சனி, 26 செப்டம்பர், 2020

இஞ்சி இடுப்பழகி சொல்லாய்வு இஞ்சுதல் இறுகுதல் சுருங்குதல் வேர்ச்சொல்

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 17 செப்., 2018, பிற்பகல் 5:03
பெறுநர்: எனக்கு
Saravanan Thangappa
‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...’ தேவர்மகன் பாடலைக் கேட்டுள்ளோம்.
நாட்டுப்புறப் பாடல்களிலும் ‘இஞ்சி இடுப்பு’ என்ற பயன்பாடு உண்டு. இஞ்சிக் கிழங்குக்கும் இடுப்புக்கும் என்ன தொடர்பு என்று பாடல் வந்தபோது மண்டையைப் பிய்த்து ஓய்ந்துவிட்டோம்.
இஞ்சி’ என்பதற்கு நமக்குத் தெரிந்த ஒரே பொருளான சமையலறைப் பொருளை நினைவில் கொண்டதால் நம்மால் அதற்குமேல் நகர முடியவில்லை.
"இஞ்சுதல்" என்று தொழிற்பெயர் உண்டு. இஞ்சுதல் என்றால் ‘சுண்டுதல், இறுகுதல், வற்றுதல்’ என்று அர்த்தம். ‘சர்க்கரைப் பாகை நல்லா இஞ்சுற அளவுக்குக் காய்ச்சனும்’ என்று பேசக் கேட்டுள்ளோம். இஞ்சிய இடுப்புள்ள அழகிதான் இஞ்சி இடுப்பழகி.
அடுத்தவரி மஞ்சச் சிவப்பழகி - மஞ்சள் எப்படிச் சிவப்பாகும் ? திரும்பவும் அதே தவறு. மஞ்சள் இல்லை, மஞ்சம். மஞ்சத்தில் நாணத்தால் சிவக்கும் அழகி !
பதிவு: கவிஞர் மகுடேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக