செவ்வாய், 29 செப்டம்பர், 2020

பார்ப்பனர் கம்யூனிஸ்ட் இராமமூர்த்தி திராவிட எதிர்ப்பு நூல்

aathi1956 சனி, 15 டிச., 2018, முற்பகல் 9:01 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி ப.இராமமூர்த்தி (பி.இராமமூர்த்தி)-- நினைவு நாள் இன்று (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர். ஒரு தமிழர். அந்தணர். தமிழக சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். 4வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் என்ற புத்தகத்தை எழுதி திராவிட இயக்கத்தினர் இந்திய விடுதலைப் போரில் செய்த துரோகங்களைக் கிழித்தெறிந்தவர். இதேப் பெயரில் பின்னர் வீரமணி வேறொரு புத்தகம் எழுதி முட்டுக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று.. அந்தக் கிழிகிழித்திருப ்பார்.. மேலும், இராமமூர்த்தி திராவிட மாயை என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்... இவ்விரு புத்தகங்களையும் கம்யூனிஸ்டு கட்சி அமுக்கியே வைத்துள்ளது (பல்லக்குத் தூக்கும் உரிமை பறிபோய் விடுமே). அவர் எழுதிய இன்னுமொரு நூல் காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து.... கம்யூனிஸ்டுகள் மறந்து விட்ட முற்போக்கு தமிழர் அந்தணர் இராமமூர்த்திக்கு எமது புகழ் வணக்கம்.. # நாம்_தமிழர் பொதுவுடைமை கம்யூனிசம் புத்தகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக