| செவ்., 13 நவ., 2018, பிற்பகல் 9:45 | |||
Balan Chandran
•இது என்ன நியாயம்?
இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் இலங்கை அரச படையினரால் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டனர். இதுவரை இதற்கு எந்த விசாரணையும் இல்லை. யாரும் தண்டிக்கப்படவும் இல்லை.
மன்னம்பெரி என்னும் சிங்கள யுவதி 1971ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின்போது கதிர்காமத்தில் சிங்கள அரச படையினரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆனால் இது விசாரணை செய்யப்பட்டு சில படையினர் தண்டிக்கப்பட்டனர். அது மட்டுமல்ல மன்னம்பெரி கொல்லப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்பு 13.11.1989 யன்று ஜே.வி.பி தலைவர் விஜயவீரா சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் உட்பட 60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் பயங்கரவாதிகள் என அரச படையினரால் கொல்லப்பட்டனர்.
விஜயவீரா கொல்லப்பட்டபோது அவர் மனைவியோ அல்லது அவரது ஆறு குழந்தைகளில் ஒருவர்கூட கொல்லப்படவில்லை. மாறாக அவர்கள் திருமலை கடற்படை தளத்தில் வைக்கப்பட்டு அரசால் பராமரிக்கப்பட்ட
னர்.
அதேவேளை பிரபாகரன் மட்டுமன்றி அவரது குடும்பமும் 2009ல் கொல்லப்பட்டது. பிரபாகரனின் 10 வயது மகனை ஏன் கொன்றீர்கள் என கேட்டதற்கு “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி” என்று கூறினார்கள்.
விஜயவீராவுக்கு சிலை வைத்து வருடா வருடம் நினைவு தினம் அனுஷ்டிக்க அனுமதியளிக்கும் இலங்கை அரசு பிரபாகரனை நினைவுகூர அனுமதியளிக்க மறுக்கிறது.
முகநூலில் பிரபாகரன் படத்திற்கு லைக் போட்டதற்கே ஒரு தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டு 10 மாதம் சிறையில் அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு.
பிரபாகரனுக்கு ஒரு நியாயம். விஜயவீராவுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இலங்கை அரசின் நியாயமா?
குறிப்பு- இலங்கை அரச விசுவாசிகளுக்கு!
முடிந்தால எனது நியாயத்திற்கு பதில் தாருங்கள். அதைவிடுத்து நான் புலிவால் பிடிப்பதாக எழுத வேண்டாம். ஏனெனில் அது எனது கேள்விக்குரிய பதில் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக