திங்கள், 27 மார்ச், 2017

மீனவர்கள் பிரிவுகள் வேறுபாடு

aathi tamil aathi1956@gmail.com

12/2/16
பெறுநர்: எனக்கு
துரை. இராசகுமரன் வடகாடு
பொதுவாக மீனவர்கள் என்றாலே அவர்கள் எல்லோரும் கடலுக்குச் செல்லுவர், மீன்
பிடிப்பர் என்றளவில்தான் நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனாலும் பரதவர்,
கடையர், முக்குவர், வலையர் உள்ளிட்ட பாரம்பரிய மீனவச் சமூகத்தினருக்குள்
கூட சமூகம் சார்ந்து அவர்களின் மீன்பிடி முறைகளிலும், பயன்பாட்டு
வலைகளின் வகைகளிலும், வள்ளத்தின் அளவீடுகளிலும் பல நுட்பமான வேறுபாடுகள்
இன்றளவும் இருந்து வருகிறது என்பதே உண்மை...!
பாம்பன் பகுதி மீனவர்களைக் குறித்த திரு க. இராமபாண்டி என்பவரின் ஆய்வுக்
கட்டுரை நூல் ஒன்றை அண்மையில் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்நூலில்
மேற்கண்ட கருத்துகள் யாவும் தக்க சான்றுகளுடன் நிறுவப்பட்டிருந
்தது.அதாவது ஒவ்வொரு மீனவ சமூகத்திற்குள்ளும் மீன்பிடி முறைகளில் ஒரு
தனித்த பண்பாடும், அணுகுமுறையும் நடைமுறையில் இருந்து வருகிறது.
அந்தவகையில் பாம்பன் பகுதியில் பரதவ மக்கள் கடற்காற்றை 8 வகையாக
பிரித்துச் சொல்லுகின்றனர் , ஆனால் வலையர் சமூக மீனவ மக்கள் 4 வகையாக
கடற்காற்றை பிரித்து வைத்திருக்கின்றனர் (வாடை, சோழகம், கச்சான், கொண்டல்
). மேலும் காற்றின் அடிப்படையில் வலையர் மக்கள் கடலின் நீரோட்டத்தை வா
நீவாடு, சோழக நீவாடு, கச்சா நீவாடு, கொண்டல் நீவாடு என்று நான்கு வகைகளாக
வகைப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பரதவர் 2 வகையாகவும், கடையர் 5
வகையாகவும், முக்குவர்கள் 8 வகையாகவும் கடல் காற்றை வகைப்படுத்துகின
்றனராம்...
மேலும் வலையரின மக்கள் புயல் காற்றை புரப் புயல், ஐப் புயல், கார்ப்
புயல், மார் புயல் என்று பெயரிட்டு அறிந்து கொள்ளுகின்றனர். இது மற்ற
மீனவ இனக்குழுவினரிடத்திலிருந்து வலையர்களின் புயல் குறித்த அறிவை
தனிமைப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது. மீன்பிடி வலைகளுள் அடப்பு
வலை, கொய் வலை போன்ற வலைகளை இராமேசுவரம் பகுதியில் வலையர்கள் மட்டுமே
பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் இரால் வலை, வீச்சு வலை, நண்டு வலை
உள்ளிட்டவை அனைத்து சமூகத்தினராலும் பயன்படுத்தப்படுகிறது.
கடலுக்குள் திசை காணும் முறைகளில் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு
கப்பல் வெள்ளி, ஆறாங்கட்ட வெள்ளி(வடக்குத் திசை) , தராசு வெள்ளி
(கிழக்கு, மேற்கு) என்று வகையீடு செய்கின்றனராம் வலையர் மக்கள். அவர்கள்
பயன்படுத்தும் வள்ளங்கள் பெரும்பாலும் பரதவர்களின் வள்ளங்களைக்
காட்டிலும் அளவில் சற்று சிறிதாகத்தான் இருககுமாம். இதற்குக் காரணம்
வலையர் சமூக மீனவர்கள் பொருளாதாரத்தில் மற்ற தரப்பு மீனவர்களைக்
காட்டிலும் சற்று பின்தங்கி இருப்பதே என்று அந்நூலில் பதிவு
செய்யப்படடுள்ளது...
மேலும் இவை போன்ற ஏராளமான வேறுபாடுகளும், அவற்றின் காரணங்களும் இனங்காணப்பட்டுள
்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக