செவ்வாய், 29 செப்டம்பர், 2020

உயர்சாதி வெறியே ஆரியம் அண்ணாதுரை புதுவிளக்கம் பச்சோந்தி

aathi1956 வியா., 20 டிச., 2018, பிற்பகல் 12:04 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி ஈவெரா கருத்தை மறுத்து அந்தர் பல்டியடித்த அண்ணாதுரை... அண்ணா சொல்கிறார்.... "உன்னைத்தான் தம்பீ! உனக்குத்தான் தம்பீ! "தம்பி, ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை, அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சிகளிடம் இருக்கிறது, நாயுடுகளிடம் இருக்கிறது; ஏன் நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம். எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்டமாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக்கிறது. இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம். ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத்தப்பட்டிர ுக்கிறது; அதைப் புகுத்தி, பாதுகாத்துவரும் பணியில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும்கூட ஈடுபடக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம். எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித் தொழிக்க வேண்டும் - அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை! எட்டிப் போடா சூத்திரப் பயலே! - என்று ஐயர் பேச்சும் ஆரியம்தான்! கிட்டே வராதே சேரிப் பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்! படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியந்தான்! மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்! நாடார் அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! - என்று ஆரியம், பலப்பல முறைகளிலே தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்". -அறிஞர் அண்ணா ( 9 - 10 - 1955, திராவிடநாடு ) # நாக்கு வியாபாரிகள் வரையறை ஆரியர் ஆரியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக