திங்கள், 27 மார்ச், 2017

தேவர் ஈவேரா ஒரே மேடை பிறகு துரோகம்

aathi tamil aathi1956@gmail.com

8/2/16
பெறுநர்: எனக்கு
மருதுபாண்டியன் இரா. , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நிறுவனரும் தினத்தந்தி நாளிதழின் அதிபருமான அய்யா
சி.பா. ஆதித்தனார் அவர்கள் பசும்பொன் தேவர் பெருமகனாருக்கு எழுதிய
கடிதம்.
எஸ்.பி. ஆதித்தன்
60 , கச்சேரி ரோட்
மயிலாப்பூர்
சென்னை - 4.
6- 2 - 1952
அன்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு,
தேர்தலுக்கு முன் பல முறை சந்தித்து தங்களுடைய ஒத்துழைப்பை நாடினேன் .
தேர்தல் ஒருவாறாக முடிந்து விட்டது. காங்கிரஸைத் தோற்கடிப்பதில்
தங்களுக்கு முதல் வெற்றி கிடைத்து விட்டது. ஆனால் காங்கிரஸ் அல்லாதாரை
ஒன்று சேர்க்க வேண்டிய பொறுப்பும் தங்களைச் சேர்ந்ததே.
காங்கிரஸ் அல்லாதார் கூட்டம் இம்மாதம் 12 ம் தேதி சென்னையில் கூடுகிறது.
தங்களுக்கு ஏற்கனவே ஒரு அழைப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறது. தாங்கள்
ஒரு நாளைக்கு முன்னதாகவே வந்திருந்து கூட்டத்தை நடத்தித் தருமாறு
கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள
எஸ்.பி. ஆதித்தன்
1952 ம் ஆண்டுத் தேர்தல் களத்தில் பசும்பொன் தேவர் அவர்கள் போட்டியிட்டது
மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்தார். இந்தத் தேர்தலில் தான்
பெரியாரும் தேவரும் ஒரே மேடையில் பல இடங்களில் பேசினர். தேவரை பெரியார்
அழைக்கும் போது "தேவகுமாரன்" பேசுவார் என்றே அறிவிப்பார். தேவர்
அவர்களின் கனல் தெறிக்கும் பேச்சைக் கேட்டு பெரியாரவர்கள் கைத்தடியை
மேடையில் தட்டி தட்டி ரசிப்பார்.
இந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதற்கு தனது நண்பரும் காமன் வீல்
பார்ட்டி தலைவருமான மாணிக்கவேல் நாயகருடன் தேவர் பல இடங்களில் ஒன்றாகப்
பேசியுள்ளார்.
பெரியாரும் மாணிக்கவேல் நாயகரும் காங்கிரஸ் ஆதரவு என்ற சந்தர்ப்பவாத நிலை
எடுத்து விடுகின்றனர். தமிழ்நாட்டு அரசியல் திசை மாறி விடுகிறது.
ஆனால் தேவர் பெருமகனார் மட்டும் கடைசி வரை காங்கிரஸ் எதிர்ப்பு
நிலையிலிருந்து மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் ஆதித்தனாரின் கடித நகலை இணைத்துள்ளேன்.
நன்றி:
நக்கீரன்
பேரா .க.செல்வராஜ்
https://m.facebook.com/story.php?story_fbid=1735669073332386&id=100006679304116&refid=28&_ft_=qid.6248867161211796271%3Amf_story_key.-9102861191843399700&__tn__=%2As

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக