| திங்., 8 அக்., 2018, முற்பகல் 8:55 | |||
எனக்கு இன்னும் அரசு பணம் தரவில்லை" - வீரப்பனை சுட்டுக்கொல்ல உதவிய பெண் புகார்
எனக்கு இன்னும் அரசு பணம் தரவில்லை என வீரப்பனை சுட்டுக்கொல்ல உதவிய பெண் புகார் தெரிவித்துள்ளார்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகி, வீரப்பன் குறித்த தகவல்களை கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா சேகரித்து, அதிரடிப்படைக்கு தெரிவித்து வந்தார்.
சண்முக பிரியா அளித்த தகவல்கள் அடிப்படையில் வீரப்பனை அதிரடிப்படை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனைத் தொடர்ந்து வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் சண்முகபிரியாவுக்கு அப்போதைய மத்திய அரசு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தது. இதேபோல், மாநில அரசும் ஊக்கத் தொகையுடன் வீட்டுமனையும் வழங்குவதாக பரிசுத்தொகையை அறிவித்தது. ஆனால், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை என சண்முகபிரியா புகார் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக