புதன், 30 செப்டம்பர், 2020

ஆதித்தனார் தமிழர்நாடு தமிழப் பேரரசு வரைபடம் கட்டுரை தனிநாடு சிந்தனை

 

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 29 ஜன., 2019, பிற்பகல் 8:59
பெறுநர்: எனக்கு
Rajokkiyam Thangaraj , Naam Tamilar Anbu மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
# சொந்த_ஆட்சி :
"உலகநாடுகள் சபையான ஐக்கிய சபையில் மொத்தம் 84 நாடுகள் இருக்கின்றன. அவற்றிற்கு சொந்தக் கொடியும், சொந்த ஆட்சியும் இருக்கின்றன.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ந்த மலாயா நாட்டில் 60 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த "கானா" என்ற ஆப்பிரிக்க நீக்ரோ நாட்டில் 52 இலட்சம் பேர்தான் இருக்கிறார்கள். ஆனாலும், அந்த நாடுகளில் மக்கள் கண்ணியமாக, மானத்துடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
"# கானா " நாட்டில் இருந்து வருகிற தனிக் கறுப்பர்களுக்கு டெல்லியிலே விருந்து நடக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் என்றால் " # கறுப்பர்கள் " என்று வடநாட்டார் இழிவாகப் பேசுகிறார்கள். 500 இலட்சம் பேர் கொண்ட தமிழ் மக்களுக்கு இந்த அவமதிப்பு ஏன்?
"கானா" நாட்டு "நீக்ரோ"க்களுக்குத் தனி அரசு இருக்கிறது! ஆனால், தமிழ் மக்களுக்குத் தனிஅரசு இல்லை! இதுதான் காரணம்!
இன்று, இலங்கையில் உள்ள #சிங்களவன்
, தமிழ் மக்களைக் " #கள்ளத்தோணி " என்று ஏசுகிறான். "ஓடிப்போ" என்று காலால் எட்டி உதைக்கிறான். அத்தனையையும் தமிழர்கள் சகிக்க வேண்டி இருக்கிறது.
தமிழ் மக்கள் 500 இலட்சம் பேர் இருந்தும், "# தனிஅரசு " என்ற தகுதிஇல்லாத காரணத்தால், இலங்கையில் உள்ளை 65 இலட்சம் சிங்களர்கள் ஏளனம் செய்கிறார்கள்!
சிங்களர்களுக்குச் சிங்கக் கொடியும், தனிஅரசும் இருக்கின்றன;
# தமிழ்நாட்டுக்கும் தனிஅரசு இருந்தால், இலங்கையில் இருந்து தமிழ்மக்களை விரட்டியடிக்கும் நிலைமை ஏற்படுமா?"
-சி.பா.ஆதித்தனார் (தமிழப் பேரரசு)
22 மணி நேரம் ·

தனித்தமிழ்நாடு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக