சனி, 26 செப்டம்பர், 2020

தமிழகம் பொருளாதாரம் ஹிந்தியா சுரண்டல்

 

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 16 அக்., 2018, முற்பகல் 11:40
பெறுநர்: எனக்கு
Tamilri.com
# தமிழகத்தின்_மீது_இந்தியாவின்_க
ாலனியச்_சுரண்டல்
இந்தியா 2.6 டிரில்லியன் பொருளாதாரத்துடன் உலக பொருளாதாரத்தில் ஆறாவது இடத்தில் இருக்கிறது, இது உலக மொத்தத்தில் 3.3% ஆகும். இந்தியாவிலேயே இந்திய அரசுக்கு அதிக வரி வசூல் தரும் மாநிலம் தமிழ்நாடு! அதாவது 31 விழுக்காடு, பிச்சை எடுப்பானாம் பெருமாளு அதை புடுங்கி தின்பானம் அனுமாரு அதாவது தமிழர்கள் உழைப்பை திருடுகிறது இந்திய ஒன்றியம்.
1947 ஆகத்து 15க்கு முன் இவ்வாறு தமிழ்நாட்டு நிதியை இலண்டனில் இருந்து கொண்டு வேட்டையாடினால் அது ஏகாதிபத்தியச் சுரண்டல்! இப்போது புதுதில்லியிலிருந்து கொண்டு வேட்டையாடினால் இது இந்தியத் தேசிய வளர்ச்சியா? அதுவும் இதுவும் காலனியச் சுரண்டல் தான்!
சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில் எழுதிய கட்டுரையில் ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31 விழுக்காடு என்று கூறி இருந்தார். (Times of India, 05.09.2018). அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை 3 விழுக்காடு என்று குறிப்பிட்டிருந
்தார்.
ஏட்டுக் கணக்குப்படி தில்லியிலிருந்த
ு தமிழ்நாட்டிற்கு வருவதாகக் கூறப்பட்ட 3% தொகையில் 19,278.96 கோடி ரூபாயை இந்திய அரசு தரவில்லை!
இந்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையும், தமிழ்நாட்டு வளங்களைச் சூறையாடுவதையும், இன அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையும் உரியவாறு எதிர்க்காமல் தங்களுக்குள் மட்டும் பதவிச் சண்டை இட்டுக் கொண்டு தில்லிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சேவகம் செய்கின்றன தமிழ்நாட்டுக் கட்சிகள்!
தமிழ்நாட்டு அரசியல் சீரழிவைக் கலையாமல் தமிழர்களுக்க எதிர்காலம் இல்லை. தமிழர் உரிமைக் களத்தை வலுப்படுத்த வேண்டும்!

தனித்தமிழ்நாடு வரி நிதி பெ.மணியரசன் மணியரசன் அறிக்கை புள்ளிவிபரம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக