சனி, 26 செப்டம்பர், 2020

பாரதியார் பூணூல் போட்ட கனகலிங்கம் புத்தகம் புகைப்படம்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 29 அக்., 2018, முற்பகல் 10:21
பெறுநர்: எனக்கு




எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

-------- அசல் தகவல் --------
அனுப்புநர்: aathi1956 <aathi1956@gmail.com>
தேதி: 29/10/18 10:19 (GMT+05:30)
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பொருள்: பாரதியார் பூணூல் போட்ட கனகலிங்கம் புத்தகம் புகைப்படம்

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பார்ப்பான் கனகலிங்கம்.
கடந்த சில நாட்களாக சென்னைக்கு வழக்கு தொடர்பாக சென்றும் வந்தும் கொண்டிருக்கிறேன்.
பணி முடிந்த நேரங்களில் சில பழைய புத்தகக் கடைகளை மேற்பார்வை செய்வது வழக்கம்.
அப்படி செய்த போது, பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் அவர்கள் எழுதிய ” எனது குருநாதர் பாரதியார்” என்கிற நூலின் ஆங்கில மொழியாக்கம் "My Revered Guru, BHARATHIYAR," Translator R.Ganapathi என்கிற அரிதான புத்தகம் கிடைத்தது.
பாரதியாரின் சில கருத்துகள் சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம்.
ஆனால் ஒரு சராசரி மனிதனாக என்னமாய் வாழ்ந்திருக்கிறார் அவர்.... வியப்பு.
இப்படியொரு புத்தகம் இருப்பதே நமக்கு பலருக்கு தெரியாது என்றே நினைக்கிறேன். கனகலிங்கம் எழுதினார் என்பதாலேயே இந்தப் புத்தகம் வெளி உலகின் கவனத்தை ஈர்க்காமல் பார்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறது.
புத்தகத்தை எடுத்த கையோடு படித்து முடித்துவிட்டுதான் கீழே வைத்தேன். அத்தனை விறுவிறுப்பு. ஒரு சிறந்த நாவலைப் படிப்பது போன்ற அனுபவத்தைத் தந்தது.
பொதுவாக நமக்கு தெரிந்த கனகலிங்கம் வேறு. ஆனால் நூலைப் படித்தப் பிறகு... பாரதிக்கு இணையான ஆளுமையுடையவராக பெரும் தோற்றம் எடுக்கிறார் அவர்.
கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்துவிட்டு, பாரதியார் சொல்கிறார்... ”இனி உனது சாதி என்னவென்று கேட்டால்.... பிராமணன் என்று சொல்லு..” ”அப்படியும் உன்னை விடமாட்டார்கள் ஒரு பறையர் எப்படி பிராமணன் ஆகலாம் என்பார்கள்..” ” அப்படிக் கேள்விக் கேட்பவனை நேராக என்னிடம் அனுப்பிவிடு நான் பார்த்துக்கொள்கிறேன்...” என்கிறார். ( என்ன திருவாளையாடல் வசனம் போல இருக்கிறதா...?)
சில மாதங்களுக்கு முன்பு துக்ளக் குருமூர்த்தி, ”சாதிகள் இல்லையடி... பாப்பா” என்று பாரதி எழுதவில்லை. ” சாதிப் பெருமைகள் இல்லையடி பாப்பா” என்றுதான் எழுதினார் என்று ஒரு புரட்டை சொன்னார். (நான் அதனை மறுத்து ஒரு பதிவை செய்தேன்) பாரதி ” சாதிகள் இல்லையடி பாப்பா” என்றுதான் எழுதினார் என்பதை இந்தப் புத்தகம் உறுதி செய்கிறது.
”யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்...”
என்றுப் பாடி தமிழ் இனத்தின் வேருக்கு நீர் ஊற்றினார்.
” சாதிகள் இல்லையடிப் பாப்பா..” என்கிற ஒற்றை வரியில் ஆரிய வருணதருமத்திற்கு வெந்நீர் வார்த்தார்.
இவையிரண்டையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார் என்பதை இந்த நூலைப் படிக்கும் யாவரும் உணர முடியும்.
இன்னும் பல அரிய சுவையான செய்திகளை திரைப்படக் காட்சிகளைப் போல பதிவு செய்துள்ளது புத்தகம்.
யாவரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம்.
ஆனால் கிடைக்காது.
# நன்றி :- Palani Deepan
15 மணி நேரம் · பொது

பார்ப்பனர் பாரதி பறையர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக