம் மிக இழிவாக நடந்துகொண்டதாக இரு நாடான்களுக்கு மரண தண்டனை அறிவித்து கேரள மன்னன் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி போன்ற இரு இடங்களில் பொறித்துள்ள கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. இந்தப் பின்னணியில்தான் நாயக்கர் ஆட்சியை நிலைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரியநாதபிள்ளை என்ற வெள்ளாளன் நாயக்கர்கள், மறவர்கள், கள்ளர்கள் துணையுடன் நாடான்களை வென்று அவர்களை அகற்றி நாடுகள் என்ற ஆட்சிப் பரப்புகளை ஒழித்து பாளையங்கள் என்ற 72 புது ஆட்சிப் பரப்புகளை அமைத்தான். நாடுகள் எத்தனை இருந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மறவர்களும் கள்ளர்களும் அரியநாதபிள்ளையோடு கைகோத்ததற்கு வழிப்பறியாளர்கள
ான அவர்களுக்கும் ஆட்சி அதிகாரிகளுக்கும் இருந்த வழிவழியான முரண்பாடே காரணம்.
புதிதாக உருவாக்கப்பட்ட பாளையங்களில் 34 வரை மறவர் பாளையங்கள் என்று ஒரு பட்டியல் உள்ளது. சண்டையின் நடுவில் கட்சி மாறிய முன்னாள் நாடான்கள் சிலரும் இப்பட்டியலில் இருக்க வாய்ப்புள்ளது.
நாடுகள் ஒழிக்கப்பட்ட போது அங்கிருந்த ஆகமக் கோயில்களில் அரசனும் நாடானும் நுழைவதற்கு என்று ஒதுக்கப்பட்ட மேற்கு வாயில்கள் நிலையாக அடைக்கப்பட்டன.
அரியநாதனின் படையெடுப்புகள் நடந்துகொண்டிருந்த போது பாளேயங்கோட்டைக்கும் கல்லிடைக்குறிச்சிக்கும் தெற்கில் உள்ள பகுதிகள் கேரள அரசன் கைப்பற்றில் இருந்தன. அதனால் அங்கெல்லாம் நாடுகளும் நாடான்களும் தொடர்ந்தனர். எனவே அரியநாதனிடம் தோற்று ஆனால் எதிரியிடம் பணியாத நாடான்களும் அவர்களோடு இருந்த படைவீரர்களும் இந்தப் பகுதிகளில் அதாவது கீழைக் கடற்கரையிலிருந்து குமரி மாவட்டத்தில் இராசாக்கமங்கலம் பண்டையாறாகிய பன்றி வாய்க்கால் வரை குடியேறினர். இவர்களோடு ஏற்கனவே துருக்கர், பின்னர் ஐரோப்பியர் என்று தொடர்ந்து வீசிய புயற்காற்றுகளால் இந்த மூலையில் ஒதுங்கிய போர் வீரர்களும் வீரரல்லாதோரும் இப்பகுதியில் குடியமர்ந்தனர். வாய்க்காலுக்கு மேற்கே இருப்பவர்கள் கி,மு,1700இல் இலங்கைக்கும் தமிழகத்தில் இடையில் கடல் புகுந்த போது அங்கு வாழ்ந்த நற(ள)வர்களோடு தொடர்புடையவர்கள். கிழக்கில் புதிய கடற்கரையிலிருந்
து காற்று கொண்டு வீசிய மணலால் பெரும்பகுதியினர் வடக்கு நோக்கி நகர்ந்து சோழ நாடுவரை பரந்தனர். இன்றும் வாய்க்காலுக்கு மேற்கிலிருப்போரும் குமரி மாவட்ட மீனவர்களும் ஈழத் தமிழர்களின் பேச்சுவழக்கையே (தெனாலி கமலகாசன் பேச்சு) கொண்டுள்ளனர் என்பது ஒரு சான்று.
குமரி மாவட்டம் வளமான மண்ணைக் கொண்டதாயினும் மணல் மூடிக் கிடந்ததாலும் ஆறுகளோ வாய்க்கால்களோ குளங்களோ பரவலாக இல்லாததாலும் பனை, மா, பலா, புன்னை போன்ற மரங்களும் தாராளமாகப் பெய்த இரு பருவ மழைகளால் ஆண்டுக்கு இரு முறை பயிறு, காணம், உளுந்து போன்ற தோட்டப் பயிர்களும் விளைந்தன.
நெல்லை மாவட்டத்தின் கதை முற்றிலும் வேறானது. சிப்பிப் படிவுகள் பாறையாகிவிட்ட அடித்தளத்தின் மீது கடற்கரையிலிருந்
து காற்று சுமந்து வந்த மணல் படிந்து தேரி என்ற நிலப்பரப்பை உருவாக்கியிருந்தது. இந்த மணலில் தாராளமாக வளர்ந்திருந்த பனைகள்தான் ஒரே வளம். இங்கு வடக்கு நோக்கிப் பெயர்ந்தவர் தவிர ஆங்காங்கே தங்கியிருந்தோரி
டையில் நாங்களும் பனையேறிகள்தாம் என்று வந்தேறிகள் குடியேறினர். ஒவ்வொரு குடியிருப்பும் விரிவடைந்த போது தங்களில் மூத்தோரை அல்லது வலியோரை ஊர் நாடானாக்கிக் கொண்டனர். உண்மையான மரபுவழி நாடான்கள் காயாமொழி ஆதித்தன் குடும்பம் போன்ற ஒன்றிரண்டுதான்.
இந்தக் காலகட்டத்தில் குமரி மாவட்டம் தவிர்த்த பிற பகுதிகள் நாயக்கர் ஆளுமையினுள் வந்தன. இப்போது நாடுகளை அழிக்காமல் நாடான்கள் மீது மிகக் கடுமையான வரிகளை விதித்தனர். அதனைச் செலுத்துவதற்காக பனையேறிகளைக் கசக்கிப் பிழிந்தனர். ஓர் எல்லைக்கு அப்பால் வேறு வழியில்லாமல் பனையேறிகளுக்கு நிலங்களை விற்றனர். அதுவே பனையேறிச் சாணைர்களுக்கு ஒரு பொருளியல் அடிப்படையை உருவாக்க உதவியது. பிறர் பனையை ஏறும் பனையேறிக்கு ஒன்றுவிட்டொரு நாள் பதனீர் உரிமையுண்டு. சொந்தப் பனையில் ஒவ்வொரு நாளும் பதனீர் கிடைக்கும். எனவே அவர்கள் நாடான்களின் ஆதிக்கத்திலிருந்து அகலும் வாய்ப்பு ஏற்பட்டது.
கருப்புக்கட்டி எனும் பனைவெல்லம் உட்பட்ட பனை சார்ந்த பொருட்கள் தவிர பிற வளங்கள் அருகியே அந்தத் தேரிக்காட்டில் கிடைத்ததால் பனைபடு பொருட்களை விற்று தமக்கு வேண்டியவற்றை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக இடையிலிருந்த வழிப்பறியாளர்கள
ாகிய மறவர்களைத் தாண்டியாக வேண்டும். எனவே நூற்றுக்கணக்கான வண்டிகள் கொண்ட சாத்துகளாகப் புறப்பட்டனர். வழியில் இளைப்பாற திருநெல்வேலி சிந்துபூந்துறை, கோயில்பட்டி, சாத்தூர், விருதுப்பட்டி(இப்போது விருதுநகர் – இந்தப் பெயர் மாற்றத்தையும் இவர்கள்தாம் செய்தனர்), சிவகாசி, இராசபாளையம், தேனி, அருப்புக்கோட்டை, கமுதி போன்ற ஊர்களில் வண்டிப் பேட்டைகளை அமைத்தனர். அங்கு மாட்டுக்குத் தீவனம், வண்டியோட்டிகளுக்கு உணவு உறைவிட வசதிகளைச் செய்து பராமரிப்பதற்கு தண்டப்பட்ட மகமை பெருகியது. அதிலிருந்து இந்த வாணிகர்கள் பெற்ற கடன்களின் வட்டியும் சேர்ந்து உருவான பணத்திரட்சி அந்நடுவங்களில் இவர்கள் சரக்கு மண்டிகளும் சில்லரைக் கடைகளுமாக மேன்மேலும் வளர்ச்சி பெற்றனர்.
இப்போது இவர்கள் அந்த ஊர்களில் வெள்ளாளர் போன்ற மேற்சாதியினரின் கட்டுப்பாட்டிலி
ருந்த ஆகமக் கோயில்களில் வழிபட விரும்பினர். இதை மேற்சாதியினர் எதிர்த்தனர். இது ஒரு மோதலாகி வெள்ளாளர்களின் அடியாட்களாகச் செயற்பட்ட மறவர்களுக்கும் நாடான்களுக்கும் போர்களே நடந்தன. இதில் நாடான்கள் வென்று மறவர்கள், வெள்ளாளர்கள், நாயக்கர்கள் நடுவில் இன்றும் தங்கள் பொருளியல் நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர்ந்து படிக்க.....
பதிவு Kumarimainthan ஐயா.

Kumarimainthan
நாடார்களைப் பற்றிச் சில…..2
ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் போராட்டங்களிலும் போர்களிலும் இன்னார் என்று சுட்டிக்காட்ட ஒரு தலைவரோ வழிகாட்டியோ நம் கவனத்துக்கு வரவில்லை. அனைவரும் ஒரே மனத்துடனும் குறிக்கோளுடனும் இணைந்து போற்றத்தகுந்த ஒற்றுமையுடன் செயற்பட்டுள்ளனர். தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் இவர்கள் உருவாக்கிய பள்ளிகளை நடத்துவதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பிடி(படியல்ல, கைப்பிடி) அரிசியைத் திரட்டி வெற்றிகரமாகச் செயற்படுத்தியுள்ளனர். வீட்டுப் பெண்கள் உட்பட அனைவரும் ஒத்துழைத்திருந்தால்தான் இத்தகைய திட்டங்கள் வெற்றிபெற முடியும். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி மடம் சந்திரசேகரேந்திர சரசுவதி என்ற சங்கராச்சாரியார் பார்ப்பன்ர்களுக
்காகத் தான் வகுத்த ஒரு திட்டத்துக்காக இந்தப் பிடியரிசித் திட்டத்தை அறிவித்து அது நடைமுறைக்கே வரவில்லை என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறிப்பிடத்தக்க தலைமை எதுவும் இல்லாத ஒரு சூழலில் அன்றைய நாடார்கள் இணைந்து செயற்பட அடிப்படையாக இருந்த ஒற்றுமை உண்ர்வை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தென் மாவட்டங்களுக்கு வெளியே நெடுஞ்சாலைகளின் நெடுகிலும் ஓரங்களில் ஊட்டல்களும் கடைகளும் வைத்ததுமின்றி தொலைவிலுள்ள நடுத்தர ஊர்களிலும் குடும்பத்தோடு பெயர்ந்து மளிகைக் கடைகள் தொடங்கி ஊரிலிலுந்து சிறுவர்களை வரவழைத்துப் பயிற்றுவித்து சிற்றூர்களில் கடைகள் வைத்துக்கொடுத்து தாங்கள் மொத்த வாணிகத்தில் வளர்ந்தனர்.
நாம் மேலே பட்டியலிட்ட ஊர்களில் வாணிகம் என்ற எல்லையிலிருந்து தொழில் நிறுவனங்களிலும் முதலிட்டு வளர்ந்தனர். நெல்லை மாவட்டத்தில் இடையன்குடி போன்ற இடங்களில் இருந்த சதுப்பு நிலக் காடுகளை முறைக்காய்ச்சலை
(மலேரியா)ப் பரப்புகின்றன என்று வெள்ளையர் தூர்த்த இடங்களில் பருத்தி விளைத்து ஏற்றுமதி செய்து கப்பல் வாணிகத்திலும் ஈடுபட்டுள்ளனர். வ.உ.சி.யாரின் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இவர்கள் செயற்பட்டதாக அவரது வரலாறு கூறுகிறது. இந்தப் பின்னணியில்தான் அடுத்த கட்ட திட்டமிட்ட வளர்ச்சி வேண்டுமென்று போறையாறு இரத்தினசாமி நாடாரின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டதுதான் நாடார் மகாசன சங்கம்.
(இரத்தினசாமி நாடார் மாபெரும் சாராய ஆலை முதலாளி. வெள்ளையர்களிடையில் செல்வாக்குடையவர். மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே தொடர்வண்டிப் பாதை அமைக்கும் ஒப்பந்தம் எடுத்து பணி நடந்துகொண்டிருந்த போது இயற்கை எய்தியவர். அந்த தொடர்வண்டி ஓட்டம் தொடக்க விழாவில் அவரது உருவப் படத்தை தொடர்வண்டி முகப்பில் மாட்டி ஓட்டினர் என்பது சிறப்பு.
நான் 1962 – 63 காலகட்டத்தில் இந்தத் தொடர்வண்டித் தடத்தில் இருக்கும் செம்பொன்னார்கோயிலில் இந்தத் தடத்தை ஒட்டியிருந்த ஒரு வீட்டில் குடியிருந்தேன். அப்போதெல்லாம் அரசுப் பேருந்துகள் கிடையா. அந்தத் தடத்தில் ஓடிய பேருந்து முதலாளிகளின் முயற்சியால் காலை 8 மணிக்கு மயிலாடுதுறை நோக்கியும் மாலை 5 மணிக்கு தரங்கம்பாடிக்கும் மக்கள் தொங்கிக்கொண்டு வழிய வழிய ஓடிய தொடர் வண்டியை காலை 8 மணிக்கு தரங்கம்பாடி நோக்கியும் மாலை 5 மணிக்கு மயிலாடுதுறை நோக்கியும் வெற்று வண்டிகளாக ஒடவிட்டு செல்வோர் இல்லை என்று அந்தத் தடத்தையே அழித்துவிட்டனர் என்பதை இடைக்குறிப்பாகக் கூறுகிறேன். அகலப் பாதை போடுகிறேன் என்று மதுரை – போடி தடத்தை முடக்கியதை விடக் கொடியது இது.)
நாடார்களின் திட்டமிட்ட ஒருங்கிணைந்த தொழில் – வாணிக வளர்ச்சிக்காக இச்சங்கம் அமைக்கப்பட்டது. சங்கம் அரசியலிலும் ஈடுபட்டது. புதிதாக உருவாகிய நயன்மைக் கட்சியில் கூட்டணி சேர்ந்தார்கள். அவர்கள் அமைத்த முதல் சட்டமன்றத்தில் இரு ச.ம.உ.க்கள் இருந்தனர். நாடார்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தனர். அதில் பட்டிவீரன்பட்டி உ.பு.அ.சவுந்திர
பாண்டியனார் பங்கு முதன்மையானது. இவர்தான் நாடார்களின் தலைவர் என்ற வகையில் முதன்முதலாக அறியப்பட்டவர் என்பது எனது கணிப்பு. நாடார்களை பிற்பட்டோர் சாதிப் பட்டியலிலிருந்த
ு முற்பட்டோர் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்ற வேண்டுகை வைத்தவர் இவரே.
மகாசனம் என்றொரு மாத இதழைத் தொடங்கினர். தொழில்கள் தொடங்குவது பற்றி அரசு பிறப்பிக்கும் ஆணைகள், அரசு வழங்கும் சலுகைகள் போன்ற செய்திகளை இதழ்கள் தாங்கிவந்தன. அந்தச் செய்திகளைப் பயன்படுத்தி சங்கத்தின் உதவியுடன் எந்தக் கட்சி ஆட்சியிலுருந்தாலும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து அச்சலுகைகளைப் பயன்படுத்திக்கொ
ண்டார்கள்.
1921இல் உருவாக்கப்பட்டது நாடார் வங்கி. (தூத்துக்குடியைத் தலைமையகமாகப் பதிவுசெய்யப்பட்ட இந்த வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை சிவகாசிக்காரர்களே வைத்திருந்தனர். எனவே அவர்களின் ஆதிக்கம்தான் சங்கத்தில் இருந்தது. பங்குகள் கைமாறாமலே இருந்ததனால் அதன் சந்தை மதிப்பு எவருக்கும் தெரியாமலிருந்தது. இதனால் பனியாக்களதாகிய எச்சார் நிறுவனத்தினர் எவருக்கும் தெரியாமல் கமுக்கமாக 3000 கோடி மதிப்புள்ள வங்கியின் பங்குகளை 300 கோடியில் பெற்றுவிட்டனர். செய்தி வெளியானதும் சாதியினரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள முடியாமல் பனியா திருப்பித் தர வேண்டியதாயிற்று. இன்று இந்த வங்கி தமிழ்நாடு மெர்க்கன்றைல் வங்கி என்ற பெயரில் இயங்கி வருகிறது.)
இந்த வரலாற்றை நயன்மைக் கட்சியுடன் நாடார் மகாசனம் கூட்டு வைத்த இடத்திலிருந்து மீண்டும் தொடர்வோம்.
நயன்மைக் கட்சி தேர்தலில் தோல்வியுற்றதும் அதனை பேரவைக் கட்சியிலிருந்து வெளியேறி இருந்த பெரியாரிடம் ஒப்படைத்தனர். அதோடு பாண்டியனாரும் இங்கு வந்தார். இப்போது இராசாசி என்ற தனி மனிதரோடுள்ள தனிப்பட்ட போட்டியைப் பார்ப்பனர் எதிர்ப்பாகவும், சாதிய எதிர்ப்பாகவும் ஊதிப் பெருக்கிய பெரியாரை நம்பி அவரது இயக்கத்தைத் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் பரப்ப உதவினார் பாண்டியனார். தூத்துக்குடியிலிருந்து திரட்டிய வீரமிக்க ஓர் இளைஞர் படையின் துணையுடன் அந்தந்த வட்டாரங்களில் இருந்த நாடார்களையும் பிற முற்போக்கினரையும் துணை சேர்த்துக்கொண்டு பெரியாரின் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்வதற்காக சாதி வெறியினரும் பிற்போக்கு விசைகளும் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து தன்மான இயக்கம் தமிழகத்தின் பட்ட்தொட்டி மூலை முடுக்கு எங்கும் வேர்கொள்ள வைத்தார். அச்சம் தவிர்த்த அண்ணல் என்ற பட்டத்துக்கும் உரியவரானார். இதற்காக பெரியார் பாண்டியனாருக்கு இயக்கத் தலைவருக்கு நிகரான மதிப்பு அளித்தார். அனைத்தும் முடிந்த பின் அவரையும் அவருடன் நயன்மைக் கட்சியிலிருந்து வந்தவர்களான கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம் பிள்ளை போன்றவர்களை வெளியேற்றத் திட்டமிட்டார் பெரியார். தன்மான இயக்கத்துக்கு தமிழர் கழகம் என்ற பெயர் வைப்பதாக சேலத்தில் நடந்த மாநாட்டின் முதல்நாள் முடிவு செய்த நிலையில் இரவில் அண்ணாத்துரை முதலியவர்களொடு சேர்ந்து திராவிடர் கழகம் என்று பெயர் வைப்பது என்று கமுக்கமாக முடிவு செய்து மாநாட்டு முடிவில் அண்ணாத்துரையைக் கொண்டு தீர்மானத்தைப் படிக்க வைத்து நிறைவேற்றினார். வெறுப்புற்ற பாண்டியனார் வெளியேறினார். 1953இல் அவர் இறந்த போது அண்ணாத்துரையின் திராவிட நாடு இதழில் வெளிவந்த செய்திகளிலிருந்
துதான் என் போன்ற அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஒரு தலைவருக்கு திராவிட இயக்கத்தின் தொடக்க கால வளர்ச்சியில் முதன்மைப் பங்கு இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து படிக்க.....
20 அக்டோபர், PM 6:56

Kumarimainthan
நாடார்களைப் பற்றிச் சில…..3
பாண்டியனாருக்கு குமுக மேம்பாட்டு ஈடுபாட்டுக்கு இணையாக தொழில் – வாணிகம், வேளாண்மை, தொழில்நுட்பங்களில் நல்ல ஈடுபாடு உண்டு. கரும்பு வேளாண்மையில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார். சர். பி.டி. இராசன் அவர்களோடு இணைந்து அவர் உருவாக்கிய பாண்டியராசபுரம்(திண்டுக்கல் மாவட்டம்) சர்க்கரை ஆலையும் அதனைச் சார்ந்த கரும்புத் தோட்டங்களும் இன்றும் அவர்கள் பெயர்களை அவ்வூரின் பெயராகத் தாங்கி நிற்கின்றன.(சென்னை பாண்டி பசார் என்ற கடைத்தெரு அவர் பெயரால் ஆனதுதான்). ஆனால் அவர் இத்திறமைகளில் தன் ஆற்றலைச் செலவிடுவதை விட தன் சாதி மக்களின் தன்மானத்தை மீட்பதையே விரும்பினார்.
காந்தியின் கோளுடையார்(சம்பந்தி என்ற சொல்லுக்கு இணையாக குமரி மாவட்டத்தில் வழங்கும் சொல். கொள்வினை கொடுப்பினை என்ற உறவு அடிப்படையில் உருவான சொல், கொள் → கோள்) இராசகோபாலாச்சார
ியாரின் மீதான வெறுப்பால் அவர் மட்டத்திலிருந்த தமிழகப் பேரவைக் கட்சியினரால் முன்னுக்குத் தள்ளப்பட்டதால் முன்னணிக்கு வந்த காமராசரை நாடார் மகாசன சங்கத் தலைவர்கள் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடத் தொடங்கினார். ஆனால் அவரது ஈடுபாடு தில்லிக்குச் செருப்பு தூக்குவதில்தான் இருந்தது. அவராக இவர்களுக்கு எதையும் செய்யவில்லை. அது கூட குற்றமல்ல, தில்லிக்காரன்களுக்காக தமிழகத்துக்கு அவர் செய்த அழிம்புகள் மன்னிக்கத்தக்கவை அல்ல. அதே நேரத்தில் கல்வியால் உயர்ந்த நாடார்களின் புதிய தலைமுறையினர் எதிர்பார்த்தது பொருளியல் வளர்ச்சியை அல்ல, அரசுப் பதவிகளை. அதனால் சாதி சார்ந்த ஒரு காட்சிப் பொருளாக காமராசரை மனதில் பதித்துக்கொண்டனர்.
நாடார்கள் தொடங்கிவைத்த கல்வி இயக்கம் அவர்களின் அடித்தளத்தையே அழிப்பதாக இன்று வளர்ந்து நிற்கிறது. பனியா இந்திய அரசு பல்வேறு தேசிய மக்களின் தொழில்முனைவுகளை வேரறுப்பதற்காக வருமான வரி தொடங்கி எண்ணற்ற இடர்ப்பாடுகளை உருவாக்கி வைத்துள்ளதால் காமராசருக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பணிகளுக்கும் பிற உடலுழைப்பில்லா குண்டி தேய்க்கும் வேலைகளுக்குமான படிப்பின் பக்கம் திருப்பிவிட்டனர். இந்த உண்மை 1990களின் தொடக்கத்தில் முல்லை முருகன் என்ற நணபரின்(அவர் நாடாரில்லை) உதவியுடன் நான் திருநெல்வேலியில் வருமான வலிக்கு எதிராக நடத்திய ஒரு கருத்தரங்கில் பங்குகொண்டவர்களில் பலரும் தங்கள் பிள்ளைகளை நாங்கள் வாணிகத்தில் ஈடுபடுத்த விரும்பவில்லை, பெரும் படிப்பு படித்து அரசு மற்றும் நிறுவன உயர் பதவிகளில் அமர்த்தவே விரும்புகிறோம் என்று கூறிய போது தெளிவாக வெளிப்பட்டது. இவர்களில் மிகப் பெரும்பாலோர் நாடார் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஏற்றாற்போல் நாடார் மகாசன சங்கத்தின் தலைவராக வந்த கங்காராம் துரைராசு என்பவர் நாடார்களை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிக்கு வலுச்சேர்ப்பதற்
காக சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஓரிலக்கமாக உயர்த்தக் களத்தில் இறங்கினார். கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் வாழும் சாணார் என்ற வகைப்பாட்டில் தொடரும் பனையேறும் வகுப்பினரை உறுப்பினராக்கும் ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கினார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சாணார் என்ற சாதிப்பெயர் தாழ்த்தப்பட்டோரின் பட்டியலில் இருக்கிறது என்பதாகும். அதனால் அவர் விரும்பிய ஒத்துழைப்பு அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. இதில் இன்னும் ஓர் உண்மை என்னவென்றால் 1970களின் கடைசியில் கூட இந்த மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு நாடார்களும் சாணார்களாக இருந்தவர்கள்தாம் என்பதே தெரியாது. 1976இல் நான் திருத்துறைப்பூண்டியில் பணியாற்றிய போது பொங்கலூர் என்ற ஈரோடு மாவட்டம் என்று நினைக்கிறேன் ஊரைச் சேர்ந்த பொதுப்பணித்துறை சரக்கி ஓட்டுநர், தங்கள் பகுதியில் சாணார் என்று ஒரு சாதியினர் இருப்பதாகவும் அவர்கள் சிக்கனத்தில் மிகச் சிறந்தவர்கள் என்றும் கூறினார். அப்போது நானும் அச்சாதி சார்ந்தவன்தானென்று கூற, அவர் நாடார்களைப் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் வேறு சாணார்கள் வேறு என்று கடைசி வரை ஒரே பிடிவாதமாக இருந்தார். பனையேறிகளாக இருந்து நாடார்களாக மாறிய நெல்லை, குமரி மாவட்ட மக்கள் உயர்ந்திருக்கிற மட்டத்துக்கு இது ஓர் அளவுகோல். அன்றைய நிலையில் உலகில் நாடார்கள் என்ற சாதி அடையாளத்துடன் வாழ்ந்தோரெல்லோரும் நெல்லை, குமரி மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களின் வழிவந்தவர்களாக இருப்பர் என்பதாகும். அவர்களுக்கு இன்றும் ஓர் உறுதியான அடையாளம் கருப்புக்கட்டி ஆகிய பனைவெல்லப் பயன்பாடு
தோடரும் முன் திருவிதாங்கூர்ச் சாணார்கள் எதிர்கொண்ட சிக்கல்களைப் பார்ப்போம். திருவிதாங்கூர்ச் சாணார்கள் மிகுந்த அரசியல் – குமுகியல் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு திரிவிக்கிரமன் தம்பி என்ற நாயர் குலப் பெருமகனார் பதிப்பித்துள்ள “மண்ணாப் பேடி புலப்பேடி” என்ற கதைப்பாடல் ஓர் அரிய சான்று. இப்பாடல் தெக்கன் மலையாளம் என்ற மொழியில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தச்சன் என்பவன் தேவநாகரி எழுத்துமுறையை அறிமுகம் செய்யும் முன் வழக்கில் இருந்த மொழிநடை. அதில் கா போன்ற வல்லெழுத்துகளுக்கு 4 தனித்தனி வரிவடிவங்கள் கிடையாது. “கணபதி” என்று வருமிடங்களில் பதிப்பாசிரியர் அடிக்குறிப்பாக இன்றைய மலையாளத்தில் ga ஒலியைக் குறிக்கும் ഗவைப் பயன்படுத்தி குறிப்பிட்டிருப்பார். இந்த நூல் தரும் ஒரு செய்தி ஒரு காலகட்டத்தில் நாயர் பெண்கள் இருட்டிய பின் வீட்டைவிட்டு வெளியே வந்தால் அவர்களை ஒரு பறையனோ வண்ணானோ தூக்கிச் சென்றுவிடலாம் என்ற நடைமுறை. அப்படி அவளை யாராவது துரத்தி வந்தால் அவள் ஒரு பனைமரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாலோ ஒரு சாணார் வீட்டினுள் நுழைந்துவிட்டால
ோ தொடமாட்டார்கள் என்பதாகும். இப்படிப்பட்ட உயர் நிலையிலிருந்த சாணர்கள் எப்படி இடைக்காலத்தில் கற்பனைக்கெட்டாத கொடுமைகளுக்கு உட்பட்டார்கள் என்று பார்த்தால் அதற்கு இரண்டு நாடான்கள்தாம் காரணம் என்பது தெரியும்.
இராமவர்மன் என்ற திருவிதாங்கூர் அரசன் சாகும் போது மக்கள் வழி மரபுப்படி தன் மக்களாகிய பப்புத் தம்பி, இராமன் தம்பி ஆகியோரில் ஒருவனை அரசுரிமைக்கு உரியவன் என்று அறிவித்தான். ஆனால் திருப்பாப்பூர் நாடான் அனந்தபத்மநாபன் என்பவன் தன் உறவினனும் இராமவர்மனின் உடன்பிறந்தாள் மகனுமான மார்த்தாண்டன் என்பவனை அரசனாக்க முயன்றான். இதற்காக பொற்றையடி நாடான் ஆகிய தாணுமாலயப்பெரும
ாள் என்பவனின் உதவியை நாடினான். (இந்த பொற்றையடி நாடான் பிற நாடான்களைப் போல் ஆட்சிப் பகுதியை ஆள்பவனல்லன். பஞ்ச பாண்டியர்களில் வள்ளியூரில் இருந்து ஆண்டு கன்னடனால் போரில் சிறைப்பட்டுத் தற்கொன்றுகொண்ட குலசேகர பாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்தவனின் வழிவந்தவன். தப்பியோடி திருவிதாங்கூர் எல்லைக்குள் வந்தவனுக்கு நாகர்கோயில் கன்னியாகுமரிச் சாலையின் மேற்கில் இருக்கும் பொற்றையடி என்ற ஊரின் பெயரில் நாடான் பட்டமும் நிலங்களும் வழங்கி அமர்த்தினான். இவன் குடும்பத்தினர் என்றுமே தமிழர்களுக்கோ தமிழ்நாட்டுக்கோ நாடார்களுக்கோ சார்பாக இருந்தவர்களில்லை. அந்த வழியில் வந்த தாணுலிங்கம் நாடார் திருவதாங்கூர் தமிழ்நாடு போராட்டத்தின் போது பலமுறை பக்கம் மாறி அந்தக் காலத்து மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் பெற்றவராவார். ஐவர் இராசாக்கள் கதை என்ற கதைப்பாடலில் குலசேகரனின் வீழ்ச்சி பற்றிய செய்திகள் உள்ளன.). அவன் ஒத்துக்கொண்டான். அடுத்து அங்கிருந்த 39 நாடான்களையும் திரட்டி தங்களுக்கு உதவ வேண்டுமென்று கேட்டான் அனந்தபத்மநாபன். அவர்களோ நடைமுறையிலிருக்கும் மக்கள்வழி அரசுரிமைக்கு மாறாக உதவ முடியாது என்று மறுத்துவிட்டனர். இறுதியில் பல தந்திரங்கள் சூழ்ச்சிகள் செய்து தம்பிமார்களைக் கொன்று மார்த்தாண்டனை அரியணையில் அமர்த்தினர் இந்த இரண்டு நாடான்களும். பதவியேற்றதும் முதல் வேலையாக தனக்கு உதவ மறுத்த நாடான்களின் அதிகாரங்களைப் பறித்து அந்தந்தப் பகுதிகளிலிருந்த பிற சாதியினருக்குக் கொடுத்தான். சாணார்களுக்கு எதிராக எங்கும் கேள்விப்பட்டிராத ஒடுக்குமுறைகளை விதித்தான். இடுப்புக்கு மேலும் முழங்காலுக்குக் கீழும் உடை உடுத்தக் கூடாது, இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது, வெண்கலம், இரும்புக் கலன்களைப் பயன்படுத்தக் கூடாது என்பவை எல்லாம் சில.
தொடர்ந்து படிக்க......
21 அக்டோபர், PM 6:45

1 கருத்து: