வியாழன், 30 ஜனவரி, 2020

ஆறு கடலில் கலப்பது அணை கூடாது விவாதம் உரையாடல் காவிரி நீர்மேலாண்மை காவேரி

aathi1956

<aathi1956@gmail.com>
28 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 4:30
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
எது வீண்?

ஆறு கடலில் கலக்காமல் அணை கட்டித் தடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறும் தமிழர்,
கன்னடர் போல முட்டாள் ஆவார்.

நதிகளை இணைக்கவேண்டும் என்பார் ஹிந்தியர் போல அடிமுட்டாள் ஆவார்.

கடலில் ஆறு கலக்காவிட்டால் நமக்கு மூச்சு கிடைக்காது.

ஆம். விளையாட்டில்லை.
இதுதான் உண்மை.

காற்றில் ஆக்சிஜனை நிரப்புவது மரங்கள் மட்டுமல்ல.
நதி கடலில் கலக்கும் இடத்தில் வாழும் நுண்ணுயிரிகளும் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒன்று அந்த நுண்ணுயிரிகள் போட்ட உயிர்வளி பிச்சை.

அதோடு கடலில் நன்னீர் கலக்காவிட்டால் கடலின் உப்புத்தன்மை அதிகமாகும்.
அது ஆவியாவது குறைந்து மழைப்பொழிவு குறையும்.

கடலுக்கு தண்ணீர் வரவில்லை என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்ப கடல் நீர் நிலத்தினுள் புகும்.

இப்படி புகுந்து நமது நெற்களஞ்சியம் பாலைவனமாக ஆக வேண்டும் என்பதற்காகவே அணை கட்டுதல், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

கரிகாலன் அசை கட்டினான் என்றால் அது கரையை பலப்படுத்தி வெள்ளத்தை கட்டுக்குள் வைக்கவே!

கடலின் தாகத்தைத் தணிக்காவிட்டால் கடல் நம்மைக் கொன்றுவிடும்.

இயற்கைப் பொறுத்து நாம் வாழவேண்டும்.

நமக்காக இயற்கையை மாற்றக்கூடாது.

கன்னடனின் கொட்டத்தை அடக்கி மழை நீரைச் சேமிப்பதே தீர்வு.


Kokilan Sachithananthan
பெய்யும் மழையின் நீரும் கடலில் போய்க் கலக்கவும் கூடாது. உழவுக்கும் உயிர்களுக்கும் தேவையானது பயன்படுத்தப்பட்டே ஆகவேண்டும். கடலில் பெய்யும் மழையே போதும் கடல்நீர் சுற்றுவட்டத்தைப்பேணுவதற்கு. 2015 வெள்ளத்தின் போது நிலத்தில் பெய்ததை விட 65-75% கடலினுள் அதிகமாய்க் கொட்டியிருக்கிறது. இது ஆண்டுதோறும் நடக்கும் இயற்கைச் சுழல் ஒழுங்கு. நிலத்தடி நீர்மட்டம் குறித்த அளவில் பேணப்படும்போது கடல்நீர் நிலத்தினுள் ஊடுருவுதல் தடுக்கப்படுகிறது. நிலத்தில் பெய்யும் மழையில் பாதிப்பங்கு அளவிற்காவது ஆறு குளம் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டாலே பயிர்வளர்ப்பும் நிலத்தடி நீரும் பேணப்படும். கடல்நீர் நிலத்துள் ஊடுருவாமல் அதனால் நிலம் களர் உவர் ஏறாமல் காப்பது நிலத்தடி நீரின் வளம். முழுமையாகத் தடுத்துக் கபளீகரம் செய்வதும் முழுமையாகக் கடலில் கலக்கவிடுவதும் நல்லதல்ல.

Aathimoola Perumal Prakash
ஆம். நிலத்தடி நீர்மட்டத்தை சரியான அளவில் வைத்துக்கொண்டு அப்பகுதி கடலின் உப்பு அளவையும் அந்த ஆண்டு மழைப்பொழிவையும் கணக்கிட்டு எவ்வளவு கடலுக்கு போகவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். அப்படி செய்தாலும் பெருமளவு கடலுக்கே போகும்.

Kokilan Sachithananthan
அதேதான். ஒரு பேச்சுக்கு, கர்நாடகா மட்டுமல்ல தமிழகத்தில் கூட காவிரியின் வழித்தடத்தில் குறைந்தது ஒரு மைலுக்கு ஒன்றாக சிறு தடுப்பணையோ பேரணையோ கட்டினால் கூட அதிகபட்சம் இரண்டு மாரிக்காலம் வரை மட்டுமே அல்லது ஒரு ஆண்டு மட்டுமே கடலுக்குள் தண்ணீர் போகாதவாறு தடுக்க முடியும். ஏனெனில் , கர்நாடகாவிலிருந்து திறக்கப்படும் தண்ணீருக்கு சற்றொப்ப தமிழகத்தில் காவிரி வழித்தடத்தில் கிளைச் சிற்றாறுகள் மழைக்கால நீரைக் காவிரிக்குக் கொண்டு சேர்க்கின்றன. பெரும்பாலும் தமிழகத்திற்குள் நதியோரச் சமவெளியில் அணை கட்டுவதென்பது பயனில்லை என்றாலும் அப்படி அணை கட்டினாலும் பயிருக்கும் உயிருக்கும் தேவையான சிறு அளவைமட்டுமே தடுத்துத் தேக்கமுடியும். மீதி ஒரு பகுதி கடலுக்குள் சென்றே தீரும். கர்நாடகா அணைகட்டினாலும் இதுதான் நிலை. காவிரிக் கழிமுகத்துக்கு முன்னேயுள்ள பயிர் நிலங்கள் மட்டும் ஓரிரு ஆண்டுகள் போதிய தண்ணீர் இன்றித் துவண்டுபோம். அதற்கும் மாற்றுவழி உண்டு. ஆனால் அரசும் அதிகாரமும் தமிழர் கையில் இல்லாவிட்டால் எந்த வகையான திட்டமும் விழலுக்கிறைத்த நீர்தான்.

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/09/blog-post_25.html?m=0
காவிரி பிரச்சனை -சுருக்கமாக

Veeraa VK
காவிரியின் ஒரு கிளையை தெற்கில் திருப்பி விட வேண்டும். புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவை தீரும்.

Aathimoola Perumal Prakash
அவை செழிப்பாக இருந்த பகுதிகள். சீமைக் கருவேல மரங்களை வெட்டிவிட்டாலே போதும்.

அ. அருள்வேந்தன்
veeraa VK
புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,விருதுநகர் மாவட்ட பகுதிகள் ,
முக்கொம்பு அல்லது கல்லணை உள்ள நிலப்பரப்பை விட தாழ்வான நிலப்பரப்பாக இருந்தால்..
கண்டிப்பாக
காவிரியின் ஒரு கிளையை தெற்கில் திருப்பி விட முயற்சிக்க வேண்டும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 5 மணி நேரம் முன்பு்பு

Veeraa VK
தண்ணீர் கிடைக்காமல்தான் மக்கள் விவசாயப்பணிகளை செய்ய முடியாமல் உள்ளனர் ஒருமுறை கிடைத்தாலே மக்கள் நம்பிக்கையுடன் உழவுத்தொழிலுக்கு திரும்புவர். மேலும் பவானி ஆற்றிலிருந்தே ஒரு கிளைக்கால்வாய் மூலம் திருப்பினால் தாழ்வான பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும். கல்லணை வரை போக வேண்டிய தேவை இருக்காது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 5 மணி நேரம் முன்புு

அ. அருள்வேந்தன்
Veeraa VK
நீங்கள் சொல்லும் பகுதிகளுக்கு , மலைப்பாங்கான பகுதிகளை கடந்து, இயற்கையாக கால்வாய் மூலம் நீர் கொண்டு போவது சிரமம் போன்றே தோன்றுகிறது..
செயற்கையாக , வெள்ளநீரோட்டம் மூலம் இயங்கும் டர்பைன்கள் மூலம் இயங்கும் நீருந்து இயந்திரங்கள் மூலம் , வேண்டுமானால் கொண்டுசெல்லலாம்...
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Veeraa VK
அ. அருள்வேந்தன் உயமான பகுதி பவானிசாகர பகுதி தான் அங்கிருந்து தாழவான பகுதியை கணக்கிட்டால் சரியாக வரும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

அ. அருள்வேந்தன்
Veeraa VK கணக்குபடி சரி , ஆனால் வழியில் உள்ள மலைகள் நீரோட்டத்தை தடுக்கும்..
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Veeraa VK
அ. அருள்வேந்தன் சுத்தி சுத்தி கொண்டுபோகலாம் அதிகம் பயன்பெறுவர் contour cannel போல.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்புு

அ. அருள்வேந்தன்
Veeraa VK வாய்பில்லை , மதுரைக்கு வடமேற்கில் உற்பத்தியாகும் அனைத்து ஆறுகளும் காவிரியில் சென்றே கலக்கின்றன ...நிலப்பரப்பு அவ்வாறே உள்ளது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Veeraa VK
அ. அருள்வேந்தன் முடியும் நல்ல திட்டங்கள் contour channel கட்டமைப்பு மூலம் வெற்றி பெற்றுள்ளன. கோவையில் ஆழியாறு திருமூர்த்தி அணை கால்வாய் அப்படிப்பட்டதுதான்.

வடதமிழன் காவிரிச்செல்வன்
தம்பி Athimoola Perumal Prakash கடலில் நீரே விடக்கூடாது என்பது எங்கள் வாதமல்ல.நம் தமிழ்நாட்டில் அய்ப்பசி கார்த்திகையில் வடகிழக்குப் பருவமழை பெய்யும்.அப்போது நம் மாவட்ட ஏரி குளம் குட்டைகள் நிரம்பி வடிகால் வாய்க்கால்கள் ஆறுகளால் நீர் கடலுக்கப் போகும்.அது போதும்!
இப்போது ஆடி மாதம்.டெல்டாக்க
ாரர்களாகிய எங்களுக்கு இப்போது மழை கிடையாது.ஏரிகள் குளங்கள் குட்டைகள் வாய்க்காலகள் ஆறுகள் வறண்டு கிடக்கின்றன.இவற
்றிற்கெல்லாம் நீர் நிரப்பாமல் கடலுக்கே கொண்டு செல்ல வேண்டும் என்பது எவ்வளவு வக்கிர புத்தி!
குடிக்க தண்ணீர் இல்லை.பாசனத்துக
்கு தண்ணீர் இல்லை.இந்த நிலையில் கடலுக்கு நீர் போக வேண்டியதுதான் ரொம்ப முக்கியமா?
அரசியல்வாதி வெள்ள நீரை எவ்வளவு சீக்கிரம் நீரைக் கடலுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் அகண்ட காவேரியிலும் கொள்ளிடத்திலும் மணல் அள்ளி விற்க திட்டமிடுகிறான்
.நீங்களும் அவன்களுக்கு சாதகமாக ஏன் குறுக்கு சால் ஓட்டுகிறீர்கள்?
மேலும் மழை தரைப்பகுதியில் மட்டுமா பெய்கிறது.கடலில் பெய்வதே இல்லையா? அப்படி கடலில் பெய்யும் மழையால் மீன் வளம் பெருகாதா?
சவுதி அரேபியாவில் ஆறுகளே இல்லை.அங்கு மீன்வளம் இதர கடல் வளம் இல்லாமலா இருக்கிறது?
பாண்டியர்களும் சொழர்களும் பல்லவர்களும் அவ்வளவு ஏரிகள் குளங்கள் குட்டைகள் சிறு அணைகள் கட்டி மழை நீரைத் தடுத்தாரகள்.அதெ
ல்லாம் மடத்தனமா? இயல்பாக கடலுக்கு செல்ல வேண்டிய நீரைத் தடுத்த அயோக்கிய செயலா?
டெல்டா மாவட்டங்களில் வாழும் மனிதர்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் விவசாயததுக்கும் நீர் தேவையில்லை.கடலுக்கு அனுப்பி மீன் வளர்ப்பதுதான் முக்கியமா? அந்த மீன்களைக் கூட தரையில் வாங்க ஆளிருந்தால்தானே விற்க முடியும்.
அப்போ மீன் வாங்கத் தின்பதற்கு முதலில் ஆள் முக்கியமா?
மனுஷன் செத்துத் தொலைந்தால் பரவாயில்லை.மீன்களும் ஆமைகளும் கடற்பாசிகளும் போதும் என்கிறீர்களா?
தண்ணீரை கதவணைகள் தடுப்பணைகள் குளம் குட்டைகள் மூலம் சேமிக்க வேணடும் என பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுபவர்களும் போராடும் பொது மக்களும் விவசாயிகளும் முட்டாள்களா?
திருநெல்வேலி தம்பி தாமிரபரணி ஆற்று நீரை கடலுக்குப் போகாமல் தடுக்கக் கட்டப்பட்டுள்ள அணைகளை உடைக்க இயக்கம் தொடங்குவீர்களா?
செய்து உடைத்து எறிந்தால் உங்கள் அறிவுரைகளை ஏற்போம்.

Aathimoola Perumal Prakash
// ஆடி மாதம்.டெல்டாக்காரர்களாகிய எங்களுக்கு இப்போது மழை கிடையாது.ஏரிகள் குளங்கள் குட்டைகள் வாய்க்காலகள் ஆறுகள் வறண்டு கிடக்கின்றன.//
என்னது மழை இல்லயா?
யோவ் பெஞ்ச மழையெல்லாம் கன்னடன் அணை உடையுமளவுக்கு தேக்கி வச்சிருக்கான்.
அத மீட்குறத யோசிக்காம அவன் மோண்டு விட்ட தண்ணிய மறிச்சு கிழிக்கணும்னா என்னப்பா நியாயம்?
குடிக்க தண்ணி இல்லயாம் குண்டிகழுவ தண்ணியில்லயாம்.
கடலுக்கு தண்ணி போய்ட்டா மண் அள்ளுவாங்களாம்.
அள்ளுறவன தடுங்க பொட்டைங்களா!
மறிச்சிட்டா மட்டும் மண்ணள்ள மாட்டானா?
பாலாற வழிமாத்திவிட்டு மண்ணள்ளுனது தெரியுமா தெரியாதா?

Aathimoola Perumal Prakash
//மேலும் மழை தரைப்பகுதியில் மட்டுமா பெய்கிறது.கடலில் பெய்வதே இல்லையா?
அப்படி கடலில் பெய்யும் மழையால் மீன் வளம் பெருகாதா? சவுதி அரேபியாவில் ஆறுகளே இல்லை.அங்கு மீன்வளம் இதர கடல் வளம் இல்லாமலா இருக்கிறது?//
ஹிந்தியன விட மரணமுட்டாளா இருக்கியேப்பா!
கடல்ல மழை பெரும்பாலும் பெய்யாது.
மரங்கள்தான் மேகத்துல இருந்து மழைய வரவைக்கும்.
அப்ப அந்த மேகம் காத்துல கடல்பக்கம் போன அங்க மழபெய்யும்.
தமிழ்நாட்டயும் அரேபியாவையும் ஒப்பிடுற ஞானசூனியமே!
அதோட மூணு பக்கமும் சின்ன சின்ன கடல்தான்.
வடக்க டைகரீஸ் ஓடி கடல்ல கலக்குது.
மேற்க நைல் நதி கலக்குது.
கிழக்குல ஈரான் நாட்டு இரண்டு ஆறுகள் வந்து கலக்குது. கொஞ்சம் தள்ளி சிந்து நதி கலக்குது. தெற்க ஆப்பிரிக்கா கண்டம் இருக்குது.
அரேபியா மக்கட்தொகையும் நம்மளதும் ஒண்ணா?!
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 3 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
//பாண்டியர்களும் சொழர்களும் பல்லவர்களும் அவ்வளவு ஏரிகள் குளங்கள் குட்டைகள் சிறு அணைகள் கட்டி மழை நீரைத் தடுத்தாரகள்.
அதெ ல்லாம் மடத்தனமா?
இயல்பாக கடலுக்கு செல்ல வேண்டிய நீரைத் தடுத்த அயோக்கிய செயலா?
டெல்டா மாவட்டங்களில் வாழும் மனிதர்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் விவசாயததுக்கும் நீர் தேவையில்லை.
கடலுக்கு அனுப்பி மீன் வளர்ப்பதுதான் முக்கியமா?//
ஏம்ப்பா அந்த காலத்துல நடந்த விவசாயம் இன்னக்கி நடக்குறதுல பத்துல ஒரு பங்குகூட கெடயாது.
அப்போ சின்ன சின்ன அணை கட்டி தேக்குனா பெரிய பாதிப்பில்லை. இப்ப ஒர்ற மோண்ட தண்ணிய தடுத்திட்டா மூச்சே வராதுங்கறேன், ஆடு மாடு தண்ணி குடிக்கவேணாமானு கேக்குற?
மீன் வளர்க்கறது முக்கியமானு கேக்குற?!
முட்டாப்பயலே! மூச்சு தர்ற உயிரிகள். கடல்னா மீன் மட்டும்தா இருக்கும்னு நெனச்சியாக்கும்.
சரியான கூமுட்டையா இருப்ப போல!
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 2 மணி நேரம் முன்பு

வடதமிழன் காவிரிச்செல்வன்
புத்தி சொல்றவருக்கு தெரிந்த நாகரிகம் இதுதானோ?
எதிர்க் கருத்தை நாகரிமாக மறுக்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களை மாதிரி அருவருக்கத்தக்க சொற்களை பதிலடியாகத் தந்து என்னால் பேச இயலாது!
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
//தண்ணீரை கதவணைகள் தடுப்பணைகள் குளம் குட்டைகள் மூலம் சேமிக்க வேணடும் என பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுபவர்களும் போராடும் பொது மக்களும் விவசாயிகளும் முட்டாள்களா?//
கண்டிப்பா முட்டாப்பயலுகதான்.
ரஜினியும் ஜக்கியும் நதிநீர் இணைக்கணும்னு சொன்னபோதே யோசிக்கவேண்டாமா?!
நதிநீர இணைக்கணும்னு எந்த விவசாயி சொன்னான்.
பேண்டு தின்ன ஐயாக்கண்ணா? அவன் விவசாயியே கிடையாது.
அவன் பண்ண கூத்துல்லாம் இழப்பீடுனு பணம் கேட்டு பண்ணது. ஏற்கனவே கிழிகிழினு கிழிச்சிருக்கேன்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 2 மணி நேரம் முன்புு

வடதமிழன் காவிரிச்செல்வன்
நான் எழுப்பியுள்ள வினாக்களை புரிந்து கொண்டு அதற்கு தக்க பதில் சொல்ல முயன்றால்தான் உங்கள் வாதம் எடுபடும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
//திருநெல்வேலி தம்பி தாமிரபரணி ஆற்று நீரை கடலுக்குப் போகாமல் தடுக்கக் கட்டப்பட்டுள்ள அணைகளை உடைக்க இயக்கம் தொடங்குவீர்களா?
செய்து உடைத்து எறிந்தால் உங்கள் அறிவுரைகளை ஏற்போம்.//
இதே திருநெல்வேலித் தம்பி பாலாறு எப்படியெல்லாம் நாசமாகுது விரிவா எழுதுனது.
தாமிரபரணில பிச்ச காசுக்கு பல ஆயிரம் கொடுக்கறத பத்தி எழுதினது.
காவிரி பத்தி தொடர்ந்து எழுதுறது.
காவிரி அளவுக்கு தாமிரபரணி நெலம மோசமில்லப்பா.
உன்னோட அம்மா சாவக்கெடக்கா. என்
அம்மாவுக்கு மூக்கடைச்சிருக்கு சிந்திவிடுங்கற. மூதேவி.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 2 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
நீ வடதமிழன்னு பேர வச்சிக்கிட்டு திருநெல்வேலிக் காரன வம்பிழுக்குற பிரிவினைவாதி. அதனால ஒனக்கு மரியாத கொடுக்கல. தமிழ்நாட்ட பிரிக்க நினைக்குறவன் எனக்கு மொத எதிரி.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 2 மணி நேரம் முன்பு

வடதமிழன் காவிரிச்செல்வன்
கொள்ளாடத்தில் கதவணை கடடினா கடலுக்கு தண்ணியா போகாதுன்னு எந்த புத்திசாலி சொன்னான்.5,6கதவ
ணை கட்டப்போறாங்க.ஒ
வ்வொன்றிலும் தலா ஒரு டி.எம்.சி வீதம் 6 டி எம்.சி ஏரி குளத்தில 3டி எம்.சி தேங்கும்.காவிரி வெள்ளப் பெருக்க காலத்தில் 20,30 டி எம்.சி கடலுக்கு போகுது.அதனால் என்ன பாதிப்பு?
சவூதி அரேபியாவில பெரிய கடல் இல்லாததும் ஆறுகள் இல்லாததும் எனக்கும் தெரியும்.அதனால்அங்கு மீன் வளம் இல்லாமலே போய்விட்டதா.கடல் நீரோட்டம் என்ற ஒன்று வந்து எல்லா கடல்களுககும் சத்துகளை இழுத்துக் கொண்டு வருவது நீங்கள் படித்த சுற்றுச் சூழல் புத்தகத்தால் இல்லையா.
கிராமங்கள் மாவட்டங்களுக்கு வந்து பார்தது நடைமுறை அனுபவ அறிவைத் திரடடிக் கொள்ளாமல் மேஜையில் புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டு அறிவூட்டக் கிளம்பினால் இப்படி ரத்தக் கொதிப்பு வந்து கத்ததான் முடியுமே ஒழிய எல்லோரும் ஏற்கும்படியான சரியான பதிலைத் தரமுடியாது.
புத்தகப் புழுவாக மட்டும் இருக்காதீர்கள்.கள ஆய்வுகள் செய்து கருத்துரை வழங்குங்கள்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

வடதமிழன் காவிரிச்செல்வன்
யார் பிரிவினைவாதிி .பீகாரிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் வாங்கிப் போனவன் பிரிவினைவாதியா.மத்திய பிரதேஷிலிருந்து சட்டீஸ்கர் வாங்கிப் போனவன் பிரிவினைவாதியா.
ஆந்திராவிலிருந்து தெலுங்கானா வாங்கிப் போனவன் பிரிவினைவாதியா.
அவனெல்லாம் பிரிவினைவாதி என்றால் நானும்பிரிவினைவ
ாதியே.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Kokilan Sachithananthan
Aathimoola Perumal Prakash
//ஹிந்தியன விட மரணமுட்டாளா இருக்கியேப்பா!
கடல்ல மழை பெரும்பாலும் பெய்யாது.
மரங்கள்தான் மேகத்துல இருந்து மழைய வரவைக்கும்.
அப்ப அந்த மேகம் காத்துல கடல்பக்கம் போன அங்க மழபெய்யும். //........
ஆதிமூலரே! என்னையும் சேர்த்துத் தான் திட்டுகிறீரா? சரி இருக்கட்டும். கடலில் மழை பெய்வது குறைவா? அதெல்லாம் கிடையாது பிய்த்துக் கொண்டு ஊற்றும் என்பார்களே அது அங்கேதான் தெளிவாகப் பார்க்க முடியும். வங்கப்பெருங்கடலில் அதன் நேரடி விசுவரூப தரிசனம் அடியேனுக்கு உண்டு. இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, நிலத்தில் கொட்டுவதைப் போல அதைவிடவும் கடலிலும் மழை அள்ளிக்கொட்டும்.

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/10/blog-post_435.html?m=0
நதிநீர் இணைப்பு மண் மீதான வன்முறை ஜக்கி இயற்கை பாஜக

Aathimoola Perumal Prakash
 கோகிலனாரே நான் உங்களைக் கூறவில்லை. கடலுடன் கலப்பது மீனை வளர்ப்பதற்கு என்று புரிந்துகொண்ட வடைதமிழனைத்தான் கூறினேன். இதோ உலக மழைப்பொழிவு வரைபடம். கடலில் மழை பெய்கிறது. ஆனால் நிலத்தில்தான் அதிகம் பெய்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக