வியாழன், 30 மார்ச், 2017

வீரமாமுனிவர் பெஸ்கி தமிழ் நூல்கள் இத்தாலி

aathi tamil aathi1956@gmail.com

4/2/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan உடன் கேளிர்ப் பிரியலன்.
"செந்தமிழ்தேசிகர்" வீரமா முனிவர் நினைவு நாள்
4.2.1747
மகேஷ், சுரேஷ், ரமேஷ், ராகேஷ் என்று பெயர் வைத்துக் கொள்கிற தமிழர்களைப்
பார்க்கிறோம். இத்தாலியிற் பிறந்து தமிழ்நாட்டிற்கு ஒருவர் வந்தார்.
கிறித்துவ மதப் பரப்புவது தான் அவரின் நோக்கம். அவர் பெயர் ஜோசப் பெஸ்கி.
தனது பெயரை தைரிய நாதர் என்று பெயர் மாற்றினார்.
தமிழோடு சேர்த்து வடமொழியை கற்ற போது தான் அவருக்குத் தெரிந்தது, தைரிய
நாதர் என்பது வடமொழிப் பெயர் என்று. உடனடியாக, செந்தமிழில் வீரமா முனிவர்
என்று பெயர் மாற்றம் செய்தார்.
அவரைப் போல என்றைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டி நம் தாய்மொழிக்குப்
பெருமை சேர்க்கப் போகிறோம்?
அவர் செய்தது சமயத் தெண்டு என்றபோதிலும், அதில் தமிழும் கலந்திருந்தது.
கன்னித்தமிழை கசடறக் கற்றதோடு, இலக்கணம் தவறாமல் பாடல் புனைந்திடும்
ஆற்றலையும் கைவரப் பெற்றார். தாம் அமைத்த கோயிலாம் அடைக்கல மாதா மீது-
திருக்காவலூர்க் கலம்பகம் மற்றும் அடைக்கல நாயகி வெண்கலிப்பா, அடைக்கல
மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி போன்ற பா நூல்களை இயற்றி நம் தமிழன்னைக்கு
சிறப்பு செய்தார்.
'தேம்பாவணி' என்னும் தேம்பாத பாமாலையை தித்திக்குமாறு காவியமாக்கினார்.
எல்லார்க்கும் பயனாகுமாறு 'சதுரகராதி' யை தமிழுக்கு முதன்முதலாக அறிமுகம்
செய்தார். வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் என்பன இவர் எழுதிய உரைநடை
நூல்கள்.
எபிரேயம், கிரேக்கம், பிரெஞ்சு மொழிகளைக் கற்ற இந்த அறிஞர் தமிழுக்கு
பணிசெய்தவர் மட்டுமல்ல, அவர் உடையிலும், நடையிலும் தமிழராகவே வாழ்ந்து
மறைந்தார். வீரமா முனிவர் போல் வீரத்தமிழர் என்றைக்கு மாறுவர்?
பொறுத்திருந்து பார்ப்போம்!
நன்றி: பாவாணர் கோட்டம் வெளியிட்ட நாட்காட்டியிலிர
ுந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக