சனி, 26 செப்டம்பர், 2020

யாதவர் வார்த்தை 20 ஆண்டு முன்பு இல்லை கோனார் பட்டம்

 

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 2 அக்., 2018, பிற்பகல் 4:15
பெறுநர்: எனக்கு
சாரதி ராஜா உடன் Linga Moorthy வலிமையானவராக உணர்கிறார்.
கோனார்கள் யாதவ்-ஆன கதை!
இருபது வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் யாதவர் என்ற வார்த்தை கிடையாது கிராமத்தில் உள்ள நமது தாத்தனும் பாட்டனும் இராமசாமிகோனார், முத்துக்கோனார் ,செட்டிக்கோனார், இராமுகோனார் என்று தான் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, யாதவர் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. சான்று உங்கள் வீட்டில் உள்ள நிலப் பத்திரத்தை எடுத்துப்பார்த்தால் உங்களுக்கு தெரியும் தாத்தா பெயருக்குப் பின்னால் கோனார் என்று வருகிறதா? யாதவர் என்று வருகிறதா? போய் பார்த்துவிட்டு நீங்கள் கோனாரா யாதவரா என்று முடிவுசெய்யுங்கள். முதலில் கோன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள் கோன் என்றால் அரசன் கோனார் என்றால் அரசர் வழிவந்தவர்கள் என்று பொருள். ஆனால் யாதவர் என்றால் என்னவென்று தமிழ்ப் பெயர்க்காரணம் சொல்லமுடியாது; ஏனெனில் யாதவ் என்ற சொல் தமிழ்ச்சொல்லே அல்ல; வடமொழிச்சொல்.
சீவலப்பேரிபாண்டி என்ற படத்தை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள் அதில் வசனம் வரும் 'சபாஷ் கோனாரே!' என்று தான் வருமே ஒழிய 'சபாஷ் யாதவ்!' என்று வராது. திமுக தலைவர் கருணாநிதி தான் கோனார்களை யாதவர் என்ற போர்வைக்குள் போர்த்தினார்; அண்ணன் சீமான் அல்ல. எப்போது கருணாநிதி தமிழ்நாட்டியில் உள்ள கோனார்களை யாதவர் என்ற போர்வைக்குள் போத்தினாரோ அப்போதே எனது அப்பனும் சித்தப்பனும் பெரியப்பனும் போராடி இருந்தால் அண்ணன் சீமான் பேச வேண்டிய அவசியம் வந்திருக்காது. நீங்கள் திட்டவேண்டியது கருணாநிதியை அதைவிட்டுவிட்டு அண்ணன் சீமானை விமர்சிப்பது என்ன தர்மம்.
கோனார் என்ற வார்த்தையை பயன்படுத்தினால் தமிழர்கள் என்றாகிவிடும் என்ற ஒரே காரணத்தாலே கருணாநிதி அவர்கள் யாதவர் என்ற சொல்லை தமிழ்நாட்டில் திட்டமிட்டு புகுத்தினார். காரணம் இட ஒதுக்கீட்டை யாதவர் என்ற போர்வையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரளா, கர்நாடாக போன்ற பிறமாநிலத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்திக்கொ
ண்டனர். இந்தச்செயல் கோனார்களுக்கு செய்த பெருந்துரோகம் ஆகும். இதனை எதிர்த்து போராடவேண்டிய சாதிய அமைப்புகள் அண்ணன் சீமானை விமர்சிப்பது எப்படி சரியாக இருக்கும்.
உண்மையில் அந்த மக்களின் மீது அக்கறை இருக்கின்றது என்றால் கருணாநிதியை தான் எதிர்த்து போராடியிருக்க வேண்டும். சாதிய அமைப்புகள் தங்களின் சுயலாபத்திற்காக பதவி வெறிக்காக கோனாரை யாதவர்களாக மாற்றினர். இதை அண்ணன் சீமான் நாம் யாதவர் அல்ல நாம் கோனார் என்று உடைக்கும் போது பிற மாநிலத்தில் உள்ள யாதவர்கள் சீமான் தனது அடிமடியில் கைவைத்துவிட்டார் என்று பதறுகின்றனர். நேரிடையாக விமர்சிக்கமுடியாமல் சாதியின் பெயரால் தமிழர்களை அண்ணன் சீமானுக்கு எதிராக விமர்சிக்க தூண்டிவிட்டுள்ளனர். கோனார்களுக்குத் துரோகம் செய்தது கருணாநிதி தான் அண்ணன் சீமான் அல்ல; இதை முதலில் புரித்ந்துகொள்ளுங்கள்.
நாம் தமிழர் கட்சியின் உட்பிரிவான வீரத்தமிழர் முன்னணி நடத்திய செஞ்சிக் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடத்தி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையை தேசிங்குராஜா கோட்டை இல்லை! நமது பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை என்று சொன்ன ஒரே அரசியல் கட்சி, நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் தான். அதைப் பேசாத இவர்கள் அழகுமுத்துக்கோன் கோனார் என்று சொன்னதை மட்டும் பேசவேண்டிய தேவை என்ன வந்தது. காரணம் அண்ணன் சீமானை அரசியலாக வீழ்த்த முடியாமல் சாதியை தவறாக பேசிவிட்டார் என்று சொல்லி திரித்து விமர்சிப்பது மிகவும் கேவலமான செயல் இழிவான செயல். மீண்டும் சொல்கிறோம்
முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆடு மாடு மேய்ப்பது அவர்களுக்கு குலத்தொழிலாக இருந்தது ஆகவே அவர்கள் ஆயர்கள் என்று அழைக்கப்பட்டனர்
. முல்லை நிலத்தின் இறைவனாக இருந்தவர் கண்ணன். தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச்சமூகத்தின் உட்பிரிவான கோனார் சமூதாயம் கோனார் தான் யாதவர் அல்ல!
சாரதி ராஜா
நேற்று, PM 3:50 ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக