சனி, 26 செப்டம்பர், 2020

நியோகி பிராமணர் ஆதிக்கம் விஜயநகரம் அரசு குடியேற்றம்

 


aathi1956 aathi1956@gmail.com

சனி, 20 அக்., 2018, முற்பகல் 8:56
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நியோகி என்றால் யார் தெரியுமா?
# ஆந்திரத்திலிருந்து விஜயநகரப் பேரரசின் கன்னட அரசர்கள் கி.பி.14 ஆம் நூற்றாண்டிலும், தெலுங்கு அரசர்கள் கி.பி.15 ஆம் நூற்றாண்டிலும் தமிழகத்திற்குள் புகுந்து பெரும்பாலான பகுதிகளில் அரசமைத்தனர்.
அப்பொழுது அவர்கள் தங்களுடன் கன்னட, தெலுங்கு மொழி பேசும் பிராமணர்களை தமிழகத்திற்குள் கொண்டு வந்து கோயில்களில் சமஸ்கிருத வழிபாடு செய்ய நியமித்தனர்... அப்பொழுது அவர்கள் அழைத்து வந்த தெலுங்கு பிராமணர்களில் இரு பிரிவினர் இருந்தனர். ஒரு பிரிவினர் பூசை மட்டும் செய்யும் வைத்தீக்கீ அல்லது வேதீக்கி பிராமணர்கள். இன்னொரு பிரிவினர் தான் நியோகி பிராமணர்கள். இவர்கள் பூசை செய்ய மாட்டார்கள், பூசைத் தொழில் தடுக்கப்பட்டவர்கள் இவர்கள்.
இந்த நியோகி பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்து மொழி பெயர்க்கும் துபாஷிகளாகவும், வரி வசூலிக்கும் அதிகாரிகளாகவும் நாயக்க மன்னர்களால் தமிழ் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் அரசுப் பணிகளுக்காகவே தயாரிக்கப்பட்டவர்கள்... இவர்களே பாளையங்களில் அதிகாரிகளாக நாயக்க மன்னர்களால் நியமிக்கப்பட்டவ
ர்கள். பின்னர் இவர்கள் ஆங்கிலேய அரசின் பணியாளர்களாகவும் தொடர்ந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அரசு எடுத்த ஒரு ஆய்வில் சென்னை மாகாண அரசுப் பணிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 100 நியோகி பிராமணர்கள் இருந்துள்ளனர்.
# இந்த தெலுங்கு நியோகி பிராமணர்களில் குறிப்பிடத் தகுந்த வர்கள் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்திய பிரதமர் பி.வி.நரசிம்மராவ், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1946 ல் இருந்த தங்குதூரி பிரகாசம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்...
18 அக்டோபர், PM 7:56

வந்தேறி வேலைவாய்ப்பு ராவ் பட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக