திங்கள், 27 மார்ச், 2017

மகாபாரதம் சேரன் உணவு பெருஞ்சோற்று

aathi tamil aathi1956@gmail.com

15/2/16
பெறுநர்: எனக்கு
பாரத போரில் பாண்டவர் மற்றும் கௌரவர்கள் இரு பெரும்படைக்கும் உணவு படைத்த
சேர மன்னன் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர்முடி
நாகராயர் பாடியது.
______________________
"யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்"
( புறநானூறு-2)
வானவரம்ப! பெரும! நீ,அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர்
ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய
துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும்
பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினாய்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக