திங்கள், 28 செப்டம்பர், 2020
திமுக வன்னியர் ஆதிக்கம் திருமா வெளியேற்றம்
aathi1956
செவ்., 27 நவ., 2018, பிற்பகல் 1:57
பெறுநர்: எனக்கு
பா. வெங்கடேசன்
சாதி அழுத்தம் !
திமுகவில் 'வன்னியர்கள் லாபி' என்று ஒன்றிருக்கிறது.இந்த லாபியின் தலைவராக ஒருகாலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தார்.தற்போது துரைமுருகன் இருக்கிறார் போலும்.வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை மாவட்டச் செயலாளர்களும் இவர்களின் கீழ் இயல்பாகவே அடிபணிவார்கள்.காரணம் வேறொன்றுமில்லை! அதீத சாதிப்பாசமே!
வீரபாண்டி ஆறுமுகம் கலைஞரையே எதிர்த்துப் பேசக்கூடிய அளவிற்கு கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்தார். வைகோ திமுகவில் இருந்து பிரிந்தபோது வீரபாண்டி ஆறுமுகமும் ஒரு கட்டத்தில் வைகோவுடன் செல்வதாக இருந்தது. முரசொலி மாறனும், அழகிரியும் நேரடியாகவே அவரிடம் மன்றாடி தக்க வைத்தார்கள். இந்த வன்னியர் லாபியின் மீதான பயத்திலேயே சேலம் நிலஅபகரிப்பு வழக்கில் ஆறுமுகம் மீது எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியாத கையறு நிலையில் கலைஞர் இருந்தார். துரைமுருகன் பொதுப்பணிதுறை அமைச்சராக இருந்தபோது கூட கடலூர் சிப்காட் நிறுவனத்தில் பெரிய தொகை கபளீகரம் செய்தார்.கட்சிக்குக்கூட பங்கு தராமல் அவருடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டதைக் கண்டு திமுக தலைமை கோவத்தில் அவரை சிறைத்துறை அமைச்சராக மாற்றியது. ஆனால் பதவியை பிடுங்க முடியவில்லை.காரணம், வன்னியர்களின் லாபி!
வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்குப் பிறகு அவரின் குடும்பத்தையே ரெண்டாகப் பிரித்து செல்வாக்கை குறைத்தது ஸ்டாலின் செய்த ஒரு தந்திரம். ஏனென்றால் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்த வரை ஸ்டாலினை ஒரு ஆளாகக் கூட அவர் மதித்தது இல்லை என்பதே உண்மை. இப்போது சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. தற்போது திமுக வன்னியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் துரைமுருகன் வீரபாண்டியாரின் இடத்தைப் பிடித்து விட்டார். திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகளை கழற்றி விட நினைப்பதை ஏதோ கட்சியின் முடிவாக பார்க்க நினைப்பது அபத்தம். அது வன்னிய மாவட்டச் செயலாளர்கள் துரைமுருகன் வாயிலாகக் கொடுக்கும் சாதிய அழுத்தம். துரைமுருகனின் எகத்தாள பேட்டியும் அதையே உணர்த்துகிறது.
2006 ல் ஸ்டாலின்,மதிமுகவை திமுக கூட்டணியில் இடம்பெறவிடக்கூடாது என்று நினைத்தார்.அதுவரையில் கூட்டணியில் இருந்த மதிமுகவை தொகுதி பேச்சுவார்த்தையில் அவமானப்படுத்தி துரைமுருகன் வாயிலாக வெளியேற்றினார். இன்று அதே நிலைதான் விடுதலை சிறுத்தைகளுக்கும். வேறு ஒரு வழியில் கூட்டணியில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதெல்லாம் திருமாவிற்கு புரியாமல் இல்லை. அவமானத்தைப் பொறுத்து கொண்டால் எம்.பியாக ஆகலாம் என்கிற பொறுமையில் இருக்கிறார் அவ்வளவே.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக