செவ்வாய், 29 செப்டம்பர், 2020

இராவணன் பார்ப்பனர் அப்பர் சான்று இராமாயணம்

aathi1956 செவ்., 18 டிச., 2018, முற்பகல் 9:28 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி # இராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும் தகவல் இதோ: "மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன் வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன் நூலினா னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக் காலினா லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே" பொருள்:- பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம் வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர் நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும். # பூணூலும் வேத நாவும் ராவணனையே குறிக்கும் என்பதற்கு கம்ப ராமாயணம் துணை புரியும்; இதோ கம்பன் கூற்று:– "ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன்" — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:- ஆயிரம் வேதப் பாடல்களில் சிறந்த ஐயர். ஆக.... இராவணன் தமிழன் என்றால் சரிதான்... ஆனால் இராவணன் திராவிடனல்ல... இராவணன் ஒரு தமிழ் அந்தனன்/பார்ப்பணன். # எங்கள் பாட்டன் இராவணன்... ஆகவே, பார்ப்பனர்களை ஆரியர் என்பவர்கள்... இராவணனை பாட்டன் என உரிமை கோராதீர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக