திங்கள், 28 செப்டம்பர், 2020
திராவிடம் கருத்தியல் தொடங்கியது அயோத்திதாசர் ஈவேரா மிக பின்பு
aathi1956
செவ்., 4 டிச., 2018, முற்பகல் 9:33
பெறுநர்: எனக்கு
# திராவிடத்_தந்தை யார்???
# ஈவெராவா ???
மதராஸ் மாகாணம் (Madras Presidency) என்று தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி என்று பல்வேறு இனங்கள் வசித்துவந்த காலக்கட்டத்தில், அனைத்து இனத்தவரையும் பொதுவாக இணைக்க
# தென்னிந்தியர் அல்லது # திராவிடர் என்ற பொதுவானதொரு அடையாளம் தேவைப்பட்டது....
தாத்தா # அயோத்தியதாசப்_பண்டிதர் 1891ல் # திராவிட_மகாசன_சபை தொடங்கினார்.... இவர் தான் திராவிடிய கருத்தியலின் முன்னோடி....
இவருடன் ஒத்த கருத்தியல் கொண்டிருந்த தாத்தா # இரட்டைமலை
# சீனிவாசனும் இதே காலகட்டத்தில் இவருடன் இணைந்து பணியாற்றினார்...
பிறகு 1912 -1916 காலக்கட்டத்தில் தென்னிந்தியர்களுக்கு / திராவிடர்களுக்கென்று புதியதொரு அமைப்பு "# தென்னிந்திய_நல_உரிமைச்_சங்கம் " என்ற பெயரில் # டி_எம்_நாயர் மற்றும்
# தியாகராய_செட்டியார் ஆகியோரால் தொடங்கப்பட்டது... "ஜஸ்டிஸ்" என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தியதால், # நீதிக்கட்சி என்ற பெயர் நிலைத்துவிட்டது....
இந்தக் காலக்கட்டத்தில் ஈவெரா எந்தவொரு திராவிட அரசியலிலும் இல்லை... 1919ல் பொது அரசியலுக்குள் வந்த ஈவெரா அப்போதும் தன்னை # இந்தியவாத
# காங்கிரசு கட்சியில் தான் இணைத்துக் கொண்டார், கதர் ஆடையைத் தான் அணிந்து கொண்டாரே தவிர, தென்னிந்தியவாத நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை....
பின்னர் 1925ல் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈவெரா அப்போதும் நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை... அதே ஆண்டு
# சுயமரியாதை_இயக்கம் என்றதொரு இயக்கத்தை தொடங்கி தனித்தே இயங்குகினார்....... நீதிக்கட்சிக்கு ஆதரவாக 1926, 1930 தேர்தல்களில் பிரச்சாரம் செய்த ஈவெரா, பிறகு
# கம்யூனிஸ்ட் களுக்கு ஆதரவாக இயங்கிவிட்டு, பிறகு மீண்டும் நீதிக்கட்சி க்கு ஆதரவாக பேசத் தொடங்கினார்...
இதற்கிடையில், 1920 தொடங்கி 1937 வரையிலான 17 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் மதராஸ் மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி ஆனது....
கடைசியாக, 1937ல் நீதிக்கட்சியில் இணைந்த ஈவெரா 1938ல் அதன் தலைவரானார்... 1940ல் இருந்து நான்காண்டுகள் வருடாந்திர செயற்குழு கூட்டத்தை நடத்தாத ஈவெரா, கடுமையான ஏதிர்ப்பு காரணமாக 1944ல் செயற்குழு கூட்டத்தை நடத்தி,
இனிமேல் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற முடிவெடுத்து நீதிக்கட்சி என்ற பெயரை # திராவிடர்_கழகம் என்று இயக்கமாக மாற்றினார்... இதுதான் தற்போது இருக்கும் #திக ... இதிலிருந்து 1949ல் பிரிந்தது தான்
# திமுக ....
இதுதான் வரலாறு....
திராவிடத் தந்தை என்று அழைப்பதற்கு முதன்மை தகுதி தாத்தா அயோத்தியதாச பண்டிதருக்குத் தான் உண்டு....
இல்லையென்றால் டி.எம். நாயர் அல்லது தியாகராய செட்டியாரை வேண்டுமானாலும் திராவிடத் தந்தைகள் என்று அழைக்கலாம்....
ஈவெரா எப்படி திராவிடத் தந்தை ஆவார்??
மாணிக்கவாசகம் சீனி.
2 டிசம்பர், பிற்பகல் 9:57
அயோத்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக