|
7/2/16
| |||
தொல்காப்பிய மரபியல், பெயர் மரபுகளையும், உயிர்ப் பாகுபாடுகளையும்,
நால்வகை வருண மரபுகளையும். இலக்கியப் படைப்பாக்க மரபுகளையும்
எடுத்துரைக்கின்றது.
மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லினான” (தொல்காப்பியம், மரபியல் 92)
என்பது மரபு பற்றிய வரையறையாகும். மரபு நிலை திரிதல் செய்யுள்களுக்கு
அழகில்லை, மரபு வழிப்பட்ட சொற்களை மாறாமல் பின்பற்றுவது
செவ்விலக்கியப்போக்கு என்று தொல்காப்பியர் மரபினை விளக்குகின்றார்.
மரபுகள் திரிந்தால் ஏற்படும் இழப்பினையும் தொல்காப்பியர் சுட்டுகின்றார்.
“மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” ( தொல்காப்பியம், மரபியல். 93)
என்ற இந்த நூற்பா மரபுநிலை திரிந்தால் ஏற்படும் பாதிப்பினை
எடுத்துரைக்கின்றது. சொல்மரபுகள் மாறினாலும், பொருள் மரபுகள் மாறினாலும்
அதனால் வேறுவேறான புலப்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிடும் என்பதைத்
தொல்காப்பியர் இந்நூற்பா வழி எடுத்துரைத்துள்ளார். எனவே மண் சார்ந்த
மரபுகள் அம்மண் சார்ந்த இலக்கியங்களில் மாறாமல் பின்பற்றப்படவேண்டும்
எனத் தொல்காப்பியர் விரும்புவதாகக் கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம் சுட்டும் பிள்ளைப்பெயர்கள், ஆண்பாற்
விலங்குப் பறவைப் பெயர்கள், பெண்பாற் விலங்குப் பறவைப் பெயர்கள் பெரிதும்
எடுத்தாளப் பெற்றும் உள்ளன. பின்பற்றப்பெற்றும் உள்ளன. தொல்காப்பியர்
காட்டும் நூல் இலக்கண மரபுகளும் பின்னால் வந்த இலக்கண ஆசிரியர்களால்,
இலக்கியப் படைப்பாளர்களால் பெரிதும் பின்பற்றப்பெற்றுள்ளன.
அவர் காட்டிய நால்வகை வருண மரபுகள், இலக்கிய அளவில் திறனாய்வு நிலையில்
ஏற்பதும் மறுப்பதுமாக விளங்குகின்றன. ஆனால் சங்க இலக்கியத்தில்
தொல்காப்பியர் காட்டிய நால்வகை வருணங்களும் அவற்றிற்குரிய அடையாளங்களுடன்
இடம்பெற்றுள்ளன என்பது வருணத்தை ஏற்பார் கருத்தாகும். சங்க
இலக்கியங்களில் வருணப் பாகுபாடு அறவே இல்லை என்று மொழிவாரும் உண்டு, சங்க
இலக்கியத்தில் பரிபாடல், புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களில்
இந்நால்வகை வருணமரபுகளைக் காணமுடிகின்றது. பத்துப்பாட்டு
இலக்கியங்களிலும் நால்வகை வருண மரபுகளைக் காணமுடிகின்றது. ஆனால்
குநற்தொகை, நற்றிணை போன்ற இலக்கியங்களில் நால்வகை வருணப் பாகுபாட்டு முறை
இல்லை என்றே முடியலாம். இதற்கான காரணம் ஆராயத்தக்கதாகும். நற்றிணையும்
குறுந்ததொகையும் முற்கால இலக்கியங்களாக அமைந்திருக்கலாம். ஆரியர்
கலப்பிற்கு முன்னதான இலக்கியங்கள் என்பதாக அவற்றைக் கொள்ளலாம். அல்லது
அவை ஐந்திணை சார்ந்த இலக்கியங்கள் என்றும் கொள்ளலாம். அவை பெரிதும்
இலக்கிய வழக்கு சார்ந்தவை என்றும் கொள்ளலாம். இவ்வகையில் இதற்கான
காரணங்கள் ஆராயத்தக்கனவாகும்.
சங்க இலக்கியத்தின் பிற்பகுதி இலக்கியங்கள், பத்துப்பாட்டு இலக்கியங்கள்
ஆகியன தோன்றிய காலங்களில் நால்வகை வருண முறை பின்பற்றப்பெற்றுள்ளது
அவற்றைக் கற்கையில் தெளிவாகத் தெரிகின்றது. இக்கட்டுரை தொல்காப்பிய
மரபியலின் ஒரு பகுதியாக விளங்கும் நால்வகை வருண மரபுகளை மட்டும்
எடுத்துக்கொண்டு அவை சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பெற்றுள்ள முறைமையை
எடுத்துரைப்பதாக உள்ளது.
நால்வகை வருணம்
தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் நால்வகை வருணமுறை
எடுத்துக்காட்டப்பெற்றுள்ளது. கற்புக் காலத்தில் ஓதல், தூது, பகை ஆகிய
பிரிவுகளின் போது எத்தனை காலம் பிரியவேண்டும், யார் பிரியவேண்டும் என்ற
வரையறை அங்கு வகுக்கப்பெற்றுள்ளது. இவ்வருணமுறைக் கற்பியலில் சற்றுத்
தொட்டுக்காட்டப் பெற்று மரபியலில் தொல்காப்பியரால் முழுவதுமாக
வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளது. மரபியலில் அந்தணர்,அரசர், வணிகர், வேளாளர்
ஆகியோரின் இயல்புகள் வளர்ந்த நிலையில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன. அவை
பின்வருமாறு சங்க இலக்கியங்களுடன் பொருத்திக் காட்டப்பெறுகின்றன.
அந்தணர்க்குரிய இயல்புகள்
அந்தணர், ஐயர், பார்ப்பார் ஆகிய சொற்கள் குறிப்பிட்ட ஒரு குழுவினுக்;குள்
அடங்கும் பகுப்புகள் ஆகும். இக்குழுவினர் வேதத்துடன் தொடர்புடைய
குழுவினராகக் கருதத்தக்கவர்கள் ஆவர். கரணம் யாத்தவர்கள் ஐயர் ஆகின்றனர்.
செந்தன்மை பூண்டொழுகுபவர்கள் அந்தணர்கள் ஆகின்றனர். பார்ப்பார் என்பவர்
மறைநூல்களைப் பார்ப்பவர் அல்லது பார்த்து ஓதுபவர் ஆகின்றனர். இவர்களில்
அந்தணர் என்போருக்கான இலக்கணம் பின்வருமாறு.
" நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய” (தொல்காப்பியம், மரபியல், 71)
நூல், தண்ணீர் இருக்கும் கெண்டி என்ற செம்பு, முக்கோல், அமரும் மணை
ஆகியனவற்றைக் கொண்டிருப்பவர்கள் அந்தணர்கள் என்று உரைக்கின்றது
தொல்காப்பியம். அனைத்து அந்தணர்களுக்கும் முப்புரி நூல் என்ப:து
அடையாளமாகும். கரகமும், முக்கோலும் தவம் செய்யும் அந்தணர்க்கு உரிய
பொருள்கள் ஆகும்.
இவ்வடையாளங்களுடன் சங்க இலக்கியத்தில் அந்தணர்கள்
சித்திரிக்கப்பெற்றுள்ளனர். கலித்தொகையில் அந்தணர் ஒருவரை விளித்து தன்
மகள் உடன்போக்குப் போனதைப் பற்றி அறியவிரும்புகிறாள் செவிலித்தாய்.
“எறிதரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்
நெறிபடச் சுவல்அசைஇ வேறுஒரா நெஞ்சத்துக்
குறிப்புஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்”( கலித்தொகை.9)
என்ற பாடலில் இடம்பெறும் அந்தணர் அப்படியே தொல்காப்பியர் காட்டிய
காட்சிப்படி வருணனை செய்யப்பெற்றுள்ளார். தொல்காப்பியர் காட்டிய கரகம்,
முக்கோல் அவரிடத்தில் காணப்படுகின்றன. கூடுதலாக ஒரு குடையை அவர்
வைத்திருந்துள்ளார். இவ்வாறு கலித்தொகை காலத்தில் அந்தணர்கள் விளங்கிய
தோற்றம் தெரியவருகின்றது.
கபிலர் பாரிமகளிரை திருமணம் செய்து கொள்ள விச்சிக்கோன் என்ற அரசனிடம்
வேண்டியபோது தான் அந்தணன் என்று தன்னை அடையாளப்படுத்துகின்றார்.
"யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையி;ல் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி” (புறநானூறு,200)
என்றும்
“யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே” (புறநானூறு 201)
என்றும் பாடுகின்றார். இவ்வகையில் அந்தண மரபினர் புலவோராகவும்
சங்ககாலத்தில் இருந்துள்ளனர் என்பது குறிக்கத்தக்கது.
“அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கின்| (புறநானூறு, 2)
என்று அந்தணர்கள் அந்தி நேரத்தில் அருங்கடன் செய்யும் நடைமுறை
புறநானூற்றில் காட்டப்பெறுகின்றது. “நன்பல கேள்வி முற்றிய வேள்வி
அந்தணர்க்கு அருங்கலம் நீரோடு சிதறி| (புறநானூறு 361) என்று மற்றொரு
குறிப்பு புறநானூற்றில் இடம்பெறுகின்றது. கேள்வியறிவு மிக்க அந்தண்கள்
வேள்வி செய்வதில் வல்லவர்கள், அவர்களுக்கு அணிகலன்கள் பலவற்றை அளித்தல்
கொடை என்பது இப்பாடலடி தரும் விளக்கமாகும். வேள்வி செய்தலை மற்றொரு
புறநானூற்றுப் பாடலும் குறிக்கின்றது. "அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து
எடுத்த தீயொடு விளங்கும் நாடன்” (புறநானூறு, 397) என்ற பாடலடியின் வழியாக
அறம்புரிந்து தீ வளர்ப்பவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகின்றது.
பரிபாடலில் பல இடங்களில் அந்தணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
“நாவல் அந்தணர் அருமறைப்பொருள்” என திருமால்
குறிக்கப்படுகிறார்(பரிபாடல்.1) . அந்தணர் பயிற்றும் அருமறையின் ஒரு வரியை
அப்படியே எடுத்தாளுகிறது பரிபாடல். ~வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப்
பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ என மொழியுமால்; அந்தணர் அருமறை”
(பரிபாடல் 3) என்ற பாடலடியின் வழியாகத் தாமரைப்ப+வில் பிறந்த பிரம்மனும்
அவனின் தந்தையும் ஆகிய திருமால் நீயே என்று வேதநெறி சொல்வதாக பரிபாடல்
குறிப்பிடுகின்றது. இவ்வகையில் மறைகள் பற்றிய குறிப்புகளும் சங்க
இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன.
“விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப”- தை
நீராடல் நடைபெற்றது என்று குறிக்கின்றது பரிபாடல். (பரிபாடல்.11)
விழாக்கள் சங்க காலத்தில் அந்தணர் கொண்டு தொடங்கப்பெற்றுள்ளது என்பது
இதன்வழி தெரிகின்றது.
“ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பகர்ந்தவன்” சிவபெருமான் (கலித்தொகை.1)என்ற
குறிப்பு கலித்தொகையின் வழி கிடைக்கின்றது. இத்தொடரின் வழியாக வேதங்களின்
ஆறு அங்கங்களை ஓதி உணர்ந்தவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகிறது.
அந்தணர் தீ வளர்த்தலை கலித்த

குறிக்கப்படுகிறார்(பரிபாடல்.1)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக