| புத., 17 அக்., 2018, முற்பகல் 10:57 | |||
Logan K Nathan
தமிழின் ஒரே லோகாயத நூல் : காராணை விழுப்பரையன் மடல்.
கடவுள் மறுப்பு தத்துவமான லோகாயதம் (Lokayata) பேசுகிற ஒரே தமிழ் இலக்கியம் "காராணை விழுப்பரையன் மடல்" . இது காமத்தைப் பாடுபொருளாக கொண்ட அக இலக்கியம். குலோத்துங்க சோழனிடம் அமைச்சராகவும், படைத்தளபதி ஆகவும் இருந்த காரணி (சீர் கருணீகர்) ஆதிநாதன் மீது "கலிங்கத்துப் பரணி பாடிய ஜெயங்கொண்டார்" இயற்றிய நூல் இது. ஓலைச்சுவடியாக இருந்த இவ் அரிய நூலை" நாசா விண்வெளி ஆய்வு மையத்தில்" பணியாற்றும் திரு. நா. கணேசன் அவர்களால் சமீபத்தில் முதன்முதலாக அச்சில் பதிப்பிக்கப்பட்டது.
"விழுப்பாதராயன்" (பிரம்ம க்ஷத்திரியன்) பெயரிலேயே "விழுப்புரம் (விழுப்பரைய புரம்) " என்ற நகரின் பெயர் உருவானது. இவர்கள் வழி வந்தவர்களில் சிலர் பாண்டிய நாட்டிற்கு கணக்குப் பிள்ளைகளாக சென்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

Logan K Nathan www.projectmadurai.org - இல் இருக்கிறது.
Anilkumar Reddy
காரணை என்பது ஊர். விழுப்பரையன் கடற்படையை வழிநடத்திய பல்லவராயர்.
காரணை என்பது ஊர். விழுப்பரையன் கடற்படையை வழிநடத்திய பல்லவராயர்.
Logan K Nathan
லோகாயதம் (Lokayata).
"லோகாயதம்" அல்லது "உலகாயதம்" என்றால் இவ்வுலக வாழ்க்கை மட்டுமே உண்மையானது ; கடவுள், ஆன்மா, மறு பிறவி போன்ற நிருபிக்க முடியாதவற்றை பொய் என்று கூறுகிற ஒரு தத்துவ கோட்பாடு.
வாழ்க்கையில் எது மகிழ்ச்சியை இன்பத்தை தருகிறதோ அது நல்லது. அதை அனைவரும் நாட வேண்டும். துன்பத்தை தருகின்ற செயல்களை தவிர்க்க வேண்டும். அடிப்படை அறங்களை கடைபிடித்து, பொருள் ஈட்டி, இன்பமாக வாழ்வதே மனித வாழ்வின் பயன். மோட்சம், வீடுபேறு என்பது ஏமாற்று வேலை. அதைப் பற்றி பேசுவது பயனற்றது.
ஆங்கிலத்தில் "Materialism" என்றும், வட மொழியில் தேவர்களின் குரு பிரஹஸ்பதி பெயரில் "பிரஹஸ்பதியம்" என்றும், "சாருவாகம்" என்றும் கூறப்படுகிறது. சாணக்கியன் எழுதிய "அர்த்த சாஸ்திரத்தில் "லோகாயதம்" என்ற சொல் முதன்முதலாக குறிக்கப்படுகிறது.
தமிழில் மணிமேகலை காப்பியத்தில் "சமயக் கணக்கர் திறம் உரைத்த காதை" யில் "உலகாயதம்" என்றும், "பூதவாதம்" என்றும் ஒரு தனி தத்துவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
14 அக்டோபர், PM 3:40

"விழுப்புரம்" ஆன "விழுப்பரையபுரம்"
பல்லவப் பேரரசன் "நிருபதுங்க வர்மன்" இப்பகுதிக்கு ''விஜயநிருபதுங்க ஜெயந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம்'' என தனது பெயரை இட்டு, நான்கு வேதமும் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கியிருக்கிறான். '' ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்'' என தனது பெயரை இந்தப் பகுதிக்குச் சூட்டிய "முதலாம் இராசராசன்" அந்தணர்களுக்கு மானியமாகவும் வழங்கியிருக்கிறான்.
விஜயநிருபதுங்க ஜெயந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (1265) முதல் விழுப்பரையபுரம் - விழுப்புரம் என அழைக்கப்பட்டு வருகிறது.
'‘விழுப்பாதராயர் (விழுப்பரையார்)‘' என்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் "அபிதான சிந்தாமணி " எனும் நூல் ஆவணித் திருவிழாவில் சுந்தரபாண்டியரின் பட்டாபிஷேக தினமாகிய (7)ஆம் திருநாளில் அவரிடமிருந்து பொன்னேழுத்தாணியைப் பெற்று நாடோறும் கணக்கு வாசிக்கும் உரிமையுடையவர்கள்" என்றும், பாண்டிபதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர் என இவர்கள் சம்பந்தமாக ஒரு பழமொழியும் வழங்கப்படுவதாக தெரிவிக்கிறது.
யார் இந்த விழுப்பரையர்?
"பிறந்த குடிக்கே சிறப்பு உண்டாக்கியவர்கள் விழுப்பரையர். வைதீக பிராமிணர்களுக்க
ு அடுத்தபடியாக ராஜ சபையில் உத்தியோகத்திற்குப் பேர் போனவர்கள். தஞ்சாவூர் நாயக்க ராஜாக்கள் காலம் வரைகூட அந்தச் சமூகத்துக்கு ராஜாங்கத்தில் இருந்த முக்கியத்துவம் தெரிகிறது. இந்த விழுப்பரையர்களை '' விழுப்பிரமர்'' என்றும் சொல்வதுண்டு. "பிரமர்" என்பது பூர்வத்தில் அவர்களுக்கு இருந்த வைதீகப் பிராமண மூலத்தைக் காட்டுவது. '' அரையர்'' என்பது பிற்பாடு ஏற்பட்ட ஷத்ரிய ஸ்தானத்தைக் காட்டுவது; ''விழுப்பாடராயர் (விழுப்பாதராயர்)" என்றும் இன்னொரு பேர் அவர்களுக்கு இருந்திருக்கிறது.
சோழர்கள் காலம் வரையில் பிரம்மதேயமாயிருந்த நடுநாட்டுச் சதுர்வேதிமங்கலத்தில், அப்புறம் காடவராயர் ஆட்சி ஏற்பட்டு, அதற்கும் அப்புறம் பாண்டியன் பிடித்தபோது விழுப்பரையர்களே அங்கே நிர்வாகத்தில் முக்கியமான ஸ்தானம் வகிக்கிற சமூகமாக ஆகி, அதனால் தான் ஊருக்கே விழுப்புரம் என்று பேர் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது" - என விழுப்பாதராயர் எனப்படுவோர் குறித்தும், விழுப்புரம் குறித்தும் நினைவில் வாழும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திரர் அளித்துள்ள விளக்கம் (நூல்: காஞ்சி முனிவர் நினைவுக்கு கதம்பம்) இங்கு குறி்ப்பிடத்தக்கது.
இவர்கள் வழிவந்த, வீரராசேந்திரக்க
ாரணி விழுப்பரையன் எனும் படைத்தலைவன் பற்றி அபிராமேசுவரர் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. '' ஜெயம்ன்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்'' என்கிறது திருநாவலூர்க் கல்வெட்டு.
"விழுப்பரையன்" என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டப் பகுதியாக விழுப்புரம் இருந்துள்ளது என்பதற்கு மேற்கண்டவை சான்றாதாரமாக உள்ளன. வணிகர்கள் பெருமளவில் வாழ்ந்த ஊர்கள் 'புரம்' என்று பின்னொட்டால் அழைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .
அந்த வகையில் முன்னொரு காலத்தில் விழுப்புரம் வணிக நகரமாக இருந்திருத்தல் வேண்டும். விழுப்பரையனின் ஆளுகைக்குட்பட்ட 'ஊர்' 'புரம்' சேர்க்கப்பட்டு விழுப்புரமாகி இருக்கிறது.
Viluppuram is named after a class of people known as "Vizhupparaiyar" (விழுப்பரையர்). One of the famous Tamil poets Jayamkondar wrote a book titled "Karanai Vizhupparaiyan madal" (also known as Aadhinatha Valamadal) on the praise of Aadhinathan Vizhupparaiyan who served as a commander in the army of Kulottunga Chola I. The town came to known after the "Vizhupparaiyan" sect named after him. They are also known as "Vizhupaadharaiyar".

இலக்கியம் சோழர் பல்லவர் கலிங்கத்துப்பரணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக