செவ்வாய், 29 செப்டம்பர், 2020

நிலா பிறை மூலம் மழை அறிதல் வானியல் வேளாண்மை விவசாயம்

aathi1956 ஞாயி., 16 டிச., 2018, பிற்பகல் 10:25 பெறுநர்: எனக்கு #ஆடிப் பிறை தேடிப் பிடி... #கார்த்திகைப் பிறை கண்டுபிடி.... #தைப் பிறை தடவிப் பிடி... என் #அஞ்ஞை இன்று எனக்குச் சொன்ன பழமொழி... எழுதப் படிக்கத் தெரியாத இந்தப் பள்ளியின் மரபணுவிலே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஊறிப்போன வேளாண்மை சார்ந்த #விஞ்ஞான அறிவைக் கண்டு வியந்து நிற்கிறேன் ... ஆடிப் பட்டம் தேடி விதை என்பதற்கான பொருள் ஆடிப் பிறை தேடிப்பிடி எனும் #பழமொழியில்தான் இருக்கிறதோ என வியக்கிறேன்... இவர்கள் பார்க்கும் இந்தப் பிறை #மூன்றாம் பிறை... அதாவது இந்த மாதங்களின் அமாவாசை அடுத்த மூன்றாம் நாள் பிறையினை வைத்து அப்பருவத்தின் #மழை பொழிவின் அளவைக் கணிக்கிறார்கள்... இந்த மூன்றாம் பிறையை வைத்து மழை பொழிவை கூறும் பழமொழி ஒன்றைக் கூறினார் எனது #அஞ்ஞை... "#வடக்க சாஞ்சா வரப்பெல்லாம் நெல்லு... #தெக்க சாஞ்சா தெருவெல்லாம் பெட்டி ... " அதாவது மூன்றாம் பிறை வடக்கு சாய்ந்து இருந்தால் நல்ல மழை பொழிந்து அதனால் அபரிமிதமாக நெல் விளைந்து அதன் கதிர்கள் எல்லாம் தாளாமல் வரப்பு மூடி சாய்ந்து கிடக்குமாம். இது தான் வரப்பெல்லாம் நெல்லு என்பதாம்.... அதே மூன்றாம் பிறை தெற்கு சாய்ந்து இருந்தால் மழை குன்றி விளைச்சல் இன்றி மக்கள் தானியங்களுக்காக தெருவில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அக்கம் பக்கத்தில் தானியங்களை வாங்கும் நிலை உருவாகுமாம். இது தான் தெருவெல்லாம் பெட்டி என்பதின் பொருளாம்.... போன தை பிறை பார்த்தார்களாம் ... தெற்கில் சாய்ந்து கிடந்ததாம். அது போலவே இந்த வருட கார் பருவ மழை பொய்த்தது... இப்போது கார்த்திகை பிறை பார்க்க மறந்து போனார்களாம்... இன்று ஞாபகம் வந்து நாள் சென்ற பிறையை பார்த்த போது சற்று வடக்கு சாய்ந்தே இருந்தது. எனவே கோடை பருவ மழை இருக்கும் என்றும் அடுத்த கார் பருவமழையும் நன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றார் .... அது போல "கார்த்திகை பிறை பார்த்து நாற்றைப் போட்டு கரை ஏறு" என்றும் சொல்லுவார்களாம். அதாவது கார்த்திகை பிறையை அடுத்து செய்யப்படும் நடவில் நோய் தாக்குதல் அதிகம் வருமாம். எனவே கார்த்திகைக்குள் நடவை முடித்துவிட வேண்டுமாம்.... இந்த மூன்றாம் பிறைக்குள் இன்னும் எத்தனை எத்தனை விஞ்ஞான அறிவுகளை நம் முன்னோர்கள் மறைத்து வைத்துள்ளனரோ என வியந்தே போகிறேன்... இதச் சொன்னால் நம்மள இந்துத்துவா அடிமை, சாதி வெறியன், மூட நம்பிக்கைகாரன் அப்படி இப்படினு இன்னும் என்னென்னவோ சொல்லி நம்மள முட்டாளாக்குவாங்கே இந்த திருட்டு திராவிட வந்தேறிகள் ... இந்த திருட்டு திராவிட கும்பலுக்கு ஏற்ற மாதிரி இப்பலாம் புயலையும் மழையையும் இந்த மனிதர்களே தொழில்நுட்பத்தை வைத்து மாற்றியமைக்கும் நிலைக்கு வந்துவிட்டதைத்தான் இன்னும் நம்மாள் புரிந்து கொள்ள முடியவில்லை .... #செல்லப்பாண்டியர் #தமிழர்நடுவம் ஆதி பேரொளி உடையார் முதல் பாகம் இதே போன்ற குறிப்பு உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக