| சனி, 17 நவ., 2018, முற்பகல் 8:35 | |||
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
எளியபிள்ளை VS கேரம்போர்டு டீம்
நாம் எழுதிய யார் தமிழர் என்ற வரையறையை குற்றம் கூறியவன் எவன்?
அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் அமைதியுடன் கேட்டால் தகுந்த பதில் கிடைக்கும்
அப்படியானால் டீமை விட டீம் உறுப்பினருக்கு அதிகாரமோ
ஆம் இது வறட்டு முரட்டு தமிழ் டீம் இங்கே சகலருக்கும் சம உரிமை உண்டு
அதனால்தான் நாம் கூறிய வரையறையில் குற்றம் கண்டீரோ
ஆம் பழுதுள்ள வரையறையாய் இருந்தமையால் பரிசீலிக்க அருகதையற்றது என்றது நானே
யார் இந்தப் பொடியன்
வறட்டு முரட்டு கேரம்போர்டு டீமின் தலைமைப்பதிவன் வேல்முருகன்
ஓ தமிழ் கடவுள் முருகன் பெயரிலே பேர் இருப்பதால் எமது வரையறையை குற்றம் கூற துணிந்தானா கூறும் கூறிப்பாரும்
முதலில் யார் தமிழர் என்ற உமது வரையறையைச் சொல்லும்
பொங்குதே தமிழ் உலகில் வந்தேறி வந்தவரும் வாய்மொழியில் தமிழ் பேசினால் அவரும் தமிழரே இதுதான். எமது வரையறை
இதற்கு தாங்கள் கூறும் விளக்கம்
ஹாஹா புரியவில்லை யாரெல்லாம் தமிழ் பேசுகிறார்களோ அவர்கள் தமிழர்கள்
ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது பிறப்பிலே தமிழ்சாதியில் பிறந்தவரும் தொடர்ந்து தமிழ்பண்பாட்டை பின்பற்றுபவரும் தமிழரே ஒழிய இடையில் வந்து தினத்தந்தி படித்து தமிழ் பேசுபவரும் தமிழராக ஒத்துக்கொள்ள முடியாது
உத்தமவில்லன் என்ற தமிழ் படத்தில் நடித்த கமலகசாயம் தமிழன் இல்லையோ
பத்துப்படம் தமிழில் நடித்தாலும் இனக்குழு சொல்லாமல் எவரும் தமிழராக முடியாது
திருவள்ளுவருக்கு சிலை அமைத்த வணக்கத்துக்குரிய கருணாநிதி
தமிழ்மாநாடு நடத்தினாலும் மருதூர கோபால மேனன் மகனுக்கும் இதே நிலைதான்
உண்மையாக
உண்மையாக
நிச்சயமாக
நிச்சயமாக
உமது பதிவின் மீது ஆணையாக
பதிவு என்ன நான் பதியன் போட்ட பூவின் மீது ஆணையாக
வேல் முருகா நன்றாக என்னைப்பார் நான் கூறிய வரையறை குற்றமா
எளிய பிள்ளையே நீரே உண்மைத்தமிழரும் ஆகுக வாழ்வது யாராக இருந்தாலும் ஆள்வது தமிழாக இருக்கட்டும் என நீர் சொன்னாலும் குற்றம் குற்றமே இங்கு பிறந்தாலும் அயலான் அயலானே எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
அங்கம் புழுதிபட ஸ்ட்ரைக்கரில் பவுடர் பூசி பங்கம் பட இரண்டு விரல்களை சொடுக்கி காய்களை சுண்டி சுண்டி அடிப்பவனோ எம் வரையறையை குற்றம் கூறுபவன்
சுண்டி அடிப்பது எங்கள் குலம் அண்டி வந்தேறிகளுக்கு ஏது குலம். கேரம் போர்டை அடித்து பதிவு போடுவோம் எளியபிள்ளையே உமைப்போல் தமிழராக நடித்து பதிவு போடுவதில்லை
15 நவம்பர், PM 12:56 · Facebook
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக