சனி, 26 செப்டம்பர், 2020

கைக்கோளர் பல சாதி கலந்த சான்று கல்வெட்டு

 

aathi1956 aathi1956@gmail.com

புத., 7 நவ., 2018, பிற்பகல் 2:46
பெறுநர்: எனக்கு
James Robert Cholanar
வில்லியான கைக்கோளப் பேரரையன்
-------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் வட்டம், சேரனூரில் உள்ள சுந்தர பாண்டிய தேவரின் கல்வெட்டு ஒன்று :-
"திருநலக்குன்றத்துப் பள்ளிகளில் செல்வன் வில்லியான கைக்கோளப் பேரரயனுக்கு"
என்று தெரிவிக்கிறது. இவர் விற்படையில் இருந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. கைக்கோளர் என்ற பெயரானது கீழ்கண்டவர்களுக
்கும் இருந்திருக்கின்றது என்று தெரியவருகிறது :-
"கைக்கோளன் பட்டன் திருவுடையானான கண்டமாணிக்க பல்லவரையானான அனந்தராமனேன்" (மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் குடுமியான்மலை கல்வெட்டு)
"விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுச் சிறுதனத்து அகம்படியக் கைக்கோளர்க்கு விட்ட வீரபோகம்" (முதலாம் குலோத்துங்கச் சோழனின் திருவாவடுதுறை கல்வெட்டு)
"கைக்கோள செட்டி குலசேகரப் பல்லவரையர்" (கி.பி.14 ஆம் நூற்றாண்டின் திருக்கோயிலூர் கல்வெட்டு)
"அடிகள் பழுவேட்டரையர் கைக்கோளன் குஞ்சர மல்லன் முருக்கனைப்" (முதலாம் ராஜராஜ சோழனின் கீழப்பழுவூர் கல்வெட்டு)
"தாமத நல்லூரில் கைக்கோளன் பெருமாள் மகன் பறையற் பறை எடுத்து முதலியார் சன்னகமலா நாயனார்" (அறகழூர் நாயக்கர் காலக் கல்வெட்டு)
"நம்பிராட்டியார் நேரியன் மாதேவியார் அகப்பரிவாரத்து கைக்கோளன் சோறுடையான் அருக்கனான அன்பராபரண மாராயன்" (விக்கிரம சோழனின் திருவிடைமருதூர் கல்வெட்டு)
மேற்குறிப்பிட்ட சான்றுகளில் இருந்து கைக்கோளர் என்ற பெயரானது பதவியின் பெயரினை குறித்தது என்பதாகும். மேலும் அப்பெயரானது செங்குந்தர் என்ற கைக்கோள முதலிகளையும் குறித்தது என்பதாகும்.

தொடர்பு அகமுடையார் செட்டியார் பறையர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக