சனி, 26 செப்டம்பர், 2020

இராவணன் பார்ப்பனர் தேவாரம் குறிப்பு

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 20 அக்., 2018, பிற்பகல் 6:02
பெறுநர்: எனக்கு
# இராவணன் ஒரு தமிழ் பார்ப்பான்.
மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்
வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினா னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்
காலினா லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
# இது கி.பி.7 ஆம் நூற்றாண்டில் அப்பர் பாடிய தேவாரப் பாடல்...
பொருள்:-
பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் (தமிழ் நால் வேதங்கள்) ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்
வேத நாவர்- மறை ஓதும் (தமிழ் நால் வேதங்கள்) நாவினை உடையோர், தமிழ் பார்ப்பனர்.
நூலினான் - நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்.
தொல்காப்பியத்தில் நான்கு தமிழ் வேதங்களாக தைத்தீரியம், பெளடீகம், தலவாகரம் மற்றும் சாமம் என்று கூறப்பட்டுள்ளது...இவையே பின்னர் ரிக் யஜூர் அதர்வண சாம வேதங்களாக திரிக்கப்பட்டன என்கிறார் தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர்...
இராவணன் சாம வேதத்தில் சிறந்த ஓதும் திறமை வாய்ந்தவன், தமிழ் வேத நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.
19 மணி நேரம் ·

பக்தி இலக்கியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக