சனி, 26 செப்டம்பர், 2020

தமிழகம் டெல்டா கடற்கரை கடல் ஹைட்ரோகார்பன் எடுக்க கார்ப்பரேட் வருகிறது

 

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்புத., 3 அக்., 2018, முற்பகல் 10:30
பெறுநர்: எனக்கு
*5099 சதுரகிலோமீட்டரில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி*

தமிழகத்தில் மூன்று இடங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி என்ற பொய் செய்தியை பரப்புகிறது திருட்டு ஊடகம். இது மூன்று இடம் அல்ல மூன்று *மண்டலம்* 5099 சதுர கிலோ மீட்டர்.

*Vedanta Cy-Oshp-2017/1 Cauvery Offshore 1794 Approved Area (Sq.Km.) கடல்*
*Vedanta Cy-Oshp-2017/2 Cauvery Offshore 2574 Approved Area (Sq.Km.) கடல்*
*Ongc Cy-Onhp-2017/1 Tamil Nadu Land 731 Approved Area (Sq.Km.) நிலம்*

1794+2574=4368 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலில் *வேதாந்தாவுக்கும், 731 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலத்தில் ஓ.என்.ஜி.சிக்கும் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அமைச்சகம் அனுமதி. ஒரு சதுர கிலோமீட்டர் என்பது ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது.

இந்தியாவில் 55 முக்கியமான மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பது தொடர்பான ஒப்பந்தம் 01.10.2018 அன்று டெல்லியில் கையெழுத்தானது. தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் மற்றும் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் உருவான நிலையில் தற்போது தமிழகத்தில் மூன்று மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. மத்திய அரசிடம் இதற்காக மொத்தமாக *3934 கோடி* ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது வேதாந்தா நிறுவனம். பாஜகவை சேர்ந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் வேதாந்தா நிறுவனம்தான் அதிக இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கப்படவுள்ள 55 மண்டலங்களில் 3 மண்டலம் தமிழகத்தில் அமைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை முதல் மண்டலம், பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை இரண்டாவது மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது மண்டலமும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் முதல் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும், மற்ற இரு மண்டலங்களுக்கான உரிமங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும் வழங்கப்பட உள்ளன.

இவற்றில் முதல் மண்டலத்தில் 4 இடங்கள், மற்ற இரு மண்டலங்களில் தலா 10 இடங்கள் என *மொத்தம் 24 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும்* என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சிதம்பரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. காவேரி டெல்டா பகுதியில் இருக்கும் இரண்டு மண்டலங்களில் வேதாந்தா நிறுவனம் செயல்பட இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது.

எத்தனை முறை உயிர் பெற்றாலும் கடைசி தமிழன் இருக்கும் வரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்.


*தமிழர் ஆய்வுக் கூடம்*
Tamil Research Institution (*Tamilri.Com*)


மீத்தேன் மண்ணழிப்பு வரைபடம் வேதாந்தா ongc
tri


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக