வியாழன், 23 மார்ச், 2017

ஆரியர் சங்ககால குறிப்புகள் இலக்கியம்

athi tamil aathi1956@gmail.com

17/4/16
பெறுநர்: எனக்கு
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி பதிற்றுப்பத்து பதிகம் 2,
ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில்
பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி - அகநானூறு 396 பரணர்
மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப்
புறமிளை ஆரியர் படையின் உடைக (தலைவனை என்னுடன் திரியவைக்காவிட்டால் என்
தோளில் வீங்கிய வளையல்) அகம் 336 பாவைக்கொட்டிலார்
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு
வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ (தலைவி ஒருத்தி முன் பரத்தையர் பலர்
என்னாவர்?) - நற்றிணை 170
ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும்
- குறுந்தொகை 7 பெரும்பதுமனார்
ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல (தலைவனை ஆட்டிப் படைப்பேன்
என்கிறாள் ஒரு பரத்தை) - அகநானூறு 276 பரணர்
ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை பல்பூங் கானத்து அல்கி இன்று
இவண் சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ - அகநானூறு 398

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக