சனி, 26 செப்டம்பர், 2020

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி வதந்தி என பொய் பாஜக அம்பலப்பட்டது

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 3 நவ., 2018, பிற்பகல் 2:05
பெறுநர்: எனக்கு
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
இந்தியா
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி.. காட்டிக்கொடுத்த குஜராத் முதல்வர் டிவிட்!
Updated: Thu, Nov 1, 2018, 20:58 [IST]
படேல் சிலை திறப்பில் தமிழை கேவலமாக மொழிபெயர்த்த அதிகாரிகள்- வீடியோ
காந்தி நகர்: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் எழுதி இருக்கும் தவறான தமிழ் மொழி பெயர்ப்பு உண்மைதான் என்பது குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி டிவிட் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.
குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.
இதில் Statue Of Unity என்பதை ஒற்றுமைக்கான சிலை என்று மொழிபெயர்க்காமல் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்று மோசமாக மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அப்படி மொழிபெயர்ப்பு நடக்கவில்லை அது பொய் என்று குஜராத் அதிகாரிகள் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் பாஜக இதுகுறித்து தெரிவித்த மறுப்பும், குஜராத் உயரதிகாரிகள் இதுகுறித்து தெரிவித்த மறுப்பும் தவறானது என்று பிபிசி புகைப்பட நிருபர் தனது புகைப்படம் மூலம் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தார். அங்கு தமிழ் தவறாகத்தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று நிரூபித்தனர்.
அதோடு இல்லாமல் இதில் இருக்கும் தவறு சரி செய்யப்படும் என்று குஜராத் அதிகாரிகள் உறுதியளித்ததாக அதிமுக அமைச்சர் மா.பா. பாண்டியராஜனும் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது அதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தமிழ் அங்கு தவறாகத்தான் எழுதப்பட்டு இருந்தது என்பதற்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபாணியே ஒரு எடுத்துக்காட்டு கொடுத்துள்ளார். இந்த சிலை திறப்பு குறித்து விஜய் ரூபாணி டிவிட் ஒன்று செய்துள்ளார்.
More pictures from the grand event marking the dedication of #StatueOfUnity to the nation
pic.twitter.com/JXcMO5dvj4
— CMO Gujarat (@CMOGuj) October 31, 2018
அவர் தனது டிவிட்டில் தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டு இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளார். இதில் தமிழ் மொழிபெயர்ப்பில் ''ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி'' என்று தெளிவாக எழுதி பின் அதை வெள்ளை மை வைத்து அழித்துள்ளது தெரிகிறது.
இதை வைத்து நெட்டிசன்கள் மீண்டும் பாஜகவினரை கலாய்த்து வருகிறார்கள். எதுக்கு தப்பு பண்ணனும், அப்பறம் எதுக்கு பொய் சொல்லி மாட்டிக்கனும் என்று கிண்டல் செய்துள்ளனர்.

பட்டேல் சிலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக