திங்கள், 27 மார்ச், 2017

ஆசீவகம் மதம் ஐயனார் மெய்யியல் தமிழகம் ஈழம் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

18/2/16
பெறுநர்: எனக்கு
ஈழத்துத் தமிழர் மெய்யியல் , தனது சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.
ஐயனாரில் மூன்று வகையுண்டு. அவர்களில் பூரணா புஷ்கலா சமேத சாஸ்தா என்று
முழுப்பெயரும் சங்கதப்படுத்தப்பட்டதால் பூரணா புஷ்கலா இருவரும்
சாஸ்தாவின் மனைவிகள் என கதைகட்டப்பட்டன. இந்த மூவரின் வரலாற்றை அறியாமல்
தமிழரின் முதல் மெய்மயங்கிய* ஆசீவக சமயம் பற்றி புரிந்து கொள்ள இயலாது.
இவர்களின் வரலாற்றை அறிய வேண்டுமெனில் இவர்களின் தமிழ் பெயரை முதலில்
நாம் அறிய வேண்டும். அதன்படி இதிலுள்ள மூவரில் புஷ்கலா பற்றி அறிந்து
கொள்வோம். இந்த புஷ்கலாவின் தமிழ் பெயர் பொற்கலை என்பதே.
பொற்கலை என்றால் என்ன? ஆசீவகத்தின் ஏழு நிலைகளில் மஞ்சளும் ஒன்று.
பொன்னிறமும் மஞ்சளும் ஒரே கச்சையளவை கொண்டதால் பொற்கலை என்று இவளுக்கு
பெயரிட்டார்கள் எனலாம். இவள் குமாரமங்கலம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள
பாதூர், சிவகாசி, கண்டாச்சிபுரம் அருகிலுள்ள சீராப்பாளையம் போன்ற பல
இடங்களில் இன்னும் பொற்கலை என்ற பெயரிலேயே வழங்கவும் வணங்கவும்
படுகிறாள். இங்கெல்லாம் இவளின் பெயர் திரியாமல் பொற்கலை என்னும் தமிழ்
பெயரிலேயே அழைக்கப்படுவது ஆசீவகத்தின் தமிழ் எச்சமாய் விளங்குகிறது. இந்த
பொற்கலை சாஸ்தாவின் மாணவியே அன்றி மனையாளல்ல. பொற்கலை என்பது ஆசீவக
மஞ்சள் நிலையில் இவள் இருந்தாள் என்பதால் கொடுக்கப்பட்ட காரணப்பெயரே
அன்றி இவளின் உண்மையான பெயரை அறிய என்னிடம் சான்றுகள் இல்லை.
ஆசீவகத்தை ஆராய்ந்த வெங்காலூர் குணா, நெடுஞ்செழியன், ஆதிசங்கரன் போன்றோர்
ஆசீவகத்தில் பெண்களின் பங்களிப்பை ஆராயாமலே விட்டார்கள். இந்த பதிவு அந்த
குறையை நீக்கும் முதற்படி.
அடுத்த படிகளாக பூரணாவின் உண்மை பெயரும் பூரணா பொற்கலை உடனுறை சாஸ்தாவின்
உண்மை பெயரும் ஈழத்தில் இந்த மூவரின் மரபுகள் பாண்டியர்களால் எவ்வாறு
பரப்பப்பட்டன என்றும் சங்ககால கல்வெட்டுகள் காசுகள் இலக்கியங்கள் போன்ற
மறுக்க முடியா சான்றுகளைக்கொண்டு @ஈழத்துத் தமிழர் மெய்யியல் நூலில் யாம்
நிறுவுவோம்.
ஆசீவகத்தில் மிக முக்கியமாக நான்கு பெண்களின் பங்களிப்புகள்
விளங்குகின்றன. அவற்றில் இருவர் பூரணா பொற்கலை என்ற தமிழகத்தைச்
சேர்ந்தவர்கள். ஒருவர் ஈழத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் ஈழத்தை புகுந்த
வீடாக கொண்டவர்.
பொற்கலை பற்றிய வரலாறு தான் தெரியவில்லையே தவிர மற்ற மூன்று ஆசீவகனீகளின்
வரலாறும் ஈழத்தில் அமைதியாக உறங்கிக்கொண்டுள்ளன. இந்த அமைதி இந்த நூல்
வெளிவரும்வரை தான். -
தென்காசி சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக