திங்கள், 28 செப்டம்பர், 2020
ஆங்கிலேயர் இந்தியா ஆட்சியில் மொத்த சுரண்டல் 8 லட்ச கோடி ரூபாய்
aathi1956
21 நவ., 2018, பிற்பகல் 2:39
பெறுநர்: எனக்கு
10:17 (21/11/2018)
கடைசி தொடர்பு:10:24 (21/11/2018)
இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிச் சென்ற பணம் எவ்வளவு?!
Follow
Advertisement
பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும்.
பிரிட் டன், ஏறக்குறைய 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நிலையில், அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான இந்தியர்கள் அனுபவித்தது கடுமையான வறுமையையும் பஞ்சத்தையும்தான். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி, பிரிட்டிஷார் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும் என்று சொல்லி அதிரவைக்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் உட்ஸா பட்நாயக்.
இந்தியாவில் பிரிட்டனின் காலனி ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில் காலனி இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நிலவிய நிதி உறவுகள் குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சியை மேற்கொண்டவர் இந்த உட்ஸா பட்நாயக்.
``இந்தியாவிலிருந்து பிரிட்டன் வெளியேறி 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும், காலனி ஆதிக்கத்தின் வடுக்கள் இன்னமும் அகன்று விடவில்லை. 1858 லிருந்து 1947 -ம் ஆண்டு வரைக்கும் இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி நிலவியதாக வரலாறு கூறுகிறது என்றாலும், 1765 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில்தான் அவர்களது ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. அந்த 173 ஆண்டுகளாக இந்தியாவின் வளங்களைச் சூறையாடி, அவர்கள் அள்ளிக்கொண்டு சென்ற செல்வத்தின் மதிப்பு ஏறக்குறைய 9.2 டிரில்லியன் பவுண்டுகள் (45 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்). இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட ஏழாயிரத்து எழுநூறு லட்சம் கோடி ரூபாய்.
இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உபரி ஏற்றுமதியை, இன்றைய மதிப்பில் 5 சதவிகித வட்டி விகிதத்தோடு கணக்கிட்டால் வரும் இந்தப் பெருந்தொகை, தற்போதைய பிரிட்டனின் 2018-ம் ஆண்டு ஜிடிபி விகிதமான 3 டிரில்லியன் டாலரைவிட அதிகம். இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும்" என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் தாக்கல் செய்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார் உட்ஸா பட்நாயக். இந்தக் கட்டுரை அந்தப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
`இந்தியாவிலிருந்து தாராளமாகச் சுரண்டப்பட்ட பொருள்கள் மூலம், தங்கள் நாட்டின் தங்க இருப்பையும் அந்நியச் செலாவணியையும் உயர்த்திக் கொண்டனர். இந்தியாவிலிருந்து உலகளாவிய ஏற்றுமதியாகக் கிடைத்த உபரி வருவாய் அனைத்தும் லண்டனில் இருந்த இந்தியாவுக்கான தலைமைச் செயலாளரது கணக்குக்குச் சென்றது. பின், அதிலிருந்து ஒரு குண்டு மணி தங்கமோ அல்லது நிதியோ இந்தியர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படவே இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார் உட்ஸா.
அயல் நாட்டு அந்நியச் செலாவணியை உயர்த்த உழைத்த மக்களுக்கு, அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட வரிப் பணத்திலிருந்தே சொற்பமான கூலி வழங்கப்பட்டது. மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பணம் அனைத்தும் மக்களின் நலன்களுக்காகச் செலவிடப்படாமல் இறக்குமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அபரிமிதமாக வகுக்கப்பட்ட பட்ஜெட், நாட்டின் வருவாய் மதிப்பைப் பாதித்தது. இது விவசாயிகளின் வயிற்றைச் சுருக்கிக் காய வைத்தது. 1946-ல் இந்தியா சந்தித்த தனிநபர் உணவு பற்றாக்குறையை, இன்றளவும் தெற்குப் பகுதிகளில் எந்த நாடும் சந்தித்ததில்லை என்றும் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உட்ஸா.
``1900 முதல் 1945 - 46-ம் ஆண்டு வரை இந்தியாவின் தனிநபர் வருவாய், ஏறக்குறைய ஒரே சீராக இருந்தது. 1900-02-ல் இந்தியரின் தனிநபர் வருவாய் 196.1 ரூபாயாக இருந்தது. அதுவே 1945-46-ல், அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர், 201.9 ரூபாயாக இருந்தது. மேற்கூறிய காலகட்டங்களில் இந்தியரின் தனிநபர் வருவாய் அதிகபட்சமாக 223.80 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்தது 1930 -32-ம் ஆண்டுகளில்தான்.
இந்தியாவை ஆண்ட காலத்தில் பிரிட்டிஷார் ஒவ்வோர் ஆண்டும், மத்திய பட்ஜெட்டின் 26 முதல் 36 சதவிகிதத்துக்கு ஈடான செல்வத்தை இங்கிருந்து சுரண்டிக் கொண்டு சென்றனர். இதுதான், இந்தியாவை வளர்ந்த நாட்டை நோக்கிச் செல்லவிடாமல் மிகவும் பின் தங்கவைத்தது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சுரண்டிக் கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் மட்டும் அப்படியே இங்கேயே இருந்திருந்தால், இந்தியா சுகாதாரத்திலும், சமூக நலன்களிலும் மிகவும் சிறந்து விளங்கி இருக்கும்.
தற்போது ஒரு நாட்டில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் எப்படிக் கொத்துக் கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டதோ அப்படித்தான், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பிற தொற்று நோய்கள் போன்றவற்றால் மடிந்தனர். இதன் காரணமாக, 1911-ம் ஆண்டுவாக்கில் இந்தியர்களின் சராசரி வாழ்நாள் வெறும் 22 வயதாகவே இருந்தது.
இந்தியாவில் காலனி ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில் பிரிட்டன், உணவு தானியங்களை அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்ததோடு, அதிகமான வரி விதிப்பையும் செய்தது. இதனால் இந்தியாவின் வாங்கும் திறன் குறைந்து பஞ்சம் நிலவியது. 1900-ம் ஆண்டில் தனி நபரின் ஒரு நாளைய உணவுத் தேவை 200 கிராமாக இருந்த நிலையில், இரண்டாம் உலகப்போர் நடந்த 1946-ம் ஆண்டு காலகட்டத்தில், 137 கிராமாகச் சுருங்கியது. இது, ஒரு தனி மனிதனின் வாங்கும் திறனை கடுமையாகப் பாதித்தது. நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடி, தனிநபரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தி, இந்திய மக்கள் மத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தியது.
ஏறக்குறைய விடுதலை பெறப்போகும் காலகட்டத்தில் இந்தியா அப்போது இருந்த நிலையில், சமூகக் காரணிகளை மிக மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டு இந்தியாவிடம் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினர் பிரிட்டிஷார்" என்று அதில் மேலும் தெரிவித்துள்ளார் உட்ஸா பட்நாயக்.
பிரிட்டிஷ் பொருளாதாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக