சனி, 26 செப்டம்பர், 2020

ஈவேரா பிள்ளையார் சிலை உடைப்பு பற்றி நகைச்சுவை சிறுகதை எனது படைப்பு மண்மீட்பு

 

aathi1956 aathi1956@gmail.com

13 செப்., 2018, பிற்பகல் 2:55
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash

சிலையுடைப்பு

இப்பிடித்தான் நைனா ராம்சாமி ஒரு ஊர்ல குடியேறி பொட்டிகட போட்டு வர்ற காசுல ஊர்மேஞ்சிகிட்டு திரிஞ்சிகிட்டு இருந்தாரு.

அப்போ அவரோட சொந்ந ஊர்க்காரனுக இவர் குடியேறியிருக்குற ஊரோட எல்லைக்குள்ள புகுந்து ஒரு கோட்ட கிழிச்சு "இதுக்கு இந்த பக்கம் எங்க ஊரு,
இந்த கோட்ட தாண்டி அந்த ஊருக்காரன் வரக்கூடாது" னு சொன்னானுக.

ராம்சாமி தன்னோட ஊருக்கு நல்லது செய்யணும்னா இந்த ஊர்க்காரனுகளோட மண்டய கொழப்பனுமேனு ஒரு ஐடியா பண்ணாரு.

அந்த ஊர்ல ஒரு பெரிய பெருமாள் கோவிலும் ஒரு பெரிய சிவன் கோவிலும் இருந்துச்சு.

பேசாம கோவில் செலய ஒடச்சிட்டா எல்லாரும் அதுக்கு பஞ்சாயத்த கூட்டுவானுக,
எல்லைல நம்மாளுக குத்தவச்சத மறந்துடுவானுகனு கணக்கு போட்டாரு.

பெருமாள் கோவில் பக்கம் போனாரு.
ஏகப்பட்ட பக்தர்கள் இருந்தாங்க.
இப்ப உள்ளபோய் சிலைய தொட்டா கும்மிருவானுகளேனு யோசிச்சிகிட்டு வாசல்லயே தடிய ஊனிகிட்டு நின்னாரு.

அந்தப் பக்கமா போன ஒரு பூசாரி இவரோட பிஞ்ச தலையையும் அழுக்கு லுங்கியையும் பாத்து ஐயோ பாவம்னு உண்டகட்டி குடுத்துட்டு போனாரு.

"அடேய் நான் பிச்சக்காரன் இல்லடா" னு சொல்ல வாயெடுத்தாரு
பாத்தா உண்டகட்டி வாய்க்குள்ள இருக்கு.

அப்படியே மென்னுகிட்டு சிவன் கோவிலுக்கு போனாரு.
இது இன்னும் கூட்டமா இருந்தது.
இப்ப உள்ள போய் சிலைய நெருங்குனா செவுளப் பேத்துருவானுகளேனு யோசிச்சுகிட்டு தாடிய தடவிகிட்டு வெளியயே நின்னாரு.
அந்த பக்கமா போன ஒரு பூசாரி இவரோட மூஞ்ச பாத்துட்டு யாரு பெத்த பிள்ளயோனு நாலணாவும் புளியோதரையும் பிச்ச போட்டுட்டு போனாரு.

என்னடா இது?!
புரட்சி பண்ணலாம்னு வந்தா புளியோதர குடுத்து அனுப்பிட்டாய்ங்களேனு யோசிச்சிகிட்டே புளியோதரைய தின்னுகிட்டே போய்ட்டிருந்தாரு.

அப்ப வீதில சின்னதா ஒரு கல்மேடை.
அதுல இத்துனூன்டு புள்ளையார் செல இருந்துச்சு.

அப்பதான் அவருக்கு விநாயகர் சதுர்த்தில சுண்டல் வாங்கித்தின்னப்ப பாத்தது கண்முன்ன வந்து போச்சு.
ஆகா தப்பிக்க வழி கெடச்சிருச்சுனு உற்சாகமானாரு.

சுத்திமுத்தி பாத்தாரு ஆள் யாருமில்ல.

வந்துச்சு ராம்சாமிக்கு வீரம்.
நேரா போய் செவனேனு சிரிச்சாமானுக்கா உக்காந்திருந்த அந்த செலய தூக்கி டொம்னு கீழபோட்டு ஒடச்சிட்டாரு.

குடு குடுனு ஓடி போய் வீட்டுக்குள்ள புகுந்து கதவ சாத்திக்கிட்டாரு.
போலீசுக்கு அவரே போன் பண்ணி வரச்சொல்லி கைது பண்ணி கொண்டுபோகச் சொன்னாரு.

இவர நொங்கிட்டு போக வந்த மக்கள் மத்தியில போலீஸ் வண்டில "நானும் பொரட்டாசியாளன் நானும் பொரட்டாசியாளன்" னு கையாட்டிகிட்டே கத்திகிட்டு போனாரு.

அவரோட சொந்த ஊர் ஆளுங்க காசுபோட்டு கேச நடத்தினாய்ங்க.
கடைசில ராம்சாமிய கோர்ட்ல கொண்டுபோய் நிறுத்துனாய்ங்க!

ஜட்ஜு "பிள்ளையார் செலய ஒடச்சியா" னு கேட்டாரு.

அவரும் "ஆமாங்க ஒடச்சேன்"னாரு.

ஜட்ஜு ஒடனே 'இவன உள்ளத்தள்ளி நொங்க பிதுக்கிற வேண்டியதுதான்' னு முடிவு பண்ணாரு.
ராம்சாமி இந்த மைண்ட் வாய்ச கேச் பண்ணிட்டாரு.

ஒடனே "ஐயா விநாயகர் சதுர்த்தில பிள்ளையார ஆத்துல தள்ளி ஒடச்சவங்க நொங்க மொதல்ல பிதுக்குங்க" னு ஒரே போடா போட்டாரு.

கோர்ட்டுக்கு வந்துருந்த அவரோட ஊர்க்காரன்லாம் ஆகா ஓகோ புகழ ஆரம்பிச்சானுக.
அந்த எடத்துலயே மானே தேனே போட்டு புக் எழுத ஆரம்பிச்சிட்டானுக.

ஜட்ஜும் "சனியனே! போய்த்தொலை.
இனிமே எந்த செல மேலயாவது கைய வச்ச ஒன்ன நசுக்கிருவேன்" னு எச்சரிச்சு அனுப்பினாரு.

அப்பறம் என்ன அந்த ஊர் எல்ல பக்கத்து ஊருக்கு போனது போனதுதான்.

அதான்டா நைனா ராம்சாமேய்...!


9 நிமிடங்கள் · தனியுரிமை: பொது
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · கருத்து · பகிர் · படங்களைச் சேர் ·
முழுக்கதை · சேமி · மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக