|
17/4/16
| |||
நீர் மேலாண்மையில் 50 ஆண்டுகால திராவிட அரசுகள் கடைபிடித்த தவறான
கொள்கையால் வறண்டு போன நீர் ஆதாரங்கள்.
கிபி 11 நூற்றாண்டு காலத்தில் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
கங்கை வரை படையெடுத்து கடல் கடாரத்தையும் வென்று தென்கிழக்கு ஆசிய
கண்டத்தையே ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து கங்கை கொண்ட சோழபுரத்தை
தலைநகராக கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தான் ராஜேந்திர சோழன்.
வெற்றியின் அடையாளமாக ஸ்தூபி களை நிறுவுதல் மன்னர் ஆட்சியின் மரபு.
ஆனால், கங்கை வெற்றியை பறைசாற்றும் ஜல ஸ்தூபியாகவே பொன் னேரியை
அறிவித்தான் ராஜேந்திரன் என்கின்றன கல்வெட்டுச் சான்றுகள்.
அதே சமயம், தங்கக் குடங்களில், தான் எடுத்து வந்திருந்த கங்கை நீரை
பொன்னேரியில் கலந்து கங்கையின் புனிதத்தை அதற்கும் கிடைக்கச் செய்தான்.
இத்தகையை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொன்னேரி இன்று வெறும் மண்ணேரியாகக்
கிடக்கிறது.
இந்த ஏரிக்கு நீர்வரத்திற்காக தெற்கே பாயும் காவிரியில் கொள்ளிடத்தில்
இருந்து ஒரு கால்வாயும் வடக்கே பாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு
கால்வாயும் வெட்டி ஆண்டு முழுவதும் நீர் நிறைந்து இருக்கும்படி
பாதுகாத்தான்.
இதனால் கங்கைகொண்ட சோழபுர நகரின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ததோடு
அப்பகுதியை சுற்றி இருந்த 30 கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள்
முப்போகமும் பாசன வசதி பெற்று விவசாயம் தழைத்தோங்கியது.
நீர்வரத்து பகுதிகளில் கூட இது போன்ற திட்டங்களை இந்த நவீன காலத்தில்
அரசு செய்யமுடியாத நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முன் பூகோள அடிப்படையில்
உயரமான இடமான வரண்ட பகுதியை தேர்ந்தெடுத்து ஏரியை வெட்டி அதற்கு நீண்ட
தொலைவிற்கு கால்வாய்கள் வெட்டி இரண்டு நதி நீரை நிரப்பி அப்பகுதியை வளம்
கொழிக்க செய்தான் ராஜேந்திர சோழன் அன்று.
இன்று அந்த கால்வாய்களை தூர்வாரி ஏரிக்கு தண்ணீரை கொண்டுவர முடியாத
அவலமான நிலையில் தான் திராவிட கட்சிகளின் அரசுகள் ஆட்சி செய்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக