சனி, 26 செப்டம்பர், 2020

சீதக்காதி வரலாறு சேதுபதி மன்னர்

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 10 நவ., 2018, பிற்பகல் 4:17
பெறுநர்: எனக்கு
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
செத்தும் கொடை கொடுத்த கீழக்கரை சீதக்காதி மரைக்காயர் இராமநாதபுரம் சேது மன்னர் கிழவன் இரகுநாத சேதுபதியின் உற்ற நண்பராவார் கிழவன் சேதுபதி இவருடைய நல்லுரையைக் கேட்டு அரசபரிபாலனம் செய்தார் என அன்றைய காலத்து டச்சு ஆங்கில கிழக்கிந்திய வணிக நிறுவனங்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன
சீதக்காதி மரைக்காயர் இராமநாதபுரம் கடற்கரை ஊர்களில் அரசின் சார்பாக வரிவசூல் செய்யும் உரிமையைப் பெற்றிருந்ததோடு பாம்பன் நீர்வழித்தடங்களில் செல்லும் கப்பல்களை கண்காணிக்கும் உரிமையும் பெற்றிருந்தார்
போகலூர் என்னும் கிராமத்திலே இயங்கி வந்த அரசவையை நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கல்லிலான கோட்டை கட்டி இராமலிங்க விலாசம் என்ற அரண்மனைக்கு அரசவையை கொண்டு வந்தவரும் சீதக்காதி மரைக்காயரே
வானம் பொழிவதை மட்டும் வைத்து வயலில் கிடைப்பதை அனுபவித்த காலத்திலே பல தூர பகுதிகளான இலங்கை காரைக்கால் பாண்டிச்சேரி பரங்கிப்பேட்டை வரை கப்பல்களில் நெல் சங்கு இவற்றைக் கொண்டு சென்று பதிலாக மிளகு பட்டு சந்தணம் செம்பு என கொண்டு வந்து வணிகம் செய்து பொருளீட்டியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர்
சமயப்பொறைக்கு சிறந்த உதாரணமாக சைவராகிய மன்னர் சேதுபதியும் இசுலாமியராகிய சீதக்காதியும் இணைந்து திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தருக்கு ஆலயம் எழுப்பினர்
கிழவன் இரகுநாத சேதுபதி காலத்தில் இராமேஸ்வரம் ஆபில் காபில் தர்ஹாவிற்கு பக்கிரி புதுகுளம் கிராமம் தானமாக அளிக்கப்பட்டது
இராமநாதபுரம் ஈசா சாகிப் தர்ஹாவிற்கு கிழவன் ஏரி என்ற இடமும்
ஏர்வாடி சுல்த்தான் செய்யது இபுறாகிம் தர்ஹாவுக்கு மாயாகுளம் என்ற கிராமம்
கீழக்கரை புனித சதக்கத்துல்லாஹ் தர்ஹாவுக்கு தில்லையேந்தல் கிராமம்
புனித லத்தீப் தர்ஹாவுக்கு கிடாத்திருக்கை கிராமம் தானமாக வழங்கப்பட்டுள்ளதை சேதுபதி மன்னர்களது வரலாறு தெரிவிக்கின்றது
இது போக இராமநாதபுரம் புனித குத்பு சாகிப் தர்ஹாவிற்கு ஆண்டு தோறும் நடக்கும் கந்தூரி விழாவின் போது பத்து கலம் நெல்லும் பத்து கிடாய்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டதோடு தினமும் விளக்கு ஏற்ற அரைப்பணமும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது
சமயப்பொறை போற்றிய கிழவன் இரகுநாத சேதுபதி மன்னரையும் அவரது தலைமையமைச்சர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் நினைவுகளைப் போற்றுவோம்

சுப.பூபாலன்
புகலூர் அல்ல போகலூர் சத்திரக்குடி அருகில்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு

சுப.பூபாலன்
போகலூர்தான் அன்றைய சேதுபதி மன்னர்களின் தலைமைச் செயலகம்.

இசுலாமியர் இசுலாமியத்தமிழர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக