|
17/4/16
| |||
Shankar A
வேட்பாளர் தம்பட்டம் 3
மதிமுக கூட்டணியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் நிற்பவர்தான் தமிழர்
முன்னேற்றப் படை வீரலட்சுமி. இவரது தமிழர் முன்னேற்றப்படையில் பொதுச்
செயலாளராக இருப்பவர் கணேசன். இவர் பூந்தமல்லி, நசரத்பேட்டை, ஜெயபிரகாஷ்
நாராயணன் தெரு, எண் 740 என்ற வீட்டில் குடியிருந்து வருகிறார். இது வாடகை
வீடு.
ஆறு மாதங்களுக்கு முன், இவரது வீட்டின் உரிமையாளர் வீரலட்சுமியை வீட்டை
காலி செய்யுமாறு கூறியுள்ளார். நான் தமிழகமே அஞ்சி நடுங்கும் ஒரு
இயக்கத்தின் தலைவி. என்னையா வீட்டை காலி செய்யச் சொல்கிறாய் என்று
வீரலட்சுமியும், கணேசனும் சேர்ந்து, வீட்டு உரிமையாளரை அடித்துள்ளனர்.
அது நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாராகியுள்ளது. நசரேத்பேட்டை காவல்
நிலையத்தில் ஆய்வாளர் அலெக்சாண்டர், சட்டப்படி நியாகமாக நடவடிக்கை
எடுத்து, கணேசன்,
வீரலட்சுமி ஆகிய இருவரையும் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதையடுத்து, வீரலட்சுமி, வீட்டு உரிமையாளர் பெண்மணியை அணுகி, நான் அடுத்த
வாரம் வீட்டை காலி செய்து விடுகிறேன். ஆனால் அதற்கு முன், எனக்கு
வீடியோவில் நான் சொல்வது போல பேட்டியளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அந்த வீடியோ பேட்டியில், நசரத்பேட்டை ஆய்வாளர் அலெக்சாண்டர் சொல்லித்தான்
வீரலட்சுமி மீது புகாரளித்தேன் என்று வீட்டு உரிமையாளரை கூற வைக்கிறார்.
அவ்வாறு பேட்டியை பெற்றுக் கொண்டபின், அந்த பேட்டியின் சிடியை காவல்துறை
உயர் அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பி வைக்கிறார்.
இதன் பின்னர் காவல்துறை அதிகாரிகள் இவர் மீது புகார் வந்தால் அதன் மீது
நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். இவர் குடியிருந்து வரும் வீட்டுக்கு
இது வரை வாடகையும் தருவதில்லை, காலியும் செய்யவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
நசரத்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்களிடம்,
அரசாங்கத்தின் உதவித்தொகை வாங்கித் தருகிறேன், முதியோர் ஓய்வூதியம்
வாங்கித் தருகிறேன், நலத்திட்டங்கள் பெற்றுத் தருகிறேன் என்று கூறி,
அவர்களை இவர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வார்.
அப்படித்தான் இவர் ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டம் வருகிறது.
இவருக்கு அரசியலில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, பூந்தமல்லி, மாங்காடு,
மற்றும் நசரத்பேட்டை காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்த
ு செய்வதுதான் வீரலட்சுமியின் முக்கிய பணி. அதன் மூலம் வரும் வசூலில்தான்
இவரது அரசியல் மற்றும் தினசரி வாழ்க்கையே நடக்கிறது. பூந்தமல்லி மற்றும்
போரூர் காவல்துறை உதவி ஆணையர்களையும் மிரட்டி வருகிறார். இதன் காரணமாக,
இவர் மீது வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை
தயங்குககிறது.
இவரோடு இருக்கும் இவரது கட்சியின் பொதுச் செயலாளர் கணேசன் மீது ஆவடி
காவல் நிலைய எல்லையில், ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
முன்னாள் புறநகர் ஆணையர் ஜாங்கிட் நான் என்ன சொன்னாலும் கேட்பார் என்று
வீரலட்சுமி தம்பட்டம் அடித்துக் கொள்வார் என்பது கூடுதல் செய்தி.
இப்படிப்பட்ட நபரை அழைத்துத்தான் பம்பரம் சின்னத்தில் நிற்கச்
சொல்லியிருக்கிறார் கிரேக்க பேராசிரியர் வைகோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக