MONTHLY ARCHIVES: SEPTEMBER 2015
ஆன்றோர்களின் அறிவியல் ஆன்மீகமாய்..
13SundaySep 2015
Posted Uncategorized
in
இந்த வடிவிலான சிற்பங்களை நாம் சில கோவில்களில் உள்ள மண்டபங்களில் மேற்புறத்தில் காணலாம்
இதை நான் கண்டது பூந்துறை நாட்டில் குடிகொண்டுள்ள சிரகிரி வேலவன் சென்னியாண்டவன் சன்னதியில்.
இதை மலை மேல் இருக்கும் சென்னியாண்டவனை தரிசிக்க காரிலே பைக்கிலோ பஸ்ஸிலோ சென்றால் இந்த சிற்பம் உங்களுக்கு புலப்படாது.அப்படி மலையேறுவதில் பயனில்லை.குழந்தை பாக்கியம் கிட்டாது.
ஆண்டவனை தரிசிக்க படிகட்டுகள் வழியாக செல்ல வேண்டும் அங்கே இடை இடையே உள்ள மண்டபங்களில் உள்ள ஒரு தூணில் ஆண் பெண் கூடல் சிற்பம் இருக்கும்.இது போன்று உறவு வைத்துக்கொள்ளும்போது ஆண் விந்தணு விரைவாக கருப்பையை அடைகிறது.கருமுட்டையுடன் இனச் சேர்க்கை விரைவாக ஏற்படுகிறது.
(பரஞ்சேர்வழியுள்ள அம்பாள் சன்னதியில் உள்ள தூணின் சிற்பம்)
அந்த மண்டபத்தின் உட்பிரகாரத்தில் மேலே இது போன்ற சிற்பம் இருக்கும்.
இதன் அர்த்தம் என்ன எதற்காக நம் முன்னோர் இங்கே இதை வைத்துள்ளனர் என்று ஆராயந்த பொழுது கிடைத்த தகவலை நான் உங்களுடுன் பகிர்கிறேன்.
இந்த சிற்பத்தில் உள்ள பாம்பு வடிவம் ஆணின் விந்தணுவையும் வட்டம் / அரை வட்டம் வடிவம் பெண்ணின் கருமுட்டையையும் குறிக்கிறது.
இதன் விளக்கம் பிறை தேய்ந்து முழுநிலவாக வளர 14 நாட்கள் & முழுநிலவு தேய்ந்து அமாவாசை 14 நாட்கள்.
பெண்கள் மாதவிடாய் ஆன மூன்று நாட்கள் கழித்து 14 நாள் கருமுட்டை கருப்பையில் இறங்குகிறது.
அதாவது கருமுட்டை வரும் 12 மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளோ நம் விந்தணு கருப்பையை அடைந்தால் கன்டிப்பாக ஆண் குழந்தை பிறக்கும்.
அல்லது கருமுட்டை வருவதற்கு 24 மணி நேரம் முன்பாக நம் விந்தணு கருப்பையை அடைந்தால் அது பெண் குழந்தை பிறக்கும்.
இதுவே இந்த சிற்பங்கள் கூறும் ஆன்றோரின் அறிவியல் ஆன்மீகம் வாயிலாக..
https://mybharathadesam.wordpress.com/2015/09/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக