சனி, 26 செப்டம்பர், 2020

தேவர் RSS தொடர்பு கிடையாது







aathi1956 <aathi1956@gmail.com>

புத., 31 அக்., 2018, பிற்பகல் 2:09





பெறுநர்: எனக்கு









இமாம் உசேன் சம்சுதீன்
ஒரு இலட்சம் பரிசு
____________________
பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கோல்வால்கரை அழைத்து வந்து, கூட்டம் நடத்தியதாகவும்,
கோல்வால்கருக்கு பொன்முடிப்பு வழங்கியதாகவும் உலவ விடப்பட்டுள்ள கதைகள்,
கட்டுக்கதைகளே.
இந்துத்துவவாதிகளும்,
திராவிட இயக்கங்களும்
ஒன்றினைந்து உருவாக்கிய
புனைவு இது.
அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
கோல்வால்கரை, தேவர் சந்தித்து போல் வெளிவந்துள்ள புகைப்படங்களும்
போலியானவை.
இப்படி சம்பவம் நடந்ததாக நிரூபித்தால்,
ஒரு இலட்சம் பரிசு வழங்கப்படும்.




Jose Kissinger
முத்துராமலிங்கத் தேவரும்-கோல்வால்கரும்.
தேவர் சமூகத்தினரை தங்கள் பக்கம் ஈர்க்க ஆர்.எஸ்.எஸ் செய்து வரும் பித்தலாட்டப் பிரச்சாரங்களில் முக்கியமானதே கீழ்கண்ட ஆர்.எஸ்.எஸ் காரரின் பதிவு.
இது அப்பட்டமான பொய்.
1949-ம் ஆண்டு தலைமறைவாகும் முத்துராமலிங்கத் தேவர் 1951 ஜனவரியில் கேரளா
வழியாக நாடு திரும்புகிறார். அப்போது அவரது மீசை மழிக்கப்பட்டு,
பாகவதரைப் போல கூந்தலை வளர்த்திருக்கிறார். அது முதல் அவர் தலைமுடியை
வெட்டவேயில்லை. இது “முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்” என்ற புத்தகத்தில் 146வது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1955-ம் ஆண்டு இறுதியில் பர்மா வாழ் தமிழர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பர்மா பயணம் மேற்கொள்கிறார். அங்கு
அவர் டிசம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரியில் இரண்டு வாரங்கள் வரை
இருக்கிறார். இந்தப் பயணம் முழுவதும் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
18.02.1956-ம் தேதி அவர் விமானம் மூலமாக பர்மாவிலிருந்து கல்கத்தா
வந்தடைகிறார். அதே ஆண்டு மே 30 முதல் ஜூன் 5-ம் தேதி வரை மதுரை தமிழ்ச்
சங்கத்தின் பொன்
விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தேவர் அதற்கு
முந்தைய நாள் அறிஞர் அண்ணாதுரை பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்.
அதே ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்
என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதாக தேவர் சட்டமன்றத்தில்
பேசுகிறார்.
இப்படியாக 1956-ம் ஆண்டு முழுவதுமாக தேவர் கலந்துகொண்ட நிகழ்வுகள்
அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் பேராசிரியர் காவ்யா
சண்முகசுந்தரம் எழுதிய "பசும்பொன் சரித்திரம்" என்ற நூலில்
இடம்பெறுகின்றன. இதில் கோல்வால்கரின் 50வது பிறந்தநாள் விழா மதுரையில்
தேவரின் தலைமையில் நடந்திருந்தால் அது பதிவு செய்யப்படாமல் போக வாய்ப்பே இல்லை.
தேவரின் வாழ்க்கை வரலாற்று நூல் என்றால் அது "முடிசூடா மன்னன்
முத்துராமலிங்கத் தேவர்" நூலே ஆகும். அந்த நூலை எழுதிய ஏ.ஆர். பெருமாள்
தனது சிறு வயது முதல் தேவருடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார். அவர், தேவர்
தானே வாய்மொழியாகச் சொன்ன தகவல்கள், தான் நேரில் கண்ட தகவல்களை
அடிப்படையாகக் கொண்டு அந்த நூலை எழுதினார்.
தேவரின் வாழ்க்கை
வரலாற்றுக்கான அடிப்படை நூலே இதுதான். இந்த நூலில் கோல்வால்கர் பற்றிய
குறிப்பு இல்லை. இத்தனைக்கும் தேவரின் (இந்து) மத தொண்டு குறித்தும்
இதில் ஒரு கட்டுரையும் உள்ளது. காவ்யா சண்முகசுந்தரம், மேற்படி நூல்
உட்பட 24 சிறிய பெரிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு "பசும்பொன் சரித்திரத்தை"
எழுதியுள்ளார். இதிலும்
கோல்வால்கர் பற்றிய குறிப்பு இல்லை.
தற்போது வாழும் "தேவர் தகவல் களஞ்சியம்" என்று அழைக்கப்படும் வரலாற்று
ஆய்வாளர் திரு நவமணி
கோல்வால்கரின் கதை பொய் என்று கூறிவிட்டார்.
எனவே “இந்து மதம் என்று சொல்லி அரசியல் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள்” தங்கள் கோல்மால் கதைகளை குப்பையில் கொட்டி
விட்டு உண்மையாக மக்களுக்குத் தொண்டு செய்து அரசியல் செய்து மக்களின்
மனதில் இடம் பிடிக்க வேண்டும்.
இந்தப் படத்தில் கிராப் வெட்டி வருபவர் தேவர் அல்ல.
கோல்வால்கருக்கும்-தேவருக்கும் அரசியல் ரீதியாக எவ்வித தொடர்பும் இருந்த்தில்லை.
தேவர் குறித்தப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும்,
அவரது தேசியம் என்பது அன்றைய காலத்தில் பிரிட்டிஷ் எதிர்ப்பு தேசியமே. பார்ப்பனிய இந்து தேசியம் அல்ல.
அவர் தெய்வீகம் என முன் வைத்ததும் வள்ளலாரின் தெய்வீகமே. பார்ப்பனிய தெய்வீகம் அல்ல.
ஒரு பெரும் பகுதி மக்களை காவிகள் கபளீகரம் செய்யத் துடிக்கும் இன்றைய காலத்தில் அதன்பால் உள்ள உண்மைகளைச் சொல்லுவதைப் புரிந்து கொள்ளும் தன்மை சமூக அக்கறை உள்ளவர்களுக்கு உருவாக வேண்டும்.
அதை விடுத்து வெற்று நக்கல் மூலம் கடந்து செல்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. வலுவான எதிர் கருத்தியல் மூலம் தான் ஏற்படப்போகும் பேராபத்தை கொஞ்சமாவது மட்டுப்படுத்த முடியும்.
அதன் வெளிப்பாடே தேவர் குறித்த எனது பதிவுகள்.

SEARCH 

RSS பரப்பும் தேவர் பற்றிய பொய் 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக