சனி, 26 செப்டம்பர், 2020

தேவதாசி ஒழிப்பு மூவலூர் ராமாமிர்தம் அறுத்தது பொட்டுத்தாலி

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 28 செப்., 2018, முற்பகல் 11:26
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம்
நைனா ராம்சாமி பக்தகோடிகளே ராமாமிர்தம் அம்மையாரைப் பற்றிய தகவல்களை படியுங்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சின்ன மேளம், பெரிய மேளம், நட்டுவாங்கம் ஆகிய மூன்று குடிகள் பிராமணர்களால் கலைச்சேவை என்கிற போர்வையில் பொட்டுத்தாலி கட்டப்பட்டு பருவமெய்திய பின் அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்தார். இதற்கு இந்த இன மக்களிடம் கூட போதிய ஆதரவு கிடைக்கவில்லை. சமூகத்தில் நலிவடைந்தவர்கள் ஆகையினாலும், சிலர் விபச்சாரத்தால் நல்ல வருமானம் பார்த்து வந்த சூழலில் அதை விட வேண்டி வருமோ என தயங்கியும் பெரிதாக யாரும் அம்மையாருக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
எனினும் இம்முறையை விரும்பாத, பாதிக்கப்பட்ட பெண்களை தமிழ் நாடெங்கும் தேடி அவர்களை ஒன்றிணைத்து வலுவான எதிர்குரலை ஏற்படுத்தினார். அந்த நேரம் பிராமணர்களை வசைபாடி வந்த புரட்சி பொங்கல் ராமசாமி நாயுடு தனக்கு ஆதரவளிப்பார் என நம்பி அவரது சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். எனினும் சமூகத்தை ராமாமிர்தம் அம்மையார் தனியாகவே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல மொழிப்புலமையும், கடுஞ்சொற்கள் பயன்பாடும் கொண்ட அவர் மேடையில் பேசினால் பதில் சொல்ல முடியாதவர்கள் சாணி எறிந்தனர். கல்லால் அடித்தனர். ஒரு சமயம் பேசி முடித்து வரும்போது அவரது கூந்தலை அறுத்தும் விட்டனர்.
இதனால் வெகுண்ட அம்மையார் பொட்டுத்தாலி கட்டப்பட்டுள்ள பெண்களை மேடையேற்றி பொதுமக்கள் முன்னிலையில் அந்த தாலிகளை அறுத்தெறிந்து இனி இவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என சினத்துடன் அறிவித்தார். இதுதான் சுயமரியாதை இயக்கம் முதன்முதலாக தாலி அறுத்த கதை.( ராமசாமி நாய்டுவுக்கும் இதற்கும் தொடர்பில்லை)
இந்த சம்பவத்திற்கு பிறகு அஞ்சி கிடந்த சின்ன மேளம், பெரிய மேளம், நட்டுவாங்கம் இன மக்கள் துணிச்சலுடன் மூவலூர் அம்மையாருக்கு ஆதரவு கொடுக்க தொடங்கினார்கள். எனினும் இந்த இனப்பெயர்களை கேட்டாலே எல்லா தரப்பு மக்களும் இவர்களை ஒதுக்குவதை கண்டு வருத்தமடைந்த அம்மையார், தான் வாழும் மயிலாடுதுறை பகுதியில் பெருமையுடன் வாழ்ந்த வேளாளர் இனத்திற்கு இணையான பெயர் வேண்டுமென எண்ணி இன்மூன்று இனங்களையும் ஒன்றிணைத்து அதற்கு இசை வேளாளர் என புதிய பெயரிட்டார்.( இதைக்கூட தட்சினாமூர்த்தி செய்த்தாக நம்பி வருகிறோம்)
மேலும் யாருக்கும் பொட்டுத்தாலி கட்டுவிக்காமல் இருக்க இதற்கு சட்ட பாதுகாப்பு வேண்டும் என்று திட்டமிட்ட அம்மையார் இதற்காக டாக்டர் முத்துலட்சமி ரெட்டியை நாடினார். பெண் என்பதாலும், நட்டுவாங்கம் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும் ஓரங்கட்டப்பட்டு வந்த டாக்டர் முத்துலெட்சுமிக்கு எப்படி பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்து தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியும் பெற்றார்.
இதுவரை நடந்த அனைத்திலும் ராமசாமி நாயுடு வெறும் மேடைப்பேச்சுக்களை மட்டுமே உதிர்த்து வந்ததாலும், செயல் வடிவில் எதுவும் செய்யாததாலும் அவர் மீது அதிருப்தியில் இருந்தார். இறுதியாக அரசியல்மணி என்கிற பெண்ணை ராமசாமி மணம் முடிக்கப் போவதாக தெரிந்தவுடன் மயிலாடுதுறையிலி
ருந்து வெஞ்சினத்துடன் ஈரோடு சென்று இருநாட்கள் ராமசாமியிடம் இதை நிறுத்தச் சொல்லி வாதாடினார். காமவெறி பிடித்த ராமசாமியிடமிருந்து கொள்கை ரீதியான சாதகமான பதில் வராததால் திராவிட கழகத்திலிருந்து வெளியேறினார்.
ஆட்சியை பிடிக்கும் ஆசையிலிருந்த அண்ணாதுரை போன்றோர் இதுதான் சமயம் என தங்களுக்கு இல்லாத தன்மானம் உறுத்துவதாக சொல்லிக்கொண்டு திராவிட கழகத்திலிருந்து வெளியேறி, திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார்கள்.
நல்ல கல்வியறிவும், எந்த முன்பின் முரண்பாடும் இல்லாத கொள்கை கொண்டவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அவர் தம் குல பெண்களுக்கு பிராமணர்கள் கட்டிய பொட்டுத்தாலியை அறுத்தாரே அன்றி அவருக்கு தாலி மீது அவநம்பிக்கையெல்லாம் இல்லை. அவரது திருமணம் கூட எளிய முறையில் கோவிலில் தீபம் முன் சத்தியம் செய்து தாலி கட்டிய திருமணம் தான்.
அப்புறம் இப்போ கீரமணி தாலி அறுப்பது யாருக்கு..?
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
3 மணி நேரம்்

Aathimoola Perumal Prakash
முத்துலட்சுமி ரெட்டி எழுதிய சுயசரித புத்தகத்தில் ஈவேரா பெயரே இல்லை.
அவர் காந்தியைத்தான் வழிகாட்டியாக எழுதியுள்ளார்.

தாலி சின்னமேளம் பெயர்மாற்றம் பெண் பெண்ணுரிமை போராளி பெண்ணடிமை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக