புதன், 30 செப்டம்பர், 2020

தமிழறிஞர் கூடி திருவள்ளுவர் தினம் தை புத்தாண்டு பொய் கருணாநிதி திரிபு

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 19 ஜன., 2019, பிற்பகல் 5:11
பெறுநர்: எனக்கு
Kathiwakkam Baskaran Magan Naveenan , Logan K Nathan மற்றும் 17 பேருடன் இருக்கிறார்.
திருவள்ளுவர் திருநாள் வைகாசி-அனுடம்
==============================
=====================
சென்ற தி.மு.க. ஆட்சியில் தமிழ் வருடப் பிறப்பை சித்திரை முதல் திங்களிலிருந்து தை முதல் திங்களுக்கு மாற்றியமைத்த கருணாநிதி, அதற்காகச்சுட்டிய “ஆதாரம்”, 1921-ல் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் சான்றோர்கள் கூட்டத்தைத்தான்.
அந்தக் கூட்டத்தில் அனைத்துத் தமிழ் அறிஞர்களும் திருவள்ளுவர் ஆண்டை கி.மு. 31 என்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டும், தை முதல்திங்களே தமிழ் புத்தாண்டு என்றும் தீர்மானம் நிறைவேற்றினர் என்று கூறினார் கருணாநிதி.
இதே கூட்டத்தை ஆதாரமாகக் காண்பித்துத்தான் திருவள்ளுவர் பிறந்த தினத்தை தை மாதம் இரண்டாம் நாள் என்று 1971ல் திருவள்ளுவர் ஆண்டை தொடர் ஆண்டாக முடிவு செய்யும்போதும் கருணாநிதி கூறினார்.
ஆனால், 1921-ம் வருடம் எந்த மாதம், எந்த தினம் அந்தக் கூட்டம் நடந்தது என்பதை, 1971லும் சரி 2008லும் சரி, ”விவரமான” ஆளான ”தமிழினத் தலைவர்”, தனக்கே உரிய காரணங்களுக்காக, ”சுலபமாக” மறந்துவிட்டார்.
முதலில் தை முதல் தினமான பொங்கல் திருநாளை திருவள்ளுவர் பிறந்த தினமாக அறிவித்த கருணநிதி, பின்னர் திடீரென்று தை இரண்டாம் தினமான மாட்டுப் பொங்கல் தினம்தான் வள்ளுவர் பிறந்த தினம் என்று ”தனக்கே உரிய காரணங்களுக்காக” அறிவித்தார்.
தமிழ் புத்தாண்டை மாற்றும்போது அவர் கூறிய காரணத்தை ஆய்வு செய்யத் தொடங்கிய பால கௌதமன் அவர்களும், தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்களும், சித்திரையே தமிழ் புத்தாண்டு என்கிற உண்மைக்குப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியபோது, வேறொரு முக்கியமான உண்மையையும் கண்டுபிடித்தனர்.
அதாவது, மறைமலை அடிகள் தலைமையிலான தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் கூட்டம் 1921-ல் நடக்கவில்லை என்பதும், 1935-ல் மே மாதம் 18, 19 தேதிகளில் தான் நடந்தது என்பதும் உறுதியாகத் தெரிந்துள்ளது.
குறிபிட்ட இம்மாநாடு பச்சையப்பன் கல்லூரியில், திருவள்ளுவர் திருநாட் கழகத்தின் சார்பில் நடந்த போது, எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. மறைமலை அடிகள் தன் தலைமை உரையில், தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவுகளாக இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். முதலாவது, ஏசு கிறிஸ்து பிறப்பிற்கு 30 ஆண்டுகள் முன்பாகத் திருவள்ளுவர் பிறந்தார் என்பது; இரண்டாவது, திருவள்ளுவர் பிறந்தது வைகாசி மாதம் அனுட நாள்மீன் என்பது. இந்த இரண்டு முடிவுகளையும் மற்ற அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்றும் அவர் வற்புறுத்தவில்லை.
ஆனால், சுமார் 13-14ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட மயிலை திருவள்ளுவர் கோவிலில் ஆரம்பம் முதல் வைகாசி-அனுஷ தினத்தன்றுதான் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில்தான் திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் அதே தினத்தன்று (18 மே-1935) அம்மாநாட்டையும் ஏற்பாடு செய்கின்றனர்; மறைமலை அடிகளும் அதே வைகாசி அனுஷ தினத்தைத்தான் தன்னுடைய ஆராய்ச்சி முடிவாக அறிவிக்கிறார்.
அம்மாநாட்டின் முக்கிய நோக்கமே திருவள்ளுவர் பிறந்த தினத்தை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒரே தினத்தில் கொண்டாட வேண்டும் என்பதும் அந்த தினத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்பதும்தான். ஆகவே, அம்மாநாட்டில் பங்கு பெற்ற நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஒரே மனதாக வைகாசி அனுஷமே திருவள்ளுவர் அவதார தினம் என்று முடிவு செய்கின்றனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், திருவள்ளுவர் திருநாட்கழகத்தினரும் தமிழ் அறிஞர்களும் அம்மாநாட்டிற்குப் பச்சையப்பன் கல்லூரிக்குப்போகும் முன்பாக, ஒரு பீடத்தில் திருவள்ளுவரின் உருவப் படத்தையும், திருக்குறள் அடங்கிய ஓலைச் சுவடிகளையும் வைத்து ஊர்வலாமக மயிலை திருவள்ளுவர் கோவிலுக்குச் சென்று, அங்கே திருவள்ளுவர் சிலைக்கு பூஜை அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர்.
திரு.பால கௌதமன் அவர்களும், பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்களும் கருணாநிதியின் புளுகை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக மற்றொரு முக்கியமான ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர். அதாவது, மறைமலை அடிகளின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவரின் மகனான திரு. மறை திருநாவுக்கரசு அவர்கள், “1921ம் ஆண்டு தனது தந்தையாருடன் தானும் இலங்கைப் பயணம் சென்றதாகவும், அப்போது தை திங்கள் முதல் நாள் யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றினார்” என்று தெளிவாக எழுதியுள்ளார். ஆகவே கருணாநிதி சொன்னதைப் போல 1921-ம் ஆண்டு சென்னையில் மறைமலை அடிகள் தலைமையில் மாநாடு எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவு.
கருணாநிதி, நடக்காத ஒரு மாநாட்டை நடந்ததாகவும், நிறைவேற்றப்படாத தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டதாகவும் ஏன் சொன்னார்? எதற்காகச் சொன்னார்? காருணாநிதிக்கே வெளிச்சம்!
ஆனால் தமிழர்கள் நம்மைப் பொறுத்தவரை தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தினமாக வைகாசி-அனுஷ தினத்தையே கொண்டாடுவோம். மிஷினரிகளும் திராவிடர்களும் மாட்டு பொங்கல் அன்று கொண்டாடட்டும்... !!!!
17 ஜனவரி, முற்பகல் 11:12
  விழா பண்டிகை விடுமுறை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக