வியாழன், 30 மார்ச், 2017

அண்ணாதுரை அண்ணா பாரதிதாசன் பொற்கிழி வழங்கவில்லை

aathi tamil aathi1956@gmail.com

4/2/16
பெறுநர்: எனக்கு
அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
என்ற தலைப்பில் பாவேந்தர் எழுதிய கட்டுரை

 எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து
கொண்டிருந்தது.
அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில்
செல்வாக்குள்ள புள்ளிகள்.
காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என்
விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை
இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை
அழைத்தார்கள்.
நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும்
வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார்.
அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள்.
அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.
இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம்
சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று
பறையடித்தார்.
விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!
விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.
தம் ஆசையை மலர்த்தினார்.
இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?
அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்//
டி.என்.இராமன் வருகின்றார். அவர் சொன்னது:
குயில் செய்யுள் வார இதழ் வெளியிடுவதற்கான முற்செலவுக்காக இரண்டாயிரம்
ரூபாய் தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதுபோக மீதியைத்தான் உங்களுக்குப் பொற்கிழியாக அளிக்கப்படும்.
விழா நடந்தது. பொன்னாடை போர்த்தப்பட்டேன், பொற்கிழியை அண்ணாத்துரை கையால்
அளிக்கப் பெற்றேன்.
அதை மிக விழிப்பாக அண்ணாத்துரை முயற்சியால் நிழற்படம் எடுக்கப்பெற்றேன்.
பொற்கிழி பையில் ஐயாயிரம் குறையக் காணப் பெற்றேன்.
கணக்குப் பின்னால் தருவதாகக் கேட்கப் பெற்றேன்.
பல விடங்களிலிருந்தும் இருபத்தையாயிரந்தான் சேர்ந்ததென்று கூறப்பெற்றேன்.
என் வீட்டுக்கு அனுப்பப் பெற்றேன்.
விழா நடந்த பின் அடுத்தவாரத்தில் அண்ணாத்துரை வெளியிடும் திராவிட
நாட்டில் ஒரு குறிப்புக் காணப்பட்டது.
பாரதிதாசன் பொன்னாடை போர்த்து விழாக்குழுவினர், விழா வரவு செலவுக்
கணக்கையெல்லாம் பாரதிதாசன் அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள்.
இனிப் பாக்கித் தொகையை அனுப்ப வேண்டியவர்கள் நேரே பாரதிதாசன் அவர்கட்கே
அனுப்பிவிடுக என்ற கருத்தமைந்திருந்தது.
அவ்வாறு எனக்குக் கணக்கு அனுப்பப்பட்டதா? இன்றுவரைக்கும் அனுப்பப்படவில்லை.
குயில் இதழ், குரல்– – 1, (7-10-58), இசை -19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக