|
ஜன. 27
| |||
(முன் குறிப்பு: 1980-1989களில் பிறந்தவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் பதிவு)
எளிய நடுத்தர குடும்பத்தில் பிறப்பெடுத்து வளர்ந்து மேலெழுந்து நிற்பது தான் தற்போதைய சூழலில் மிகப்பெரிய சவாலான விசயம். இந்த 80களில் பிறந்தவர்களும் கூட இது போன்றதொரு மிகப்பெரிய சவால்களை சமாளிப்பவர்கள் தான். ஏனெனில் 1980 முதல் 1989 வரையிலான இடைப்பட்ட பத்து வருடங்களில் பிறந்தவர்கள் அனைவருமே குழப்பமான சூழலில் வளர பழக்கப்பட்டவர்கள். அந்த இடைப்பட்ட வருடத்தில் பிறந்தவன் என்ற முறையில் என்னையே பலவற்றிற்குள் சோதனைக்குட்படுத்தி பார்த்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றை மட்டும் கீழே வகைப்படுத்திருக்கிறேன்.
SW/MW அலைவரிசை எங்கள் அபிமான அப்துல் அமீது போன்றோரின் இனிய குரல்களில் இலங்கை வானொலிகளையும், தென்கச்சியாரின் இன்றொரு தகவலை தினந்தோறும் கேட்டு ரசித்தோம். திரைச்சித்திரம் என முழு படத்தையும் ஒலிவடிவிலேயே கேட்டிருக்கிறோம். அதைத்தொடர்ந்து ஒனிடா - பானசோனிக் - சாலிடர் என்ற ப்ளாக் அண்ட் ஒயிட் தொலைக்காட்சிகள் வாயிலாக ஞாயிறுக்கிழமைகளை கொண்டாடி இருக்கிறோம்.
சிக்கல் பக்கம் ஆண்டனாவை திருப்பி தூர்தர்ஷனுக்காக தவமிருந்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணா, மகாபாரதம், ஜங்கிள் புக், மாதவன் இருவேடங்களில் நடித்த ராஜ் கஹானி என்ற அரச கதை, சக்திமான், என பல டப்பிங் தொடர்களின் அதிதீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறோம். ஒலியும் ஒளியுமென்ற வாரந்திர வெள்ளிக்கிழமை புதுப்பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறோம். DD1, DD5 என காத்திருந்த வேளையில் ஈழம் பக்கம் ஆண்டனாவை திருப்பி சக்தி டிவி, ரூபவாகினி, சிரிச போன்ற அங்குள்ள தமிழ்/சிங்கள சேனல்களை பார்த்து குதூகலித்திருக்கிறோம். உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 'வானத்தை போல' படத்தை வெளிவந்த ஓரிரு மாதங்களிலேயே சிரச சேனலில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்.
அதே காலத்தில் வானொலிகளெல்லாம் FM என்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அலைவரிசையில் அணிவகுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த எங்கள் பகுதிக்கு காரைக்கல் பண்பலை தான் விடிவெள்ளியாக திகழ்ந்திருக்க, பாதி நேரம் ஹிந்தியே ஆக்கிரமித்திருந்த நேரத்தில் இலங்கையிலிருந்து சக்தி எஃப்பெமும், சூரியன் எஃப்பெமும் 24x7 தமிழில் பாடல்களை ஒலிபரப்புவதை கேட்பவதற்காக வில்லேஜ் விஞ்ஞானி போல வடி தட்டை வைத்தே புதுப்புது ஆண்டனாக்களை உருவாக்கி கேட்டு ஈழத்தமிழோடு ரசித்திருக்கிறோம். அப்போது தான் தமிழகத்தில் தனியார் அலைவரிசையாக ரேடியோ மிர்ச்சியும் வந்தது; பனிக்காலங்களில் அதையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.
ஊருக்கொரு டிவி என்றிருந்த நிலையில் அடுத்து தெருக்கொரு டிவி என்ற நிலையில் வளர்ச்சி வந்த நிலையிலேயே, கலர் டிவியும் அதிகமாக அடியெடுத்து வைத்தது. VCR வந்தது வாடகைக்கு கிடைக்கும் அதை வாடகைக்கு எடுக்க கடும்போட்டி இருக்கும் கேசட் வாடகை எடுத்த தலைமுறையும் நாம்தான், சைக்கிள் வாடகைக்கு.எடுத்து கற்றுக்கொண்ட நம் நினைவுகள் பசுமையானவை.
முக்கால் சைக்கிள்,ஒயர்பிரேக் சைக்கிள் ரேஞ்சர் சைக்கிள் டி.வி.எஸ் 50, பஜாஜ் எம் 80 என்ற வரிசையாக புதுப்புது வாகன படையெடுப்புகளில் பயணித்திருந்தோம். புது மாப்பிள்ளைக்கான சீதன பைக்காகி போன டி.வி.எஸ் விக்டர், ஹிரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் போன்றவற்றின் வருகையும், பல்சர், அவஞ்சர் தொடங்கி இப்போது TVS Apache RTR 200, Suzuki Gixxer,
Yamaha FZ-FI, Honda Hornet என அனைத்தோடும் பயணித்து கொண்டிருக்கிறோம்.
ரஜினி - கமலை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இடையே புது என்ட்ரி கொடுத்த விஜயை எங்களின் அடுத்த உச்ச நட்சத்திரமாக பார்த்தோம். மனதை தொட்டு சொல்லச்சொன்னால், இன்றைய அஜித் ரசிகர்களாக இருக்கும் 80களின் ஆட்களெல்லாம் ஆரம்பத்தில் விஜய் ரசிகனாகத்தான் இருந்திருப்பார்கள். கேலிக்கிண்டலுக்காகவே தனக்கு விஜயை பிடிக்குமென சொல்லத் தயங்கியவர்களே இங்கு அதிகம்; அது பெரிய கதை. இப்போது சிம்பு - தனுஷ், சிவக்கார்த்திக்கேயன் - விஜய் சேதுபதி - அசோக் செல்வன் எனவும், குஷ்பூ- மீனா- சிம்ரன்-நக்மா- ரம்பா என ரசித்து கொண்டிருந்த காலம் மறந்து கீர்த்தி சுரேஷ் - ஸ்ரீதிவ்யா - லெஷ்மி மேனன் - நயன்தாரா எனவும் நீளும் பட்டியலிலுள்ள பல இளநடிகர்களையும் ரசித்து கொண்டிருக்கிறோம்.
இசையுலகில் இளையராஜாவையும், கூடவே ரஹ்மானையும் ஒருசேர ரசித்தோம். அதோடு நிற்காமல் இன்று ஜி.வி. பிரகாஷ், அனிருத், சந்தோஷ் நாராயணனோடும் லயித்து நிற்கிறோம். கே.எஸ்.ரவிக்குமார் - வாசு - மணிரத்னத்தோடு ஷங்கர் - கெளதம் - வினோத் - நலன் குமாரசாமி - கார்த்திக் சுப்புராஜையும் கொண்டாடுகிறோம். டூரிங் டாக்கீஸ்லிருந்து மல்டி ஃப்ளெக்ஸ் சினிமாவையும் அதே உற்சாகத்தோடு தான் கண்டு கொண்டிருக்கிறோம்.
இப்படியாக உணவு - உடை - இசை - ரசனை என எல்லாவற்றிலும் 70களின் சாயலும் 90களின் சாயலும் கலந்து, எங்களுக்கென அடையாளமின்றி தனித்து நிற்கிறோம். 70களின் கடைசி தலைமுறையாகவும், 90களின் முதல் தலைமுறையாகவும் 80களில் பிறந்தவர்களான நாங்கள் கலப்படமான குழப்பம் நிறைந்த வரையறையோடு தான் இன்றளவும் இருக்கிறோம். இயற்கையோடு இயங்கிருந்ததோடு மட்டுமில்லாமல், அறிவியல் தொழிட்நுட்பத்தின் அபிரிவிதமான வளர்ச்சியையும் அதன் போக்கிலேயே அனுபவித்து கொண்டிருப்பவர்கள் என்ற சுயபெருமையும் எமக்குண்டு. என்றுமே மாறாத மாற்றம் என்ற ஒன்றில் சிக்கியும் தப்பி பிழைத்த எம்மைப்போன்ற 80களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்.
#thegreat80's
Saravanan thangappa
27/01/18

சிலோன் ரேடியோ